பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பழ வகை மரங்கள்

பழ வகை மரங்கள் பற்றிய குறிப்புகள்

பழ வகை மரங்கள்

பழ வகை மரங்களை வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் சத்தான கனி வகைகள் கிடைக்கின்றன. எனவே, பருவ மழை தொடங்கவுள்ள இத்தருணத்தில் பழ மரங்கள் நடவுசெய்ய தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

மா மரம்

 • வரிசைக்கு வரிசை 7 - 10 மீ, செடிக்கு செடி 7 - 10 மீ இடைவெளியில் நடவு செய்யலாம். அடர் நடவு முறையானால் வரிசைக்கு வரிசை 5 மீ, செடிக்கு செடி 5 மீ இடைவெளி விட்டு நடவு செய்யலாம். 3 அடிக்கு 3 அடிக்கு 3 அடி என்ற அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 1.3 சதவீதம் லிண்டேன் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மாங்கன்றுகளை ஒட்டுப்பகுதி தரைநிலையிலிருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நட வேண்டும்.
 • முதலாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1,250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஆண்டுதோறும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் மேற்கண்டவாறு உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.
 • 6ஆவது ஆண்டிலிருந்து ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், 2.25 கிலோ யூரியா, 6.25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2.50 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்கள் இடவேண்டும்.

நெல்லி

 • வரிசைக்கு வரிசை 6 மீ, செடிக்கு செடி 6 மீ இடைவெளியில் நடவு செய்யலாம். 3 அடிக்கு 3 அடிக்கு 3 அடி என்ற அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம் 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 1.3 சதவீதம் லிண்டேன் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஓட்டு நெல்லிக் கன்றுகளை நடவேண்டும்.
 • நான்காம் ஆண்டு காய்க்கத் தொடங்கியதும், ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், 1.50 கிலோ யூரியா, ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒரு கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்களை இரு முறை பிரித்து இடவேண்டும்.

சப்போட்டா

 • வரிசைக்கு வரிசை 8 மீ, செடிக்குச் செடி 8 மீ இடைவெளியில் நடவு செய்யலாம். அடர் நடவு முறையில் வரிசைக்கு வரிசை 8 மீ, செடிக்குச் செடி 4 மீ இடைவெளியில் நடவு செய்யலாம். 3 அடிக்கு 3 அடிக்கு 3 அடி அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 1.3 சதவீதம் லிண்டேன் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு சப்போட்டா கன்றுகளை நடவேண்டும்.
 • முதலாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1,250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மரம் ஒன்றுக்கு இதே அளவில் கூடுதலாக உரமிட வேண்டும். 6ஆம் ஆண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், 2.2.5 கிலோ யூரியா, 6.25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2.50 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.

எலுமிச்சை

 • வரிசைக்கு வரிசை 5 மீ, செடிக்கு செடி 5 மீ இடைவெளியில் நடவேண்டும். 2.5 அடிக்கு 2.5 அடிக்கு 2.5 அடியில் எடுக்கப்பட்ட குழியில் நடவு செய்யும்போது, குழிக்கு 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு நடவேண்டும்.
 • முதல் ஆண்டுக்கு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 625 கிராம் சூப்பர் பாஸ்பேட், 170 கிராம் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஆண்டுதோறும் மரத்துக்கு 5 கிலோ தொழு உரம், 220 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர் பாஸ்பேட், 70 கிராம் பொட்டாஷ் உரங்களை அதிகரித்து இடவேண்டும்.
 • 6ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் 30 கிலோ தொழு உரம், 1,350 கிராம் யூரியா, 1,250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இவ்வாறு இடும் உரங்களில் மார்ச் மாதத்தில் யூரியா மட்டும், அக்டோபர் மாதத்தில் பாதியாக பிரித்து இடுதல் வேண்டும்.

கொய்யா

 • வரிசைக்கு வரிசை 5 - 6 மீ, செடிக்கு செடி 5 - 6 மீ இடைவெளியில் நடவேண்டும். 1.5 அடிக்கு 1.5 அடிக்கு 1.5 அடி என்ற அளவில் எடுக்கப்பட்ட குழியில் 10 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 1.3 சதவீதம் லிண்டேன் குருணை 50 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, கொய்யா பதியன் கன்றுகளை நடவேண்டும்.
 • மார்ச், அக்டோபரில் காய்க்கத் தொடங்கிய மரங்களுக்கு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், 2.25 கிலோ யூரியா, 6.25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 1.75 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை 2ஆகப் பிரித்து இடவேண்டும்.
 • கொய்யா மகசூலை மேம்படுத்த ஒரு சதம் யூரியா, அதாவது ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் கலந்து, அரை சதவீதம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் 5 கிராம் அளவில் கலந்த கரைசலை மார்ச், அக்டோபரில் இலைவழி உணவாகத் தெளிக்க வேண்டும்.
 • பழ மரக் கன்றுகளை ஒட்டுப் பகுதி தரையிலிருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவேண்டும். ஆதரவுக்கு குச்சி நட்டு, தளர்வாகக் கட்டிவிடவேண்டும். உரங்களை மரத்திலிருந்து ஒன்றரை அடி விட்டு இலைப் பரப்புக்குள் அரை வட்டமாக முக்கால் அடி ஆழக் குழியில் வைத்து மூடவேண்டும்.
 • "பழ மரக் கன்றுகளை ஒட்டுப் பகுதி தரையிலிருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நட வேண்டும். ஆதரவுக்கு குச்சி நட்டு, தளர்வாகக் கட்டிவிடவேண்டும். உரங்களை மரத்திலிருந்து ஒன்றரை அடி விட்டு இலை பரப்புக்குள் அரை வட்டமாக முக்கால் அடி ஆழக் குழியில் வைத்து மூட வேண்டும்.

ஆதாரம் : சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை

3.075
சிவசந்திரன் Jul 15, 2020 10:14 AM

அருமையான பதிவு

masilamani Jun 26, 2016 08:49 AM

பெரு நெல்லி நற்றுகல் எங்கு கிடைக்கும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top