பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உள்நாட்டு கண்டுபிடிப்புகள்

கிராம மக்களுக்கு பயனுள்ள எளிய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

எலி தொல்லையை சமாளிக்க உதவும் புதிய கண்டுபிடிப்பு

பருவமழைக் காலத்திற்கு பிறகு, விவசாயத்திற்கு எலிகள் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன.

எலி தொல்லையை சமாளிக்க விவசாயிகள் மேற்கொண்ட பிற வழிமுறைகள்

  • எலிக்கொல்லி மற்றும் தானிய மாவை கலந்து, பிளாஸ்டிக் பைகளில் வைத்து மர உச்சிகளில் வைக்கப்படும். இதை சாப்பிட்ட பின் எலிகள் இறந்து விடும். ஆனால் மழைக்காலங்களில் இது அதிக பலன் தருவதில்லை.
  • அரைத்த நிலக்கடலை, எள், கொத்துமல்லி விதை மற்றும் எலிக்கொல்லி ஆகியவற்றை கலந்து, துணிப்பையில் வைத்து மர உச்சிகளில் வைக்கப்படும். ஆனால், இதை உண்டு இறந்த எலிகளை சாப்பிட்ட பறவைகளும் இறக்க நேரிடும்.
  • எலி பிடிப்பவர்கள் பயன்படுத்தி எலிகளை பிடித்து அழித்தல். ஒரு எலியை பிடிக்க ரூ 25 முதல் 30 வரை கேட்பதால் இது அதிக செலவான முறையாகும்.

புதிய வகை எலிப்பொறி

கர்னாடகாவின், தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அருண் குமார், எலிகளை பிடிக்க சுற்றுச்சூழல் பாதிக்காத ஒரு பொறியை கண்டுபிடித்துள்ளார்.ஒரு பழைய மூங்கில் கூடையின் நான்கு மூலைகளையும் இணைக்கும் ஒரு கயிறு, ஒரே பிளாஸ்டிக் கயிற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கயிறு, மேலே அல்லது கீழே இழுக்கும் வகையில் ஒரு தென்னை ஓலையுடன் கட்டப்படும். மூங்கில் கூடையின் உள்ளே தேங்காய் துண்டும், இழுத்தால் மூடிக்கொள்ளும் வகையிலான பொறியும் இருக்கும்.
தேங்காய் துண்டால் கவரப்படும் எலிகள், பொறியின் உள்ளே மாட்டிக்கொண்டு கொல்லப்படும். இறந்த எலிகள் பொறியிலிருந்து நீக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்படும். இந்த முறை மூலம் 3 முதல் 4 எலிகள் பிடித்து கொல்லப்படும். இறந்த எலிகள் மற்ற எலிகளை உஷார் படுத்தும் ஒரு வகை இரசாயனங்களை வெளியிடுவதால் இதை ஒரு நிரந்தர முறையாக கருத முடியாது.
திரு. குமார் அவர்கள் வடிவமைத்த பொறி ஒவ்வொன்றுக்கும் ரூ 30 முதல் 35 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்கள் பெற, கீழ்கண்ட முகவரியில் அணுகவும்:
திரு.S.R . அருண் குமார் செட்டிகெரே (Mr. S.R. Arun Kumar Shettikere),
சிக்கநாயக்கனஹள்ளி (Chikkanaikanahalli),
தும்கூர் மாவட்டம் – 572226 (Tumkur district- 572226),
தொலைபெசி (Phone): 08133 – 269564, கைபேசி (mobile): 09900824420

மூலம் : தி ஹிந்து

Filed under:
3.03703703704
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top