பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விடியல்

விடியல் எனும் சமூக மாற்று நிறுவனம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

விடியல் 1986-ல் நிறுவப்பட்ட ஒரு சமூக மாற்று நிறுவனம். 'ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக பொருளாதார அரசியல் வலிமையோடு வாழுகின்ற ஒரு மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது' என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கல்வி வழங்கி தங்களது பிரச்சனைகளுக்கான தீர்வை தாங்களே கண்டறியும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தல்' என்னும் குறிக்கோளுடனும் தொடங்கப்பட்டது.

கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கான வாழ்நாள் கல்வி

கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, பெண்களிடையே சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி வளர்த்தது. 1996-97-ல் சுய உதவிக் குழுக்களை கிராம அளவில் இணைத்து கிராம அளவிலான கூட்டமைப்பையும், 1998-99-ல் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பையும், மே 25, 2000-ல் அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைத்து விடிவெள்ளி பெண்கள் கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

காமன் வெல்த் ஆஃப் லேர்னிங், கனடா, இப்கோ கிஸான், வங்கியாளர்கள், கால்நடை மற்றும் விவசாய பல்கலைக்கழகங்கள் போன்ற ஒத்தக் கருத்துக்களை உடைய கூட்டாளிகளுடன் (Win-Win frame work) இணைந்து விவசாயிகளுக்கும், சுய உதவிக் குழு பெண்களுக்கும் ஆடுவளர்ப்புக்கு தேவையான தகவல்களை மொபைல் போன் மற்றும் ODL படக்காட்சிகள் மூலமாகவும் அளித்து, கடனுடன் இணைந்த ஆடு வளர்ப்பு தொழிலை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் ஆடு வளர்ப்புத் திறனை மேம்படுத்தி, ஆடுவளர்ப்பில் நல்ல இலாபத்தை ஈட்டினர். இந்த முறையை 2012- முதல் தேனி மாவட்டத்தில் உள்ள 15 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

2014-ல் ஒரே தொழிலில் ஈடுபடும் பெண்களை கூட்டுப் பொறுப்புக் குழுவாக அமைத்து அவர்களை வானவில் என்ற கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.

விவசாய உற்பத்தியாளர் கம்பெனி

வாழ்நாள் கல்வித் திட்டத்தின் மூலம் கல்வியைக் கற்று ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்ட விடிவெள்ளி மற்றும் வானவில் கூட்டமைப்பை சேர்ந்த ஆர்வமுள்ள 1050 பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து, மொபைல் போனில் உற்பத்தியாளர் நிறுமம் தொடர்பான் தகவல்களை வாய்ஸ்மெயில்களாக அளித்து வருகிறது. 1050 விவசாயிகள் ஒவ்வொருவரும் ரூ.1000/- பங்குத் தொகை செலுத்தி 'தேனி மாவட்ட விவசாயிகள் ஆடு வளர்க்கும் உற்பத்தியாளர் நிறுமத்தை மதுரை CCD நிறுவனத்தின் ஆதரவுடனும், நபார்டு வங்கியின் உதவியுடனும் உற்பத்தியாளர் கம்பெனியாக செப்டம்பர் 16, 2015-ல் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வரும் இந்த கம்பெனிக்கு மத்திய அரசின் சிறு விவசாயிகள் வணிக கூட்டமைப்பு(SFAC)-ன் சமபங்கு நிதியாக ரூ.9,97,500/- ஐ ஊக்கத்தொகையாக பெற்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

ஆதாரம் : விடியல், இராசிங்காபுரம்-625528, தேனி மாவட்டம், தமிழ்நாடு, மின்னஞ்சல் : vidiyalrasi@gmail.com வலைதளம்: www.vidiyalngdo.in

Filed under:
3.0
A.Balaganesan Sep 10, 2019 07:36 AM

நல்ல திட்டம்

ஈசநத்தம் R . செல்வராஜ் Mar 08, 2018 05:54 AM

நல்ல திட்டம் இப்போதுதான் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளார்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top