பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிரியல் கட்டுப்பாடு முறைகள்

உயிரியல் கட்டுப்பாடு முறைகளைப் பயன்படுத்தி பூச்சி மேலாண்மை செய்யும் முறைகளை இங்கு விவரித்துள்ளனர்.

உயிரியல் முறைப்பூச்சி மேலாண்மை

பயிர்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு இயற்கை தந்த நன்கொடை பூச்சிகளின் “இயற்கை எதிரிகள்”. இவ்வாறு உயிருள்ள இயற்கை உயிரினங்களைக் கொண்டு தீங்கு செய்யும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் முறை பூச்சி மேலாண்மை என்று பெயர். உயிரியல் காரணிகளை சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

சாறுண்ணிகள்

இவற்றைக் கொண்ணிகள் (அல்லது) இரை விழுங்கிகள் என்றும் அழைப்பர். இவை பெரும்பாலும் உருவில் பெரியவை. சுறுசுறுப்பாக வேகமாக நகரும் குணம் கொண்டவை. இவைகள் கூர்மையான பார்வைத்திறனைக் கொண்டிருக்கும். இவற்றைவிட உருவில் சிறிய பூச்சிகளை அதிக எண்ணிக்கையில் உண்ணும் திறன் படைத்தவை. நாம் அன்றாடம் பார்க்கும் தட்டான், ஊசித்தட்டான் போன்றவை சாறுண்ணி வகையைச் சார்ந்தவையே.

பூச்சிக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் சாறுண்ணிகள்

சாறுண்ணி

கட்டுப்படுத்தும் பூச்சி

பயிர்

பரிந்துரை

பச்சை கண்ணாடி இறக்கைப்பூச்சி

அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, அந்துப்பூச்சிகளின் முட்டைகள் மற்றம் இளம்புழுக்கள்

பருத்தி, தக்காளி, வெண்டை, அவரை, உளுந்து, பாசிப்பயறு, துவரை

50,000 -1,00,000

கிரிப்டோலீமஸ் பொறிவண்டு

மாவுப்பூச்சிகள், செதில் பூச்சிகள்

பூசணி, கத்தரி, தக்காளி, பப்பாளி, சீத்தாப்பழம், திராட்சை, மா, மாதுளை, சப்போட்டா, மல்லிகை, மல்பரி, காஃபி போன்றவை.

5,000 -10,000 எண்ணிக்கை
பழப்பயிர்களில் மரத்திற்கு 10 வீதம் விடவும்

ஒட்டுண்ணிகள்

குளவி மற்றும் ஈ இனத்தைச்சேர்ந்த பூச்சிகள் மற்ற பூச்சிகளில் வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் குணம் படைத்தவை. இவற்றை ஒட்டுண்ணிகள் என்று அழைப்பர். ஒட்டுண்ணிகள் உருவில் சிறியவை, இரையைத் தேடிச்சென்று அவற்றுள் முட்டையிடும் திறன் படைத்தவை. சாறுண்ணிகளைப் போன்று இவை இரையை உடனடியாகக் கொன்று உண்பதில்லை. இவை இவற்றின் இறைக்குள் (முட்டை, புழு, கூட்டுப்புழு) முட்டையிடும். முட்டை பொரித்து, புழு வளர்ந்து, ஒட்டுண்ணியாக வெளிவரும் வரை இவற்றின் இரை உயிருடனேயே இருக்கும். ஒட்டுண்ணிகளை முட்டை ஒட்டுண்ணி, புழு ஒட்டுண்ணி, கூட்டுப்புழு ஒட்டுண்ணி என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முட்டை ஒட்டுண்ணி பூச்சியின் முட்டைகளைத் தேடிப் பிடித்து அதன் மீது தன் சிறிய முட்டையை இடுகின்றது. இவற்றில் பூச்சியின் முட்டை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. உதாரணமாக டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியைக் கூறலாம்.

புழு ஒட்டுண்ணி நேரடியாகப் பூச்சிகளின் புழுக்களினுள் தன் முட்டைகளை இடும். நாளடைவில் புழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுண்ணியின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு மடிந்து விடுகின்றன. பிரக்கான், பெதிலிட் போன்றவை புழு ஒட்டுண்ணிகளாகும்.

கூட்டுப்புழு ஒட்டுண்ணி பூச்சிகளின் கூட்டுப்புழுக்களினுள் தன் முட்டைகளை இடுகின்றன. இதனால் பூச்சிகள் கூட்டுப்புழு பருவத்திலேயே அழிக்கப்படுகின்றன. இதற்கு உதாரணமாக ஈலோபிட் கூட்டுப்புழு ஒட்டுண்ணியைக் குறிப்பிடலாம்.

பூச்சிக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒட்டுண்ணிகள்

பயிர்

ஒட்டுண்ணி

பூச்சி

பரிந்துரை (ஹெக்டர்)

வெளியிடும் முறை

நெல்

டிரைக்கோ
கிரம்மா ஜப்பானிக்கம்

தண்டு துளைப்பான்

5 சிசி

நாற்று நட்ட 30 மற்றும் 37ம் நாட்களில் விடவும்

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

இலைச்
சுருட்டுப்புழு

5 சிசி

நாற்று நட்ட 37, 44 மற்றும் 51ம் நாட்களில் விடவும்

மக்காச்சோளம்

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

தண்டு துளைப்பான்

4 சிசி

நட்ட 45ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் ஆறு முறை விடவும்

ஆமணக்கு

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

காவடிப்புழு

2.5 சிசி

நட்ட 30ம் நாள் முதல் 7 நாட்கள் இடைவெளியில் 3 முறை விடவும்

தக்காளி

டிரைக்கோ
கிரம்மா பிரஸிலை
யென்சிஸ்

காய்ப்புழு

5 சிசி

நட்ட 45ம் நாள் முதல் 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

கத்தரி

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

காய்ப்புழு மற்றும் குருத்துப்
புழு

2.5 சிசி

காய்பிடிக்கும் பருவத்திலிருந்து7நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

வெண்டை

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

பச்சைக்
காய்ப்புழு

2.5 சிசி

பூக்கும் பருவத்திலிருந்து 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

அவரை, மொச்சை

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

பச்சைக்காய்ப்
புழு

5 சிசி

நட்ட 45ம் நாள் முதல் 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

முட்டைகோசு, பூக்கோசு

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

வைர முதுகுப்பூச்சி

2.5 சிசி

பூச்சியின் தாக்குதல் அறிகுறி
தென்பட்டதிலிருந்து 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

பப்பாளி,

அசிரோபேகஸ் பப்பாயே

மாவுப்பூச்சி

100 எண்ணம்

மாவுப்பூச்சி தென்பட்டவுடன் ஒரு முறை விடவும்

மரவள்ளி

அசிரோபேகஸ் பப்பாயே

மாவுப்பூச்சி

100 எண்ணம்

மாவுப்பூச்சி தென்பட்டவுடன் ஒரு முறை விடவும்

கோகோ

அசிரோபேகஸ் பப்பாயே

மாவுப்பூச்சி

100 எண்ணம்

மாவுப்பூச்சி தென்பட்டவுடன் ஒரு முறை விடவும்

பருத்தி

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

பச்சைக்காய்ப்புழு

6.25 சிசி

நட்ட 45ம் நாளில் 3 முறை விடவும்(15 நாட்கள் இடைவெளியில்)

இளஞ்சிவப்புக் காய்ப்புழு

6.25 சிசி

கப்பைப் பிடிக்கும் பருவத்தில் 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

கரும்பு

டிரைக்கோ
கிரம்மா கைலோனிஸ்

இளங்குருத்துப்புழு

2.5 சிசி

நட்ட 45ம் நாட்களிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

இடைக்கணுப்புழு

2.5 சிசி

கரும்பு நட்ட 4ம் மாதம் முதல் 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

டிரைக்கோ
கிரம்மா ஜப்பானிக்கம்

நுனிக் குருத்துப்புழு

2.5 சிசி

நட்ட 60 வது நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 6 முறை விடவும்

தென்னை

பிரக்கான் பிரிவி
கார்னிஸ்

கருந்தலைப்
புழு

50 மரம்

சனவரி மாதம் முதல் விடவும்

மல்பரி

அசிரோ
பேகஸ் பப்பாயே

மாவுப்பூச்சி

100 எண்ணம்

மாவுப்பூச்சி தென்பட்டவுடன் ஒரு முறை விடவும்

நோய்க்கிருமிகள்

இவை பூச்சிகளில் நோயை ஏற்படுத்தி அழித்திடும் நுண்கிருமிகளாகும். பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்றவை இவற்றுள் அடங்கும். பிவேரியா, வெர்டிசிலியம், மெட்டாரைசியம் வகையைச் சார்ந்த பூஞ்சையினங்களும், பேசில்லஸ் வகையைச் சார்ந்த பூஞ்சையினங்களும், பேசில்லஸ் வகையைச்சார்ந்த பாக்டீரியாக்களும், நியூக்ளியர் மற்றும் கிரெனலோசிஸ் வகையைச்சார்ந்த வைரஸ்களும் பூச்சிக்கட்டுப்பாட்டில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

பூஞ்சையினங்கள், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, தண்டுத்துளைப்பான் மற்றும் இலையை உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்திடும் திறன் வாய்ந்தவை. பூஞ்சையினங்கள் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்றீரப்பதமாக சூழ்நிலைகளில் அதிக அளவில் பூச்சிகளைத்தாக்கி அழித்திடும் குணமுடையன.

பாக்டீரியாக்களில் பேசில்லஸ் வகைப்புழுக்களை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை தாக்கிய புழுக்களால் அதிகமாக நடமாட முடியாது. வாயிலிருந்தும் உடலின் பின்பகுதியிலிருந்தும் ஊண் போன்ற திரவம் வெளியேறிக்கொண்டே இருக்கும். உடல் கரும்பு நிறமாகி இறுதியில் பூச்சி இறந்து விடும். பச்சைக்காய்ப்புழு, புருட்டூனியாப்புழு, சிவப்பு கம்பளிப்புழு, எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி, காவடிப்புழு போன்றவை இந்த வகை பாக்டீரியாக்களால் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான புழுக்களை அழிப்பதில் வைரஸ் பெரும்பங்கு வகிக்கின்றன. வைரஸ் நோய்க்கிருமிகளுடைய இலைகளைப்புழுக்கள் உண்ணும் போது நோய் தொற்று ஏற்படுகின்றன. இவற்றால் பாதிக்கப்பட்ட புழுக்களால் வேகமாக நகரமுடியாது. புழுக்கள் உணவு உண்ணும் தன்மையை இழந்து விடும்.தாக்கப்பட்ட புழுக்கள் வெண்மையாக பின்னர் கரு நிறத்தினை அடைந்து பயிர்களில் தலைகீழாகத் தொங்கும்.

ஆதாரம் : மலரும் வேளாண்மை

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top