பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

CIPHET -இன் தொழில்நுட்பங்கள்

அறுவடை பின்சார் தொழில்நுட்பவியலின் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்திற்கு கீழ் CIPHET மூலம் உருவாக்கப்பட்ட மற்றும் வணிகம் செய்யப்பட்ட தொழில்நுட்பங்களை பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன

கொத்து மல்லி பிளப்பான்

கொத்துமல்லியை விதைப்பதற்கு முன்போ அல்லது சுவாச புத்துணர்ச்சி பொருளாக மாற்றுவதற்கு முன்போ, இரண்டாக பிளக்க வேண்டும். வழக்கமாக இது கையில் உடைக்கப்படும். ஆனால் இது ஒரு சிரமமான மற்றும் இதனால் அதிகமாக சேதம் ஏற்படும். எனவே இதனை இயந்திரமாக்குதல் அவசியம் ஆகும். எனவே கொத்துமல்லியை உடைப்பதற்கு CIPHET ஒரு இயந்திரத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இது 1 HP மோட்டாரால் இயக்கப்படும். இது ஒரு மணி நேரத்திற்கு 60-80 கிலோ கொத்துமல்லியை பிரித்தெடுக்கும். 6.5 செமீ விட்டம் மற்றும் 10 செமீ நீளம் உடைய இரண்டு உருளைகள், இந்த இயந்திரத்தில் இருக்கும். இந்த இரு உருளைகளும் மாறுபட்ட வேகத்தினால் இயக்கப்படும். இதனால் கொத்தமல்லி இரண்டாக உடைக்கப்படும். கொத்துமல்லியில் 14.2 (%) ஈரப்பதம் இருக்கும் நிலையில் இயந்திரம் அதனை இரண்டாக பிளக்கும்.

மேலும் தகவலுக்கு
மத்திய அறுவடைபின் சார் பொறியியல் மற்றம் தொழில்நுட்ப நிறுவனம் ( லுதியானா, 141004 (பஞ்சாப்)
தொலைபோசி: 91-161-2308669 (அ); 91-161-2305674 (நிறுவனர்)
பேக்ஸ்: 91-161-2308670
மின் அஞ்சல் : ciphet@sify.com

3.11904761905
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Related Languages
Back to top