பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம் / உணவு பதப்படுத்துதலுக்கான அடிப்படை தத்துவங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவு பதப்படுத்துதலுக்கான அடிப்படை தத்துவங்கள்

உணவு பதப்படுத்துதலுக்கான அடிப்படை தத்துவங்கள் மற்றும் முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உணவு பதப்படுத்துதல் என்ற தொழில்நுட்பம் உணவு பாழாதல், உணவில் தொற்று ஏற்படுதல், உணவு நஞ்சாதல், மற்றும் நுண்ணுயிரியால் தூய்மைக் கேடு ஏற்படுதல், போன்றவைகள் ஏற்படுவதை தடுக்கின்றது. உணவு பதப்படுத்துதல் கீழ்வரும் பண்புக்கூறுகளை கொண்டு செய்யப்படுகிறது.

அ) நுண்ணுயிரால் தூய்மைகேடு ஏற்படுவதை தடுத்து அகற்றவும், நுண்ணுயிர் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றம் ஏற்படுவதை தடை செய்வதற்கும்

ஆ) தூய்மைக் கேட்டினால் நோய் ஏற்படுத்தும் உயிரிகளை அழித்து, உணவு பாழாதலையும் உணவு நஞ்சாதலையும் குறைப்பதற்காகவும்.

உணவுப் பதப்படுத்துதலின் அடிப்படைத் தத்துவம்

உணவுப் பதப்படுத்துதலின் அடிப்படைத் தத்துவம் முதல்நிலையில் கீழ்க் கண்டவற்றை தடை செய்வதற்கான செயல்முறைகளை உட்படுத்தி இருக்கும்.

 • நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள்
 • உள்ளிருக்கும் நொதிகளின் செயல்பாடுகள்
 • உணவின் தரத்தை குறைக்கக்கூடிய இரசாயனக் கிரியைகள்
 • பூச்சிகள் மற்றும் எலிகளால் ஏற்படும் தாக்குதல் மற்றும் பாழாதல்

இவற்றுடன், இயந்திரங்களால் கையாளப்படுகையில், செயல்முறைக்கு உட்படுத்தப்படுகையில், கட்டும்போதும் சேமித்தல் மற்றும் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்போதும் உணவு பாழாகிறது. உணவின் தரம் மங்கி, குறைவதை தடுப்பதற்கு போதுமான பராமரிப்பு எடுக்க வேண்டும். மேல் கூறப்பட்ட தத்துவங்கள், விதிகளின் அடிப்படையில் உணவு பதப்படுத்தலுக்கு பல முறைகள் உள்ளன. தொற்று நீக்கிய நிலையில் வைப்பதின் மூலமும், நன்றாக மூடி வைப்பதன் மூலமும் நுண்ணுயிரிகள் உணவை எளிதில் அணுகும் தன்மையினை கட்டுப்படுத்துதல்.

வடிகட்டுதல் அல்லது சென்ட்ரிஃப்யூஜ் செய்வதன் மூலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளை அகற்றலாம். பதப்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியும் குறைந்த வெப்ப நிலைகளை பயன்படுத்தியும், மற்றும் உணவில் உள்ள நீரின் செயல்பாட்டை குறைப்பதற்கு உணவை காய வைத்து நீராவியாக நீரை வெளியேற்றுவதாலும், நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை தடை செய்யலாம்.

அயனிகளைக் கொண்டு கதிர்வீச்சு பாய்ச்சுவதாலும், அதிக வெப்பநிலை பயன்படுத்தியும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. மிதமான வெப்பத்தினால் உள்ளிருக்கும் நொதிகளை செயலிழக்கச் செய்யலாம். இரசாயன செயல்களை, இரசாயன கூட்டுப்பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் தடுக்கலாம். உணவுப்பொருளை நொதிக்கச் செய்தல் மூலமாக அதிக நிலைப்புத்தன்மை அல்லது குறைந்த அளவில் அழுகுதலை உணவுப் பொருட்களில் ஏற்படுத்தலாம்.

உணவு பதப்படுத்துதல், வழக்கமாக தொழிற்சாலைகளில் பல முறைகளை இணைத்து, அதிகமான ஆற்றல் விளைவுகளை பெறமுடிகிறது. சுத்தமாக வைத்திருத்தல் அல்லது உணவை நுண்ணுயிரிகள் எளிதில் அணுகத்தக்க தன்மையில் இருந்து நுண்ணுயிரிகள் தடை செய்யப்படுவது தடுத்தல் முதலியவை இயற்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் மேலுள்ள பாதுகாப்பு உறையான தோல்கள், முட்டைகள் மற்றும் கொட்டைகள் மேல் உள்ள ஓடு, மற்றும் மாமிச மீன் உணவில் உள்ள தோல்களும், உறைகளும், நுண்ணுயிர்கள் தாக்குதலை தவிர்த்து, உயிருள்ள திசுக்களை நல்ல திடமான ஆரோக்கியமான நிலையில் பராமரிக்கிறது.

வடிகட்டுதல் அல்லது சென்ட்ரிஃபியூகேஷன் முறையால் நுண்ணுயிரிகள் குறிப்பாக திரவ உணவுகளான பால், மென்பானங்கள். பழச்சாறுகள், மற்றும் மதுபானங்கள் முதலியவற்றிலிருந்து அகற்றப்படுகின்றன, உணவை பதப்படுத்துவதற்கான பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் கூட்டுப் பொருட்களை உணவு தயாரித்தல், பதப்படுத்துதல் மற்றும் நொதித்தல் போது சேர்த்து உணவுப் பொருட்கள் கெடாமல் நீடித்து நிலைத்து இருப்பதற்காக செய்யப்படுகிறது. கரிமச் சேர்மானம் உடைய பொருட்கள் மக்கிப் போதல், ஒளிச் சேர்க்கை ஆகிய இரண்டும் உயிரின வாழ்க்கை நிலைக்கு (ecosystem) மிக முக்கியமானவை.

குப்பைக்கூளம், கரிமச் சேர்மானம் உள்ள இரசாயனம், பல்வேறு உயிரின் வாழ்க்கை நிலைகளின் ஊட்டங்களை சுமந்து கொண்டு இருக்கும். குப்பைக் கூளத்தின் கட்டமைப்புச் சார்ந்த ஆக்கக்கூறுகளின் பணி என்பது மக்கிப்போதலின் விகிதம் ஆகும். அதாவது குப்பைக்கூளத்தின் கட்டமைப்பு சார்ந்த ஆக்ககூறுகள், மக்கிப் போதலின் விகிதத்தை தூண்டுகிறது.

குறிப்பிட்ட உயிரின் வாழ்விற்குறிய தளத்தினை சார்ந்து நுண்ணுயிரிகள் கரிமச் சேர்மானம் உடைய பொருட்களை ஒரே கூட்டமாக்கி, மக்கிப்போகச் செய்யும். எவ்வாறாயினும், கரிமச் சேர்மானம் உடைய பொருள் 2 பணிகளை நுண்ணுயிரிகளுக்கு செய்கிறது. முதலாவதாக, வளர்வதற்கான சக்தியை அளிக்கிறது. மற்றும் இரண்டாவதாக புதிய செல்கள் உருவாதலுக்கு ஆதாரப் பொருளாக கார்பனை அளிக்கிறது. இந்த நடைமுறையின் போது, சில வேண்டாத பொருட்களும் நுண்ணுயிரிகளால் உருவாகின்றன. அதாவது, கரிம சேர்மானம் உடைய அமிலங்கள், கரியமில வாயு, மீத்தேன் முதலியவை. பொருட்கள் புரோட்டோபிளாச கார்பனாக மாற்றச் செய்யும் செயல் உட்செரித்தல் (assimilation) என்று அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய 20-40% பொருள் உட்செரிக்கப்படுகிறது. மற்றும் மீதமானவை கரியமிலவாயுவாக வெளியேற்றப்படுகிறது அல்லது கழிவுகளாக சேர்த்து வைக்கப்படுகிறது. கார்பன் உட்செரித்தல் ஏற்படுகையில், மற்ற பிற உயிர்ப்பொருள் சார்பில்லாத (inorganic) இரசாயனங்களான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மற்றும் கந்தகம் போன்றவைகளும் புதிய செல்கள் உருவாதலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நடைமுறையில், நுண்ணுயிரிகள் உயிர்ப்பொருள் சார்பில்லாத பொருட்களை செல்களில் அதிக அளவில் சேர்த்து விடுகின்றன. அதனால் தாவரத்திற்கு மண்ணில் இருக்கும் ஊட்டங்களின் அடர்வும் குறைந்து விடுகிறது. நுண்ணுயிர்களால் ஏற்படும் உயிர்ப்பொருள் சார்பில்லாத பொருட்கள் திரள்வது மற்றும் தாவரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படச் செய்வது இயங்க முடியாத நிலை (immobilization) என்று கூறப்படுகிறது.

கரிமச் சேர்க்கை பொருட்கள் மண்ணில் இருக்கும்போது, அவை நுண்ணுயிரிகளால் படிப்படியாக ஒரே சீராக அடர்வு நிறத்துடன் கூடிய, வடிவமற்ற திரளாக இலை, தழை மக்கிய சத்துள்ள தோட்டமண் (humus) என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. இலை, தழை மக்கிய சத்துள்ள தோட்டமண்ணானது பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நுண்ணுயிர்கள் உருவாக, சக்தி அளிக்கும் ஆதாரப் பொருளாக விளங்குகிறது. மற்றும், மக்கிப் போதல் விளைவாக கரியமிலவாயு அம்மோனியா மற்றும் பிற பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. பூஞ்சை மற்ற பிற நுண்ணுயிர் பிரிவுகளான முக்கியமாக பாக்டீரியா மற்றும் ஆக்டினோமைசீட்ஸ் மண்ணில் உள்ள கரிமச் சேர்க்கை பொருட்களை மக்கிப் போக செய்து கூட்டு நிலையில் உள்ள கரிமச் சேர்க்கை பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை வெளியிடச் செய்கின்றன. எவ்வாறாயினும், மக்கிப் போகும் நடைமுறையானது, தாவரங்கள் அழுகிப் போகும் நிலையில் ஆரம்பமாகும். இந்த நிலைக்குப் பின், கரையான்களும் அதன் பங்கிற்கு செயலாற்றி குப்பைக்கூளங்களை சிதைக்கின்றன. அதன் பிறகு, பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த நுண்ணுயிரிகள் உயிரின் வாழ்வுக்குத் தேவையான தளத்தில் இரசாயன தன்மையைப் பொறுத்து கூட்டமாகச் சேர்கின்றன. இவ்வாறு நுண்ணுயிரிகளின் அடுத்தடுத்த வருகை மக்கிப் போகும் பொருட்கள், முழுவதுமாக மறையும் வரை ஏற்படுகிறது. நுண்ணுயிரிகளின் வரிசையாக தோற்ற நிகழ்வுகள் அடுத்தடுத்த வருகை என்று கூறப்படும், மக்கிப் போகின்ற காலகட்டத்தில், நீரில் கரையக்கூடிய ஆக்கக் கூறுகள் முதலில் வளர்சிதை மாற்றம் அடைகின்றன. அதன் பிறகு, செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸ் படிப்படியாக மறைந்து விடுகின்றன. லிக்னின்கள், மக்கிப்போதலின் இறுதி நிலையில் மறைந்து விடுகின்றன. ஏனெனில், இவை மக்கிப் போவதை எதிர்க்கின்றன.

உயிர் மண் இரசாயன சுழற்சி

மண்ணில் இருந்து பெறக்கூடிய பெரிய தாவர ஊட்டச்சத்துக்கள் என்பன, நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகும். ஏனெனில், இவை உயிரியல் பூர்வமாக தாவரங்களுக்கு கிடைக்கப் பெறச் செய்யப்பட்டுள்ளன. உயிர் மண் இரசாயன சுழற்சி, நுண்ணுயிரிகளோடு தொடர்பு கொண்டு இருப்பதால், மண்ணின் செழிப்புத் தன்மை பராமரிக்கப்படுவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

நைட்ரஜன் சுழற்சி

காற்றுமண்டலத்தில் நைட்ரஜனின் அடர்வு மிகுந்து இருக்கிறது. நைட்ரஜன் புரதங்களிலும் மற்றும் உயிரிகளின் பச்சையத்திலும் இன்றியமையாத ஆக்கக்கூறாக விளங்குகிறது. நைட்ரஜன் உயிர்மண் இரசாயன சுழற்சியில் முக்கியமான நடைமுறைகள் யாதெனின் நைட்டிரஜன் நிலைப்படுத்துதல், அம்மோனியா வாக்குதல், நைட்டிரேட்டாகுதல் மற்றும் மீண்டும் நைட்ரஜனாக்குதல் ஆகியவையாகும்.

நைட்ரஜன் நிலைப்படுத்துதல்

நைட்ரஜன் அணுக்கள் நைட்ரஜன் கூட்டுப்பொருட்களாக மாற்றப்படுவதே நைட்ரஜன் நிலைப்படுத்துதல் எனப்படும். காற்றில் வாழும் மற்றும் கூட்டு வாழ்க்கை நடத்தும் நுண்ணுயிரிகள் நைட்ரஜனை புரதங்களாக நிலைக்கச் செய்கின்றன. நைட்ரஜனை நிலைபெறச் செய்யும் நுண்ணுயிரிகள் டை அசோட்ராப்ஸ் என்று கூறப்படுகின்றன.

அமோனியாவாகுதல்

இந்த முறையில் கரிமச் சேர்மானத்திலுள்ள நைட்ரஜன் அமோனியாவாக மாற்றப்படுகிறது. அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துக்களாக நுண்ணுயிரிகளால் பயன்படுத்தப்படுகின்றன. காற்றுள்ள சுவாச நிலையில் அமினோ தொகுப்புகள் அமினோ அமிலங்களில் இருந்து நீக்கப்பட்டு அதன்பின் அமோனியா வாயுவாக வெளியிடப்படுகிறது,

நைட்டிரேட்டாகுதல்

இந்த முறையில் அமோனியா காற்றுடன் இணைந்து நைட்ரேட் ஆகிறது. இந்த நடைமுறை இரண்டு படிகளைக் கொண்டுள்ளது, முதல் படியில், அமோனியா காற்றுடன் இணைந்து நைட்ரைட் ஆகிறது. இது நைட்ரோசோபிக்கேஷன் ஆகும்.

ஆக்ஸிகரண செயல் சக்தி அளிக்கிறது. இந்த செயல் பாக்டீரியல் இனம் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்ரோசோகாக்கஸ் ஆகியவற்றின் இயக்க விளைவால் ஏற்படுகிறது. இரண்டாம் படியில், நைட்ரைட், நைட்ரேட் ஆக உயிரகத்துடன் இணைவுறுதலால் மாறுகிறது.

(விலங்குகள் N,-வாயு நைட்டிரேட்டாகுதல் இயங்கமுடியாத நிலை நைட்ரேட் குறைப்பு தாவரங்கள் & N, நிலைப்பு (கூட்டுவாழ்க்கை ) மீண்டும் நைட்டிரஜனாகுதல்

ஆக்ஸிகரண பாக்டீரியா சக்தியை அளிக்கிறது. இது, பாக்டீரியா இனம் நைட்ரோபாக்டரின் இயக்க விளைவால் நடைபெறுகிறது.

டிநைட்ரிபிகேஷன்

இந்த முறையில் நைட்ரேட், நைட்ரைட்களாக குறைக்கப்படுகிறது. மற்றும் தொடர்ச்சியாக நைட்ரஜன் வாயுவாகிறது. NO, > NO , -> N 0-> N, டிநைட்ரிபிகேஷனில், கரிமச் சேர்மானம் உடைய கூட்டுப்பொருள்கள் ஹைட்ரஜன் வழங்கியாக இருக்கும். எலக்ட்ரான் ஏற்றுக்கொள்பவராக நைட்ரேட் செயல்படும். டிநைட்ரிபிக்கேஷன் காற்றில்லா நிலைகளில் ஏற்படும். உதாரணம் : நிலங்களில் பருவ கால வெள்ள நிலை ஏற்படுகையில் பாக்டீரியல் இனங்களான தையோபேசிலஸ் டிநைட்ரிபிக்கன்ஸ், மைக்ரோகாக்கஸ்

நுண்ணுயிரிகள் இத்தனிமம் பல மாற்றங்கள் அடைவதில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. அவற்றுள் 1) கரையும் தன்மையை மாற்றுதல் ii) கரிமச் சேர்மானமுடைய பாஸ்பேட் தாது உப்புக்கள், கரிமச் சேர்மானமில்லாத பாஸ்பேட் தாது உப்பாக மாற்றுதல் (Mineralization) iii) பாஸ்பரஸ் கூட்டுப் பொருளின் ஆக்ஸிகரணம் மற்றும் குறைப்பு. இவை அனைத்திலும், இயங்க முடியாத நிலை மற்றும் இயங்கக்கூடிய நிலை ஆகியவை மிக முக்கியம் ஆகும்.

 • தாவர பாஸ்பரஸ்
 • விலங்கினம் பாஸ்பரஸ்
 • தழை இலை மக்கி உள்ள தோட்டமண்
 • நுண்ணுயிரிகளுள்
 • பாஸ்டர்ஸ் )

வளர்ச்சிக்கு எல்லை வகுக்கும் மூலக்கூறாக உள்ளது. ஏனெனில், அதிகமான அளவில் பாஸ்பேட்டானது மண்ணில் கரையாத கால்சியம், இரும்பு அல்லது அலுமினியம் பாஸ்பேட்களாக உள்ளன.

பாஸ்பேட்களின் இருப்பு அளவு, நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு கரிமம் சார்ந்த மற்றும் கரிமம் சாராத அமிலங்களில் கரையாத மற்றும் கரைகின்ற பாஸ்பேட் தன்மையை சார்ந்து உள்ளது. பல மண் நுண்ணுயிரிகள், குறிப்பிட்ட சில பூஞ்சைகள் இந்த அமிலங்களை உற்பத்தி செய்து கரையாத பாஸ்பேட்களை கரையச் செய்து, தாவரங்களுக்கு கிடைக்கச் செய்கின்றன. சில முக்கிய நுண்ணுயிரிகள், கரிமம் சேராத பாஸ்பேட்டுகள் கரைவதில் மிகவும் செயல்திறன் மிகுந்து விளங்குகின்றன. அவற்றுள் பேசில்லஸ், சூடோமோனாஸ், மைக்ரோகாக்கஸ் மற்றும் பூஞ்சைகளான அஸ்பெர்ஜில்லஸ், பெனிசீலியம் மற்றும் ஃப்யூசேரியம் முதலியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பாஸ்பட்டேஸ் நொதியானது கரிம சேர்மான பாஸ்பேட்களைக் கரைத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கார்பன் சுழற்சி

இயற்கையாக, கார்பன் கரிமம் சேராத நிலையில் மற்றும் கூட்டு கரிம சேர்மான ஆக்கக் கூறுகள் நிலையிலும் காணப்படுகிறது. காற்றுமண்டலத்தில் கரியமில வாயு அடர்வு 0.32 சதவிகிதம் மட்டுமே, இது தாவரத்தின் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான அளவை விட மிகக் குறைவானதே ஆகும்.

கரியமில வாயுவில் தான் முக்கிய ஆதாரமான கார்பன் உள்ளது. கார்பன், கரிம சேர்ம உலகை உருவாக்க தேவைப்படுகிறது. கரியமில வாயு அனைத்து உயிரினங்களும் சுவாசித்தலால் மீண்டும் காற்று மண்டலத்திற்கு வந்துவிடுகிறது. கரிமம் சேர்ந்த பொருட்கள் நுண்ணுயிரிகளால் மக்கச் செய்யப்பட்டு, மீண்டும் கார்பன், காற்று மண்டலத்தை அடைவது மற்றொரு முறை. எளிமையான கார்பன் சுழற்சி படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கந்தக சுழற்சி

உயிரினங்களுக்கும் சூழ்நிலைக்கும் இடையே ஏற்படும் கந்தகத்தின் சுழற்சி அசைவுகள், கந்தக சுழற்சி என்று கூறப்படுகிறது. கந்தகம், அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு இன்றியமையாத தனிமம் ஆகும். கந்தகம் தனி நிலையிலும், இணைந்த நிலையிலும் இருக்கும். தாவரம், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர் புரதங்கள், அமினோ கிடைக்கக்கூடிய பாஸ்பரஸ் இரசாயன முறையில் நிலையாக இருக்கும் பாஸ்பரஸ் இயங்கமுடியாத 1-இம்யுமொபிலைசேஷன் M-தாது உப்புக்கள் அதிகரிக்க செய்தல் ஆகும்

பாஸ்பரஸ் சுழற்சி

ஒரு தாவரத்தின் பாஸ்பேட் தேவையானது எடுத்துக் கொள்ளும் பாஸ்பேட் அயனிகளால் பூர்த்தி செய்யப்பட்டு, பிறகு செல்களுக்கு உள்ளே கரிம சேகரமான பாஸ்பேட்கள் இணைப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், பாஸ்பேட்டின் ஒரு சிறு பகுதி இயங்க முடியாத நிலையை அடைகிறது. தாவரங்கள் இறப்பிற்கு பிறகு, கரிம சேர்மான பாஸ்பேட் வேகமாக என்சைம்களின் நீர்த்தலினால் வெளியேற்றப்படுகிறது. பல சூழ்நிலைகளில், பாஸ்பேட் தாவர அமிலங்கள், சிஸ்டின் மற்றும் மித்தியோனின் ஆகியவற்றில் கந்தகம் உள்ளது. மண்ணில், கந்தகம், இருநிலைகளான கரிம சேர்மானமாகவும் (கந்தக அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் முதலியன) கரிம சேர்மானமற்ற நிலையிலும் (கந்தகம் மற்றும் சல்பேட்கள்) உள்ளன, மேலும் இவை எளிதாக வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

தாவரங்கள், கந்தக தேவைகளை கந்தக கூட்டுப்பொருட்களிலிருந்து பெறுகின்றன. ஆனால் விலங்குகள், தாவரங்கள் மற்றும் தாவரப் பொருட்களை அல்லது பிற விலங்குகளை உண்டு கந்தகத்தை பெறுகின்றன. இவற்றில் கந்தகமானது அநேகமாக ஒரு கந்தக ஆக்கக் கூறாக, கந்தகம், நிறைந்த அமினோ அமிலங்களில் சிஸ்டின் மற்றும் மித்தியோனின் போன்றவற்றில் உள்ளது. மக்கச் செய்யும் பாக்டீரியா, ஆக்டினோமைசீட்டீஸ், மற்றும் பூஞ்சைகள் ஜீரணிக்கும் நொதிகளை வெளியேற்றுகின்றன. இந்த நொதிகள் பெரிய அணுதிரள்களை சிறுசிறு பகுதிகளாக்குகின்றன.

மைகோர்ரிசா

பெரிய தாவரங்களின் வேர்களில் சில வகையான பூஞ்சைகள் கூட்டு வாழ்க்கை நடத்துகின்றன. இந்த வேர்கள் மைகோரிசா (பூஞ்சைகளின் வேர்கள்) என்று கூறப்படுகிறது. இது தெளிவாக தெரியும் வடிவ அமைப்பு ஆகும். இது சில குறிப்பிட்ட வேர்சார்ந்த பூஞ்சை மற்றும் செடிகள் வேர்களுக்கிடையே ஒன்றுக்கொன்று உதவும் கூட்டு வாழ்க்கை மூலம் உருவாகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டினால் குறிப்பாக பாஸ்பரஸ், நைட்டிரஜன் குறைந்த தாவரங்கள், மைகோரிசாவை உருவாக்குகின்றன. மைக்கோரிசா பாஸ்பரஸ் தாது உப்பு இடம் மாற்றச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மைகோரிசா பூஞ்சையின் குறிப்பிடத்தக்க பயன்பாடு அதிகரித்து பிரமிக்கும்படியாக பல் முனை தாவர வளர்ச்சியில் பங்கேற்று நல்ல அறுவடையையும் கொடுக்கிறது. மைகோரிசா பச்சைத் தாவரங்களில் தாதுக்கள் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. பூஞ்சைகள் சில தாதுக்களை மரங்களுக்கு அளித்து, மீண்டும் மரங்களிடமிருந்து இன்றியமையாத பொருட்களை தங்கள் வளர்ச்சிக்கு பெற்றுக் கொள்கின்றன.

இருவகையான மைகோரிசா உள்ளன.

 1. எண்டோமைகோரிசா
 2. எக்டோமைகோரிசா. வேர் திசுக்களுக்கு உட்புறத்தில் முற்றிலும் செல்களுக்கு இடையே பூஞ்சைகள் வளர்ந்தால் எண்டோமைக்கோரிசா என்று அழைக்கப்படுகிறது. எக்டோமைகோரிசல் பூஞ்சைகளுள் அமானிட்டா, போலிட்டஸ் மற்றும் செலிரோடெர்மா போன்றவை அடங்கும்

எண்டோமைகோரிசல் பூஞ்சைகளுள்

 1. குளோமஸ்மோசே
 2. குளோமஸ் பேசிகுலேட்டம்
 3. இகஸ்போரா மார்காரிட்டா ஆகியன அடங்கும்.

உயிர் பூச்சிக்கொல்லிகள்

உயிர் பூச்சிக் கொல்லிகள் என்பன இரசாயனங்களை நுண்ணுயிர் செல்கள் கொண்டு அதாவது அடிப்படையில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் கொண்டு தயாரித்து பூச்சி, வண்டுகளை அழிக்கப்பயன்படுகின்றன. பேக்குலோ வைரஸ்கள், இரிடோவைரஸ்கள், பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ், பேசில்லஸ் பாப்பில்லே, பேசில்லஸ் ஸ்டோரியஸ், சீலோமோமைசஸ், என்ட்மோப்தோரா மற்றும் ஃப்யூசேரியம்

ஆதாரம் : தமிழ்நாடு  ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.88235294118
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top