பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / களத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

களத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்

களத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பால் நிறுவனங்களில் புரட்சியை உருவாக்கும் தீவன ரகங்கள்

தீவன ரகங்கள் /கலப்பினங்கள் வெளியீடுகள், கம்பு நேப்பியர் கோ (CN) 4, கினியா புல் கோ CO (GG),  மல்டிகட் தீவன சோளம் கோ (FS) 29 மற்றும் லூசெர்ன்கோ 1 போன்ற தீவனங்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலும் விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த வகைகள் தேசிய அளவில் தீவனம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தமாக உள்ளது.  தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில கால்நடை விவசாயிகளுக்கு இந்த வகை தீவனங்கள் ஒரு வரமாக உள்ளது. இவ்வகை தீவனங்களின் சாகுபடியால் கால்நடை விவசாயிகள் வெண்மைப் புரட்சிக்கு தங்கள் பங்களிப்பை வெற்றிகரமாக அளிக்க வழிவகுக்கிறது.

கம்பு நேப்பியர் கலப்பின புல் கோ (சி.என்) 4

கம்புநேப்பியர்கலப்பினபுல்கோ (சி.என்) 4 சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. இதன் தண்டு மென்மையாகவும், நார்சத்து குறைந்தும் சர்க்கரை சாறு நிறைந்ததாகவும் உள்ளது. இத்தீவன தண்டில் வெள்ளை நிற பூச்சு  பரவலாக இருக்கும். இதில் தூர்கள் பல இருக்கும் அது வேகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கும்.இது நீளமான இலைகள், இலைக்கதிர்கள் மற்றும் உறையில், இலைவிளிம்புகள் மென்மையானதாகவும் கூர்மையற்றதாகவும் இருக்கிறது. இலை தண்டு விகிதம் அதிகமாக உள்ளது. கறவைமாடுகள், ஆடுகள் இவ்வகை தீவனங்களை நிராகரிக்காமல் அதிகமாக உட்கொள்கிறது.

கோ (சி.என்) 4 சராசரி பச்சை தீவன புல்லின் மகசூல் 382 டன் / எக்டர் / வருடம் இது CO 3 தீவன புல் இரகத்தை காட்டிலும் 32.9% உயர்விளைச்சலை கொண்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கினியா புல் கோ (GG) 3

கினியாபுல்கோ (GG) 3 மும்பாச பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தீவனமாகும்.இது அதிகளவில் தூறு உண்டாகின்ற நல்ல வீரியம் உள்ளது. இது அதிகப்படியான இலை தண்டு விகிதம் பெரிய மற்றும் நீண்ட இலைகள் கொண்டு உள்ளன. கறவைமாடுகள், செம்மறிஆடுகள், பன்றிகள் மற்றும் ஈமுபறவை இத்தீவனத்தை நிராகரிக்காமல் உண்பதால் இதன் ஏற்புத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த பசுந்தீவன புல்லின் மகசூல் ஒரு எக்டருக்கு 320 டன்கள்  இது கோ 2 தீவன புல்லின் மகசூலுடன் ஒப்பிடும் போது 18.5 சதவீதம் உயர் விளைச்சலாகும். உலர் மகசூல், கச்சாபுரதம் மற்றும் நார்சத்து உள்ளடக்கம் 79.39 டன்/எக்டர்/ ஆண்டு 6.35 % மற்றும் 30.3%.

கினியாபுல்கோ (GG) சிறப்புஅம்சங்கள் 3 உயர்உயிரிவிளைவிக்கின்றதுகோ (GG) 3

மல்டிகட் தீவன சோளம் கோ (FS) 29

சோளம், குதிரை மற்றும் குதிரைமசால் இந்தியாவில் 2.6 மீ  எக்டர் முதன்மை முக்கிய தீவனம் பயிராக மேற்கு உத்திர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தில்லி நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல்  தீவன  சாகுபடி காரிப்பருவத்தில் செய்கின்றனர்.

இந்த பிரபலமான மல்டிகட்  தீவன சோளம் கோ (FS) 29. இந்தியாவில் முதல் முறையாக இவ்வகையான தீவனம் பயிர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தீவன பயிர்துறையால் 2001 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.  ஒரு வருடத்தில் 6-7 அறுவடைகள் செய்யப்படுகிறது மற்றும் மகசூல் 170 டன்/எக்டர் /ஆண்டு. இது வறட்சி மிதமாக தாங்கக் கூடியது.

குதிரைமசால், கோ 1

இத்தீவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தீவன பயிர் துறையால் 1980 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இப்பயிர் ஒரு வருடத்திற்கு ஒரு எக்டருக்கு 80-90 டன்கள் மகசூல் தரக்கூடியது. இது 30 நாட்கள் இடைவெளியில் ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 12 முறை அறுவடை செய்யலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

3.00970873786
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top