பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தர்பூசணியில் அசுவிணியைக் கட்டுப்படுத்தும் முறைகள்

தர்பூசணியில் அசுவிணியைக் கட்டுப்படுத்தும் முறைகள்

அறிமுகம்

தர்பூசணியைத் தாக்கும் பூச்சிகளில் அதிக பங்கு வகிப்பது சாறு உறிஞ்சும் பூச்சியான அசுவிணி. தர்பூசணி கோடை காலத்தின் முன்னணி பழமாக உள்ளது. கலகாரி பாலைவனமான ஆப்பிரிக்காவே தர்பூசணிக்கு பூர்வீகம். தர்பூசணியை சில இடங்களில் வருடம் முழுவதும் பயிர் செய்கிறார்கள். தர்பூசணி உடலுக்கு நல்லது. இனிப்புடன் இருப்பது புத்துணர்ச்சி அளிக்க வல்லது. இதனை கோடை காலத்தில் தண்ணீர் தாகத்திற்காக அனைவரும் உண்கின்றனர். தர்பூசணியில் முக்கிய வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் ஏ1, வைட்டமின் ஏ2 மற்றும் தாது உப்புகளும் அடங்கி உள்ளன.

தர்பூசணியில் உள்ள முக்கிய இரகங்களான அர்கா மானிக், அர்கா ஜோதி, பி.கே.எம்.1, சுகர் பேபி, பூசா பென்டானா மற்றும் எஃப்1 எச்.ஒய்.பி.395 முதலியவற்றை விவசாயிகள் பெருமளவில் உற்பத்தி செய்கின்றனர்.  தர்பூசணியைத் தாக்கும் பூச்சிகளில் அதிக பங்கு வகிப்பது சாறு உறிஞ்சும் பூச்சியான அசுவிணி.

அமைப்பு

  • பசுமையும், மஞ்சள் நிறமும் கலந்த அசுவிணி மிகவும் சிறிய, மென்மையான உடலமைப்பைக் கொண்டது.
  • இது இறகுடனும், இறகில்லாமலும் நூற்றுக்கணக்கில் கூட்டங்கூட்டமாக குருத்துப் பகுதியில் இருக்கும்.
  • இதன் பருவம் 7 முதல் 9 நாட்கள். இலைகளின் கீழ்ப்பகுதியில் குஞ்சுகளும், அசுவிணியும் அதிகமாகக் காணப்படும்.

சேத அறிகுறிகள்

  • குஞ்சுகளும் அசுவிணியும் சாற்றை உறிஞ்சிவிடுகின்றன. இதனால் இலைகள் பச்சையம் இல்லாமல் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
  • அசுவிணியால் பாதிக்கப்பட்ட தர்பூசணியின் இலைகள் கீழ்நோக்கி குழிவாகக் காணப்படும்.
  • செடிகள் வளர்ச்சி குன்றியும், இலைகள் சுருங்கியும் காணப்படும். நாளடைவில் இலைகள் வாடி உலர்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • தர்பூசணி பழத்தை அறுவடை செய்த பின் அசுவினி பூச்சிகள் தாக்கிய செடிகளை அகற்ற வேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 12 மஞ்சள் நிற ஒட்டும் பொறியை வைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • வாரத்திற்கு ஒரு முறை மஞ்சள் நிற ஒட்டும் பொறியை இடம் மாற்றி சுத்தம் செய்து உபயோகித்தால் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கலாம்.

டைமீதோயேட் 30 இசி 2 மில்லி / லிட்டர் அல்லது மீத்தைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி லிட்டர் அல்லது என்டோசல்பான் 36 இசி 2 மில்லி / லிட்டர் தண்ணீருடன் கலந்து 25, 40 மற்றும் 55-வது நாட்களில் பயன்படுத்துவதன் மூலம் அசுவிணியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

ஆதாரம் : வேளாண் பூச்சியியல்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் - 641 003

3.0243902439
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top