பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நெல் பயிரைத் தாக்கும் சிலந்தி

நெல் பயிரைத் தாக்கும் சிலந்தியை ஒழிப்பது எப்படி?

சிலந்தியை ஒழிப்பது எப்படி?

  • நெல் பயிரைத் தாக்கும் சிலந்தி இனங்களை அழிப்பது தொடர்பான முறைகளைக் கையாண்டு, தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் விவசாயிகள் பார்த்துக் கொள்வது அவசியம்.
  • பொதுவாக, நெல் பயிரை ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் "ஒலிகொநிகஸ்ஒரைசி' எனப்படும் ஒரு வகையான சிலந்தி இனங்கள் தாக்கும்.
  • இதன் தாக்குதல் காரணமாக, நெல் பயிர் அதிக சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.
  • இந்த வகையான சிலந்தி தாக்குதலில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
  • வெப்பநிலை, ஈரப்பதம் அதிக அளவில் நிலவும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்த சிலந்தியின் தாக்குதல்கள் நெற்பயிரில் அதிகமாக காணப்படும்.
  • இந்த சிலந்தி தாக்குதலின் அறிகுறியாக, பயிர்களின் அடி இலைகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற துகள்கள் போன்ற புள்ளிகள் தோன்றும். இலை நரம்புகளுக்கிடையில் உள்ள பகுதி வெளுத்துக் காணப்படும்.
  • பின்னர், அனைத்து இலைகளிலும் இப்புள்ளிகள் பரவி வெண்ணிறமாக மாறிவிடும். இதனால் பயிரில் ஒளிச்சேர்க்கை செய்வது தடைபட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • இந்த பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க, வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியது அவசியம்.
  • பின்னர், புரபார்கைட் 1.5 மில்லிலிட்டர் அல்லது பெனசாகுயின் 1.5 மில்லிலிட்டர் என்ற அளவில் இரண்டு முறை 15 நாள்கள் இடைவெளியில் தெளித்து இந்த சிலந்தியைக் கட்டுப்படுத்தலாம்

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.02857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top