பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

டிஜிட்டாலிஸ் சாகுபடி முறைகள்

டிஜிட்டாலிஸ் சாகுபடி முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

டிஜிட்டாலிஸ் மருந்துப் பயிர் குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் வளரக்கூடியது. இது ஐரோப்பிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. தற்போது சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றது. நமது நாட்டில் 1975 ஆம் ஆண்டு இதனைச் சாகுபடி செய்யும் நோக்கத்தோடு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்திர பிரதேசம், உதகமண்டலம, கொடைக்கானல் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

டிஜிட்டாலிஸ் செடிகள் சுமார் இரண்டு அடி உயரம் வளரும் தன்மையுடையவை. இதன் இலைகள் 20 - 30 செ.மீ. வரை நீளமாகவும், கரும் பச்சை நிறத்திலும் இருக்கும். பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். மலைப்பிரதேசங்களில் செடிகள் நட்ட இரண்டாவது ஆண்டில் இருந்து பூக்கும். அதிக ஒளி அளவு அதாவது வெப்பமான தட்பவெப்ப நிலையை கொண்ட பகுதிகளில் நட்ட முதலாவது ஆண்டிலேயே பூத்துவிடும்.

பயன்கள்

டிஜிட்டாலிஸ் செடிகளின் இலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருந்து மூலப் பொருட்கள் உள்ளன. எனினும் மூன்று வகையான வேதிப் பொருட்கள் மருத்துவ சாகுபடி முறைகள் ரீதியாக அதிகம் பயன்படுகின்றன. அவை டிஜிட்டாக்ஸின் (Digitoxin), ஜிட்டாக்ஸின், (Gitoxin), டிஜாக்ஸின் (Digoxin) ஆகும். இந்த மருந்துப் பொருட்கள் இருதயத்துக்கு வலிமை சேர்ப்பதற்கும், இருதயக் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்கும் பயன்படுகின்றன. இவ்வகை மருந்து மூலப் பொருட்கள் இதுவரை (Artificial synthesis) கண்டுபிடிக்கப்படவில்லை.

இரகங்கள்

டிஜிட்டாலிஸ் மருந்துச் செடிகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று டிஜிட்டாலிஸ் லெனேட்டா (Digitalislanata)

மற்றொன்று டிஜிட்டாலிஸ் பாய்பூரியா (Digitalis purpurea). முதலாவது வகையில் 1.0 முதல் 1.4 சத அளவு மருந்துப் பொருட்களும், இரண்டாவது வகையில் 0.2 முதல் 0.4 சத அளவு மருந்துப் பொருட்களும் உள்ளன. டிஜிட்டாலிஸ் பாய்பூரியா வகையின் பூக்கள் ஊதா நிறத்திலும் மற்றது வெண்மை நிறத்திலும் இருக்கும். இந்த இரண்டு வகைகளில் டிஜிட்டாலிஸ் லெனேட்டா வகைதான் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.

மண்வளம் மற்றும் தட்பவெப்பநிலை

வடிகால் வசதியுடைய மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. அமிலத்தன்மை வாய்ந்த மண் வகைகள் (5.5 முதல் 6.5 வரை) மிகவும் உகந்தவை. இது ஒரு குளிர்ப் பிரதேச மருந்துப் பயிராகும். சராசரி வெப்பநிலை 20 முதல் 30 செல்சியஸ் இருத்தல் வேண்டும். குறைந்த அளவு காற்று ஈரத்தன்மை உள்ள மலைப்பிரதேசங்கள் இதன் சாகுபடிக்கு ஏற்றவை. தமிழ்நாட்டில் 1250 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான மலைப் பிரதேசங்களில் சாகுபடி செய்யலாம்.

விதையளவு

விதை மூலம் இதனை உற்பத்தி செய்யலாம். ஒரு எக்டரில் விதைக்க நேரடி விதைப்பிற்கு எட்டு கிலோ விதையம் நாற்றங்காலில் விதைக்க இரண்டு கிலோ விதையும் தேவைப்படும். ஆனால் நாற்றுகளை நடவு செய்யும் போது அதிக அளவில் நாற்றுகள் பட்டுப் போகின்ற காரணத்தால் நேரடி விதைப்பு முறை அதிகம் வழக்கத்தில் இருந்துவருகிறது.

விதைக்கும் பருவம்

விதைகளைப் பிப்ரவரி மாதத்தில் நாற்றங்காலில் விதைப்பது நல்லது. நேரடி விதைப்பிற்கு மே - ஜூன் மாதங்கள் உகந்த பருவமாகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது ஒரு எக்டருக்கு 25 டன் தொழு எரு இட வேண்டும். களை, கட்டிகளை அகற்றி மண்ணைச் சமப்படுத்த வேண்டும்.

நேரடி விதைப்பிற்கு விதைகளை 40 - 60 செ.மீ. இடைவெளியில் உள்ள நேர்க்கோடுகளில் விதைக்க வேண்டும்.

விதைகளை 2.0 செ.மீ. ஆழத்துக்கு மிகாமல் விதைக்க வேண்டும்.

நாற்றுகள் நடும் பருவம்

ஏப்ரல் மாதத்தில் 45 நாள்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்யலாம். செடிக்குச் செடி 30 செ.மீ. இடைவெளியிலும் வரிசைக்கு வரிசை 60 செ.மீ. இடைவெளியிலும் நாற்றுகளை நட வேண்டும்.

உரமிடுதல்

ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்தும், 30 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து அளிக்கக் கூடிய உரங்களை அடியுரமாகவும், 150 கிலோ தழைச்சத்து உரத்தை நான்கு பாகங்களாகப் பிரித்து மூன்று மாத இடைவெளியில் மேலுரமாகவும் இடவேண்டும்.

நீர்ப்பாசனம்

மலைபிரதேசங்களில் மானாவாரியாகப் பயிர் செய்யப்படுகின்றது. கோடைக்காலங்களில் மழை இல்லாத போது ஓரிரு முறை நீர்ப்பாசனம் அளிப்பது அவசியம்.

பயிர்ப்பாதுகாப்பு

இலைப்புள்ளி, இலைக்கருகல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த மேன்கோசெய் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணிரில் 2.0 கிராம் என்ற அளவில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.

அறுவடை

இலைகள் முதிர்ந்த பருவத்தில், 8-10 செ.மீ. நீளம் இருக்கும் போது அறுவடை செய்தல் வேண்டும். இல்லாவிடில் மருந்துப்பொருட்களின் அளவு குறைந்துவிடும். செடிகளை நட்ட முதல் ஆண்டில் ஒரு அறுவடையும், இரண்டாவது ஆண்டில் அடுத்த அறுவடையும் செய்யலாம். இலைகளை காம்புகள் இன்றி காலை நேரங்களில் அறுவடை செய்யவேண்டும்.

இலைகளைப் பதப்படுத்துதல்

பறிக்கப்பட்ட இலைகளைக் கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அறைகளில் சீராகப் பரப்பி 60 செல்சியஸ் வெப்பநிலையில் உலர்த்த வேண்டும். இந்த வசதி இல்லையென்றால் நிழல் உள்ள இடங்களாகப் பார்த்து இலைகளைப் பரப்பி பத்து நாள்களுக்கு உலர்த்த வேண்டும். அவ்வப்போது இலைகளைக் கிளறிவிடவேண்டும்.

விளைச்சல்

ஒரு எக்டருக்கு 2000 முதல் 5500 கிலோ உலர்ந்த இலைகளை விளைச்சலாகப் பெறலாம். உலர்ந்த இலைகளில் 0.44 முதல் 0.71 சதம் வரை மொத்த மூலப்பொருட்கள் உள்ளன.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
2.88235294118
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top