பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிளைக்கோசு சாகுபடி தொழிற்நுட்பம்

கிளைக்கோசு (Brussels Sprouts) சாகுபடி தொழிற்நுட்பம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

குளிர் பிரதேசங்களில் சாகுபடி செய்யக்கூடிய காய்கறிகளில் மிக முக்கியமானது Brussels Sprouts ஆகும். சிறிய அளவில் உள்ள முட்டைகோஸ் வடிவம் போன்று காணப்படுவதால் சிறு முட்டைகோஸ் என்றும் அழைக்கப்படும். இது முட்டைக்கோஸைப் போன்று ஒரே ஒரு பூ மட்டும் உருவாகாமல், பல முட்டைகோஸ்கள் தண்டுப்பகுதியில் வரிசையாக அடுக்கி வைத்தது போன்று காணப்படும். இதனால் இது கிளைக்கோசு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பயிர் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரசல்ஸ் என்னும் இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பயிர் செய்யப்பட்டு வந்தது. அவ்வூரின் பெயரிலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இது முக்கியமான பயிராக விளங்குகிறது. இந்தியாவில் சிறு அளவில் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள மலைப்பகுதிகளிலும், தென் இந்தியாவில் நீலகிரி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. கிளைக்கோசு ஒரு அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடிய காய்கறி பயிராக உள்ளது. இந்தியாவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ள உணவகங்களில் பரிமாறப்படுகிறது.

100 கிராம் காயில் உள்ள சத்துக்கள்

 • நீர் - 84 கிராம்
 • நைட்ரஜன் 0.56 கிராம்
 • புரதம் - 3.5 கிராம்
 • கொழுப்பு 14 கிராம்
 • கார்போஹைட்ரேட் 4.1 கிராம்
 • கால்சியம் - 26 மி.கிராம்
 • பாஸ்பரஸ் - 77 மி.கிராம்
 • இரும்பு - 6 மி.கிராம்
 • சோடியம் - 450 மி.கிராம்
 • பொட்டாசியம் - 115 மி.கிராம்
 • வைட்டமின் சி - 0.11 மி.கிராம்
 • ரிபோபிளேவின் - 0.11 மி.கிராம்
 • நியாசின் - 0.2 மி.கிராம்
 • வைட்டமின் ஏ - 215 மி.கிராம்

கிளைக்கோசு குளிர் பிரதேச காய்கறிப்பயிர். உறைபனியையும் கூட தாங்கி வளரக்கூடியது. பகலில் நல்ல சூரிய ஒளியும், இரவு நேரத்தில் பணி நிலவும் பகுதிகளில் நல்ல தரமான பூக்கோசுகள் உற்பத்தி ஆகின்றன.

சாகுபடி முறை

 • இவ்வகையானது  தமிழ்நாட்டில் உள்ள நீலகிரிப் பகுதிகளில் நிலவுகின்றன. அதுவும் குறிப்பாக ஊட்டியிலுள்ள கோடப்பமந்து, சின்னகுன்னுள், கக்குச்சி, தும்மனட்டி, கூக்கல்துரை போன்ற பகுதிகளில் இச்சூழல் நிலவுவதால் திறந்த வெளியில் ஆண்டு முழுவதும் இது பயிரிடப்படுகிறது. அதிக வெப்பநிலையில், மிருதுவான திறந்த பூக்கோசுகள் உற்பத்தி ஆகின்றன.
 • பூக்கோசு வளர்வதற்கு மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 6.8 வரை இருக்க வேண்டும். அமில நிலையில் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும்.
 • முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் பயிர்களுக்குத் தயாரிப்பது போன்றே நாற்றங்கால்களை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தயாரித்து நடவு செய்யவேண்டும்.
 • குருத்துக்கள் அளவில் பெரிதாகவும், மிருதுவாகவும் உள்ள போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடையைத் தாமதப்படுத்தும் போது, குருத்துக்கள் பூத்து வெடிக்க ஆரம்பித்து விடும்.
 • அறுவடையை முதலில் செடியின் அடிப்பாகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுதுதான், செடியின் இலைகளுக்கு அடியில் அறுவடையைத் தொடர்ச்சியாக செய்ய முடியும். அறுவடையை கடைசியாக செடியின் மேற்புறத்தில் முடிக்க வேண்டும்.
 • மேலும், பூக்கோசில் ஏற்படக்கூடிய போரான் மற்றும் மாலிப்டினம் குறைபாட்டினைத் தவிர்க்க போராக்ஸ் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ மண்ணில் இடவேண்டும். சோடியம் மாலிப்டேட் 2.5 கிலோ மண்ணில் இடுவதன் மூலம் செடிகளில் உள்ள நுண்ணூட்டச்சத்துக் குறைப்பாட்டினைத் தவிர்க்கலாம்.
 • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வளர்க்கக் கூடிய இரகங்களே இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானது, கேட்ஸ்கில், பாரீஸ் மார்க்கட், டாய்ஸ்கேபிர் சன்லைன் ஆகும். ஊட்டியில் ஹில்ஸ் ஐடியல் என்ற இரகம் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. ஜேட்கிராஸ், ஜப்பானிஸ் வீரிய ஒட்டு இரகங்களும் விரும்பி பயிர் செய்யப்படுகிறது. அதிக விளைச்சலுக்காகவும், ஒரே முறையில் அறுவடை செய்வதற்காகவும் இது விரும்பி பயிரிடப்படுகிறது.
 • நடவு வயலில் இரண்டு அல்லது மூன்று முறைகள் களையெடுக்க வேண்டும்.
 • கிளைக்கோசினை சுமார் இரண்டு வருடங்கள் வரை வயலில் வைத்திருந்து, விளைச்சல் பெறலாம். பராமரிப்பு செலவு குறைவு என்பதால் விவசாயிகள் இதனை பயிரிடலாம். சந்தையில் ஒரு கிலோ கிளைகோசின் விலை சுமார் ரூ. 80 முதல் 140 வரை செல்லும். ஓர் ஏக்கரிலிருந்து சுமார் 2 டன் வரை விளைச்சல் பெறலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.05882352941
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top