பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கிலுக்கு ஏற்ற மண் வகைகள்

மூங்கிலுக்கு ஏற்ற மண் வகைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 • மூங்கில் நன்கு வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்க மண் வளம் நிறைந்ததாகவும், அதிக அங்கக சத்துக்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
 • மூங்கில் வளர்வதற்கு உகந்த மண்ணானது சிறிதளவு அமிலத்தன்மை கொண்டதாகவும், காற்றோட்டம் நிறைந்த மணற்பாங்கானதாகவும் இருக்க வேண்டும்.
 • மேலும் மண்ணில் வடிகால் திறன் செம்மையாக இருக்க வேண்டும். அதே சமயம், ஈரத்தை நீண்ட நாட்களுக்கு பிடித்து வைக்கும் திறன் கொண்டதாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.
 • களர், உவர் மண், வடிகால் வசதியற்ற அதிக களிமண் கொண்ட நிலங்களில், நீண்ட நாட்களுக்கு நீர் தேங்கி இருக்கும்.
 • மண் வகைகளில் மூங்கிலின் வேர் கிழங்குகள் அழுகிவிடும். எனவே இவ்வகை நிலங்கள் மூங்கில் சாகுபடிக்கு ஏற்றவையன்று. பொதுவாக மூங்கில் சாகுபடி செய்ய சிறந்த மண்ணானது சிறிதளவு அமிலத்தன்மை கொண்ட (pH 5.5 முதல் 6.5 வரை) மணற்பாங்கான நிலமாகும்.
 • அதிகக் களர் கொண்ட மண்ணானது மூங்கிலுக்குத் தேவையான நீர் ஆதாரங்களைத் தேவையான அளவிற்குக் கொடுக்க முடிவதில்லை. மேலும், இவ்வகை மண்ணில் அங்கக உரங்கள் மிகவும் குறைவாகவும், கந்தகம் மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் பற்றாக்குறையாகவும் இருப்பதால், மூங்கில் இலைகள் வெளுப்படைந்து குளோரோசிஸ் என்ற இலைபச்சைய குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
 • சிபாடாகா குமாசாகா (Shibataca kumasaca) என்ற வகை மூங்கிலானது அதிக அமிலத்தன்மை கொண்ட மண்ணிற்கு உகந்ததாகவும், களர் நிலத்தில் ஏற்பு அற்றதாகவும் உள்ளது.
 • மேலும் அகுமினாடா வகை மற்றும் அக்டெக்கோரம் போன்றவை மிதமான களர் மண்ணில் வளரக் கூடியதாகும். அதேபோல் செமியாருண்டீனாரியா பாஸ்டுசா (Semiarundinaria fastuosa) என்ற வகை மூங்கிலானது மிதமான அமிலத்திலும் மற்றும் மிக அதிக களர் நிலத்திலும் (pH 8.0க்கு மேல்) வளரும் திறன் கொண்டது.
 • இருந்தபோதிலும், தமிழ்நாட்டு சூழ்நிலைக்கு மிகச்சிறந்த மூங்கில் வகைகள் பேம்பூஸா பேம்பூஸ் (Bambusa bamboos) (மிக அதிக மழை பெறும் இடங்களுக்கு ஏற்ற வகை) மற்றும் டென்ரோகலாமஸ் ஸ்டிரிக்டஸ் (Dendrocalamus strictus) என்ற கல் மூங்கில் ஆகும்.
 • இந்த இரண்டு வகை மூங்கில்களும் செம்மண், செம்புரை மண் மற்றும் மணற் வாரியான மண்ணிற்கு ஏற்றவைகளாகும். இருந்தபோதும் மண்ணில் நல்ல காற்றோட்டம் இல்லாமல் நீர் தேங்கி இருப்பின் நல்ல வளர்ச்சியை கொடுக்காது.
 • பொதுவாக மணற்பாங்கான நிலங்களில் அதிக இயற்கை உரங்களை இட்டும், அதிக களி உள்ள நிலங்களுக்கு இயற்கை உரத்துடன் மணலையும் சேர்த்து இட்டு மண் மேலாண்மை செய்து மூங்கிலை சாகுபடி செய்யலாம்.


மூங்கில் நடவு செய்தால் பல லட்சம் லாபம் எடுக்கலாம்

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.06896551724
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top