பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கிலை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மூங்கிலை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூங்கில் கழிகளை நட்ட நான்காம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டிற்குள் வெட்டலாம். இதன் பிறகு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை மூங்கில் கழிகளை வெட்டி எடுக்கலாம். ஒவ்வொரு அறுவடையின் போதும் முதிர் கழிகள் இரண்டு ஆண்டிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். மூங்கிலை அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல் இன்றியமையாதது. இதைப் பதப்படுத்தாமல் விட்டுவிட்டால் காளான் மற்றும் இதர பூச்சி வகைகளால் விரைவில் பழுதடைகின்றன.

மூங்கிலை பதப்படுத்தும் முறைகள்

 • மூங்கிலை பதப்படுத்தும் முறையானது அதன் இறுதி கட்ட பயன்பாட்டையும் அதன் பயன்பாட்டு கொள்ளளவையும் மற்றும் செலவையும் பொருத்து மாறுபடும்.
 • மூங்கிலின் இயற்கையான நீடித்து உழைக்கும் தன்மை மற்ற மரத்தடிகளை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது மிகவும் குறைவு. மூங்கிலில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மாவுப்பொருள் காளான் மற்றும் பூச்சி தாக்குவதற்கான நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கின்றன. உதாரணமாக பதப்படுத்தப்படாத மூங்கில் கழிகள் 5-7 ஆண்டுகள் உழைக்கும் என வைத்துக் கொண்டால், சரியாக உலரவைத்த இரசாயனக் கலவையில் உட்செலுத்தப்பட்ட கழிகள் 15-20 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் திறன் படைத்தவை.
 • இதனை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மூங்கிலின் வெளித்தோலில் அதிகப்படியான சிலிகா இருப்பதால் மழை நீர் மற்றும் பூச்சிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கிறது.
 • அதேசமயம் இந்த கடின உறை இருப்பதால், பதப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயன கலவை, கழிகளுக்கு உள்ளே செல்வது மிகவும் கடினம். இதுமட்டுமல்லாமல் உறைகளுக்குள் இருக்கும் மெழுகு படலமும் இரசாயன கலவையை உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை.
 • இந்தப் பிரச்சனை இருப்பதால் இரசாயன கலவையை நீர்கடத்தும் துளைகளின் மூலமாக மட்டும் தான் உட்செலுத்த முடியும்.
 • இந்த துளைகள் மொத்த கொள்ளளவில் பத்து சதவிகிதம் உள்ளது. மூங்கில் கழிகளை மிகக் குறைவான நேரத்தில் இரசாயனக் கலவையை உட்செலுத்தி பதப்படுத்தவேண்டும். ஏனென்றால் வெட்டி 24 மணி நேரத்திற்குள் துளைகள் அடைக்க ஆரம்பித்து விடும். துளைகள் அடைத்துவிட்டால் இரசாயன கலவையை உட்செலுத்த முடியாமல் ஆகி விடும்.
 • மற்ற மரத்தடிகளில் இரசாயனக் கலவையை மரத்தை குறிப்பிட்ட அளவுக்கு அறுத்த பின் தான் கலவையை உட்செலுத்துகிறோம். ஏனென்றால் அறுக்கும் போதுதான், துளைகள் திறந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் மிக எளிதாக நீண்ட தூரத்திற்கு உட்செல்லும்.

மூங்கில் பாய் வடிவ தயாரிப்புகள்

 • இந்தியாவில் பிளைவுட்டிலிருந்து வேறுபட்ட தோட்ட மரப்பொருட்களிலிருந்து ப்ளைவுட்டைப்போல, ஆனால் அதனினும் உயர்ந்த பாய்வடிவ தயாரிப்புகளை உருவாக்க பல சிறந்த விலையுயர்ந்த தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் இவை உறுதுணையாக இருக்கின்றன.
 • சில தொழிற்சாலைகள் வணிகரீதியாக இத்தொழில் நுட்பங்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளன.

அவையாவன :

மூங்கில் பாய் தட்டங்கள் (Bamboo Mat Boards), மூங்கில் பாய் அடைவு பொருட்கள் (Bamboo veneers), மூங்கில் பாய் மேற்கூரைகள் (Bamboo Corrugated Mats), மூங்கில் வார்ப்புக்கள் (Bamboo moulded articles).

மூங்கில் பாய் தட்டங்கள்

மரப்பொருள்களின் இருப்புக்குறைவு, புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஆகியன மர மாற்றுப் பொருட்களின் வருகைக்கும், அவை சார் பொருட்களுக்கும் பெரும் வரவேற்பைத் தந்துள்ளன. இவை பல்வேறு வகையான தட்டங்கள், வளைவான தட்டங்கள், பூச்சூட்டம், தூள்கள், மெல்லிய பிஸ்கட் போன்ற வடிவங்கள் மற்றும் சீவல்கள்.

மூங்கில் பாய் தட்டங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை மூங்கில் பாய் வாரியம் உருவாக்கியுள்ளது.

மூங்கில் பாய் தட்டங்கள் தயாரிக்கப் பயன்படும் மூங்கில் வகைகள்

 • பே. பல்குவா
 • பே. நூதன்ஸ்
 • பே. ஸ்ட்ரிக்டஸ்
 • பே. பிராண்டிசிலி
 • பே. ஹேமில்டோனி
 • மெ. பேசிஃபெரா

மூங்கில் பிளைவுட் மற்ற சாதாரண கட்டைப் பலகைகளிலிருந்து வலிமையானது மற்றும் உறுதியானது. இவ்வகை பிளைவுட் பலகைகள் தயாரிக்க அதிக நீராவி அழுத்த முறை பயன் படுத்தப்படுகிறது. இம் முறை மூலம் தயாரிக்கப்பட்ட மூங்கில் பிளைவுட் அதிக வலிமையுடையதாகவும், அதிக சுமை தாங்கும் தன்மையுடையதாகவும், அதிக நாட்கள் பயன்படக் கூடியதாகவும், காலமுறை மறுசுழற்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும். இந்த பிளைவுட் நீர் தாக்கா தன்மையுடையது. இவை சுருங்கவோ, விரிவடையவோ செய்யாது. இந்த பிளைவுட் துருப்பிடிக்காதது. ஈரப்பதம் தாக்காத மென்மையான தன்மையுடையது. இந்த வகை 12 மி.மீ. பிளைவுட், 25 மி.மீ. சாதாரண பிளைவுட்டுக்கு இணையானது.

மூங்கில், துண்டுகளாக வேண்டிய அளவு வெட்டப்பட்டு, பெண்களால் பாய் முடைவது போல முடையப்படுகிறது. இத்தொழில்நுட்பம் பெருத்த வேலை வாய்ப்பை உருவாக்கும் திறனுடையது. 6 மி.மீ. அதிக தடிமன் உள்ள மூங்கில் பாய்கள், மரஅடைவுகள் இணைக்கப்பட்டு மூங்கில் பாய் அடைவுகள் தயாரிக்கப்படுகின்றன.

மூங்கில் பாய் மேற்கூரைகள்

இந்தியக் கட்டுமானப் பொருட்கள் தொழில் நுட்ப வளர்ச்சிக் கழகம், மூங்கில் பாய் மேற்கூரைகள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் மேற்கூரைகள் உடல் நலக் குறைவு ஏற்படுத்தும் என்ற நிலையில், மூங்கில் பாய் மேற்கூரைகள் அவைகளுக்கு மாற்றானவையாக இருக்கும்.

இவற்றை தயாரிக்கும் முறை மூங்கில் பாய் தட்டங்கள் தயாரிப்பதை ஒத்தவை. இவற்றுடன் ரெசின் பூசப்பட்டு காயவைக்கப்பட்ட தட்டங்கள், சிறப்பு நீராவி வெப்ப அழுத்தி, வெப்ப அழுத்தத்துக்கு வார்ப்புகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

மூங்கில் பூசு பலகைகள்

மூங்கில் பூசு பலகைகள் மூலம் கதவுகள், சன்னல்கள், நிலைகள், தடுப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தரைக்கான பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தரைக்கான தட்டு ஓடுகள், தயாரிக்கவும் பயன்படுகின்றன.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top