பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கில்களிலிருந்து கைவினைப் பொருட்கள்

மூங்கில்களிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இந்தியா கலைகளின் விளைநிலமாகத் திகழ்கிறது. இங்கு கைவினைப் பொருட்களும் அதன் வளர்ச்சியும் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் கைவினைப் பொருட்கள் நம் நாட்டின் பழமையையும், தோற்றத்தையும், பண்பாடுகளையும் மற்றும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. இக்கைவினைக் கலையானது உலோக வேலைப்பாடுகள், நகைகள் செய்தல், பானைகள் செய்தல், கற்களைக் கொண்டு சிற்பம் வடிப்பது மற்றும் மர வேலைப்பாடுகளை உள்ளடக்கியது.

இந்தியாவில் பிரம்புகள் மற்றும் மூங்கில்களிலிருந்து செய்யப்படும் கைவினைப் பொருட்கள் அதன் அழகிய வேலைப்பாடுகளாலும், அழகிய தோற்றத்தாலும் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில் இது மக்களின் ஒரு முக்கிய வாழ்வாதாரமாகக் கருதப்படுகிறது. பிரம்பு மற்றும் மூங்கில்களால் பொதுவாகக் கூடைகள் செய்யப்படுகின்றன.

இவைகள் நெல், நீர், எண்ணெய் சேகரிக்கப் பயன்படுகின்றன. மூங்கில் மற்றும் புற்களிலிருந்து செய்யப்படும் அழகு சாதனப்பொருட்கள் மற்றும் அணிகலன்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

மூங்கிலின் அமைப்பும், அதன் வளையும் தன்மையும் மற்ற குணங்களும் அவற்றை கைவினைப் பொருட்கள் உற்பத்திக்கு ஏற்றதாக்குகின்றன. கைவினையாளர்கள் வகைவகையான அத்தியாவசியப் பொருட்களை செய்கின்றனர்.

இயற்கையாகவே மூங்கிலின் தன்மைகள், மர வேலைகள் செய்வதற்கு எளிதாக அமைந்துள்ளதால், எவ்வித வேலைகளையும், விலையுயர்ந்த இயந்திரங்கள் இன்றி வடிவமைக்க முடியும். இந்தியாவில், இவ்வகையான மூங்கில் வேலைப்பாடுகளை, காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் செய்கின்றனர். பழங்காலம் முதல் இன்றுவரை இம் மக்கள் இதனைக் கொண்டு பலவகை கலைவடிவப் பொருட்கள் செய்து வருகின்றனர். மூங்கில், பிரம்பு போன்றவை நாற்காலி, கட்டில், வில், அம்பு, பாய்கள் மற்றும் மிதியடிகள் செய்யப் பயன்படுகின்றன.

இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பல அரசாங்க மையங்கள் கூடைகள் செய்வதையே முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளன.

மூங்கில் வகைகள்

 • டென்ரோகலாமஸ் ஹேமில்டோனி
 • டெ. ஹொக்கரீ
 • டெ. ஜைஜான்டியஸ்
 • சூடோஸ்டாகியம் பாலிமார்பம்
 • பேம்பூஸா பாலிடா

இவை போயேசியே குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். போயேசியேவிற்கு அடுத்தபடியாக மிக முக்கிய பங்கு வகிக்கும் வகை கலாமஸ் ஆகும். இவை ஆஸ்டிரேஸியே குடும்பத்தைச் சார்ந்தவை.

இப்பிரம்புகளைக் கொண்டு கூடை பின்னுவது, தொங்கு பாலங்கள் அமைப்பது போன்றவற்றை செய்யலாம்.

மூங்கிலின் பயன்பாடுகள்

தற்போது, ஒருங்கிணைந்த தொழிற்சாலைகளில் மூங்கில் பெரும்பாலும் மர மடிப்புகள் கட்டுவதற்கும், மிதியடிகள் செய்வதற்கும், உணவுத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

 • பெரும்பாலான மூங்கில் அருகிலிருக்கும் காடுகளில் இருந்துதான் கிடைக்கின்றன.
 • காடுகளல்லாமல் வீடுகள், தோட்டங்களில் கிடைக்கப்பெறும் மூங்கில்கள், வீடுகள் கட்டுமானத்திற்கும், வேலிகள் அமைப்பதற்கும், விவசாய மற்றும் மீன் தொழில் கட்டுமானத்திற்காகவும், கூடைகள் பின்னுவதற்கும் பயன்படுகின்றன.
 • இவ் வகையான தொழில்கள் வடகிழக்கு மாநிலங்களில் பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்றன. அம் மக்களின் பிரதான வருமானமாக இது திகழ்கிறது.
 • இம்மக்களின் கைவினைத்திறமைகள் மேல்நாடுகளான ஜப்பான், சீனாவில் இருக்கும் கைதேர்ந்த வித்தகர்களைவிட விஞ்சியே இருக்கிறது. இருப்பினும் இவர்களின் உற்பத்தி இன்னும் வெளிக்கொணரப்படாமலேயே இருக்கிறது.
 • நிறம் பூசப்பட்ட பிரம்புகள் பொதுவாக உடைகள், ஆயத்த ஆடைகள் செய்வதற்குப் பயன்படுகின்றன.
 • பிரம்பு மற்றும் மூங்கில்கள் அருணாச்சலப்பிரதேஷ் மக்களின் கலாச்சாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. கூடை பின்னுவது மட்டுமல்லாமல், தொங்கு பாலங்கள் அமைக்கவும் பயன்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் கைவளை, கால்வளை, கழுத்தணி செய்வதற்கும் பயன்படுகிறது.
 • கூடை பின்னுவது நம் அன்றாட வளர்ச்சியிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகிக்கிறது. வீடுகட்டுவது முதல் மீன் வலை அமைப்பது போன்று அனைத்தும் செய்யப்படுகின்றன. பழங்குடியினரின் வீட்டில் இதுவே பிரதானமாக காணப்படுகிறது. இந்தக் கூடைகள் பொதுவாக பெண்கள் விறகு சுமக்கவும், மூங்கில் குழாய்கள் சுமக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் நிறைய பளுவைச் சுமக்கப் பயன்படுகின்றன.
 • சீனாவின் சிஜியான்ங்கு மாகாணம் மட்டும் 3,000 வகையான மூங்கில் கைவினைகளைக் கொண்டுள்ளது. இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இவ்வகை மூங்கில் கைவினைப்பொருட்களின் இருப்பிடமாகத் திகழ்கின்றன.

வியாபார ரீதியான உற்பத்தி

 • கைவினைப்பொருட்களின் உற்பத்தி நாளடைவில் குறைந்து வருகிறது. தற்பொழுது 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் கையிருப்புத் தடைகள், விவசாயத்தில் உள்ள தடைகள் ஆகும்.
 • இப்பொழுது, மூங்கிலின் தன்மையும் அதன் பெருமையும் தேசிய அளவில் மற்றும் பிற நாடுகளின் சர்வதேச அளவில் உணரப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கமும் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அவை தனியார் நிலங்களில் மூங்கில் விளைவித்தல், மூங்கிலின் உற்பத்தித் திறன் அதிகரித்தல், கைவினைத் தொழிலாளர்களின் வாழ்வியல் நிலையை உயர்த்துதல் போன்றவையாகும்.

இந்தத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த வழிகாட்டுதல் தேவை. கைவினைத் தொழிலாளர்களின் திறமையை வளர்த்து விடவும் வேண்டும். இதனைச் சிறந்த முறையில் செய்தால் பிற்காலத்தில் இந்த பழங்குடியினரின் கைவண்ணம் விண்ணை எட்டும் நிலையைப் பெறும். பிரம்பும், மூங்கிலும் சிறந்த குடிசைத் தொழிலாக மாறும். இவ்வளர்ச்சியே சமூக வளர்ச்சியில் நேரடி பங்கு பெறும். மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் குறைவாக இருப்பதே இந்த நிலைக்கு காரணம், புதிய உத்திகளைக் கொண்டு செயல்பட்டால், நடப்பில் இருக்கும் பொருட்களின் உற்பத்தி பெருகும். வருமான வருகையும் பலம் பெறும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.21052631579
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top