பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எளிய காய்கறித் தோட்டம்

எளிய காய்கறித் தோட்டம் பற்றிய குறிப்புகள்

வளையத் தோட்டம்

வீட்டில் சிறிய திறந்தவெளிப் பகுதி இருந்தாலும் நிறைய செடிகளை, ஆரோக்கியமாக வளர்க்க முடியும். வீட்டில் சிறிய அளவு மண் தரைதான் இருக்கிறது. அதில் பூச்செடி வளர்ப்பதில் ஆர்வம் உங்களுக்கு இருந்தாலும், வீட்டுக்குப் பயன் தரும் எளிய காய்கறிச் செடிகளையும் வளர்க்கலாம். எந்தச் செடியென்றாலும் ஆரோக்கியமாக வளர்க்க வீட்டுக் கழிவுகளைக் கொண்டு நாமே உரம் தயாரிக்கலாம். கீழே உள்ள முறைக்கு வளையத் தோட்டம் என்று பெயர்.

இதை எப்படித் தயாரிப்பது?

  1. முதலில் நிலத்தை வட்டமாகத் தோண்டவும். இதன் சுற்றளவு 3 அடிவரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். நடுவில் மட்டும் ஒன்றரை அடி ஆழத்துக்குத் தோண்டிக் கொள்ள வேண்டும்.
  2. தோண்டப்பட்ட குழி, பார்ப்பதற்கு வாணலிச் சட்டியைப் போல இருக்க வேண்டும். இதில் தோட்டம், சமையலறைக் கழிவுகள் என மக்கக்கூடிய எந்தக் கழிவாக இருந்தாலும் இடவும். மாட்டுச் சாணம் கிடைத்தாலும் சேர்க்கவும்.
  3. இதன் மேல் தண்ணீர் தெளித்துவிட வேண்டும். இந்தக் குழிக்குள் அன்றாடம் கழிவுகளைக் கொட்டிவாருங்கள். அடியில் உள்ள கழிவு மக்க ஆரம்பிப்பதால், குழி சீக்கிரத்தில் நிறையாது.
  4. பதினைந்து நாட்களுக்குப் பிறகு இதைச் சுற்றிலும் குவிந்திருக்கும் மண்ணில் வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற எளிய காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்கலாம். இயற்கை உரம் தரும் ஊட்டத்தில் அமோகமாக வளரும்.


மாடித்தோட்டம்

கேள்வி பதில்கள்

எனது வீட்டின் முன் இருக்கும் இரண்டு சென்ட் நிலத்தில் தோட்டம் அமைக்க விரும்புகின்றேன். எவ்வாறு இதனை ஆரம்பித்து செயல்படுத்த வேண்டும்?

முதலில், உரிமையாளரின் விருப்பம், வீட்டின் இருப்பு நிலை, வீட்டின் அளவு, நிலத்தரைப்பரப்பு,கிடைக்கக்கூடிய நீர்ப்பாசன அளவு, நில அமைப்பு, துணிகளை உலர்த்துவதற்கான இடம், செல்லப்பிராணிகளுக்கான இடம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு தோட்டத்தினைத் திட்டமிட்டு வரைபடமாக ஒரு காகிகதத்தில் வரைந்து கொள்ள வேண்டும். மொத்த நிலப்பினையும் மூன்று பங்காக அதாவது பொது இடம், உபயோகப்படுத்தப்படும் இடம் மற்றும் தினப்பட்ட தோட்ட இடம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்துக்கொண்ட பிறகு காகிதத்தில் வரைந்திருக்கும் திட்டத்தை கவனத்துடன் முறையாக அமல்படுத்த வேண்டும்.

எனக்கு மிகவும் சிறிய நிலமே உள்ளது. நான் தோட்டம் அமைக்க விரும்புகின்றேன. இதற்கான சாத்தியம் உள்ளதா?

உங்களுக்கு மிகவும் சிறிய நிலமேயிலிருந்தாலும் உங்களால் தோட்டம் அமைக்க முடியும். உங்கள் வீட்டின் கூரைமேல் மாடித்தோற்றம் அமைக்கலாம். இத்தகைய தோட்டம் அமைக்கும் முன்பு மாடியின் வடிகால் வதி மற்றும் தாங்கக்கூடிய பாரத்தின்/எடையின் அளவு ஆகியவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

தொட்டியிலிருக்கும் செடிகள் வாடலுடனும் மாசுபடிந்தும் காணப்படுகின்றன. எவ்வாறு இச்செடிகளைப் புதுப்பிக்கலாமா?

பொதுவாக நீர் பற்றாக்குறையினாலோ அல்லது வேர்ப்பகுதியில் நீர் அதிகமாக தேங்கியிருந்தாலே தெட்டிச் செடியிலுள்ள இலைகள் வாடலுடன் காணப்படும் மாசுப்படிந்த இலைகள் மீது நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரை தெளித்து இலைகளை ஈரப்படுத்துவதும் அவற்றின் செயல்பாடுகளையும் மேம்படுத்தலாம்.

ஆதாரம் : பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை வேளாண்மை வழிகாட்டி

2.97777777778
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top