பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நெல் விவசாயிகளுக்கான குறிப்புகள்

சீரான நெல் அறுவடைக்கு உதவும் குறிப்புகள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஆதரவு பற்றி இங்கே விவாதிக்கப்படுகின்றன

தேசிய உணவு பாதுகாப்பு கழகத்தின், நெல்சாகுபடிக்கான குறிப்புகள்

நல்ல மகசூல் பெறுவதற்கான குறிப்புகள்

 • தங்கள் பகுதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் இரக\ வீரிய இரக சான்றளிக்கப்பட்ட விதைகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும்.
 • நோய் தாக்கத்தை குறைக்க, விதைகளை பூஞ்ஞான் கொல்லியுடன், நேர்த்தி செய்யவும்.
 • முளைத்த நெல் விதைகளை, நாற்றங்கால் பாத்திகளில், மாநில விவசாய பல்கலைகழகங்களின்  பரிந்துரைப்படி விதைக்க வேண்டும். விதைக்கும் போது,  பரிந்துரைக்கப்பட்ட, தொழு உரம், பேரூட்ட மற்றும் நுண் ஊட்டச்சத்துகளை அளிக்க வேண்டும்.
 • செம்மை நெல் சாகுபடி முறை பின்பற்ற விரும்பும் விவசாயிகள், அத்ற்கான நாற்றங்கால் வளர்ப்பு முறை மற்றும் இதர அறிவியல் ரீதியான பரிந்துரைகளை பின்பற்றவும்.
 • மண்ணின் ஊட்டச்சத்து   நிலையை அறிய, மண் பரிசோதனை செய்யவும்.  இல்லையெனில், பொதுவான பேரூட்ட மற்றும் நுண் ஊட்டச்சத்திற்கு,  மாநில அரசு  பல்கலை கழக பரிந்துரைகளைப் பின்பற்றவும்.
 • நிலம் தயாரித்தலின் போது, மாநில அரசு பல்கலைகழக பரிந்துரைப்படி, அமில தன்மையுடைய  மண்ணிற்கு 2-4 குவிண்டால் சுண்ணாம்பினை ஒரு  ஹெக்டருக்கு அளிக்கவும். நெல் இரகம் மற்றும் ஒட்டு இரகத்திற்கான கிட்டுகள் மாநில விவசாய துறைகளில் கிடைக்கப் பெறுகிறது. (NFSM கீழ்)

NFSM ன் விவசாயிகளுக்கான உதவி

 • சான்றளிக்கப்பட்ட உயர்விளைச்சல் இரக விதை விநியோகத்திற்கான உதவி - ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 500 அல்லது விதையின் விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • ஒட்டு இரக விதை விநியோகத்திற்கான உதவி - ரூபாய் 2000 அல்லது விதையின் விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • ஒட்டு இரக உற்பத்திக்காக ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1000 உதவியாக அளிக்கப்படும்.
 • நுண் ஊட்டச்சத்திற்கான உதவி - ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500, அல்லது செலவில் 50 %, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • அமிலத்தன்மையுடைய மண்ணிற்கு சுண்ணாம்பு அளிப்பதற்கான உதவி - ரூபாய் 500, ஒரு ஹெக்டருக்கு  அல்லது 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • கோனோவீடர் மற்றும் ஏனைய கருவிகள் வாங்குவதற்கான உதவி - ரூபாய் 3000, அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • விதைக்கும் கருவி, களை எடுக்கும் கருவி போன்றவைக்கு, ரூ 15,000 ஒரு கருவிக்கு, அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • ரோடேவேட்டர் வாங்குவதற்கான உதவி - ரூபாய் 30,000, அல்லது, கருவிக்கான விலையில் 50%  இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • நேப்சாக்கு தெளிப்பான் வாங்குவதற்கான உதவி - ரூபாய் 3,000 அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • பயிர் பாதுகாப்பு இரசாயணங்கள் வாங்குவதற்கான உதவி - ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500, அல்லது ஆகும் செலவில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.
 • மேம்படுத்தப்பட்ட செயல்முறை சாகுபடி, ஒட்டு இரகம் மற்றும்  செம்மை நெல் சாகுபடோ ஆகியவற்றிற்கான கள செயல்விளக்கமும் அளிக்க உதவி பெறலாம்.
 • விவசாயிகளும் NFSM நடத்தும் விவசாய கள பள்ளிகளில் சேர்ந்து பயன் பெறலாம்.


பாரம்பரிய நெல் ரகங்கள்

மூலம : வேளாண் அமைச்சகம், இந்திய அரசு.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலர் அல்லது கட்டணம் இல்லா தொலைபேசி சேவையான 1800 -180-1551 - கிசான் கால் சென்டரை அனுகலாம்.

Filed under:
3.09433962264
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top