பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உழவுக் கருவிகள்

உழவுக் கருவிகளின் அமைப்பு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய விவரம்

நவீன இரும்புப் கலப்பை

பயன் : நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தலாம்
திறன் : ஒரு நாளில் 0.5 எக்டர் உழவு செய்யலாம்

அமைப்பு:

 • புதிய இரும்புக கலப்பையில் கலப்பையின் கருத்தடியைத் தவிர மற்ற பாகங்கள் அனைத்தும்
 • இரும்பினால் செய்யப்பட்டவை. மரக்கலப்பையில் கொழு தேய்ந்துவிட்டால் அதை மாற்றியாக
 • வேண்டும். ஆனால் இரும்புக்கலப்பையில் கொழு தேயத்தேய நீட்டி வைத்துக் கொள்ளும் வசதி
 • செய்யப்பட்டிருக்கிறது. இரும்புக் கலப்பையில்கொழு. கலப்பையின் உடல் பாகத்தின்
 • அடிப்புறத்தில் பொறுத்தப்பட்டு இருப்பதால் மண் தங்குதடையின்றி திருப்பிப்போட ஏதுவாகிறது.
 • மாடுகளின் உயர்திற்கேற்ப கருத்தடியின் உயரத்தை மேலும் கீழும் மாற்றி வைத்து. கலப்பை
 • உழும் ஆழத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உழும் ஆட்களின் உயரத்திற்கு ஏற்றவாறு
 • கைப்பிடி உயரத்தை மாற்றிஅமைத்துக் கொள்ளும்

சிறப்பு அம்சங்கள் :

 • இக்கலப்பையின் அடிப்பாகம் முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டிருப்பதால் தேய்மானம் அம்சங்கள் குறைவு.
 • மண்ணை புரட்டிபோடுவதற்கான வளைதகட்டை கலப்பையின் மேற்பகுதியில் பொருத்திக் கொள்ளலாம்
 • உழும் ஆழத்தை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்
 • ஒரு ஜோடி மாடுகளால் இழுக்கப்படுகிறது.

உளிக் கலப்பை

பயன்           : ஆழ உழவதற்கு பயன்படுத்தலாம்
திறன்           : ஒரு நாளில் 1.4 எக்டர் உழவு செய்யலாம் 1 மீ இடைவெளியில்)

அமைப்பு      :

இக்கலப்பை குறைந்த இழுவிசை மற்றும் அதிக செயல்திறன் கொண்டது. இதன் கொழு 20 கோணமும் 25 மி.மீ அகலமும் 150 மி.மீ. நீளமும் கொண்டது. இக்கலப்பை 3 மி.மீ தகட்டினால் ஆன நீள்சதுர இரும்பு குழல்களால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. இக்கலப்பையின் சட்டம் மிக நவீன உத்திகளுடன் கம்ப்äட்டரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டம். கொழு கொழுதாங்கி என மூன்று பாகங்கள் மட்டும் உண்டு. இக்கலப்பை எதிர்பாராத அதிகப்படி விசையினால் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாப்பு அமைப்பை தன்னக்த்தே கொண்டது.

சிறப்பு அம்சங்கள் :

 • இக்கலப்பையைக் கொண்டு 40 செ.மீ வரை ஆழ உழுவு செய்யலாம்
 • இக்கலப்பையை 35 முதல் 45 குதிரை திறன் கொண்ட டிராக்டர்களால் எளிதாக இயக்கலாம்
 • ஆழமாக உழுவதால் கடினப்படுகை தகர்க்கப்பட்டு மண்ணின் நீர் சேமிப்புத் தன்மை அதிகமாகிறது.
 • பயிரின் வேர் அதிக ஆழம் வரை ஊடுவரு முடிகிறது.

பாரா கலப்பை

பயன்     : மானாவாரி நிலங்களில் மழை நீர் சேகரிப்பு கருவி
திறன்    : ஒரு நாளில் 1.6 எக்டா உழவு செய்யலாம்

அமைப்பு      :

இக்கருவியில் இரண்டு கொழு முனைகள் ஒரு இரும்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டுகொழு முனைகளும் இறுதியில் சற்று சாய்வாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கொழு முனைகளானது 12 மி.மீ. தடிமன் கொண்ட இரும்பு தகடுகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக்கொழு முனைகள் சரிவாக உள்ள முனைகள் மூலம் எளிதாக மண்ணிற்குள் செலுத்தப்படுகிறது. இக்கருவியைக் கொண்டு உழும் பொழுது அதிக ஆழம் வரை உழலாம்

சிறப்பு அம்சங்கள்   :

 • மண்ணின் நீர் பிடிப்புத் திறன் அதிகரிக்கிறது.
 • மழை பெய்து 10 நாட்கள் வரை ஈரப்பதம் காக்கப்படுகிறது.

நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்கும் கருவி

பயன் : நீர்ப்பாசன வாய்க்கால் அமைப்பதற்கு
திறன் : ஒரு நாளில் 1.2 முதல் 1.5 எக்டர் வரை உழவு செய்யலாம்

அமைப்பு :

டிராக்டரால் இயக்கப்படும் இக்கருவி ஒரே சமயத்தில் இரண்டு கரைகளைஅமைப்பதால் நீர்ப்பாசன வாய்க்கால் உருவாகிறது. வாய்க்கால் அமைப்பதற்கு ஏற்றவாறு 100 * 25 செ.மீ. அளவுள்ள இரண்டு உட்புற தகடுகள் 30 டிகிரி கோணத்தில் அமையுமாறு அவற்றின் முன்புறம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு நிலத்தை உழுது செல்வதற்கேற்றவாறு கொழு பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட வாய்க்காலின் இருபுறமும் கரைகள் அமைப்பதற்கு ஏற்றவாறு 120 ரூ 25 செ.மீ. அளவுள்ள இரண்டு வெளிப்புற தகடுகள் பாத்தியிலிருந்து மண்ணை மட்டப்படுத்தி வாய்க்காலின் ஒரம் மண்ணை சேர்ப்பதால் கரை அமைய எதுவாகிறது. வெளிப்புறத் தகடுகளைவிட உட்புறத் தகடுகள் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளதால் பாத்தியின் மட்டத்தைவிட வாய்க்காலின் மட்டம் 5 முதல் 10 செ.மீ. வரை ஆழமாக அமைக்க எதுவாகிறது.

சிறப்பு அம்சங்கள்:

 • ஒரே தடவையில் வாய்க்காலும். வாய்க்காலின் இருபுறமும் கரைகளையும் அமைக்கிறது.
 • 5 மீ இடைவெளியில் ஒரு எக்டரில் நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்க ஆகும் செலவு ரூ.150
 • இதே முறையில் ஆட்களைக் கொண்டு நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்கு ஆகும் செலவு ரூ.350.

வாய்க்கால் அல்லது வடிகால் தோண்டும் கருவி

பயன்      : வாய்க்கால் வடிகால் அமைப்பதற்கு
திறன்      : ஒரு மணிக்கு 1700 மீட்டர் நீளம்

அமைப்பு  :

இக்கருவியில் இரண்டு நீளமான வளை பலகைக் கலப்பைகள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர் எதிராக ஓரே நேர் கோட்டில் ஒரு இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரும்புச் சட்டம் மும்முனை இணைப்பின் மூலம் டிராக்டருடன் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு ளைபலகைக் கலப்பையின் அடிப்பாகத்தில் மண்ணைத் தோண்டுவதற்கான கொழு முனையும். தோண்டப்பட்ட மண்ணை உயர்த்தி இருபுறமும் போடுவதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட நீணட வளை பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்   :

 • ஒரு அடி அகலம் உள்ள வடிகாலோ அல்லது வாய்க்காலோ ஒரு அடி ஆழம் வரை அமைக்கலாம்.35 முதல் 45 குதிரை சக்தி கொண்ட டிராக்டரால் இதனை இயக்கலாம்.
 • இக்கருவியை 45 குதிரை திறன் கொண்ட டிராக்டரின் மூலம் இயக்கப்படும் பொழுது ஒரு மணிக்கு ரூ.200 செலவாகிறது.
 • சொட்டு நீர்ப் பாசனக்குழாய்களைப் பதிப்பதற்கேற்ற நீண்ட குழிகளைத் தோண்டலாம்.
 • தென்னை மரங்களைச்சுற்றி உரமிடுவதற்கான குழிகளைத் தோண்டலாம்.
 • கரும்புத் தோட்டங்களில் வடிகால் மற்றும் வாய்க்கால் தோண்டலாம்.
 • ஆட்களைக் கொண்டு வாய்க்கால் வடிகால் தோண்டுவதை ஒப்பிடம்பொழுது இக்கருவியை உபயோகிப்பதன் மூலம். 95.28 99.9 மற்றம் 53 சதவிகிதம் விலை. நேரம் மற்றும் சக்தியானது. களிமண் நிலங்களில் இயக்கும் பொழுது சேமிக்கப்படுகிறது.

கரை படுகை அமைக்கும் கருவி

பயன்           : உழுத நிலத்தில் கரை படுகை அமைக்கலாம்
திறன்           : நாறொன்றுக்கு 3 முதல் 3.5 எக்டர் நிலத்தில் கரை படுகை                             அமைக்கலாம்

அமைப்பு      :

இக்கருவியில் 45 செ.மீ. அகலமும் 14 செ.மீ ஆழமும் கொண்ட மூன்று வடிவ வாய்க்கால் அமைப்பும் மற்றும் 30 செ.மீ மேல் அகலமும் 14 செ.மீ உயரமும் கொண்ட இரண்டு பாத்திகளையும் ஒரே சமயத்தில் அமைக்கும் வண்ணம் 6 மி.மீ தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியை டிராக்டர் மும்முனை இணைப்பில் எளிதில் பொருத்தி இழுத்துச் செல்லும் வண்ணம் இணைப்புப் பகுதியையும் கொண்டள்ளது. நன்கு உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் இக்கருவியை உபயோகித்து 75 செ.மீ. மேல் அகலம் கொண்ட இர கரைகளம் அதன் இருபுறமும் 30 செ.மீ ஆழம் மற்றும் அகலமும் கொண்ட படுகைகளையும் அமைக்க முடியும்.

சிறப்பு அம்சங்கள் :

 • எளிதாக நீர் பாய்ச்சுவதற்கும் இவ்வித கரைபடுகை அமைப்பு உதவுகின்றது.
 • சோளம், மக்காச் சோளம், பருத்தி போன்ற பயிர்கள விதைக்க ஏதுவான பாத்தி மற்றும் வடிகால்அமைக்கலாம்
 • வடிகால்களில் கனிசமான மழை நீரை சேமிக்கலாம்
 • ஊடுபயிர்செய்வதற்கு வசதியானது

பவர்டில்லரால் இயங்கும் சமப்படுத்தும் கருவி

பயன் : இக்கருவியை நன்றாக உழுத் நிலத்தில் உரமான பகுதியில் உள்ள மண்ணை தாழ்வான பகுதிக்குக் கொண்டு சென்று நிலத்தைச் சமப்படுத்த பயன்படுத்தலாம்
திறன் : ஒரு மணிக்கு 0.08 கன மீட்டர் மண்ணால் சமப்படுத்தலாம்

அமைப்பு :

பவர்டில்லரால் இயக்கப்படும் இக்கருவி ஒரு மீட்டர் அகலமுள்ள உள்நோக்கி லேசாக வளைக்கப்பட்ட கெட்டியான இரும்புத் தகட்டினால் ஆனது. இத்தகட்டின் கீழ்ப்பாகத்தில் மண்ணை வெட்டிச் செல்வதற்கான இரும்புப் பட்டை பொருத்தப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலும் மண் சிந்துவதை தவிர்க்க பக்கவாட்டில் சிறகுகள் இணைக்கப்ட்டுள்ளன. இக்கருவி பவர்டில்லரின் முன்புறம் உறுதியாக பொருத்தப்பட்டுள்ளது. பவர்டில்லரால் இக்கருவி உந்தி முன்னுக்கு தள்ளப்படும் பொழுது இரும்புப் பட்டையினால் வெட்டப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வேண்டிய இடத்திற்கு கடத்தப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள் :

 • மேட்டுப்பகுதியிலிருந்து மண்ணை பள்ளத்திற்கு எடுத்துச் சென்று நிலத்தைச்         சமன்படுத்த மிகவும் உதவும்
 • நிலத்தின் குறுக்கே வரப்புகள் போட்டு மண் அரிப்பைத் தடுப்பதுடன் மண்ணின் ஈரத்தன்மையை காக்க உதவுகிறது.
 • மரச்சட்டம் மற்றும் பலகையினால் நிலத்ததை சமப்படுத்துவதை ஒப்பிடும் பொழுது நேரம் மீதப்படுவதுடன் நிலம் சீராக சமப்படுத்தப்படுகிறது.
 • ஒரு கன மீட்டர் மண்ணை ஒரு மீட்டர் நீளத்திற்கு கடத்த ஆகும் செலவு ரூபாய் மூன்று என கணக்கிடப்பட்டுள்ளது.

பவர் டில்லரினால் இயங்கும் செடிகளை பொடி செய்து மண்ணோடு கலக்கும் கருவி

சிறப்பியல்புகள்

 • பல்வேறு வகையான செடிகளை துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்
 • அனைத்து வகையான பவர் டில்லர்களுடன் இணைக்கலாம்
 • ஒரு நாளில்  0.8 எக்டர் நிலத்தில் உள்ள செடிகளை துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்
 • கருவியை பயன்படுத்துவதால் 73 சதவீத நேரமும் 75 சதவீத செலவும் மீதம் ஆகிறது

டிராக்டரால் இயங்கும் கரும்பு நடவு செய்ய் குழி தோண்டும் கருவி

சிறப்பியல்புகள்

 • குழி முறையில் கரும்பு நடவு செய்ய 90 செ.மீ விட்டம், 30 செ.மீ.ஆழமுள்ள இருகுழிகளை 1.5 மீ இடைவெளியில் ஒரே சமயத்தில் தோண்டலாம்
 • குழி முறையில் கரும்பு நடவு செய்வதால் அதிக மகசூல் பெறலாம்
 • நீர் மற்றும்  நிர்வாகத்ததை சொட்டு நீர் மூலம் கொடுக்கும்வபோது கரும்பின் மகசூலை  மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தில் இக்கருவி பரிந்துரை செய்யப்படுகிறது.

டிராக்டரால் இயங்கும் சுழலும் மண்வெட்டி

சிறப்பியல்புகள்

 • முதன் முறையாக நிலத்தை தயார் படுத்த உதவுகிறது
 • பயிர்களின் வரிசைகளுக்கிடையே மண் கூட்டமைப்பு பாதிக்கப்டாமல் ஆழ உழவு செய்ய உதவுகிறது
 • நெல் தரிசு பயிர்கள் மற்றும் தென்னை தோப்புகளில் உழவு செய்ய பயன்படுகிறது

கால்நடை வளர்ப்பில் பயன்படும் இயந்திரங்கள்


மாட்டுப்பண்ணைகளில் தேவைப்படும் கருவிகள்

கேள்வி பதில்

1. மஞ்சள் வேகவைக்கும் கருவி உள்ளதா ?
ஆம். உணவு மற்றும் வேளாண் பதன் செய் பொறியியல் துறையில் மேம்படுத்தப்பட்ட மஞ்சள் வேக வைக்கும் கருவி உள்ளது. மஞ்சள் கிழங்குகளை சுத்தமான முறையில் இதன் மூலம் வேக வைக்கலாம்.

2. சிறிய அளவில் பருப்பு உடைக்கம் இயந்திரம் உள்ளதா ?
ஆம். உணவு மற்றும் வேளாண் பதன் செய் பொறியியல் துறையில் 30 கிலோ / மணி கொள்ளளவு கொண்ட பருப்படைக்கும் கருவி உள்ளது. குருணை மற்றும் உடைபடாத பருப்பை பிரிக்கவும் முடியும். இந்த இயந்திரத்தை ஒரு குதிரைத் திறன் கொண்ட மோட்டார் மூலம் இயக்கலாம்.

3. வேளாண் பதன் செய்த இயந்திரங்களின் விவரங்களை எங்கு அறியலாம் ?
சந்தேகங்களுக்கு அணுகவும்.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
உணவு மற்றும் வேளாண் பதன் செய் பொறியியல் துறை
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோவை - 3

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.96296296296
Sam Nov 03, 2017 08:30 AM

Very good

suresh Aug 18, 2015 03:51 PM

பவர் டில்லர் கருவி பற்றிய விவரங்கள் எனக்கு அளிக்கவும் 70*****54

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top