অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சொட்டு நீர் பாசனம்

சொட்டு நீர் பாசனம்

சொட்டுநீர் பாசன முறை என்பது முதன்மை குழாய், துணை குழாய் மற்றும் பக்கவாட்டு குழாய் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறை. ஓவ்வொரு விடுகுழாய்/உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது,

உமிழி வழியாக நீர் மற்றும் ஊட்டச்சத்தானது, வேர் பகுதியில் இருக்கும் மண்ணில், புவி ஈர்ப்பு மற்றும் நுண்புழை சக்தி மூலம் உள்ளே செல்கிறது. நீர் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்ட உடனேயே, பயிர் நீர் நெருக்கடியிலிருந்து தவிர்க்கப்பட்டு, தரம் மேம்பட்டு போதுமான வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்க வழிவகுக்கிறது.

மாதிரி சொட்டுநீர்ப்பாசன வடிவமைப்பு

நீர் (மனிதனுக்கு இயற்கையின் வரப்பிரசாதம்), மிக வேகமாக குறைந்து கொண்டுவரும் நிலையில், சொட்டு நீர் பாசனம், இன்றைய முக்கியமான தேவையாகும்.

சொட்டுநீர்பாசனத்தின் நன்மைகள்

 • மகசூலை 150 % அதிகப்படுத்தும்
 • சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
 • பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
 • விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு கிடைத்து விடும்
 • உரம் பயன்பாட்டு திறனில் 30% அதிகம்
 • உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்
 • நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
 • ஏற்ற இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர்தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து சாகுபடி செய்யலாம்

தகவல்:ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் லிமிடேட்,ஜல்கான்வ்

சொட்டு நீர் பாசனத்தில் திசுவளர்ப்பு வாழை பயிரிடுதல்

திசுவளர்ப்பு என்றால் என்ன ?

செடியின் ஏதேனும் ஒரு பகுதியையோ அல்லது ஒன்றோ அல்லது பல செல்களை கொண்டோ, சோதனை குழாயில், கட்டுப்பாடு மற்றும் சுகாதார நிலையில், பயிர்ப்பெருக்கம் செய்வதாகும்.

பயிர் செய்வதற்கான காலநிலை

வாழை, ஒரு வெப்பமண்டலம் சார்ந்த பயிராகும். இது 130C-380C வெப்பம் மற்றும் 75-85% ஈரப்பதத்தில் நன்றாக விளைய கூடிய பயிராகும். இந்தியாவில், ஈரப்பதம் உடைய மற்றும் வறண்ட பகுதியில் வாழை பயிரிடப்படுகிறது. வாழை, 120Cக்கு கீழ் பயிரிடப்பட்டால், குளிர்தாக்கம் ஏற்படுகிறது. வாழை சாதாரணமாக, 180C வெப்பத்தில் வளர தொடங்கி, 270C வெப்பத்தில் நன்றாக வளர்ந்து, பின்னர் வளர்ச்சி குறைந்து, 380C வெப்பத்தில் வளர்ச்சி பாதிப்படைகிறது. மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் உள்ள காற்று, பயிரை சேதப்படுத்தும்.

மண்

வாழைக்கு, நல்ல வடிகால், போதுமான ஈரம் மற்றும் ஊட்டம் நிறைந்த மண்தேவை. அமிலநிலை 6-7.5 உள்ள, ஆழமான மற்றும் செழுமையான, பசளைமண், வாழை சாகுபடிக்கு உகந்த மண்ணாகும். வடிகால் சரியில்லாத மண், காற்றுட்டம் கம்மியாக மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள மண், வாழை சாகுபடிக்கு சரியான மண் அல்ல. உவர் சுண்ணாம்பு மண்ணும் ஏற்றதல்ல. தாழ்ந்த பகுதிகள், மிகவும் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பகுதிகளும் வாழை சாகுபடிக்கு உகந்தது அல்ல.

அதிக அமிலம் மற்றும் காரதன்மையற்ற, அதிக கரிமப்பொருளுடன் அதிக தழைச்சத்து மற்றும் ஏராளமான சாம்பல்சத்து மற்றும் போதுமான மணிச்சத்துடன் கூடிய மண், வாழை சாகுபடிக்கு ஏற்ற மண்ணாகும்.

இரகங்கள்

இந்தியாவில், வாழை, பல வானிலை அமைப்புகளிளும், பல்வேறுபட்ட உற்பத்தி அமைப்புகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, இரகங்கள், தேவை மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேர்வு செய்யப்படுகிறது. எனினும் டுவார்ப் கேவென்டீஷ், ரொபாஸ்டா, மொந்தன், பூவன், நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி, கற்பூரவல்லி மற்றும் கிராண்ட்நைன் போன்றவை பிரபலமானவை. இதில் கிராண்ட்நைன், இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த இரகமானது, உயிர்சார்ந்த தாக்கங்களுக்கு, எதிர்ப்புதிறன் உடையதாகவும் மற்றும் நல்ல தரமான தார் அளிப்பதாகவும் இருப்பதால், தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. தாரில், சீப்புகள் நன்கு இடைவெளிவிட்டும், சீப்புகளில் உள்ள பழம், மிக நேராகவும் மற்றும் பெரியதாகவும் இருக்கின்றது. மேலும் பழமானது கண்கவர் ஒருமித்த மஞ்சள் நிறங்களாக மாறவும் செய்கிறது. பழுத்த பழங்கள், ஏனைய இரங்களைவிட தரமானதாகவும், நீண்டநாள் இருக்க கூடியதாகவும் இருக்கிறது.

நிலம் தயாரித்தல்

வாழையை நடுவதற்கு முன், பசுந்தாள் பயிர்களான, டெய்ஞ்சா, தட்டை பயிர் போன்ற பயிர்களை விளைவித்து, அதனை நிலத்தினுள்ளே புதைத்துவிட வேண்டும். நிலத்தை, இரண்டிலிருந்து நான்கு முறை உழுது சமன் செய்ய வேண்டும்.

நிலத்திலுள்ள மண்கட்டிகளை ரோட்டவேட்டர் அல்லது கொத்துக் கலப்பையை கொண்டு நயமாக ஆக்கவும். இவ்வாறு நிலத்தை தயாரிக்கும் பொழுதே அடிஉரமான தொழுஉரத்தை போட்டு, நன்றாக கலந்து விடவும். வாழையை நடுவதற்கு, பொதுவாக 45 செ.மீ × 45 செ.மீ × 45 செ.மீ  அளவு கொண்ட குழிதேவை. இந்த குழியை 10கிலோ தொழு உரம் (நன்றாக மக்கியவை), 250கிராம் கார்போ பியூரானுடண் கலந்த மேற்பரப்பு மணலை கொண்டு, நிரப்ப வேண்டும். இவ்வாறு தயார் செய்த குழிகளை, சூரிய ஒளிபடுமாறு விடவேண்டும். இவ்வாறு செய்வதால், அபாயகரமான பூச்சி மற்றும் மண்சார் நேய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், காற்றோட்டத்திற்கும் வழி வகுக்கிறது. உவர்களர் மண்ணில், அமிலத் தன்மை 8 இருக்கும் நிலையில், அங்ககப் பொருளை கலக்கும் வகையில், கலவையை மாற்றி கொள்ள வேண்டும்.

நடவுக்கன்றுகள்

சுமார் 500-1000 கிராம் எடையுள்ள அடிக்கன்றுகள் மூலமே வாழை, பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த அடிக்கன்றுகள் நோய் மற்றும் நூற்புழு தாக்கியதாக இருக்கும். மேலும் இந்த அடிக்கன்றுகள், வயது மற்றும் அளவுகளில் வேறுபடுவதால் பயிர் ஒருமித்து இருக்காது. இதனால் பயிர் நிர்வாகம் மற்றும் அறுவடை போன்றவற்றில் மிகுந்த வேறுபாடுகள் காணப்படும். இதனால் திசு வளர்ப்பில் உருவான வாழை கன்றுகளை நடுவதற்கு சிபாரிசு செய்யப்படுகிறது. இக்கன்றுகள், வளமாகவும், நோயற்றதாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கும். முறையாக கடினமாக்கப்பட்ட, இரண்டாம் நிலை கன்றுகள் நடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

திசு வளர்ப்பில் உருவான நடவுக்கன்றுகளின் நன்மைகள்

 • தாய்ச்செடியிலிருந்து, தூய்மையான கன்றுகளை நல்ல மேலாண்மையில் பெறுவதால், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைவு.
 • ஒருமித்த வளர்ச்சி மற்றும் மேம்பட்ட மகசூல்.
 • குறைவான வயது.
 • வருடம் முழுவதும் கன்றுகள் கிடைக்கப் பெறுவதால், வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.
 • மிக குறைந்த காலத்தில், தொடர்ச்சியாக 2 மறுதாம்பு பயிர்களை செய்வதன் மூலம் சாகுபடிக்கான செலவை குறைக்கலாம்.
 • 30 மாதங்களில் 3 பயிர்கள். அதனால், இடைவெளி விடப்பட்ட அறுவடை இந்த பயிரில் இருக்காது.
 • 90% - 98%  மரங்கள், தார்களை தரக்கூடியதாக இருக்கும்.

கன்று நடுவு காலம்

திசு வாழையை வருடம் முழுவதும் நடலாம். மிகக் குறைந்த மற்றும் அதிகமான வெப்பத்தை தவிர்க்க வேண்டும். சொட்டுநீர்ப்பாசனம் மிக முக்கியம்.


கிராண்ட் நைன் இரக வாழை நடவுமுறை

வேர்ப்பந்துக்கு இடையூறு ஆகாத வகையில் செடியிலிருந்து பாலீதின் பைகளை பிரித்தெடுத்து, போலித் தண்டினை தரையிலிருந்து 2 செ.மீ-க்கு கீழாக குழியில் புதைக்க வேண்டும். தண்டினை சுற்றியுள்ள மணலை மெதுவாக அமுக்கி விட வேண்டும். ஆழமாக நடுவதையும் தவிர்க்க வேண்டும்.

நீர் மேலாண்மை

வாழை ஒரு நீர் விரும்பும் மரம் ஆகும். இதன் உற்பத்திக்கு நீர் அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால், வாழையின் வேர்களோ நீரை உறிஞ்சுவதில் திறன் குறைந்தவைகள் ஆகும். அதனால், நீர்ப்பற்றாக்குறையுள்ள இன்றைய சூழலில் வாழை சாகுபடி செய்வதற்கு சொட்டு நீர்ப்பாசனம் மிகவும் அவசியமாகும்.
வாழை சாகுபடி, செய்வதற்கு ஒரு வருடத்திற்கு 2000மிமீ, நீர் தேவைப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மற்றும் ஈரப்பராமரிப்பு தொழில் நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் வாழையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகப்படுத்தலாம். வாழையில், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 56% நீரை சேமிப்பதுடன் 23-32% மகசூலையும் அதிகப்படுத்தலாம்.
கன்றினை நட்டவுடன் பாசனம் செய்ய வேண்டும். போதுமான நீரை ஊற்றி நில நீர் கொள்ளளவு திறனை பராமரிக்க வேண்டும். அதிகமான நீர் வேர்பகுதியில் காற்றோட்டத்தைக் குறைத்து வளர்ச்சியை பாதிக்கும். இதனால் சொட்டு நீர் பாசனமே, வாழையின் சிறந்த நீர் மேலாண்மை வழியாகும்.

ஊட்டச்சத்து

பொதுவாக, வாழைக்கு அதிகமான ஊட்டச்சத்து தேவை. இந்த ஊட்டசத்தில் ஒரு பகுதியே, மண்ணின் மூலம் கொடுக்கிறோம். ஒருவாழை மரத்திற்கு, தேவையான ஊட்டச்சத்தாவது 20கிலோ தொழு உரம், 200 கிராம் தழை : 60-70 கிராம் மணி : 300 கிராம் சாம்பல் சத்து ஆகும்.

ஒரு மெட்ரிக் டன் வாழை மகசூலுக்கு 7-8 கிலோ தழை, 0.7-1.5 கிலோ  மணி மற்றும் 17-20 கிலோ சாம்பல் சத்து தேவைப்படுகிறது. வழக்கமான முறையில், விவசாயிகள் அதிகம் யூரியாவையும், குறைந்த பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் அளிப்பார்கள்.

வழக்கமான உரமிடும் வகையில் ஏற்படும், ஊட்டப்பொருளின் இழப்பை தவிர்ப்பதற்கு, நீரில் கரையும் மற்றும் திரவ உரத்தை, சொட்டுநீர் பாசனம் மூலம் அளிக்கலாம். இவ்வாறு அளிப்பதன் மூலம் 25-30% மகசூல் அதிகமாகிறது. மேலும், இதனால் நேரம் மற்றும் வேலை ஆட்களை மிச்சப்படுத்தலாம். மேலும் இம்முறை மூலம், ஊட்டப்பொருளை, ஒருமித்தமாக, செடிகளுக்கு கிடைக்கச் செய்யலாம்.

உரம் அளிப்பதற்கான அட்டவணை

திசு வளர்ப்பியலால், உருவான கிராண்ட்நைன் இரகத்திற்கான, திட மற்றும் நீரில் கரையக்கூடிய உரத்திற்கான அட்டவனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்நைன் வாழை இரகத்திற்கான திட உரத்தின் அட்டவணை

தேவையான ஊட்டசத்து

N -200 கிராம்/ செடி

P-60-70 கிராம் /  செடி

K-30 கிராம் / செடி

ஒரு ஏக்கருக்கு தேவையான உர அளவு
(இடைவெளி 1.8 x 1.5 மீ  , 1452 செடிகள்)

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

பொட்டாஷ்

431.0
625.0

375.0
545.0

500 கிராம் / செடி 726  கி.கிராம் / ஏக்கர்

 

உரம் அளிக்கும் நாள்

மூலம்

அளவு(கிராம்- ஒருசெடிக்கு)

நடும் பொழுது

சூப்பர் பாஸ்பேட் பொட்டாஷ்

100
50

நட்டதிலிருந்து 10வது நாள்

யூரியா

25

நட்டதிலிருந்து 30வது நாள்

யூரியா

25

சூப்பர் பாஸ்பேட்

100

பொட்டாஷ்

50

நுண் ஊட்டச்சத்து

25

 

மெக்னீசியம் சல்பேட்

25

கந்தகம்

10

நட்டதிலிருந்து 60வது நாள்

யூரியா

50

சூப்பர் பாஸ்பேட்

100

பொட்டாஷ்

50

நட்டதிலிருந்து 90வது நாள்

யூரியா

65

சூப்பர் பாஸ்பேட்

100

பொட்டாஷ்

50

நுன் ஊட்டச்சத்து

25

கந்தகம்

30

மெக்னீசியம் சல்பேட்

25

நட்டதிலிருந்து 120வது நாள்

யூரியா

65

பொட்டாஷ்

100

நட்டதிலிருந்து 150வது நாள்

யூரியா

65

பொட்டாஷ்

100

நட்டதிலிருந்து 180வது நாள்

யூரியா

30

பொட்டாஷ்

60

நட்டதிலிருந்து 210வது நாள்

யூரியா

30

பொட்டாஷ்

60

நட்டதிலிருந்து 240வது நாள்

யூரியா

30

பொட்டாஷ்

60

நட்டதிலிருந்து 270வது நாள்

யூரியா

30

பொட்டாஷ்

60

நட்டதிலிருந்து 300வது நாள்

யூரியா

30

பொட்டாஷ்

60

நீரில் கரையும் உரங்கள்
நீரில் கரையும் உரங்களை அளிப்பதற்கான அட்டவணை


அளிக்கும் காலம்

கிரேட்

1000செடிகளுக்கானஎண்ணிக்கை(கிராமில்) ஒவ்வொரு4வது நாள்

மொத்த அளவு (கி.கிராம்)

நட்டதிலிருந்து 65வது நாள் வரை

யூரியா

4.13

82.60

12 : 61 :  00

3.00

60.00

00:00: 50

5.00

100.00

65வது நாளிலிருந்து 135வது நாள் வரை

யூரியா

6.00

120.00

12 : 61 :  00

2.00

40.00

00:00: 50

5.00

100.00

135வது நாளிலிருந்து 165 வது நாள் வரை

யூரியா

6.50

65.00

00:00 :  50

6.00

60.00

165வது நாளிலிருந்து 315வது நாள் வரை

யூரியா

3.00

150.00

00:00 :  50

6.00

300.00

ஊடு சாகுபடி

வாழையின் வேரானது, மேலோட்டமாக இருப்பதனால், ஊடு பயிர் செய்யும்பொழுது வேர் சேதமாகும். அதனால், வாழையில் ஊடுபயிர் சாகுபடி செய்வது அவ்வளவு சிறந்ததல்ல. இருந்தாலும், குறைந்த நாள் (45-60தினங்கள்) பயிர்களான உளுந்து, தட்டைப்பயிர், டெய்ன்ஜா ஆகிய பசுந்தாள் பயிர்களை, ஊடுபயிர் செய்யலாம். வைரஸ் கிருமிகளை தொற்றச் செய்வதினால், குக்குர்பிட்டேசியே குடும்பத்தை தவிர்க்க வேண்டும்.
களை நீக்குதல்
க்ளைபாஸ்பேட் (ரெளண்ட் அப்), களை கொல்லியை ஒரு ஹெக்டேருக்கு 2லிட்டர் தெளிப்பதன் மூலம் தோட்டத்தை களை அற்றதாக வைத்திருக்கலாம். ஒன்று அல்லது இரண்டு முறை கையினால் களைகளை நீக்க வேண்டும்.
இலை வழி நுண்ணூட்டச்சத்து அளித்தல்
சிங்க் சல்பேட் (0.5%), பெரஸ் சல்பேட்  (0.2%),  காப்பர் சல்பேட் (0.2%) மற்றும்  போரிக்ஆசிட் (0.1%) அனைத்தையும் மொத்தமாக, இலை வழி மூலம் அளிப்பதனால், வாழையின் மகசூலை மேம்படுத்தலாம். கீழே கொடுக்கப்பட்டவைகளை 100லிட்டரில் கரைத்து நுண்ணூட்டச்சத்து கரைசலை தயாரிக்க வேண்டும்.


சின்க்
சல்பேட்

500
கிராம்

 

ஒவ்வொரு 10லி கரைசலுக்கும் 5 முதல்   10 மில்லி பசை பொருள் அடங்கிய டீபாலை, தெளிப்பதற்கு முன் கலக்க வேண்டும்.

ஃபேரச் சல்பேட்

200
கிராம்

காப்பர்
சல்பேட்

200
கிராம்

போரிக்
ஆசிட்

100
கிராம்

வாழைப்பயிரில் மேற்கொள்ள வேண்டிய சில சிறப்பு பணிகள்

வாழையில் தரம் மற்றும் காய்ப்பு திறனை  அதிகரிக்க, சில சிறப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கன்று கலைதல்
தாய் செடியிடமிருந்து, போட்டியை தவிர்ப்பதற்கு, தேவையற்ற அடிக்கன்றுகளை அகற்றுவது ஒரு முக்கியமான பணியாகும்.
தண்டு துளிர்விடும் வரை, இந்த பணியை தவறாமல் செய்ய வேண்டும். ஆனால் 2வது பயிருக்கு மறுதாம்பு பயிர் சாகுபடி செய்யும் நிலையில், வாழை செடியானது பூ விட்ட பிறகு, ஒரு அடி கன்றைவிட்டு விட வேண்டும். இவ்வாறு விடுவதன் மூலம் இடைவெளி குறையக் கூடாது. விட்ட கன்றானது வாழை பூவிற்கு நேர் எதிராக இருக்க வேண்டும். மேலும் பிரதான தண்டிலிருந்து மிக தூரத்தில் இருக்க கூடாது.
பூக்கழிதல்
இதில், வாடிய சூல்தண்டு மற்றும் இதழ்வட்டத்தை, தாரில் இருந்து நீக்க வேண்டும். இதை பொதுவாக யாரும் பின்பற்றுவதில்லை, அதனால் இவை பழத்திலேயே ஒட்டிக்கொண்டு இருக்கும். அறுவடையின் போது இதனை நீக்குவதால் பழத்திற்கு சேதம் ஏற்படுத்துகிறது. எனவே இதனை கடைசி சீப்பு விரிந்தவுடன் நீக்கிவிடவேண்டும்.
இலை கவாத்து செய்தல்
பழத்தில் உரசும் இலைகளால், பழங்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அப்படிப்பட்ட இலைகளை, உடனுக்குடன் வெட்டிவிட வேண்டும். பழைய மற்றும் நோய் மற்றும் பூச்சிகளால் பாதிக்கப்பட்ட இலைகளையும் கவாத்து செய்ய வேண்டும். பச்சை இலைகளை நீக்கக் கூடாது.
மண் அணைத்தல்
அடிக்கடி, மரத்தைச்சுற்றி மண்ணை கொத்திவிட்டு, தளர்த்த வேண்டும் கன்று நட்ட, 3-4 மாதங்களில் மண் அணைக்க வேண்டும். மரத்தின் அடியில் மண்ணை 1 முதல் ஒன்றரை அடி உயரப்படுத்த வேண்டும். மரத்திலிருந்து 2-3 அடி தூரத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து, அதில் சொட்டு நீர் குழாயை வைத்துக் கொள்வது நல்லது. இது வேகமான காற்றடடித்து மரம் சாய்வதிலிருந்து பாதுகாக்கிறது. வேர் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
ஆண் மொட்டினை கழிதல்
ஆண் மொட்டினை நீக்குவதால், பழ வளர்ச்சிக்கு உதவுவதுடன் சீப்பின் எடையும் கூடுகிறது. ஒரே ஒரு மொட்டை மட்டும் கடைசி சீப்பில் விட்டுவிட்டு தாரின் கடைசியிலுள்ள உள்ள ஆண் மொட்டினை சுத்தமாக வெட்டிவிட வேண்டும்.
தாருக்கான தெளிப்பு
வாழையில், செடிப்பேன் தாக்கினால் பழத்தின் நிறம் மாற்றம் ஏற்படும். இதனால் பழத்தின் நிறம் விரும்பத்தக்கதாக இருக்காது. இதனைக் கட்டுப்படுத்த, எல்லா சீப்புகளும் வந்த பின்னர் மோனோக்குரோட்டோபாஸ் (0.2%சதவீதம்) தார்களில்   தெளிக்க வேண்டும்.
தார்களை மூடுதல்
வாழை தார்களை, காய்ந்த இலைகளால் மூடுவது சிக்கனமானதும் மற்றும் தார்கள் நேரடியாக சூரிய ஒளியில் படுவதையும் தவிர்க்கும். இவ்வாறு மூடுவதனால் பழத்தின் தரமும் மேம்படும். ஆனால், மழைக் காலத்தில் இவ்வாறு மூடுவதை தவிர்க்க வேண்டும். தூசு, எச்சம், பூச்சி மற்றும் பறவைகளிடமிருந்து தார்களை பாதுகாக்க ஏற்றது. இந்த உறைகள் தாரைச் சுற்றி வெப்பத்தை அதிகப்படுத்தி முதிர்ச்சியை வேகப்படுத்தும்.
போலிச்சீப்பினை தாரிலிருந்து கலைதல்
பொதுவாக வாழைத்தாரில், சில வளர்ச்சியடையாத சீப்புகள் இருக்கும் அவைகளை, ஆரம்பத்திலேயே நீக்கினால், ஏனைய தரமான சீப்புகளின் எடை மேம்படும். சில சமயங்களில் போலிசீப்புகளுக்கு மேல் இருக்கும் சீப்பையும் நீக்க வேண்டும்
முட்டு கொடுத்தல்
தாரின், அதிக எடை காரணமாக, வாழை மரங்கள் தாங்க முடியாமல் சாய்ந்து போவதனால், உற்பத்தி மற்றும் தரம் தீவிரமாக பாதிக்கப்படும். எனவே, அந்த மரங்களை இரண்டு மூங்கிலை முக்கோண வடிவில் சாயும் பக்கத்தில் முட்டுக் கொடுக்க வேண்டும், இதனால் வாழைக் குலையில், ஒருமித்த வளர்ச்சி ஏற்படும்.

பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்

வாழையை, பலவிதமான, வைரஸ் மற்றும் பாக்டீரியா மற்றும் பூச்சிகள் மற்றும் நூற்புழுக்கள் தாக்கி வாழையின் உற்பத்திதிறன் மற்றும் தரத்தை குறைக்கச் செய்யும். வாழையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் பெயரும், அவற்றை கட்டுப்படுத்தும் முறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

எண்

பெயர்

அறிகுறி

கட்டுபாட்டு முறை

பூச்சி

1

கிழங்கு கூன்வண்டு

அ) தண்டை நிறைய இடங்களில் துளையிட்டு, வலையமைப்பை உண்டாக்கி, மரத்தை வலுக்குறைய செய்யும்

அ) ஆரேக்கியமான நடவுப் பொருளை உபயோகிக்க வேண்டும்
ஆ) பழத் தோட்டத்தை சுகாதாரமாக வைத்திருத்தல்
இ) போலித்தண்டினை வைத்து, வளர்ந்த கூண்வண்டினை பிடிக்க வேண்டும்
ஈ) மணலில் கார்போஃபூயுரான் (2.கி\செடிக்கு) அளிக்க வேண்டும்

2

போலித் தண்டு கூண்வண்டு

அ)போலித்தண்டில் சிறு துளைகளும் அதனையடுத்து ஒளிபுகும் தன்மையையுடைய பிசின் போன்ற சாறு வடியும்
ஆ) இலைகாம்பு மற்றும் உள் தண்டில் சுரங்கம் போன்ற அமைப்பு கானப்படும்
இ) குலைகள் சிதைவுற்று இருக்கும்

அ) கிழங்கு கூன் வண்டு கட்டுப்பாட்டு முறையே இதற்கும் பொருந்தும்.
ஆ) தண்டின் மட்டத்திலிருந்து, 4 அடிக்கு மேல் தண்டில், மோனோக்குரோட்டோபாஸை 350 மில்லி தண்ணீரில் 150/30 கோணத்தில் உட்செலுத்த வேண்டும்.
இ) நீட்டுவாக்கான பிளவு பொறி, ஒரு ஹெக்டருக்க 100 இட வேண்டும். பிளவு பக்கம் தரையில் படும்படி வைக்க வேண்டும். பின்னர் திரட்டிய வண்டினை சாகடிக்க வேண்டும்.

3

செடிப்பேன்

அ) இலை பாதிக்கப்பட்ட செடியின் பாகங்களின் வழியாக சுரண்டி செல்லும் போது காப்பி கலரை உருவாக்கும். குறிப்பாக, பழங்கள் நிறம்மாற செய்யும்

அ) மேலுள்ள சிறுவடி பூவிலை விரிவதற்குள், மோனோகுரோட்டோபாஸ் 0.05 சதவீதம் பூவின் மேல் தெளிக்கவோ உட்செலுத்தவோ வேண்டும்

4

பழத்தின் உரு கெடுக்கும் வண்டு

அ) வளர்ந்த வண்டுகள், விரிவடையாத இளந்தளிர்களையும் பழத்தையும் திண்ணக் கூடியவை இவை பழத்தின் நிறத்தை மாற்றி விடும்
ஆ) செடி வீரியம் குறைந்து குலையின் தரம்குறைந்து விடும்

அ) மோனோகுரோட்டோபாஸ் 0.05 சதவீதம்(அ) கார்பரில் 0,05 சதவீதம் இதில் ஏதாவது ஒள்றை புது தளிர் உருவானவுடனும் மற்றும் பழம் பிடிக்கம் பருவத்தில் தெளிக்க  வேண்டும்

5

அசுவுனி

இவை தலைக்கொத்து நோய் பரப்பும் உயிரியாக செயல்படுகிறது. போலித் தண்டில் இருக்கும் இலைக் காம்பின் அடியில் குழுவாக காணப்படும்.

அ)மோனோகுரோட்டோபாஸ் 0.1 % (அ) 0,03% பாஸ்போமிடனை இலைகளில் தெளிக்கலாம்.

 

6

நூற் புழு

அ) குறைவளர்ச்சி
ஆ) சிறுஇலைகள்
இ) அறுப்பட்ட வேர்
ஈ) வேர்களில் ஊதா நிற நைவுப்புண்கள் மற்றும் வெடிப்பு காணப்படும்.

அ) நட்டவுடன் மற்றும் நட்டு 4 மாதங்களுக்கு பிறகும் கார்போஃபூயுரான் ஒரு மரத்திற்கு 40கிராம் என்ற விதத்தில் போட வேண்டும்.
ஆ) வேப்பபுண்ணாக்கை, இயற்கை தொழுவுரமாக அளிக்க வேண்டும்.
இ) மரிக்கொழுந்தை, பொறிபயிராக விளைவிக்கலாம்.

பூஞ்சான நோய்கள்

7

 

 

பனாமா வாடல் நோய்

அ) பழைய இலைகளில் மஞ்சள் நிறம் படர தொடரும்
ஆ) பாதிக்கப்பட்ட இலைகள், இலைக்காம்பில் சேதம் அடைந்து, இலைகள் தொங்கும்.
இ) போலிதண்டில் பிளவு ஏற்படுத்தும்.
ஈ) கிழங்கு மற்றும் வேரின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தில் செந்நிறம்கலந்த பழுப்பு நிற நைவுபுண்கள் காணப்படும்.

அ) எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை விளைவிக்கலாம் (கேவண்டிஷ்)
ஆ) கிழங்கை ஒழுங்குபடுத்தி 0.1% பேவிஸ்டினில் நேர்த்தி செய்யப்படவேண்டும்.
இ) இயற்கை தொழுவுரத்துடன், ட்ரைக்கோடெர்மா மற்றும் சுடோமோனாஸ் ஃப்ளோரோசன்ஸ் ஆகிய உயிர்கொல்லிகளை இடவேண்டும்.

8.

குருத்து அழுகல் நோய்

அ) மரத்தின் கழுத்துபட்டை பகுதி அழுகுதல் மற்றும் இலைகள் தரை நோக்கி வளைதல்
ஆ) பாதிக்கப்பட்ட தண்டினை புடுங்கும்போது, கழுத்து பகுதி மட்டும் தண்டிலிருந்து ஒடிந்து கையுடன் வந்துவிடும்.
இ) பாதிக்கப்பட்ட தண்டின் கழுத்து பகுதியை வெட்டிபார்த்தால் மஞ்சள் மற்றும் செந்நிறம் உடைய சாறுவடியும்
ஈ) பாதிக்கப்பட்ட தண்டை ஆரம்பத்திலேயே
பார்த்தால் பழுப்புமற்றும் மஞ்சள் நிறத்தில், நீர் தோய்ந்த பகுதிகள், தென்படும். இவையே, பின்னர் அழுகி, குழியாக மாறிவிடும்

 

அ) ஆரோக்கியமான நடவுப் பொருளை உயோகிக்க வேண்டும்.
ஆ) 0.1%இமிசன் கொண்டு தண்டினை நினைக்க வேண்டும். நினைத்த மூன்று பக்கங்கள்
கழித்து மீண்டும் ஒருமுறை நனைக்கவேண்டும்.
இ) பாறைகள்மற்றும் வடிகால் அற்ற இடங்களில் தண்டினை நடகூடாது.

9.

சிக்கடோகா இலைப் புள்ளி நோய்

அ)சிறுசிறு நைவு புண் இலையில் இருப்பது, இந்த நோயின் சிறப்பியல்பு. இந்தநைவுபுண்கள், நாளடைவில் மஞ்கள்நிறமாக மாறி அதிலிருந்து பச்சைநிறம் கலந்த மஞ்சளாக மாறி இலையின் இருபக்கங்களிலும் காணப்படும்
ஆ) அதனால் இவை பழுப்பு மற்றும் கருப்பு கீற்றுகளாக தெரியும்.
இ) இந்த கீற்றின் நடுப்பகுதி காய்ந்து கண்கள்போல் காணப்படும்
ஈ) சிலநேரங்களில் முதிராநிலைக்கு முன்பே காய்கள் பழுக்க தொடங்கிவிடும்.

அ) பாதிக்கப்பட்ட இலையை நீக்கி, அழிக்கவேண்டும்
ஆ) சரியான வடிகால் அமைப்பதோட, நீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும்
இ) டைதேன் 45 (120 கி\ஹெக்டர்) (அ) பெவிஸ்டின் (500 கி\ ஹெக்டர்) தெளிக்கவேண்டும்.

 

 

 

வைரஸ் நோய்கள்

1.

வாழை முடிக்கொத்து நோய்

அ) இலையின் அடிப்பகுதியில் உள்ள இரண்டாம்நிலை நிரம்புகளை சார்ந்தவாரு, ஒழுங்கற்ற கரும்பச்சை நைபுண்கள் காணப்படும்.
ஆ) இலைகள் சிறியதாகவும் இயல்பு நிலையைவிட மிக நேராகவும் இருக்கும்.
இ) இலைகள் குள்ளமாகவும் நெருக்கமாகவும் மரத்தின்மேல் கொத்துபோல் காட்சியளிக்கும்.
ஈ) ஆண் மலர்மொட்டில் உள்ள பூவடிச்சிற்றிலை

அ)திசுவளர்ப்பியல் மூலம் வைரஸ் அற்ற நடவுபொருளை பயன்படுத்தலாம்.
ஆ) அடிக்கடி சுற்றாய்வு செய்து பாதிக்கப்பட்ட  செடிகள் நீக்கவேண்டும்
இ) இந்நோய் பரப்பு உயிரிகளான, அகவுணி மற்றும் நாவாய் பூச்சிகளை அழிக்க வேண்டும்
ஈ) பாதிக்கப்பட்ட இடத்திலிருக்கும் மரத்திலிருந்து எந்த ஒரு பகுதியையும் ஆரோக்கியமான இடத்திற்கு எடுத்துச்செல்லகூடாது.
ஊ) எதிர்ப்புதிறன் உள்ள இரகங்களை சாகுபடி செய்யலாம்
எ) கலப்புபயிரில் மாற்று
ஊனூட்டி பயிரை வளர்க்ககூடாது.

2.

வாழை தேமல் நோய்

அ)இலை நரம்புகளை ஒட்டி கீற்றுகள் காணப்படும், பசுமை சோகையை உடையது. ஆனால் வாழை கீற்று வைரஸ் நோயுள்ளதுபோல் இவைகளின் இறந்த பகுதி தென்படாது.

அ)நோயுற்ற மரத்தை நீக்க வேண்டும். திசு வளர்ப்பில் உருவான செடிகளை நடுவதன் மூலம் நோயற்ற தோட்டத்தை பராமரிக்க முடியும்.

 

 

3.

வாழை பூவடிச் சிற்றிலைதேமல் நோய்

அ)இலை, இலைகாம்பு, இலை நடுநரம்பு மற்றும் போலித்தண்டுகளில் நூற்பு கதிர் வடிவுடைய இளஞ்சிவப்பு மற்றும் கீற்றுகள் காணப்படும்.

அ) திசு வளர்ப்பியலில் உருவான நோயற்ற கன்றுகளை உபயோகித்தல்

 

 

4.

வாழைகீற்று வைரஸ் நோய்

 

அ) எளிதில் வெளியில் தெரியாது. சோகைப் புள்ளிகள், சிறு உட்பரவும் இறந்த பகுதி, மஞ்சள், பழுப்பு மற்றும் கருப்பு கீற்றுகள் காணப்படும்.
ஆ) போலிதண்டின் அடியில் பிளவு மற்றும் உட்பகுதி தண்டில் இறந்த பகுதிகள் மற்றும் உருச்சிதைவு ஏற்பட்ட குலைகள் காணப்படும்.

 

அ) திசுவளர்பியலில் உருவான நோயற்ற கன்றுகளை உபயோகித்தல்

 

 

அறுவடை

அறுவடைக்குபின் தரத்தை நன்றாக வைத்துக்கொள்ள, வாழை தாரை முதிர்ச்சியிலேயே, அறுவடை செய்ய வேண்டும். காயை பறித்து பழுக்க வைத்தபின்னர், பழங்கள் திண்பதற்கு ஏதுவாகும்.
முதிர்ச்சிக்கான அறிகுறிகள்
இந்த அறிகுறிகள், பழத்திள் அளவு, திரட்சி நிலை, தரம் அல்லது இரண்டாவது சீப்பில் உள்ள நடு வாழை காயின் விட்டம்,  பழத்தின் மாவு அளவு மற்றும் பூத்தத்தில் இருந்து ஆகும் நாட்கள், ஆகியவற்றினை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. வாழைத்தார்கள் சற்றுமுதிர்ந்த நிலையிலோ அல்லது நன்றாக முதிர்ந்த நிலையிலோ, உள்ளுர் சந்தையின் விருப்பதிற்கேற்ப அறுவடை செய்யப்படும்.
வாழைத்தாரை வெட்டி எடுத்தல்
தாரின் மேலிருந்து, இரண்டாவது சீப்பிலுள்ள காய்கள் 3\4 பங்கு திரட்சிநிலை அடைந்தவுடன், கூர்மையான அரிவாள் கொண்டு, முதல் சீப்பிற்கு மேல், 30செ,மீ அளவில், கொன்னையை விட்டு வெட்ட வேண்டும். முதல் சீப்பு, விரிந்து 100-110 நாட்கள் வரை அறுவடையை காலம் தாழ்த்தலாம் அறுவடைக்குபின் குலைகளை வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கவேண்டும். ஏனென்றால் வெளிச்சம் பழுப்பதை வேகப்படுத்தும்.
உள்ளுர் உபயோகத்திற்கு, சீப்புகள் வெட்டாமல் தாரிலேயே விட்டுவிடலாம். ஏற்றுமதிக்கு 14-16காய்கள் உள்ள சீப்புகளாக வெட்டப்பட்டு, நீளம் மற்றும் சுற்றளவு அளவுகளால், தரம் பிரிக்கப்படுகிறது. இவ்வாறு தரநிலையால் பிரிக்கப்பட்டவை,  கவனமாக பாலித்தீன் உடைய பெட்டிகளில் சிப்பமிடப்படுகிறது.
அறுவடை பின் பணிகள்
கனிகளை, ஒன்று சேர்க்கும் இடத்தில், அடிபட்ட மற்றும் அதிக முதிர்ச்சி அடைந்த கனிகளை நீக்கிவிட்டு உள்ளுர் சந்தைகளுக்கு பழங்களை லாரியில் எடுத்து செல்ல வேண்டும். எனினும் தரமே முதன்மையாகக் கொண்ட ஏற்றுமதி சந்தைக்கு, சீப்புகளை தாரிலிருந்து பிரித்தெடுத்து அதன்மேல் உள்ள பாலை நீக்குவதற்கு, ஓடும் நீரிலோ அல்லது நீர்த்த சோடியம்ஹைப்போகுளோரைட் கரைசலில், கழுவி பின்னர் தயோபென்டசோலால், நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் காற்றில் உலர்த்தி, முன்பு கூறியவாறே காய்களின், அளவுகளைப் பொருத்து, தரம் பிரித்து, காற்றோட்டம் உள்ள பெட்டிகளில் சிப்பமிடவேண்டும். சிப்பமிடப்பட்ட கனிகளை 80/90 சதவீத ஈரப்பதம் மற்றும் 13 – 15 டிகிரி வெப்பத்தில் குளிர் ஊட்ட வேண்டும்.
இப்படி பதப்படுத்தி, கனிகளை சந்தைக்க தயார் செய்ய வேண்டும்.

மகசூல்

நட்டத்தில் இருந்து 11 - 12 மாதங்களில் தார் வெட்டுவதற்கு தயாராகும். முதல் மறுதாம்பு மரம், முதல் வெட்டிலிருந்து 8 - 10 மாதங்களிலும், அடுத்த மறுதாம்பு பயிர் இரண்டாம் வெட்டிலிருந்து, 8 - 9 மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

ஆகையால் 28-30 மாதங்களுக்குள், மூன்று முறை அறுவடை செய்யலாம். அதாவது ஒரு பிரதான பயிர் மற்றும் இரண்டு மறுதாம்பு பயிர்கள். சொட்டுநீர் பாசனம் மற்றும் நீர்வழி உரம் மூலம், திசுவளர்ப்பில் உருவான வாழையில் ஏக்கருக்கு 40 டன்கள் மகசூலை பெறலாம். மறுதாம்பு பயிரிலும், நல்ல பயிர் நிர்வாகத்தின் மூலம் மேலே கூறிய மகசூலைப் பெறலாம்.

தகவல்: ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ் லிமிடேட், ஜல்கான்வ்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate