பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தானியங்களின் உமியை அகற்றும் கருவி

தானியங்களின் உமியை அகற்றும் கருவி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சிறுதானியங்கள் நம் அன்றாட உணவில் ஏதோ ஒரு வகையில் இடம் பெறும் முக்கியமான தானியமாக இருந்தன. ஆனால் இன்று நகரத்தில் வாழும் பெரும்பாலான குழந்தைகளுக்கு சிறுதானியங்கள் என்றால் என்னவென்று அறியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இந்தியாவில் அதிக அளவில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டாலும் அறுவடைக்குபின் சிறந்த முறையில் பதப்படுத்த சீரிய இயந்திரங்கள் இன்றுவரை இல்லாத காரணத்தால் இதன் பயன்பாடும் வெகுவாக குறைந்து விட்டது. பொதுவாக தினை, சாமை, வரகு பனிவரகு, குதிரை வாலி போன்ற தானியங்கள் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இவற்றை கையாள்வது மிகவும் சிரமமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவ்வகைத் தானியங்களில் சுமார் 25-30 உமி இருப்பதால் அப்படியே உணவில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை உள்ளபடியால் சிறுதானியங்கள் நமது அன்றாட உணவு முறையில் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

வடிவமைப்பு

இதனை கருத்தில் கொண்டு கோயம்புத்துரில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் மண்டல ஆராய்ச்சி நிறுவனம் சிறுதானியங்களை உடைத்து உமி தவிட்டை முற்றிலுமாக அகற்றுவதற்க்கு புதியதொரு இயந்திரம் CIAEMillet மில்லை உருவாக்கியுள்ளது. இது தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி முதலிய தானியங்களை ஒரே இயந்திரத்தில் முதல் முறை செலுத்தும் போதே (சிங்கில் பேஸ்) 95 சதவிகித உமி தவிட்டை சுத்தமாக நீக்கும் திறன் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயன்கள்

  • மொத்த எடை 120 கிலோ கொண்ட சி.ஐ.ஏ.யி சிறுதானிய அரவை (CIAE-Millet)மில்லில் குறைந்த அளவு அதாவது 100 கிராம் முதல், ஒரு மணி நேரத்திற்கு 100 கிலோ வரை சிறந்த முறையில் உமி நீக்கம் செய்ய முடியும்.
  • மேலும் இதன் எளிமையான வடிவமைப்பும் வேலை செய்யும் திறனையும் கொண்டு உள்ளதால் வீட்டில் உள்ள பெண்கள் கூட இதை எளிதில் கையாள முடியும்.
  • இந்த இயந்திரம் வேலை செய்யும் போது அதிக ஒசை வராது. தூசு உமிகளினால் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க சைக்லோன் பிரிப்பான் பொருத்தப்பட்டுள்ளது.
  • ஒரு குதிரை திறன் கொண்ட மின்மோட்டாரில் இயங்கும் CIAE Millet மில்லை இயக்க சிங்கில்பேஸ் மின்சாரம் போதுமானது.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.10909090909
யோகானந்த் Aug 04, 2020 07:19 PM

அருமை

செந்தில் குமார் Apr 30, 2019 10:48 PM

விலை மற்றும் கிடைக்கும் இடம் ,

ச,சந்திரசேகரன் Nov 08, 2017 03:18 PM

இயற்கை வேளாண்மை பெரிதும் அழிந்து விட்டது
இயற்கை வேளாண்மை பராமரிப்போம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top