பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நில பண்படுத்துதலின் வகைகள்

நில பண்படுத்துதலின் வகைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

உழவு

உழவு என்பது மண்ணின் பெளதீக குணங்களை உழவுக் கருவிகள் மூலம் சாதுர்யமாக கையாண்டு விதை முளைப்பு நாற்று வளர்ப்பு மற்றும் பயிர் / தாவர வளர்ச்சி போன்றவற்றிற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல் ஆகும்.

  • காற்று பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
  • போதுமான விதை மண் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் விதை மற்றும் நாற்றின் வேருக்குத் தேவையான நீரினை அனுமதிக்கிறது.
  • இறுக்கம் இல்லாத மண்ணில் நாற்று முளைத்து வளர்வதற்கு வழிவகுக்கும்.
  • அடர்வு குறைவான மண், வேர் வளர்ச்சி மற்றும் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.
  • நாற்றிற்கு சூரியஒளி தரும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கும். (களைகளற்ற சூழ்நிலை)
  • பூச்சி மற்றும் நோய் கிருமிகளற்ற சூழ்நிலையை உருவாக்கும்.
  • இயற்கை எரு மற்றும் செயற்கை உரம் மண்ணுடன் கலப்பதற்கு உதவுகிறது.
  • மண் இறுக்கத்தை நீக்கி நீரை கிரகித்து மண் ஆழத்தை அதிகப்படுத்துகிறது.

நில பண்படுத்துதலின் வகைகள்

தேவையின் அடிப்படையில் உழவு இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

முதன்மை உழவின் வகைகள்

பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். அவை, ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்திர உழவு போன்றவை ஆகும்.

ஆழமான உழவு முறை

ஆழமான உழவு கோடையில் உழுவதால் உருவாகும் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் காய்கின்றன. இக்கட்டிகள் மாறிமாறி வரும் வெப்பம் மற்றும் குளிரினால் நொறுங்குகின்றன மற்றும் எப்பொழுதாவது வரும் கோடை மழையினால் நனைகின்றன. இவ்வகை சீரான மண் கட்டி சிதைவினால் மண் கட்டமைப்பு மேம்படுகிறது. பல்லாண்டு வாழ் களைகளின் உலகம் முழுவதும் பரவியுள்ள களைகளை அருகம்புல் மற்றும் சைப்ரஸ் ரோட்டுன்டஸ் கிழங்கு மற்றும் வேர்க் கிழங்குகள் சூரிய வெப்பத்திற்கு உட்படும் போது அழிகின்றன. கோடைக்கால ஆழமான உழவு, கூட்டுப்புழுக்களை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. துவரை (Pigeonpea) போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25-30 செ.மீ ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15-20 செ.மீ ஆழ உழவும் தேவை.

மேலும் ஆழமான உழவு, மண் ஈரப்பதத்தை உயர்த்தும். மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும்.

ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும்.

அடிமண் உழவு முறை

கடின மண் தட்டு, பயிரின் வேர் வளர்ச்சியை தடுக்கலாம். இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு அல்லது அலுமினியம் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுக்களாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால், மனிதனால் உருவாக்கப்படும் தட்டு உண்டாகிறது. கடினமண் தட்டினால், பயிரின் வேர் ஆழமாக வளர்வது தடுக்கப்படுவதினால், ஒரு சில செ.மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து காணப்படும்.

எடுத்துக்காட்டாக வண்டல் மண்ணில் கடின மண் அடுக்கு அற்ற நிலையில் 2 மீட்டர் ஆழம் வரை பருத்தி வேர் வளரும். கடின மண் அடுக்கு இருக்கும் போது 15-20 செ.மீ ஆழம் வரையே வளரும். இதே போன்று கரும்பில் செங்குத்து வேர் வளர்ச்சி கடின மண்ணினால் தடுக்கப்படுகிறது மற்றும் கிடையான வேர் வளர்ச்சி அதை ஈடுசெய்ய அடிமண் உழவு மேல் மண்ணை சிறு பாதிப்புடன், கலக்கச் செய்யலாம். கடின மண் கட்டிகளை உடைக்கும். அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும் பொழுது குறுகிய வெட்டுக்கள் மேற்பரப்பு மண்ணில் உண்டாகிறது. உளிக்கலப்பை கொண்டு உழும் பொழுது 60-70 செ.மீ அடியில் காணப்படும் கடின உடையும் அடிமண் உழவின் பலன் பல நாட்களுக்கு காணப்படும் அடிமண் சால்கள் மூடுவதைத் தடுக்க, செங்குத்து நிலப்போர்வை அமைக்கப்படுகிறது.

வருடாந்திர உழவு

வருடம் முழுவதும் நடைபெறும் உழவு / செயல்பாடுகளே வருடாந்திர உழவு ஆகும். மானாவாரி வேளாண்மையில் கோடை மழையின் உதவியுடனே, வயல் முன்னேற்பாடுகள் தொடங்கும். விதைக்கும் வரை மேலும் மேலும் உழவு செய்யப்படும். அறுவடை  முடிந்த பின்பு, பருவ நிலை அல்லாத காலங்களில் கூட தொடர்ந்து உழவு அல்லது கொத்துதல் / பலுதல், களை வளர்ச்சியை தடுப்பதற்கு செய்யப்படும்.

இரண்டாம் நிலை உழவு

முதன்மை நிலை உழவிற்கு பிறகு மண்ணில் செய்யப்படும் இலேசான அல்லது இளகுவான அனைத்துச் செயல்களும் இரண்டாம் நிலை உழவு என அழைக்கப்படுகிறது. உழவிற்கு பிறகு, வயல்வெளி பாதி பிடுங்கப்பட்ட தாள்கள் மற்றும் களைகளுடனான பெரிய மண் கட்டிகளைக் கொண்டு காணப்படும்.

கட்டிகளை உடைப்பதற்கு மற்றும் மீதமுள்ள களை மற்றும் தாள்களை பிடுங்கி களைவதற்கும் கட்டி உடைத்தல் / பலுதல் செய்யப்படுகிறது. இதற்கு சட்டிப்பலுகு, கொத்துக் கலப்பை, கத்தி பலுகு போன்றவை பயன்படுகிறது.

கடின கட்டிகளை உடைத்து மண் மேற்பரப்பை சீராக்கவும், ஓரளவு மண்ணை சமன்படுத்தவும், பரம்பு அடித்தல், பலகைக் கொண்டு சமன் செய்யப்படுகிறது. உழுதலைத் தொடர்ந்து, கட்டி உடைத்தல் மற்றும் பரம்பு அடித்தல் முடிந்த பின் வயல் விதைப்பதற்கு தயாராக இருக்கும். பொதுவாக விதைத்தலும் ஒரு வகை இரண்டாம் உழவிலேயே அடங்கும்.

நாற்றுப் படுக்கை வடிவமைத்தல் மற்றும் விதைத்தல்

நாற்றுப் படுக்கை தயார் செய்த பின், நீர்ப்பாய்ச்சல் மற்றும் விதைத்தல் அல்லது நாற்று நடுதலுக்கேற்ப வயல் வடிவமைக்கப்படுகிறது. இவ்வகை செயல்கள் பயிரினைப் பொருத்தது. கோதுமை, சோயாபீன், மொச்சை, கம்பு, நிலக்கடலை, ஆமணக்கு போன்ற பெரும்பாலான பயிர்களுக்கு சமமான விதைப் படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாம் நிலை உழவிற்கு பின் இவ்வகைப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன. எனவே மானாவாரியில் ஆழச்சால் அகலப்பாத்திகளை வடிவமைத்து பருவ காலம் தொடங்கு முன் விதைப்பு செய்யலாம்.

மக்காச்சோளம், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு வயலில் பாத்தி மற்றும் வரப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. கரும்பு, சால் அல்லது சிறு குழிகளில் பயிரிடப்படுகிறது. புகையிலை, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களுக்கு இடையேயும், வரிசைகளுக்கு இடையேயும் சமமான இடைவெளி கொண்டதாகப் பயிரிடப்படுகின்றன. இதனால் இரண்டு வழிகளில் ஊடு பயிர் செய்ய உதவுகிறது. வயல் முன்னேற்பாடுகள் முடிந்த பின் இரண்டு பக்கங்களிலும் நேர் கோடாக அடையாளமிடப்படுகின்றது. அக்கோடுகளின் வழிமறிப்புள்ளிகளில் பயிர்கள் நடப்படுகின்றன.

சாகுபடிக்கு பின் செய் நேர்த்தி

பயிர் வளர்ந்த பின் செய்யப்படும் அனைத்து உழவு செயல்களும் சாகுபடிக்கு பின் செய் நேர்த்தி ஆகும். அவை மேலுரமிடுதல், மண் அணைத்தல் மற்றும் ஊடுபயிரிடுதல் போன்றவை. நாட்டுக் கலப்பை அல்லது சால் கலப்பைக் கொண்டு மண் அணைத்தல் செய்வதின் மூலம் பயிரின் அடிப்பகுதியில் சால் அமைக்கப்படுகிறது. கரும்பில் இது பயிர் சாயாமல் இருக்கத் துணையாக இருக்கும். உருளைக்கிழங்கு போன்ற கிழங்குப்பயிரில் கிழங்கு வளர்ச்சிக்கு உதவும் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்ச வசதியாக அமையும்.

ஊடுபயிர் உற்பத்தியில் பயிர்களுக்கு இடையே உள்ள களைகளை களைவதற்கு கத்தி பலுகு, சுழற்சி பலுகு போன்றவை பயன்படுகின்றன. கரிசல் மண்ணில், ஊடுபயிர் இடுவதன் மூலம் மண் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top