பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நில பண்படுத்துதலி்ல் நவீன உத்திகள்

நில பண்படுத்துதலி்ல் மேற்கொள்ளப்படும் சில நவீன உத்திகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பழமையான உழவு முறை / தொன்று கால உழவு முறையில் அதிக சக்தி செலவிடப்படுகிறது. மேலும் மண் கட்டமைப்பு மாறுபட வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன மற்றும் பல்வேறு புதிய முறைகளான மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு, தாள் போர்வை உழவு (Stubble mulch tillage) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் உயர்ந்து வரும் (கச்சா) எண்ணெய் விலையினால், குறைந்த உழவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்சனைகளும் காரணம். தொடர்ந்து, அதிகமாக இயந்திரங்களை பயன்படுத்துவதினால் மண் கட்டமைப்பு பாதிப்பும், கடின மண் தட்டும் ஏற்படும் மற்றும் மண் அரிப்பிற்கு வழிவகுக்கிறது.

நடவு செய்யப்படும் பகுதி (சால் பகுதி) மற்றும் நீர் மேலாண்மை பகுதி (கால்களுக்கு இடைப்பட்ட பகுதி) களுக்கான தேவை மாறுபட்டது. நடவு செய்யப்படும் பகுதியில் உண்டாக்கப்படும் பண்பட்ட புழுதிக்கு உதவுகிறது. சால்களுக்கு இடைப்பட்ட பகுதியில், இரண்டாம் உழவு செய்யப்படுவது இல்லை மற்றும் கரடு முரடான மண் கட்டமைப்பு கொண்டதாக இருப்பதால் குறைவான களை வளர்ச்சிக் கொண்டதாகவும், அதிக நீர் வடிகால் கொண்டதாகவும் இருக்கும். உழவின் முதன்மை குறிக்கோள், களைகளை கட்டுப்படுத்துவதும் ஆகும். களைகளை, களைக்கொல்லி கொண்டும் கட்டுப்படுத்தலாம்.

மட்கு மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்ட மேல் மண்ணை புரட்டுவதே முக்கிய குறிக்கோளாக, உழவு கொண்டிருந்தது. ஆனால் நவீன வேளாண் முறையில் கால்நடை மற்றும் பசுந்தாள் உரத்தைப் பயன்படுத்துவது குறைந்து விட்டதால் மேல் கூறப்பட்டது முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

பொதுவாக தாவரக்கழிவுகள், மண் மேற்பரப்பில் பசுந்தாள் போர்வையாக இடுவதால் ஆவியாதல் மற்றும் மண் அரிப்பை கட்டுப்படுத்தும். ஆய்வின் அடிப்படையில், தொடர் உழவு பல தடவை தீமையாகவும், ஒரு சில சமயம் நன்மை பயக்கக்கூடியதாகவும் அமைகிறது. இத்தகைய காரணங்களினால் மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு மற்றும் பசுந்தாள் போர்வை இடுவது உழவு போன்ற புதிய முன்னேற்ற உழவு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மிகக் குறைந்த உழவு முறை

பழமையான உழவு முறையை விட குறைந்த உழவு முறையில் ஏற்படும் மண் இடர்பாடுகள் மிகக் குறைவே. குறைந்த உழவு முறையின் முக்கியக் குறிக்கோள், ஒரு நல்ல விதைப்படுக்கை, விரைவாக விதை முளைத்தல் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் போன்றவற்றை ஏற்படுத்தப் போதுமான குறைந்தபட்ச உழவே ஆகும்.

இரண்டு முறைகளில் உழவைக் குறைக்கலாம்

 • அதிகச் செலவு குறைந்த பயன் கொண்ட செயல்களை தவிர்த்தல்
 • வேளாண் வேலைகளை / செயல்களை ஒருங்கிணைத்து செய்தல்

குறைந்த உழவு முறையின் பயன்கள்

 • தாவர கழிவுகளின் மட்கு உரத்தினால் மண்வளமும், நன்மையும் கூடுகிறது. மேன்மை அடைகிறது.
 • அதிகத் தாவரங்கள் மற்றும் மக்கும் நிலையில் உள்ள தாவரங்களின் வேர்களினால் நீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது.
 • மேம்பட்ட மண் கட்டமைப்பினால் வேர் வளர்ச்சிக்கு தடை குறைவாகவே இருக்கும்.
 • கன உழவு இயந்திரங்களின் இயக்கம் இல்லாததினால் குறைவான மண் இறுக்கமே இருக்கும் மற்றும் பழமையான உழவு முறையை விட, மண் அரிப்பு குறைவாகவே இருக்கும்.

குறிப்பு

 • இவ்வகை நன்மைகள் பெரு மற்றம் குறு நயமிக்க மண் பதம் கொண்ட மண்ணில் இரண்டு முதல் சான்றாண்டுகள் மேல் குறைந்த உழவு முறையைக் கடைப்பிடிக்கும் போது ஏற்படும்.

குறைந்த உழவு முறையினால் ஏற்படும் தீமைகள்

 • குறைந்த உழவு முறையில் விதை முளைப்புத் திறன் குறைவாக இருக்கும்.
 • குறைந்த உழவு முறையில் மட்கும் திறன் குறைவாக காணப்படும்.
 • அவரை மற்றும் பட்டாணி போன்ற பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகள் பாதிக்கப்படுகின்றன.
 • வழக்கமான கருவிகளைக் கொண்டு விதைப்பு செய்வது கடினம்.
 • தொடர்ந்து களைக் கொல்லிகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது மற்றும் பல்லாண்டு வாழ் களைகள் அதிகம் வளருகின்றன.

குறைந்த உழவின் வெவ்வேறு முறைகள்

பயிர் வரிசை பகுதி உழவு

 1. வளைப் பலகைக் கலப்பைக் கொண்டு முதன்மை உழவு மட்டும் செய்து சட்டிக்கலப்பை உழவு மற்றும் கட்டி உடைத்தல் உழவு போன்ற இரண்டாம் உழவுகளை தவிர்த்தல். உழவானது பயிர் வரிசைப்பகுதியில் மட்டும் செய்யப்படுகிறது.

கலப்பை நடவு உழவு

மண்ணை உழுத பின், ஒரு தனித்துவமான விதைப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வரிசை பகுதி மட்டும் பண்படுத்தப்பட்டு விதைகள் விதைக்கப்படுகின்றன.

டிராக்டர் சக்கர பயிர் நடவு

வழக்கமான உழவு செய்யப்படுகிறது. விதைத்தலுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரின் சக்கரம் வரிசைப் பகுதியை பண்படுத்துகிறது.

பூஜ்ஜிய உழவு முறை

உழவற்ற நிலையையே பூஜ்ஜிய உழவு என அழைக்கப்படுகிறது. முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல், விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.

பூஜ்ஜிய உழவு முறையில் களைக் கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன், களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா பாராவோட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.

தாள் போர்வை உழவு

பழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவகாலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில், தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும். இதன் மூலம் மண் இளகுகிறது. தாவரக் கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

சுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின் போது, மண்ணை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. ஆழத்தை பொறுத்து, அடுத்து வரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக் கலப்பை (Disc Type) போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்குகிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.

தாள்போர்வை உழவில் விதைப்பதற்கான இரண்டு முறைகள்

ஒரு அகன்ற சுவீப் மற்றும் வெட்டுக்கத்திகள், பூஜ்ஜிய உழவில் உள்ளது போலவே பயிரிடப்படும் வரிசையை சுத்தம் செய்து, சீரமைக்கிறது. மேலும் குறுகிய நடவுக் கொழு, விதைத்தலுக்கு ஏற்றவாறு குறுகிய துளையை அமைக்க உதவுகிறது.

5 முதல் 10 செ.மீ அகலம் கொண்ட குறுகிய உளிக்கலப்பை 15 முதல் 30 செ.மீ ஆழம் வரை மண்ணில் உழுது தாவரக் கழிவுகளை மண் மேற்பரப்பிலிருந்து நீக்குகிறது.

உளிக்கலப்பை, கடின மண் மற்றும் மண் மேற்பரப்பை நன்றாக உடைத்து உழுகிறது. தாவரக் கழிவுகளுடனே நடவு செய்வதற்கு சிறப்பு நடவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.04347826087
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top