பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விதைப்பில் பயன்படும் கருவிகள்

விதைப்படுக்கை தயார் செய்யவும் விதைக்கவும் உதவும் கருவிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

விதைப்படுக்கை தயார் செய்ய உதவும் கருவிகள்

  • நாட்டுக்கலப்பை
  • சால் கலப்பை
  • பார் அமைக்கும் கருவி

நாட்டுக் கலப்பை மற்றும் சால் கலப்பை, வயலில் சால் மற்றும் பார் அமைக்க அல்லது பாசனத்திற்கு கால்வாய் வடிவமைக்கப் பயன்படுகின்றன.

ஒரு சட்டத்துடன் சால் கலப்பையை இணைத்து அகன்ற சால் படுக்கைகளை அமைக்கப் பயன்படுத்தலாம்.

பொதுவாக தோட்ட நிலத்தில் பாத்திகள் மண்வெட்டியைக் கொண்டு வேலையாட்கள் மூலம் அமைக்கப்படுகிறது. சரிவான நிலப்பகுதியில் குறுக்காக பாத்திகளை அமைத்து, மழை நீரை தடுத்து நிறுத்துவதன் மூலம் மண் ஈரப்பதத்தை அதிகப்படுத்தலாம். பார் அமைக்கும் கருவியில் ஒரு ஜோடி இரும்பு வளைப்பலகை எதிர்எதிராக இருக்கும் படியும் மற்றும் முன்பக்கம் அகன்றும், பின்பக்கம் குறுகியும் பார் அமைக்க ஏதுவாக இணைக்கப்பட்டுள்ளன.

அடையாளமிடும் கருவி மூலம், சதுர நடவு முறையில் வழிமாறிப் புள்ளிகளில் நாற்று நடவிற்கு அடையாளமிடப்படுகிறது. இக்கருவியில் ஒரு சட்டத்தில் 3 அல்லது 4 கட்டை (மர) சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சக்கரங்களுக்கு இடையேயான இடைவெளி பயிர் இடைவெளியை பொறுத்து மாறுபடும். இக்கருவியை இரு திசைகளில் ஒட்டும் போது மேலோட்டமான ஆழமில்லாத சிறிய சால்கள் இரு திசைகளிலும் அமைக்கப்படும். குறுக்கு வெட்டு புள்ளிகளில் நாற்று நடப்படுகிறது.

விதைப்பதற்கு பயன்படும் கருவிகள்

நாட்டுக்கலப்பை மூலம் வடிவமைக்கப்பட்ட சால்களில், விதைகள் கைகளின் மூலம் விதைக்கப்படுகின்றன. இவ்விதைகள், சால்களில் தொடர்பின்றி வெவ்வேறு ஆழத்தில் விழும் வாய்ப்புகள் உள்ளது. இப்பிரச்சனையை சரி செய்ய அக்காடி பயன்படுத்தப்படுகிறது. அக்காடி என்பது ஒரு முனை கூர்மையாகவும், மற்றொரு முனை அகன்றும் காணப்படும் ஒரு மூங்கிலினால் ஆன கருவி ஆகும். இந்த அக்காடி நாட்டுக் கலப்பையுடன் கட்டப்படுகிறது மற்றும் விதை அதன் அகன்ற முனையில் போடப்படும். அப்படி போடப்பட்ட விதையானது, மூங்கில் குழாய் வழியாக கீழிரங்கி, கலப்பை மூலம் உருவாகும் சால் பகுதியில் விழுகிறது.

விதைக்கும் கருவி / விதைப்பி

விதைக்குங்கருவியில் ஒரு மரச்சட்டத்தில் 3 முதல் 6 கொழு முனைகள் இணைக்கப்பட்டிருக்கும். இக்கொழுமுனைகள் விதைப்பதற்கு ஏற்றவாறு சால்களை அமைக்கின்றன. கொழுமுனைகளுக்கு அருகில் துளைகள் இருக்கும். இத்துளைகளில், மூங்கில அல்லது இரும்பாலான சிறு விதை குழாய்கள் இணைக்கப்பட்டிருக்கும். இச்சிறு விதைக் குழாய்கள் மேல் பகுதியில் ஒரு மரத்தாலான விதைக் கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். விதைக்குங்கருவிக்கு பின் நடந்து வரும், திறமை பெற்ற தொழிலாளி, ஒரே சீராக விதையை, விதைக் கலனுள் போட்டுக் கொண்டே வருவார்.

உரமிடும் மற்றும் விதைக்குங்கருவி

உரங்கள் பொதுவாக 5 செ.மீ ஆழத்தில் மற்றும் விதைக்கும் வரிசையிலிருந்து 5 செ.மீ தொலைவில் இடப்படும். உரமிடுதல் மற்றும் விதை ஊன்றுதல் இரண்டு செயல்களும் ஒரே நேரத்தில் உரமிடும் மற்றும் விதைக்குங்கருவி மூலம் செய்யப்படுகிறது. இக்கருவி அடிப்படையில் விதைக்குங்கருவியை ஒத்தது, இதில் உரத்திற்கு தனியாக கொழுமுனைகள் மற்றும் கலன் அமைந்திருக்கும்.

எந்திர விதைக்குங்கருவி

இவ்வகை எந்திர விதைக்குங்கருவியில் ஒரு விதைக்கலன் அடிப்பகுதியில் சிறு துளைகளுடன் காணப்படும். அத்துளைகளில் விதைக்குழாய்கள் விதைகள் செல்வதற்காக இணைக்கப்பட்டிருக்கும். ஒரு சுழலும் தன்மைக் கொண்ட, களைகளை உடைய தட்டு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். சுழலும் தட்டின் துளையும், கலனின் அடிப்பகுதியில் உள்ள துளையும் இணையும் போது, விதை, விதைக்குழாயின் வழியாக மண்ணை அடைகிறது. இரண்டு துளைகளுக்கு இடையேயுள்ள இடைவெளி தூரம், இரண்டு பயிர் வரிசைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மாற்றலாம். பயிர்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை சுழலும் தட்டுத் துளைகளை மாற்றுவதன் மூலம் மாற்றி அமைக்கலாம். பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டு தானியங்கி விதைக்குங்கருவிகளும் உள்ளன.

இடை உழவிற்க்கான கருவிகள்

  1. மரக்கலப்பை
  2. சிறிய கத்தி பலுகுக் கலப்பை
  3. களையெடுக்கும் கருவி - சுழலும் களையெடுக்கும் கருவி

நாட்டுக்கலப்பை மற்றும் சால் கலப்பை ஆகியவை கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு மண் அணைத்தலுக்கு பயன்படுகிறது. அகன்ற இடைவெளி கொண்ட பயிர்கள் மற்றும் பழமரங்களில் கிளைகளைக் கட்டுப்படுத்த மேலோட்டமான உழவிற்கு நாட்டுக்கலப்பை பயன்படுகிறது.

சிறிய அளவு கத்திப் பலுகு கலப்பை, ஊடு பயிர்களில் பெருமளவு பயன்படுகிறது. இக்கலப்பையை, சிலர் சிறப்பு தேவைகளுக்கு ஏற்ப, உள்ளூரில் மாற்றி உள்ளூர் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். இவை மிக எளிமையாக உருவாக்கக்கூடியதாகவும், குறைந்த விலையிலும் மற்றும் வேலைக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது. குறைந்த இடைவெளிக் கொண்ட பயிர்களின் இடை உழவுக்கு தந்தி பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தந்தி பயன்படுத்தப்படுகிறது. கலப்பையுடன் இணைக்கப்படும் தந்திகளைப் பொருத்து அதன் வேலை அகலம் அமையும். பில்லாகுண்டக்கா கத்தியின் நீளம் 30 முதல் 45 செ.மீ வரை இருக்கும். கத்தியின் நீளம் பயிர் இடைவெளி அளவைவிட 10 செ.மீ குறைவாக இருக்கும்.

புகையிலை கத்தி பலுகு, தூலத்தைவிட தந்தி நீளமானதாகக் கொண்டுள்ளது. அதனால் (எளிதில்) உடையும் தன்மை கொண்ட இலைக்காம்புகளை பாதிக்காமல், மண் மேற்பரப்பில் உள்ள களைகளை மட்டும் எடுப்பதற்கு பயன்படுகிறது.

நட்சத்திர வடிவிலான களை எடுக்கும் கருவி ஒரு வேலையாள் மூலம் இயக்கக்கூடிய ஒரு சிறிய கருவி. இக்கருவி நீண்ட செங்குத்தான மரத்தண்டு அல்லது இரும்புத் தண்டு மற்றும் சிறிய கிடைமட்டத் தண்டு (கருவியை இயக்க ஏற்றவாறு) கொண்டிருக்கும். மற்றொரு முனையில் இரு நட்சத்திர வடிவ சக்கரங்கள் மற்றும் ஒரு 10 செ.மீ அளவு ஒரு சிறிய கத்தி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். சுழலும் சக்கரத்தில் உள்ள கூர்மையான பற்கள் போன்ற அமைப்புகள் மண்ணை பண்படுத்தவும், களைகளை துண்டாக்கவும் மற்றும் நன்றாக கருவியை இயக்கவும் உதவுகிறது.

நிலக்கடலை, திணைப் போன்ற குறுகிய இடைவெளி கொண்டப் பயிர்களில் களைகளைக் கட்டுப்படுத்த இக்கருவி பயன்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.96551724138
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top