অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கேரட் மற்றும் உருளைக்கிழங்கில் நூற்புழு

கேரட் மற்றும் உருளைக்கிழங்கில் நூற்புழு

விதைப்புக்கு முன்பு நாற்றங்கால் பாத்திகளை பாலிதீன் தாள்களினால் சுமார் 15 நாட்கள் மூடிவைத்தல், நாற்றங்காலில் பியூரடான் குறுணை மருந்தினை சதுர மீட்டருக்கு 10 கி. விதம் இடுதல். நாற்றங்காலில் வேர் உட்பூசணத்தை ஒரு சதுர மீட்டருக்கு 100 கி. வீதம் இடுதல். விதை நேர்த்தி செய்தல் (உ-ம்) தக்காளி விதைகளை பாஸ்போமிடான் 0.1 சத கரைசலில் ஒரு மணி நேரம் வைத்திருந்து பின்பு விதைத்தல் நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட அதாவது வேர் முடிச்சு மற்றும் வேர் கீறல் உள்ள நாற்றுகளை நடாமல் தவிர்த்தல். நடவு விதைப்புக்கு முன்பு நடவு வயலை பூ உழவு செய்த பின்பு சுமார் 15 – 30 நாட்கள் சூரிய ஒளி படுமாறு தரிசாக வைத்திருத்தல் பாதிக்கப்பட்ட பயிர்களையும், களைகளையும் உடனுக்குடன் அப்புறப்படுத்துதல் நூற்புழுக்களுக்கு எதிர்ப்பு அல்லது தாங்கி வளரும் தன்மை கொண்ட இரகங்களைத் தேர்ந்தெடுத்தல் காய்கறிப் பயிர்களை அடுத்து தானியப் பயிர்களைப் பயிர்ச் சுழற்சி செய்தல்.

கேரட்

கேரட் பயிர் சாகுபடியில் முக்கியமாக விளைச்சலையும் மற்றும் தரத்தையும் குறைய வைப்பது வேர் முடிச்சு நூற்புழுவாகும். கேரட் பயிரைத் திரும்பத் திரும்ப அதே நிலத்திலேயே பயிர் செய்வதன் இப்புழுவின் எண்ணிக்கை நிலத்திலி பன்மடங்காகப் பெருகிக் கொண்டே வருகிறது. எனவே பயிர் சுழற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம். பட்டாணி, பீன்ஸ்,  பீட்ரூட், போன்ற பயிர்களை இந்த நிலத்தில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவையும் இப்புழுவினால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவை. அங்கக உரங்களை நிலத்தில் அதிகம் சேர்க்க வேண்டும். பயிர் விதைக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு நிலத்தில் ஆங்காங்கே மரக்கழிவு, எஞ்சிய பயிர் தாள்கள் வைத்து எரித்தலால் புழுக்களின் எண்ணிக்கையை மண்ணில் குறைக்க வாய்ப்புண்டு விதைகளை பாஸ்போமிடான் ஒரு மிலி. மருந்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து இந்தக் கரைசலில் விதைகளை 30 வினாடி வரை ஊறவைத்து பின்னர் நிழலில் உலர்த்தி விதைப்பதால் ஒரு மாதம் வரை  நூற்புழுக்கள் வேருக்குள் புகா வண்ணம் பயிரைப் பாதுகாக்கலாம்.

உருளைக்கிழங்கு

  1. உருனளக்கிழங்கு பயிரில் சேதம் விளைவிக்கும் நூற்புழுவை முட்டைக் கூழு நூற்புழு என அழைக்கிறோம். ஏனெனில் பெண் நூற்புழு தனது வாழ்நாள் கிழங்கு பயிரில் கழிந்ததும் உயிருடன் கூடிய முட்டைகளைத் தனது உடலிலேயே இருத்திக் கொண்டு, தனது புறத்தோலினை, வெளிப்புற தட்பவெட்ப நிலையினாலும், நிலத்தில் இடப்படும் மருந்து பொருள் உட்செல்ல வழி வகையில்லாமலும் கடினமாகிறது. இத்தகைய முட்டைக் கூடு, பயிரின் காலம் முடிந்ததும் பயிரிலிருந்து நிலத்தில் விழுந்து காலம் காலமாக பயிர் செய்யப்படும், பயிர் செய்யபோகும், உருளைக்கழங்கு  பயிரினைச் சேதமாக்கி விளைச்சலை மிகவும் பாதிக்கும். நீலகிரி மாவட்டத்தில் இப்புழுவினால் ஒவ்வொரு ஆண்டும் உருளைகிழங்கு விளைச்சல் 30 சதவீதம் பாதிப்புக்குளாகிறது.
  2. இந்த நூற்புழுவைக் கட்டுப்படுத்த இரசாயனக் கொல்லிகளாவன கார்போபியூரான், போரேட் போன்ற மருந்து உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குறுனணயை நடும் போது சாலில் இடுவதால் 30 நாட்கள் வரை நிலத்தில் பொறித்து வெளி வந்த நூற்புழுக்கள் செடியின் வேரை அடையாமல் பாதுகாக்கின்றன. இந்த முப்பது நாட்களுக்குப் பிறகு மருந்தின் வீரியம் மண்ணில் குறைவுபடும். மீண்டும் மண்ணிலிருந்து வரும் நூற்புழுக்களை செடியின் வேரை அடையா வண்ணம் பாதுகாக்க ஒருங்கிணைந்த நூற்புழுகட்டுபாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலமாக பயிர் நிலத்தில் உள்ள காலம் முழுமையும் நூற்புழுவினின்று பாதுக்கலாம்.
  3. அறுவடை முடிவில் நிலத்தை உழவு செய்தல், அங்கக உரங்களான மாட்டு எரு (எக்டருக்கு 25 டன்), கடலை அல்லது வேப்பம் பிண்ணாக்கு (எக்டருக்கு 1டன் ) போன்றவற்றை விதைப்புக்கு முன் இடுவதால் மண்ணிலுள்ள முட்டைகளை சூரிய வெப்பத்தினாலும், காற்றின் உலர்த்துதலாலும் மண்ணில் உற்பத்தியாகும் நூற்புழுக்களைத் தாக்கும் பூசணங்களான நிமட்டோப்தோரா, வெர்ட்டிசிலியம் பேசிலோ மைசிஸ் போன்றவற்றையும், முட்டைக் கூட்டை விழுங்கி உண்ணும் கொலோம்போலோ, சிலந்தி, என்கைடிரிட், சிம்பாலிட், சென்டிபீட் போன்ற உயிரினத்தையும் மண்ணில் மிகையாக்குவதன் மூலம் நூற்புழுவின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். நிலத்தில் உருளைக் கிழங்கு அல்லாமல் மற்ற மலைப் பயிர்களான முட்டைக்கோசு, பட்டாணி, முள்ளங்கி, வெள்ளைப் பூண்டு போன்றவற்றைச் சாகுபடி செய்வதால் நூற்புழு முட்டைகளின் எண்ணிக்கையை மண்ணில் ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீதம் வரை குறைக்கலாம்.
  4. அமிலத் தன்மை நிறைந்த நீலகிரி மாவட்ட மண்ணிற்கு டேலோமைட் ஒரு எக்டருக்கு 5 டன் என்ற விகிதத்தில் இடும்போது நிலத்தின் அமிலத்தன்மை குறைவடையும். அப்போது இளநிலை நூற்புழுக்கள் முட்டைக் கூட்டினின்று பொரித்து வெளிவருவது தடுக்கப்படும்.
  5. கடுகுப் பயிரை உருளைக் கிழங்கு பயிரிடப் போகும் முன்னர் ஒரு மாதம் வரை கீரை உபயோகத்திற்காக மட்டும் பயிரிடுதல் மூலமும் அல்லது இதை ஊடுபயிராக 3 வரிசைக்கு ஒரு வரிசை பயிரிடுவதன் மூலமும் மண்ணிலுள்ள நூற்புழுக்களை உருளைக்கிழங்கு வேருக்குச் செல்ல விடாமல் தடுத்து மண்ணிலேயே இருந்து மடியச் செய்யலாம்.
  6. உருளைக் கிழங்கில் நூற்புழுவிற்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ‘குப்ரி ஸ்வர்ணா’ மற்றும் ‘குப்ரி தென்மலை’ ஆகிய இரகங்களைப் பயிரிடுகையில் நூற்புழுக்கள் முட்டைக் கூட்டினின்று பொரித்து வெளிப்படுவது தடைப்பட்டு, நிலத்தில் நூற்புழுவின் எண்ணிக்கை குறைந்து போகும்.
  7. நூற்புழு உருளைக் கிழங்கு வேரிலுள்ள சாறுக் குழாய் கட்டுகளின் திசு அறைகளில் உணவைச் சேர்த்து வைத்து நன்றாக உறிஞ்சி வாழ்கின்றது. எனவே இடும் உரவிகித்தை 25 சதம் கூட்டி இடுகையில் சாறுக் குழாய் திசு  அறைக்குப் போக மீதம் உள்ளவை செடியின் வளர்ச்சிக்கு உதவும் இதனால் பயிர்களின் எண்ணிக்கையை நிலத்தில் குறைவு படாமல் பராமரிக்கலாம். வாடுகின்ற செடியின் அளவும் குறையும்.
  8. நூற்புழுவுக்கு எதிர்ப்புத் தன்மை கொண்ட குப்ரிசுவர்ணா இரகத்தைத் தேர்ந்தெடுத்தல் இலைக்கோசு, பூகோசு, முள்ளங்கி மற்றும் பூண்டுப் பயிர்களை உருளைக்கிழங்குடன் பயிர்ச்சுழற்சி செய்தல் எக்டர் ஒன்றுக்கு தொழு எரு 20 டன், எண்ணெய் எடுக்கப்பட்ட யூகலிப்டஸ் இலை தழைகள் 2.5 டன், பியூரடான் 3ஜி குறுணை மருந்து 33 கி.கி இடுதல்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate