பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

துவரை நீர் உறை நூற்ப்புழு

துவரையில் நீர் உறை நூற்ப்புழு தாக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாதல், வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் காய் பிடித்தல் மற்றும் பயிரின் வீரியம் குறைந்து காணப்படும். துவரை, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, சோயாபீன்ஸ், உளுந்து மற்றும் எள் போன்ற பல பயிர்கள் நூற்புழுவால் பாதிக்கப்படுகின்றன.

பயிரின் நாற்றுப்பருவத்தில், முத்து போன்ற (அ) எலுமிச்சை வடிவ வெள்ளைப் பெண் நூற்புழுக்கள் வேருடன் ஒட்டிக்கொண்டு இருக்கும்.

கட்டுப்பாடு

  • வெப்ப காலங்களில் கோடை உழவு செய்தல் வேண்டும்.
  • 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்தல் வேண்டும்.
  • விதைக்கும் போது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (அ) டிரைகோடெர்மா விரிடி @ 2.5 கிலோ/ எக்டர் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி  @ 5 + 5 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.86046511628
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top