பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / மல்லிகை-மின்னணு நுகரும் தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மல்லிகை-மின்னணு நுகரும் தொழில்நுட்பம்

மல்லிகை மலரின் நறுமணத்தை மதிப்பீடு செய்ய மின்னணு நுகரும் தொழில்நுட்பம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சாகுபடி முறைகள்

மல்லிகை மலரானது உலகிலுள்ள வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இந்த மலரானது இந்தியா, தாய்லாந்து , சைனா(சீனா), இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகிறது. மல்லிகை இனத்தில் 200-க்கு மேற்பட்ட வகைகள் காணப்பட்டாலும் ஜாஸ்மினம் சம்பக்(குண்டுமல்லி), ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்(முல்லை), ஜாஸ்மினம் கிராண்டி புளோரம்(பிச்சி), ஜாஸ்மினம் மல்டி புளோரம்(காக்கடா) போன்றவை வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது.

மல்லிகை மலரானது அதிகமான நறுமணத்தைக் கொண்டிருப்பதால், அவை கோயில்களிலும் தெய்வ வழிபாட்டிற்கும், பெண்களின் தலை அலங்காரத்திற்கும் பயன்படுகிறது, மற்றும் இந்த மலர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாசனை எண்ணெய்(Essential oil), வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகை மலரிலிருந்து எடுக்கப்படும் வாசனை மெழுகானது(concrete) சோப்பு, தின்பண்டம், ஒப்பனை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நவீன மயமாக்கப்பட்ட வேதியியல் மற்றும் கருவிகள் துறை ஆராய்ச்சியின் மூலம் இயற்கையில் உள்ள நறுமணக்கலவையை ஆராய்ச்சிக் கூடத்தில் செயற்கையாகத் தயாரிப்பதில் ஓரளவே வெற்றியடைந்துள்ளது. ஆனால் அந்த நறுமணத்தை செயற்கையாகப் பிரித்தெடுக்கவோ மற்றும் முழுமையாகப் பகுப்பாய்வு செய்ய முடிவதில்லை. மலர்களின் நறுமண சாற்றைப் பிரித்தெடுக்க பலவிதமான வழிமுறைகள் உள்ளன. இன்று வரை நறுமணத்தை திறமை வாய்ந்த நபர்கள் அகநிலை முறைப்படியே மதிப்பிடுகிறார்கள், இந்தப் பகுப்பாய்வானது பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் வண்ண அச்சு(Chromatography), நிறப்பிரிகை(Spectrography) போன்ற முறைகள் மூலம் கண்டறியப்படுகிறது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் மல்லிகை மலர் மற்றும் இதன் வாசனை மெழுகின் தரத்தை குறைந்த நேரத்தில் கண்டறியக்கூடிய ஒரு கருவி தேவைப்படுகிறது. அதே சமயத்தில், இக்கருவி எளிதில் கையாளக்கூடிய, எடுத்துச் செல்லக்கூடிய குறைந்த சக்தியால் இயங்கக் கூடிய மற்றும் களங்களில் பயன்படுத்தக்கூடிய அளவிலும் உள்ள சிறிய கையடக்கக் கருவிகள் இன்றைய காலகட்டத்தில் தேவைப்படுகின்றன.

இந்தக் கருவியானது, மலரின் நறுமணத்தை புறநிலையாக மதிப்பீடு செய்யக்கூடியதாகவும், எளிதில் ஆவியாகக்கூடிய நறுமணக்கலவைகளை உணரும் தன்மை கொண்டதாகவும் மற்றும் நறுமணத்தைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடன் கணிக்கத்தக்கதாகவும் இருத்தல் அவசியமாகிறது. மேற்கண்ட கருவிகள் உதவியால் இத்தொழில்நுட்பம் ஆய்வு கூடங்களிலிருந்து பெரிய தொழிற்சாலையில் பயன்படக்கூடிய அளவில் சாத்தியமாகிறது.

மின்னணு நுகரும் கருவி

மின்னணு நுகரும் கருவி (Electronic Nose) ஒரு தனித்தன்மை வாய்ந்த நரம்பியல் வலை அமைப்பு(Neural Network) அடிப்படையில் இயங்கும் ஒரு மென் கணினி தொழில்நுட்பமாகும். இது துல்லிய தொடர்பு மூலம் ஒத்திசைந்த நறுமண அச்சினை மல்டி சென்சார் அர்ரே மூலம் கணிக்கப்படுகிறது.

இதன் மென்பொருள் கட்டமைப்பானது போதுமான நெகிழ்வு மற்றும் வெளிப்படை தன்மை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மலரின் தேவை அதிகரித்து வருவதால் இத்தொழில்நுட்ப

மல்லிகை மலர்களை அதன் நறுமணத்தின் அடிப்படையில் தரவாரியாகப் பிரிப்பதற்கு இந்தக் கையடக்க மின்னணு நுகரும் கருவி(e-nose) பின்வரும் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது.மானது மலர்களை சேதப்படுத்தாமல், அதி விரைவில் மலரின் தரத்தை நிர்ணயிக்க்க்கூடியதாக அமைந்துள்ளது. இவை மலர்களின் பின்சார் அறுவடைத் தரத்தை பாதிக்காமல், அவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைகளில் ஏற்றுமதி செய்ய உதவுகிறது.

 • சிறிய கையடக்க சாதனம்
 • தொடுதிரை அடிப்படையில் பயனார் இடைமுகம்
 • ஒருங்கிணைந்த நறுமண விநியோக பிரிவு
 • தகவி, மின்கலம் மூலமாக இயங்கக் கூடியது.
 • நினைவக அட்டை தரகு சேமிப்பு
 • வரைகலைக்காட்சி

இதன் ஆய்வு முடிவுகளை கணினி உதவியுடன் ஆய்வு அறிக்கைக்க் கருவியின் மூலம் காணலாம்.

இந்த மின்னணு நுகரும் கருவி இரு முக்கியக் கூறுகளைக் கொண்டது.

 1. நுகரும் பிரிவு(Sniffing unit)
 2. தரவு செயலாக்கப் பிரிவு(Data Processing unit)

நுகரும் பிரிவானது உணர்ச்சி மற்றும் உணர்வு அலகுகளைக் கொண்டது. இந்த நுகர் பிரிவு, நறுமணத்தைக் கவர்ந்து அதனை விநியோக அமைப்பின் வழியாக உணரி வரிசை மற்றும் தரவு செயலாக்கப்பிரிவிற்கும் எடுத்துச்செல்கிறது.

முறையான சமிக்கை (Signal) சீரமைப்பு மற்றும் கையகப்படுத்திய தரவின் மூலம் செயல்முறைக்குள்ளாக்கப்பட்டு மின் நறுமணக் குறியீட்டை (Aroma Index)  வெளிக்காட்டுகிறது.

மெட்டல் ஆக்ஸைடு உணரியானது (Metal oxide Sensors – MOS) நறுமண ஆவிக்கலவைகளுடன் தொடர்பு கொள்ளும் போது, உணரியின் மேற்பரப்பினால் நறுமண ஆவிக்கலவைகள் கவரப்பட்டு, உணரியானது ஒரு இயற்பியல் மாற்றத்திற்கு உட்படுகிறது. நாம் எடுத்துக்கொண்ட மல்லிகை மலரின் மாதிரியிலிருந்து உற்பத்தியாகும் நறுமண ஆவிக்கலவைகள் ஹெட்ஸ்பேஸ் (Head space) என அழைக்கப்படுகிறது. காற்று புகா மாதிரி அறையினுள் (Sample Holder)  உண்டாகும் நிலையான காற்று அழுத்தத்தினால் நறுமண ஆவிக்கலவைகள் உற்

பத்தியாகின்றன. இந்த செயலானது நிலையான இயக்க நிலையில் நடைபெறுவதற்கு, உணரி வரிசையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல் அவசியமாகிறது.

இந்த செயல் முறையின் போது அடைப்பினால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் திறந்து வைக்கப்படுவதால் மாதிரிக்குடுவையினுள் உருவாகும் நறுமணக்கலவைகள் நிலையான காலம் மற்றம் நிலையான பாய்வு (fixed rate) வீதத்தில் உணரி அறையினுள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த முழுக் காலகட்டத்தில் உணரிகளில் ஏற்படும் மின் பண்புகளின் மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்து பதிவு செய்யப்படுகின்றன.

முழுமையான நுகரும் சுழற்சியின் பிரதிபலிப்பு

ஒவ்வொரு செயல் முறைக்குப் பின்னும்(மாதிரி காலம்- Sampling time) உணரியானது சுத்தமான காற்றினால் சுத்திகரிக்கப்பட்டு அதன் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டுள்ள கலவைகள் நீக்கப்படுகின்றன. இந்த செயல்முறையானது பர்ஜிங் (Purging) என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மின்னணு நுகரும் கருவி(e-nose) அதன் அடிப்படை மதிப்புக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த செயல்முறைக்குத் தயார்படுத்தப்படுகிறது.

இந்தக்கருவியின் பயன்பாடானது பின்வரும் முக்கியப்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.

கையடக்க மின்னணு நுகரும் கருவியின் வரைபடம்

 1. கருவி நிலைப்படுத்துதல்
 2. கருவியின் பயிற்சித்தரவுத் தளத்தின் அடிப்படையில் மலர்களின் திறப்பு குறியீட்டை மதிப்பீடு செய்தல்(flower opeing index)
 3. ஆவண பரிசோதனை முடிவு அறிக்கைகளைத் தயாரித்தல்

இந்த கருவியில் தகவல் பதிவு செய்வதற்கு திரை விசைப்பலகை (Virtual key board) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலை சேமிப்பதற்கும், மீட்பதற்கும் நினைவகத்தில் (memory) ஒரு எளிமையான மற்றும் தட்டையான கோப்பு(FAT flat file) அமைத்துள்ளது.

மின்னணு நுகரும் கருவி

கையடக்க மின்னணு நுகர்வு கருவியில் சுமார் 15 கிராம் அளவு கொண்ட மல்லிகை மலர் மாதிரிகளை பரிசோதனை செய்யலாம். இதன் மூலம் பரிசோதனை மாதிரிகளின் நறுமண குறியீடு குறிக்கப்படுகிறது. மின்னணு கையடக்கக் கருவியின் மூலம் மல்லிகை மலரின் நறுமணத்தை நிர்ணயிக்கும் வேதிப்பொருட்களைக் கண்டறியும் பொருட்டு ஆறு எரிவாயு உணரிகள்(MoS)] அடையாளம் காணப்பட்டு, அவற்றின் தேர்ந்தெடுக்கும் திறன் மற்றும் உணர்வுத்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டு கண்டறியப்பட்டுள்ளன. கையடக்கக் கருவியின் செயல்திறன், நினைவகம் (memory) மற்றும் மின் பற்றாக்குறை போன்றவற்றைக் கருத்தில், மிகச்சிறந்த ஆறு உணரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் TGS 823, TGS 826, TGS 832, TGS 2620 மற்றும் TGS 2602 வாசனை மெழுகினை பரிசோதிக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உணரியும் ஒரு குறிப்பிட்ட நறுமண குடும்பத்தைச் சேர்ந்த ஆவிக்கலவையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. நறுமண ஊக்கமானது தனிச்சிறப்பு பண்புடைய மாதிரி வகைகளை மண அச்சாக (smell print) சென்சார் தொகுப்பின் மேல் உருவாக்குகிறது. இந்த மண அச்சானது புள்ளியில் முறையில் வகைப்படுத்தப்பட்டு, உகந்த முறையில் அங்கீகார இயந்திரத்தினால், தீர்மானிக்கப்பட்டு, மலர் மாதிரிகளின் நறுமணமானது அளவிடப்படுகிறது. மல்லிகையின் ஒட்டுமொத்த நறுமணமானது பலவிதமான நறுமண ஆவிக்கலவைகள் கலந்ததாகும்.

ஆதாரம் : மலரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top