பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / வீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்

வீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

காய்கறிகளின் உற்பத்தியைப் பெருக்க வீரிய ரக காய்கறிப் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் கை கொடுக்கும். எனவே, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் அதிக மகசூலை விவசாயிகள் பெறலாம்

காய்கறிகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நீக்கவல்லது. வைட்டமின்கள், தாது உப்புகளை கொண்டதோடு, மருத்துவக் குணங்களையும் அளிக்க வல்லதாகும். ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு நாம் தினமும் 284 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டும். ஆனால் நாம் சராசரியாக 110 கிராம் அளவு காய்கறிகளையே உண்கிறோம். ஆகவே, அவற்றின் உற்பத்தியைப் பெருக்க உடனடியாக வழிகாண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வீரிய ரக காய்கறி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கத்தரிக்காய்

ஜூன்-ஜூலை மாதங்களில் யு.எஸ். 172 ரவையா ரக கத்தரிக்காயும், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் உஜாலா, மஹிமா ஆகிய ரகங்களும் விதைக்க ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு 200 கிராம் விதை போதுமானது. இதனால் ஒரு ஹெக்டேருக்கு 90-க்கு 60 செ.மீ. இடைவெளியில் 18,560 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு தொழு உரம் 25 டன் என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். மேலும், 440 கிலோ யூரியா, 900 கிலோ சூப்பர், 160 கிலோ பொட்டாஷ் ஆகிய அளவில் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். 150 நாள்களில் 25 ஆயிரம் கிலோ முதல் 35 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெற முடியும்.

வெண்டைக்காய்

ஜூன்-ஜூலை மாதங்களில் எம் 64, எம் 55 ஆகிய ரக வெண்டைக்காயும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நந்தினி ரகம், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சக்தி, ஒ.செ.016 ஆகிய ரக வெண்டைக்காய்கள் விதைக்க ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு 1.5 கிலோ விதை தேவைப்படும். இதனால் ஒரு ஹெக்டேருக்கு 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் 1,11,110 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு தொழு உரம் 40 டன் என்ற அளவில் இட வேண்டும். மேலும் 440 கிலோ யூரியா, 600 கிலோ சூப்பர், 160 கிலோ பொட்டாஷ் ஆகிய அளவில் உரங்களை பயன்படுத்த வேண்டும். 90 நாள்களில் 15 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெற முடியும்.

பாகற்காய்

ஜூன் - ஜூலை மாதங்களில் விவேக், பச்சை ஆகிய ரக பாகற்காயும், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நீளம், அபிஷேக் ஆகிய ரக பாகற்காயும் பயிரிட ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு 1.8 கிலோ விதை தேவைப்படும். இதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 180-க்கு 60 செ.மீ. இடைவெளியில் 9,259 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு தொழு உரம் 30 டன் என்ற அளவில் இட வேண்டும். மேலும் 440 கிலோ யூரியா, 625 கிலோ சூப்பர், 165 கிலோ பொட்டாஷ் ஆகிய அளவில் உரங்களை பயன்படுத்த வேண்டும். 115 முதல் 130 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெற முடியும்.

சுரைக்காய்

ஜூன் - ஜூலை, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் வரத் ஹைபிரிட் கெளரவ் பிரசாத், யு.எஸ். 12, 112 ஆகிய ரக சுரைக்காய் பயிரிட ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு 1.8 கிலோ விதை தேவைப்படும். இதனால், ஒரு ஹெக்டேருக்கு 180-க்கு 60 செ.மீ. இடைவெளியில் 9,259 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு தொழு உரம் 30 டன் என்ற அளவில் இட வேண்டும். மேலும் 440 கிலோ யூரியா, 625 கிலோ சூப்பர், 165 கிலோ பொட்டாஷ் ஆகிய அளவில் உரங்களை பயன்படுத்த வேண்டும். 115 முதல் 130 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கிலோ முதல் 45 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெற முடியும்.

பீர்கன்காய்

ஜூன் - ஜூலை, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் காவேரி, ராகினி, யு.எஸ். 6001 ஆகிய ரக பீர்க்கன்காய் பயிரிட ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு 1.8 கிலோ விதை தேவைப்படும். இதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 180-க்கு 60 செ.மீ. இடைவெளியில் 9,259 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு தொழு உரம் 30 டன் என்ற அளவில் இட வேண்டும். மேலும் 540 கிலோ யூரியா, 625 கிலோ சூப்பர், 165 கிலோ பொட்டாஷ் ஆகிய அளவில் உரங்களை பயன்படுத்த வேண்டும். 105 முதல் 120 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கிலோ முதல் 45 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெற முடியும்.


காய்கறிகள் சாகுபடியில் அதிக மகசூல் பெற முக்கிய தொழில்நுட்பங்கள்

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.10714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top