பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / காய்கறிப் பயிர்கள் / பழவகை காய்கறிகள் / முருங்கை / செடிமுருங்கையில் விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

செடிமுருங்கையில் விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள்

செடிமுருங்கையில் விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

செடிமுருங்கை பெரும்பாலும் விதை மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. தரமான விதைகள் மட்டும் 10 முதல் 12 சதவீதம் மகசூல் அதிகரிப்புக்குக் காரணமாகின்றன. நல்ல தரமான விதைகள் (சிறந்த மரபு, அதிக முளைப்புத்திறன், சிறந்த துாய்மை மற்றும் சிறந்த விதை குணம்) மட்டுமே உரம் போன்ற இடுபொருட்களுக்கு ஏற்றவாறு எதிர்பார்க்கக்கூடிய அளவில் மகசூலை அதிகரிக்கச் செய்யும்.

விவசாயிகள் பயன்படுத்தும் எளிமையான இடுபொருள் விதைகளே ஆகும். இது, மிகக் குறைவான உற்பத்திச் செலவிலான ஒரு அடிப்படை இடுபொருள் ஆகும். இருப்பினும் சிறந்த விதைகளின்றி, உரம், நீர், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இதர இடுபொருட்களுக்காகச் செய்யும் செலவினால் தக்க பலன் இல்லை. விதை உற்பத்தி எனப்படுவது, ஒரு இரகத்தின் மரபுக் குணங்களைப் பாதுகாக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பம் ஆகும். செடிமுருங்கையில் சிவப்பு நிறங்கலந்த தண்டு மற்றும் காய்கள், தாமதமாக வளரும் அடர்த்தியான இலைகள், குட்டை மற்றும் வளைந்த காய்கள் உடைய கலப்பினங்கள் தென்படுகின்றன. எனவே, செடிமுருங்கையில் மகசூலை அதிகரிக்கச் செய்யும் காரணியான தரமான விதைகளை உற்பத்தி செய்தல் இன்றியமையாததாகும்.

பருவம் மற்றும் மண்வகை

செடிமுருங்கை பல மண்வகைகளிலும் வளரும் பயிராகும். மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 80 வரையுடைய ஆழமான வண்டல் கலந்த மணல் வகை மண் மிகவும் ஏற்றது. கருவண்டல், வண்டல் அல்லது மணல்வகை மண்ணைவிட செம்மண்ணில் கன்றுகளின் தரம் சிறப்பாக இருக்கும். இது சமவெளியில் வளரும் ஒரு வெப்பமண்டலப் பயிராகும், இருப்பினும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளிலும் இது நன்றாக வளர்கிறது. வறண்ட சூழ்நிலையிலும் இது சிறந்து விளங்குகிறது. காற்றின் வெப்பநிலை 25 முதல் 35° செல்சியஸ் வரையிலும் தாங்கக் கூடியது. இப்பயிர் பனிமூட்டத்தைத் தாங்கக்கூடியதல்ல. மேலும் 40° செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலையில் பூ உதிர்தல் ஏற்படும்.

விதைப்புப் பருவம்

ஜுலை - அக்டோபர் பருவம் விதைப்பிற்கேற்றது. பூக்கும்பருவம் மழைக்காலத்துடன் இணைதல் கூடாது. பூக்கும்பருவத்தில் வறண்ட பருவம் ஏற்றது.

இடைவெளித் தேவை

விதை உற்பத்திக்குக் குறைந்தது 500 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டருக்கு 500 முதல் 600 கிராம் விதை தேவைப்படும்.

விதை நேர்த்தி

விதைகளை அசோஸ்பைரில்லம் 67 கிராம் 1 கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதால் செடிகளின் எடை அதிகரிப்பதாக கணிடறியப்பட்டுள்ளது.

நிலம் தயார் செய்தல் மற்றும் விதைத்தல்

25 முதல் 3 மீட்டர் இடைவெளியில் 45 x 45 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழமான குழிகள் தோண்டி, அவற்றுள் 15 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரம் இடவேண்டும். ஒரு மரத்திற்கு 100 - 200 - 50 கிராம் என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். தழைச்சத்தை 3 பகுதிகளாகப் பிரித்து இடுதல் அவசியம். விதைகளை ஒரு குழிக்கு 2-3 எண்ணிக்கையில் 2.5-3 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.

நாற்றாங்கால்

விதைகளை தயார் செய்யப்பட்ட வயலில் நேரடியாக விதைக்கலாம் அல்லது 15 செ.மீ. நீளம் 7 செ.மீ அகலம் உள்ள பாலித்தின் பைகளில் கன்றுகள் உற்பத்தி செய்து பிரதான வயலில் கன்றுகளை நடவு செய்யலாம். விதைத்த ஒரு மாத காலத்தில் கன்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும். இடைவெளிகளில் நடுவதற்காக 75 முதல் 100 கன்றுகளை கூடுதலாக உற்பத்தி செய்யவேண்டும்.

வயல் பராமரிப்பு

விதைத்த ஒரு மாதத்திற்குள் இடைவெளிகளை நிரப்ப வேண்டும். செடிகள் 1.5 மீட்டர் உயரமடைந்தவுடன், அதிக கிளைகள் வளரும்பொருட்டு நுனிகளைக் கிள்ளுதல் வேண்டும். பின்பு 2025 நாட்கள் இடைவெளியல் மீண்டும் இருமுறை நுனிக்கிள்ளுதல் வேண்டும். ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் தக்காளியை ஊடுபயிராகப் பயிரிடுவதால் களைகளைக் கட்டுப்படுத்துவதுடன் கூடுதல் வருமானமும் கிடைக்க ஏதுவாகும். அதிகக் காற்றுவேகம் மற்றும் அதிகக் காய்ப்பிடிப்பால் ஏற்படும் அதிக எடை ஆகியவற்றால் மரம் சாய்ந்து விடா வண்ணம் பாதுகாக்க மரங்களைச் சுற்றி 30-40 செ.மீ. உயரத்தில் மண் அணைக்க வேண்டும்.

நீர்ப்பாய்ச்சுதல்

மூன்று மாத காலம் வரை வாரத்திற்கொருமுறையும் பின்பு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். மண்ணில் அதிக ஈரம் இருந்தாலோ அல்லது அதிக வறட்சியாக இருந்தாலோ பூக்கள் உதிர்வடையும். எனவே மண்ணில் எப்பொழுதும் போதுமான அளவில் ஈரப்பதம் இருத்தல் சிறந்தது.

உரமிடல்

விதைத்து மூன்று மாதங்களுக்குப் பின்பு ஒரு மரத்திற்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிராம் பொட்டாஷ் ஆகிய உரங்கள் இடவேண்டும். மேலும் 100 கிராம் யூரியா உரத்தினை பூக்கும் பருவத்தில் அளிக்க வேணடும்.

இலைவழி உரமிடல்

செடிமுருங்கை ஐந்து அல்லது ஆறாவது மாதத்தில் பூக்கத் தொடங்கும். காய்கள் மற்றும் விதைகள் முதிர்ச்சியடைய மூன்று மாதங்கள் ஆகும். பூக்கும் பருவத்தில் பூ உதிர்வதைத் தடுக்க நீர்ப்பாய்ச்சுதலைக் கட்டுப்படுத்த வேண்டும். காய்கள் முதிர்வடையும்பொழுது மிதமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். பிளானோபிக்ஸ் (என்.ஏ.ஏ) என்ற வளர்ச்சி ஊக்கியை 20 பி.பி.எம். என்ற அளவிலும் ஒரு எக்டருக்கு யூரியா 2 கிலோ + சூப்பர் பாஸ்பேட் 4 கிலோ + நுண்ணூட்டச்சத்துக் கலவை 400 கிராம் என்ற அளவிலும் கலந்து 3-4 முறை 10 நாட்கள் இடைவெளியில் இடலாம்.

களை நிர்வாகம்

பவர் டில்லர் கொண்டு நிலத்தை உழுவதால் களைகளைக் கட்டுப்படுத்த இயலும்,

கலப்பு எடுத்தல்

ஆரம்ப வளர்ச்சிப்பருவத்தில் தண்டுப்பகுதியின் குணங்களின் அடிப்படையில் கலப்புச் செடிகளைப் பறித்துவிட்டு இடைவெளிகளை தகுந்த கன்றுகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். காய் முதிர்ச்சிப் பருவத்தில் காய்களின் குணங்களைக் கருத்தில் கொண்டு கலப்புகளைக் களைய வேண்டும். உதாரணமாக 70 செ.மீ நீளமுடைய உருளை வடிவக் காய்களை மட்டுமே பி.கே.எம். 1 இரகத்தில் அறுவடை செய்ய வேண்டும். முக்கோண வடிவமுடைய காய்களை ஒதுக்கிவிட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு

செடிமுருங்கையைத் தாக்கும் முக்கியமான பூச்சிகளாவன பழ ஈ, அசுவினி மற்றும் தத்துப்பூச்சிகள் ஆகும். இவற்றைக் கட்டுப்படுத்த காப்பரில் 0.2 சதம் தெளிக்க வேண்டும். வேரழுகல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு வேர்ப்பகுதியல் காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.2 சதக் கரைசலை தெளிக்க வேண்டும்.

முதிர்ச்சி மற்றும் அறுவடை

விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் செடிமுருங்கை விதைத்த 100 - 110 நாட்களில் பூத்து, 160 - 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யத் தயாராகும். அடுத்த நான்கு மாதங்கள் வரை காய்க்கும். விதைப்பதிலிருந்து விதை உற்பத்தி வரையிலான காலம் 210 முதல் 240 நாட்கள் ஆகும். பூக்க ஆரம்பித்த 70 நாட்களுக்குப்பின் அறுவடை செய்யப்படும் காய்களிலிருந்து கிடைக்கும் விதைகள் அதிக முளைப்புத் திறன் உடையவை ஆகும். காய்களின் அடிப்பகுதி மற்றும் நடுப்பகுதியிலும் உள்ள விதைகள் நுனிப்பகுதி விதைகளை விட தரத்தில் சிறந்தவை ஆகும். நுண்ணிழைக் கோடுகள் உருவாகும் தருணம் அறுவடைக்குத் தகுந்த அடையாளம் ஆகும்.

மறுதாம்புப் பயிர்

மூன்று ஆண்டுகள் வரை தரம் குறையாத மறுதாம்புப் பயிரை பராமரிக்க இயலும். (சிவசுப்பிரமணியன், 1996) இருப்பினும் விதைச்சான்று விதிகளின்படி சான்று விதை உற்பத்திக்கு முதல் மறுதாம்பு பயிரை மட்டுமே அறுவடை செய்யவேண்டும். உண்மைநிலை விதை உற்பத்திக்கு மூன்று அல்லது நான்கு மறுதாம்புப் பயிர்கள் வரை அனுமதிக்கலாம். மறுதாம்புப் பயிர் வளர்ச்சிக்கு முதிர்ந்த மரங்களை 90 செ.மீ. உயரத்தில் வெட்டிவிட்டு, பிரதானப் பயிர்ப் பராமரிப்பு முறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.

மகசூல்

செடிமுருங்கை, ஒராண்டில் ஒரு மரத்தில் 200 - 250 காய்கள் தரவல்லது. ஒரு காயில் 10 - 13 காய்கள் வரை இருக்கும். ஒராண்டில் ஒரு மரத்தில் 2000-3250 (600 கிராம் முதல் 1 கிலோ வரை) விதைகள் கிடைக்கும். அறுவடைக்குப் பின் ஒரு மாதத்திற்கு 25 கிலோ தொழுஉரம் இட்டு நீர்ப்பாய்ச்சி மறுதாம்புப் பயிர் செய்யலாம்.

பதப்படுத்துதல்

அறுவடை செய்யப்பட்ட காய்களை துரிய ஒளியில் 2 நாட்கள் உலர்த்தப்பட்டு, கைகளால் காய்களைப் பிளந்து விதைகளைப் பிரிக்க வேண்டும். விதைகள் பாதுகாப்பான ஈரப்பதமான 8-10 சதம் வரை உலர்த்தப்படவேண்டும்.

தரம்பிரித்தல்

24 / 64” வட்ட வடிவ துளை சல்லடையால் சிறிய, முதிர்ச்சியடையாத மற்றும் உடைந்த விதைகளைப் பிரிக்க வேண்டும். அதிக முளைப்புத் திறன் மற்றும் நாற்றுத்திடம் உடைய தரமான பறக்கும் இறக்கை கொண்ட விதைகளை துல்லிய எடைப்பிரிப்பானி (specific gravity Separator) கொண்டு பிரித்தெடுக்கலாம்.

விதைநேர்த்தி மற்றும் சேமித்தல்

பொதுவாக செடிமுருங்கை விதைகள் ஒராண்டு காலம் வரை முளைக்கும் திறனுடையவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் பூஞ்சாணக் கொல்லி சேர்த்து நேர்த்திசெய்யப்பட்ட விதைகளை 700 காஜ் தடிமனுள்ள பாலித்தின் பைகளில் அடைத்து நீண்ட காலம் சேமித்து வைக்க இயலும். முருங்கை விதைகளின் சமநிலை ஈரப்பதம் 10 சதவீதமாக இருக்கும்பொழுது, காற்றின் ஈரப்பதம் 75 சதமாகப் பராமரித்து சேமித்தால் அதிக முளைப்புத்திறன் பெற இயலும்.

விதைச்சான்று கூறுகள்

வயல் கூறுகள்

காரணி

அதிகபட்சம் (%)விதை

அனுமதிக்கப்பட்டது

(%) (சான்று விதை)

வேற்றினம்

0.1

0.2

விதைகள் மூலம் பரவக்கூடிய நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்ட செடிகள்

0.21

0.5

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

2.95495495495
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top