பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முருங்கையினால் சமுதாய பொருளாதார நிலை மாற்றம்

முருங்கை சாகுபடியினால் ஏற்படும் சமுதாய பொருளாதார நிலையின் மாற்றம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

முருங்கை பலவகைகளில் பயன்படுகிறது இதன் அனைத்து பாகங்களும் உணவு, எண்ணெய் மற்றும் மருந்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது. முருங்கை வேகமாக வளரக்கூடியது. வறட்சியை தாங்கக்கூடியதாகவும் மேலும் வேறுபட்ட சூழ்நிலையிலும், மாறுபட்ட விவசாய வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. இந்தியாவின் காய்கறி தொழிற்சாலைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்தியாவில் முக்கியமாக முருங்கை இலை மற்றும் காய்களில் இருந்து அதிக பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் இலைகளில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

இலைகளிலுள்ள சத்துக்களின் நிலை

100 கிராம் தளிர் இலைகளில் உள்ள சத்துக்களின் சதவிகித நிலைகள் கீழ்வருமாறு

 • ஈரப்பதம்(%) - 75.0
 • கலோரி - 92
 • புரோட்டின் (கிராம்) - 6.7
 • கொழுப்பு (கிராம்) - 1.7
 • கார்போஹைட்ரேட் - 13.4
 • நார்(கிராம்) - 0.9
 • தாது பொருட்கள்(கிராம்) - 2.3
 • கால்சியம் (மில்லிகிராம்) - 440
 • மக்னீசியம் (மில்லிகிராம்) - 24
 • பாஸ்பரஸ் (மில்லிகிராம்) - 70
 • பொட்டாசியம் (மில்லிகிராம்)- 259
 • காப்பர் (மில்லிகிராம்) - 1.1
 • இரும்பு (மில்லிகிராம்) - 7
 • கந்தகம் (மில்லிகிராம்) - 137
 • ஆக்ஸாலிக் அமிலம் (மில்லிகிராம்)- 101
 • வைட்டமின் ஏபி கரோமீன் (மிசி) - 6.8
 • வைட்டமின் பி கோலினர் (மிசி) - 423
 • வைட்டமின் பி தயமின் (மிசி) - 0.21
 • வைட்டமின் ரிப்னோடிளோஷன் (மிசி) 0.05
 • வைட்டமின் நிக்கோடினிக் அமிலம் (மிசி) 0.8
 • வைட்டமின் சி அஸ்கார்பிக் அமிலம் (மிசி)220
 • அர்சினின் (கிராம், 16 கி நைட்ரஜன்) 6.0
 • கிஸ்டிசின்' (கிராம், 16 கி நைட்ரஜன்) 2.1
 • லைசின்' (கிராம், 16 கி நைட்ரஜன்) 4.3
 • டிரிப்டோயாணி (கிராம், 16 கி நைட்ரஜன்) 1.9
 • ஃபினைல்லைனின் (கிராம், 16 கி நைட்ரஜன்) 6.4
 • மீத்தைனின் (கிராம், 16 கி நைட்ரஜன்) 2.0
 • கிரோனைனினர் 4.9
 • லியோசின் (கிராம், 16 கி நைட்ரஜன்) 9.3
 • ஐசோலிசின் (கிராம், 16 கி நைட்ரஜன்) 6.3
 • கூலின் (கிராம், 16 கி நைட்ரஜன்) 7.1
 • மற்றும் இலைகளில் ஹார்மோன்கள், நிரப்பிகள், ஆர்சிட்டிக் அமிலம், ஒலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளது.

முருங்கை கீரையின் பயன்கள்

இந்தியாவில் முருங்கை கீரை ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.

 • முருங்கை இலைகளில் இருந்து பெறப்படும் சாறு இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துகிறது மேலும் இரத்தில் உள்ள சர்க்கரை அளவினையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது,
 • இதனை தேனுடன் கலந்து அதனை தொடர்ந்து தேங்காய் பாலினை சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை ஒரு நாளில் பருகுவதால் வயிற்று போக்கினை கட்டுப்படுத்தலாம்.
 • இலைச்சாறுடன் காரட் சாற்றினை சேர்த்து குடிப்பதனால் சிறுநீர் போக்கினை துரிதப்படுத்துகிறது. இதன் இலைகளை உட்கொள்வதால் காய்ச்சல் மற்றும் காதுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தலாம்.
 • மேலும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது உடலின் இரத்த சோகையையும் குணப்படுத்துகிறது.
 • முருங்கை இலைகளை நிழலில் உலரவைத்து அதனை அழகு சாதன பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிள்றனர்.

தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளத்திலிருந்து பி.கே.எம் 1 மற்றும் பி.கே.எம் 2 என்ற இரண்டு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கிடையில் உள்ள சமுதாய - பொருளாதார நிலைகள் முருங்கை சிறுநில மற்றும் குறு நில விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு ஏற்ற பயிராகும்.

முருங்கை, குறைந்த நீர்வளம் மற்றும் விவசாய முறைகளை சரியான காலங்களில் கையாள முடியாத சூழ்நிலையிலும் அதனை எதிர்த்து தாங்க வளரக்கூடிய ஒரு பயிராகும். அறிவியல் ரீதியாக முருங்கை பயிரிடுவதன் மூலம் பொருளாதார நிலை சற்று உயரக்கூடும்.

சிறுநில விவசாயிகள் முருங்கை பயிரிடுதலின் முக்கியத்துவம்

 • முருங்கை குறைந்த அளவு நீர்ப்பசனம் உடையது.
 • வேலை ஆட்களின் தேவை குறைவு. குடும்பத்தில் உள்ளவர்களே முருங்கை பயிரினை பராமரித்துக் கொள்ளலாம்.
 • காரணம் சிறுநில விவசாயிகள் ஒரு ஹெக்டருக்கு குறைவான நிலத்தில் பயிரிடுகின்றனர். தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை உள்ளுர் சந்தைகளுக்கு கொண்டு செல்லுகின்றனர்.
 • கவாத்து செய்யப்பட்ட தண்டு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சிறு நில விவசாயிகளுக்கு அதிப்படியான பயனாகும்.
 • பெரிய விவசாயிகளும் முருங்கை பயிரிடுவதன் மூலம் அதிக லாபம் பெறலாம்

பெரிய அளவு உற்பத்தியில் லாபத்தினை அதிகரிப்பதற்கான உத்திகள்

 • சந்தைப்படுத்துதலுக்கு ஏற்ற அதிக மகசூல் தரக்கூடிய இரகத்தினை தேர்ந்தெடுத்தல்
 • சரியான பருவகாலத்தில் விதைத்தல் வேண்டும்
 • மறுதாம்பு பயிரினை ஊக்குவித்தல்
 • அறுவடை பின்செய் நேர்த்திகளை கையாளுதல்

பெரிய அளவு உற்பத்தியில் இடர்பாடுகளும், வரைமுறைகளும்

 • முருங்கை ஒரு heterozygours பயிராகும் மேலும் இயற்கையாக GrOSS polinated பயிராகும். எனவே இதில் மரபியல் துரிதநிலையை தொடர இயலாது.
 • விதைக்கும் பருவம் மிக முக்கியமானதாகும் (ஆகஸ்ட் - செப்டம்பர்)
 • நீர்ப்பாசனம் வெயில் காலநிலைகளிலும், குளிர்நிலைகளிலும் தேவையானது.

முருங்கை - விவசாயிகளின் விருப்பம்

முதன் முதலின் பி.கே.எம். முருங்கை அறிமுகப்படுத்தப்பட்ட போது மக்கள் அதனைப் பற்றி அறிந்து இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சந்தைகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரகங்களை அறிந்து கொள்வதிலும், பயன்படுத்தவதிலும் அதிக ஆர்வம் காட்டவில்லை. பின்பு தங்கள் சுற்றத்தார், உறவினர்கள் நிலத்தில் நல்ல விளைச்சல் தரும் முருங்கையைக் கண்டு வியந்து அதைத் தங்கள் நிலங்களிலும் நடத் தொடங்கினர். அந்த இரகம் தான் பி.கே.எம் -1. (ஒட்டு முருங்கை கலப்பினம்). இந்த முருங்கைக் குச்சிகளின் விலை நான்கு ஆண்டுகளுக்கு முன் 8-3 ஆக இருந்து இப்போது 8-25 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம் மற்றும் காவேரி டெல்டா விவசாயிகள் பி.கே.எம் முருங்கையை அதிகம் விரும்புகின்றனர். மேலும் ஆணடிப்பட்டி பகுதிகளில் விளையும் முருங்கைகளும் ஒட்டன்சத்திரம் சந்தைகளில் விற்பனை செய்யப்படும். விவசாயிகளில் கீரையை விடவும், முருங்கைக் காய்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

முருங்கைக் கீரைகள் அறுவடைக்கு ஆட்கள் அதிகம் தேவை. ஆனால் அதன் விற்பனை விலை குறைவு. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தடயம் இலைகளில் அதிகம். அதனால் சந்தைகளில் முருங்கை இலைகள் முக்கியத்துவம் பெறவில்லை.

வாடிக்கையாளர் விருப்பம்

எந்த ஒரு தொழில்நுட்பம் கையாலுதலிலும் வாடிக்கையாளர்களின் விருப்பம் முக்கியமானதாகும். மக்கள் மிதமான அளவுடைய முருங்கையையே விரும்புகின்றனர். ஏனெனில் நீளமான வகைகள் உபயோகப்படுத்துவதற்கும், போக்குவரத்துக்கும், இடையூறாக உள்ளது. முருங்கைக்காய்கள் கொஞ்சம் வளைந்துக் கொடுக்கும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். கடினமானதாக இருக்கக்கூடாது. இதனையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். வாடிக்கையாளர்கள் காயை கையில் எடுத்து நுனியை உடைத்து பார்த்து முறுக்கி பார்த்து வாங்குவர். அவ்வாறு செய்யும்போது அது உடையாமலும், அதனுடைய உண்மையான வடிவத்திலும் இருக்க வேண்டும்.

முருங்கைக் கீரையை பொறுத்தமட்டில் அது விற்பது சிரமமாகவே உள்ளது. அரைக்கீரையுடன் ஒப்பிடும்போது முருங்கைக் கீரை அந்தளவுக்கு விற்பனை ஆவது இல்லை. கிராமத்தில் உள்ளவர்கள் வீட்டில் உள்ள கீரையை உபயோகப்படுத்தி கொள்வர். அவர்கள் பக்கத்து வீட்டிலும், நணர்பர்கள், உறவினர்கள் வீட்டிலும் உள்ள மரத்திலிருந்து எடுத்துக் கொள்வர். அதிக காய்கள் இல்லாத மரத்தையே தெரிவு செய்வர். ஏனெனில் அதில் கசப்புத்தன்மை அதிகம் இருக்காது

பி.கே.எம் முருங்கை கீரை உபயோகத்தை அதிகப்படுத்த உத்திகள்

 • விதைகள் அனைத்து முன்னணி இடங்களிலும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
 • அறுவடைக்கும், கவாத்துக்கும், புதுப்புது இயந்திரங்கள் கொண்டு வர வேண்டும்.
 • இலைப்பொடீ செய்வதற்கும் முருங்கை உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.
 • விவசாயிகள் கூட்டமாக சேர்ந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யலாம்.
 • முருங்கைக் கீரையை உற்பத்தி செய்வதற்கும் கவாத்து செய்வதற்கும் நல்ல முறைகளை கொண்டு வர வேண்டும்.

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

2.9696969697
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top