பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / காய்கறிப் பயிர்கள் / பழவகை காய்கறிகள் / முருங்கை / முருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்

முருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வேர்களிலிருந்து மெத்தனாலினால் வடித்து எடுக்கப்பட்ட சாறில் காரகங்கள் (Alkaloid) உள்ளது என கண்டறியப்பட்டது. முருங்கை சாற்றின் ஆற்றலை (வாரத்திற்கு 35, 46 அல்லது 70 மி.கி/கிலோ) எலியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டில் செலுத்தி ஆராய்ந்தனர். அதிக அளவு சாற்றினை வாரமொரு முறை பருகினால் இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரித்தது. பிலிப்பைன் நாட்டில் மொரிங்கா ஒலெய்பெரா என்ற வகையிலிருந்து ஏழு வகையான வேதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன.

வேதிப்பொருட்கள்

  • (ஆல்பா-L-ராம்னோசைலோக்ஸில்) - பென்சைல் ஐசோதையோ சையனேட் நியாசிமைசின்,
  • நியாசிரிண்,
  • பீட்டா-சைட்டோஸ்டீரால்,
  • கிளிசரால்-1-(9- ஆக்டா டெக்கனோட்),
  • 3-0-(6-0-ஒலியோயில்-பீட்டா-D-குளுக்கோபைரானோஸில்) - பீட்டா ஸிட்டோஸ்டீரால் மற்றும் பீட்டா-சைட்டோஸ்டீரால்-
  • 3-0-பீட்டா-டி-குளுகோபைரனோசைட்

ஆகியவை ஆகும். இவற்றுள் நான்கினை கட்டிகள் (Tumour) உருவாகுதலை எதிர்க்கும் தன்மைக்காக ஆராய்ந்த போது, மூன்று வேதிப்பொருட்கள் ஆற்றலுடன் செயல்படுவது உறுதி செய்யப்பட்டன. நியாமைசின் என்ற வேதிப்பொருள் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதை எலிகளின் உயிரில் செலுத்தி உறுதி செய்துள்ளனர். மொரிங்கா ஒலெய்பெராவின் காய்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு மற்றும் பொடியானது நீர்க்கோப்பு, மூட்டு வலி மற்றும் கல்லீரல்-மண்ணீரல் குறைபாடுகளை நீக்கவும் பயன்படும் என எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வீக்கத்திற்கான மற்றும் எதிரான ஆற்றலை இதன் சாறு பெற்றுள்ளதையும் உறுதி செய்தனர். இந்தியாவில் உள்நாட்டுச் சந்தைகளிலிருந்து பெறப்பட்ட மொரிங்கா டெரிகோஸ்பெர்மா என்ற இரகத்தின் மரப்பட்டைச் சாறு கார்பண்டெட்ராகுளோரைடு மற்றம் ரிபாம்பிஸின் ஆகியவற்றிற்கு எதிரான விஷம் முறிக்கும் தன்மையை ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டது.

பாராசிடமால் மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகளையும் இதன் சாறு முறியடித்தது. அனைத்து சாறுகளையும் சேர்த்து ஆராய்ந்ததில் கஃபிக் மற்றும் ஃபுமாரிக் அமிலங்கள் முதன் முறையாக பிரித்து எடுக்கப்பட்டு அவையும் காலக்டோஸமைண் மற்றும் தையோ அசிடமைட் ஆகியவையின் விஷத் தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டது.

கற்றாழை இலைகள், ட்ரைடாக்ஸ் ப்ரோகும்பென்ஸ் இலைகள், வில்வம் மற்றும் முருங்கை மரங்களின் வேர் மற்றும் வேர் பட்டைகளின் புண்களை சாதாரணமாக ஆற்றும் தன்மையும், ஸ்டீராய்டு மூலம் புண்களை ஆற்றும் முறையும் ஆராயப்பட்டது. இதில் அனைத்து மூலிகைகளுக்கும் புண்களை ஆற்றும் தன்மையுண்டு எனவும் டெக்ஸாமெத்தாசோனின் எதிர்ப்புத் தன்மையையும் குறைக்கும் எனவும் கண்டறியப்பட்டது. இம்மூலிகைகள் லைசில் ஆக்ஸிடேஸ் இயக்கத்தினைத் தூண்டி புண்களை ஆற்றும் வல்லமை பெற்றுள்ளன.

இந்தியாவில் வதோதரா என்ற இடத்திலிருந்து கிடைக்கப்பட்ட மொரிங்காப்டெரிகோளப்பெர்மா -வின் வேரானது ஜீரண சக்தி ஊக்கி, வயிற்று உபாதைகள் போக்குதல், கருகளைப்பு தூண்டுதல், இருதய பலத்திற்கு ஊக்கியாகவும், பக்கவாதத்தை குறைக்கவும், கல்லீரல் நோய்கள் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கான மருந்தாக பயன்பட்டது. திருச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட மொரிங்கா ஒலெய்பெராவின் வேர்கள் மற்றும் பூக்களை பாரசிட்டமால் மருந்தின் விஷத்தன்மையை முறிக்கும் ஆற்றலை ஆராய்ந்து பயனுள்ள முடிவுகள் உறுதிபடுத்தப்பட்டன. எலியின் கல்லீரல் ஆற்றல் இதற்கு பயன்படுத்தப்பட்டது. ஈரலின் ஆற்றலை உடல் ஈரல் அளவீடு, ட்ரான்ஸ் அமினேஸ், அல்கலைன் பாஸ்பட்டேஸ் மற்றும் பிலிருபின் ஆகியவற்றை கொண்டு உறுதி செய்யப்பட்டது. வேர்கள் மற்றும் பூக்களின் எல்.டி. 50 அளவு, எத்தனால் சாறுக்கு 1023 மற்றும் 1047 மி.கி/கி ஆகவும், நீர் சாற்றிற்கு 1078 மற்றும் 1092 மி.கி/கி ஆகவும் இருந்தது.

மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுத்த மொரிங்கா ஒலிபெராவின் முதிர்ந்த பூக்களில் இருந்து எடுத்த சாற்றினில் டி-மானோஸ் மற்றும் டி-குளுக்கோஸ் அளவுகள் 1.5 என்ற அளவிலும், 2 கார்போஸைட்ரேட்களும், புரதச்சத்து மற்றும் அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாறாக இளம்பூக்களில் மேற்கூறிய பொருட்கள் வேறு பல அளவீடுகளிலும், டி-குளுக்கோஸ், டி-காலக்டோஸ் மற்றும் டி-குளுகுரோனிக் அமிலம் 10:109:09 என்ற மோலார் அளவீடுகளில் கணக்கிடப்பட்டது.

முருங்கையின் ஊட்டச்சத்து குணங்கள்

பச்சிளங் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்கும் தன்மையைக் கொண்டவை முருங்கை மரங்களாகும். ட்ரீஸ் பார் லைப் (Trees for life), சர்ச் வேர்ல்ட் சர்வீஸ் (Church world Service) மற்றும் எஜூகேஷனல் கன்சேர்ன்ஸ் பார் (Eductional concerns for Hunger organization) அமைப்புகள் முருங்கையை ‘சமவெளி பகுதிகளின் இயற்கையான ஊட்டச்சத்து’ என அறிவித்துள்ளன. இலைகளை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். காய வைத்து பொடியாக்கி பல மாதங்களுக்கு குளிர்பதனத்தில் வைக்காமலும், ஊட்டச்சத்து குறையாமல் பாதுகாக்கலாம். சமவெளி நிலங்களில் வறண்ட காலத்தின் இறுதியில் மற்ற அனைத்து மரங்களும் இலையுதிர்ந்து காணப்படும் நிலையில் முருங்கை மரம் முற்றிலும் இலைகளுடன் கூடிய ஒரு முக்கிய உணவாக திகழ்கின்றது.

அறிவியல் பூர்வமாகவும், மற்ற பிற முறையிலும் முருங்கையின் ஊட்டச்சத்தினைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முருங்கையின் ஊட்டச்சத்து மிகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் பஞ்சம் உள்ள நேரங்களில் அரியதொரு உணவாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவற்றை பற்றிய மருத்துவ ஆய்வுகளும் மிகவும் தெளிவான முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் இதற்கு கூடுதல் மதிப்பாகும். பசியில் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிறிய அளவு முருங்கை அளவுகளே போதுமானதாகும். பிற உணவுகளுடன் முருங்கை இலையை சேர்த்து உண்பது நன்கு ருசியுடன் உள்ளதென பல நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். மொரிங்கா ஒலிபெராவின் இலைகள் மிகவும் சத்துள்ளவையாகும். இவற்றை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது காயவைத்தோ உண்ணலாம். முருங்கை இலைகள் ஊட்டச்சத்தினை இழக்காமல் உள்ளதால் அவற்றை பொடியாக்கி பயன்படுத்தலாம். அதிகளவில் இலைகள் கிடைக்கும் இடங்களில் அவற்றை பொடியாக்கி சேமிக்கலாம். மற்ற பிற உணவுடன் சேர்த்து உண்ணக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்தது இலையாகும்.

ஊட்டச்சத்து திட்டத்தில் முருங்கை இலையின் பயன்பாடுகள்

1-3 வயதுள்ள ஒரு குழந்தைக்கு 100 கிராம் வேக வைத்த இலைகளைக் கொடுத்தால் அதன் ஒருநாள் தேவையான கால்சியம், 75 சதவீத இரும்புச் சத்து, 50 சதவீத புரதச் சத்து மற்றுமுள்ள முக்கிய கனிமங்களான பொட்டாசியம், வைட்டமின் பி, காப்பர் மற்றம் முக்கிய அமினோ அமிலங்கள் ஆகியவை கிட்டும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் ஒரு குழந்தைக்கு 20 கிராம் இலைகள் கொடுத்தால் போதுமானதாகும். தாய்மை அடைந்துள்ள மற்றும் பாலூட்டும் பெணிகளுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு இலைகள் மற்றும் காய்கள் மிகுந்த பங்கு வகிப்பதுடன் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கவும் வழி வகுக்கிறது. 100 கிராம் அளவுள்ள இலையானது ஒரு பெண்ணுக்கு மூன்றில் ஒரு பங்கு கால்சியம் மற்றும் முக்கிய சத்துக்களான இரும்புச்சத்து, புரதம், காப்பர், சல்பர் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் ஆகியன கிடைக்க வழிசெய்கிறது.

8 கிராம் அளவுள்ள இலைப்பொடியானது 14 சதவீதம் புரதச்சத்து, 40 சதவீதம் கால்சியம், 23 சதவீதம் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துக்களை 1-3 வயதுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்க வல்லது ஆகும். ஆறு தேக்கரண்டி அளவுள்ள இலைப்பொடி ஒரு நாளைக்கு ஒரு பெண்ணுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும். மனித உடலின் ஊட்டச்சத்து தேவைகளை முருங்கை கொடுக்கின்றது. அதனால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கால்நடைகளின் உடல் எடையை அதிகரித்து பால் உற்பத்தியைப் பெருக்கும், பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலை ஊக்குவிக்கும்.

வறணர்ட காலங்களில் மற்ற பயிர்களின் உணவு கிடைக்கப் பெறாத சமயத்தில் முருங்கை இலைகள் துளிர் விடுவதால், இது ஒரு அருமையான காய்கறி மற்றும் கீரையாகப் பயன்படுத்தலாம். இலைகள் சமைத்தோ அல்லது காயவைத்தோ உண்பதால் பல முக்கிய வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களைக் கொடுக்கிறது. மற்ற கீரைகளுக்கு இணையான ஊட்டச்சத்தினை முருங்கை பெற்றுள்ளது.

டான்சானியா நாட்டில் உள்ள 'ஆப்டிமா ஆப் ஆப்பிரிகா” என்ற நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கையின்படி, 25 கிராம் அளவுள்ள முருங்கை இலைப்பொடி கீழ்க்கண்ட சத்துக்களை ஒரு குழந்தைக்கு கொடுக்கிறது. புரதச்சத்து-42 சதவீதம், கால்சியம்-125 சதவீதம், மக்னிசியம்-61 சதவீதம், பொட்டாசியம்-41 சதவீதம், இரும்புச்சத்து-71 சதவீதம், வைட்டமின் ஏ-72 சதவீதம், வைட்டமின் சி-22 சதவீதம் மற்றும் முருங்கையில் 46 வயோதிகத்தைத் தாமதமாக்கும் பொருட்கள் உள்ளன. வயோதிகம் சம்பந்தமான அனைத்து நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் தொடர் வீக்கமாக இருக்கும். இந்த வீக்கத்தை சரி செய்து விட்டால் பின் வரும் உபாதைகள் தானாகவே குறைந்து விடும்.

முருங்கை இலையில் 8 முக்கிய அமினோ அமிலங்களும் மொத்தத்தில் 18 அமினோ அமிலங்களும் உள்ளன. முருங்கையில் ஒமேகா 3, ஒமேகா 6 மற்றும் ஒமேகா 9 ஆகிய எண்ணெய் சத்துக்கள் அடங்கியுள்ளன. தாவர இனங்களிலேயே அதிக அளவு குளோரோபில் சத்து, முருங்கை இனத்தில் தான் உள்ளது. குளோரோபில் உடலின் கார அமிலத் தன்மையை சம அளவில் வைத்திட உதவுகிறது. முருங்கையில் அசுத்தமான பொருட்கள் ஏதும் இல்லையென ஆய்வுகள் கூறுவதால் அதனை மற்ற மருத்துவப் பொருட்களுடன் எடுத்துக் கொள்ளலாம்.

முருங்கையை உணவில் சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் பயன்கள்

அதிக சக்தி, ஆழ்ந்த உறக்கம், சுருக்கங்கள் மறைவது, மிருதுவான மற்றும் பளபளக்கும் தோல், கொழுப்புச்சத்து மற்றும் ட்ரைக்ளிசரைட்ஸ் அளவு குறைதல், முடக்கு வாதத்தினால் வரக்கூடிய தசை மற்றும் மூட்டு வலிகள் அகலுதல், பசியெடுப்பது குறைதல், இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படுதல், மனத்தெளிவு பெறுதல், உடல் எடை குறைதல், எதிர்ப்புச் சக்தி கூடுதல், சைனஸ் போன்ற உபாதைகள் அகலுதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்குதல், முருங்கைப் பொடியின் மாத்திரைகளை உட்கொள்வதால் லூபஸ், ஆஸ்துமா, சர்க்கரை நோய், புற்று நோய் கட்டிகள், இரத்த சோகை மற்றும் எதிர்ப்புச்சக்தி குறைபாடுகள் போன்ற உபாதைகள் நீங்குவதாக இதனை உட்கொள்வோர் கூறுகின்றனர்.

விதைகளை வறுத்து உண்டால் வறு கடலை போன்ற சுவையைத் தரும். சில சமயங்களில் இலைகள் மற்றும் குச்சிகளும் தீவனங்களாக பயன்படும். முருங்கை இலைகளில் முழுவதுமாக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் ஏ

கணி நோய், தோல் நோய், இதய கோளாறுகள், பேதி மற்றும் பிற நோய்களைத் தடுக்க வல்லது.

வைட்டமின் சி

சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை எதிர்க்கும்.

கால்சியம்

வலுவான பற்கள் மற்றும் எலும்புகள் அமைக்க உதவுகிறது. எலும்பு முறிவு நோயை எதிர்க்கிறது.

பொட்டாசியம்

மூளை மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுகின்றது.

புரதச்சத்து

உடல் திசுக்களின் உருவாக்கத்தை அமைக்கிறது.

அட்டவணை 1. இலைகள் மற்றும் காய்களின் சத்துக்கள் (100 கி அளவில்)

எண்.

சத்துக்கள்

இலைகள்

காய்கள்

1

உண்ணக்கூடிய எடை (சதவீதம்)

75

83

2.

ஈரப்பதம் (சதவீதம்)

75

86.9

3.

புரதம் (கிராம்)

6.7

2.5

4.

கொழுப்பு (கி)

1.7

0.1

5

கார்போஹைட்ரேட் (கி)

13.4

3.7

6

மினரல் (கி)

2.3

2.0

7.

நார்ச்சத்து (கி)

0.9

4.8

8

கலோரிஸ்

92

26

9.

கால்சியம் (மி.கி)

440

30

10.

மக்னிசியம் (மி.கி)

24

24

11.

ஆக்ஸாலிக் அமிலம் (மி.கி)

101

101

12.

பாஸ்பரஸ் (மி.கி)

70

110

13.

பொட்டாசியம் (மி.கி)

259

259

14.

காப்பர் (மி.கி/கி)

1.1

3.1

15

இரும்பு (மி.கி)

7 5

.3

16.

சல்பர் (மி.கி)

137

137

17.

வைட்டமின் ஏ

11,300

184

18.

கோலின் (மி.கி)

423

423

19.

தையமின் (மி.கி)

0.06

0.05

20.

ரைபோப்ளேவின் (மி.கி)

0.05

0.07

21.

நிகோடினிக் அமிலம் (மி.கி)

0.8

0.2

22.

வைட்டமின் சி

220

120

முருங்கை இலைப்பொடி

ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நீக்கும் ஒரு முக்கியப் பயிராக முருங்கை செயல்படுகின்றது. ஊட்டச்சத்துக் குறைவான குழந்தை மற்ற முறைகளில் மேம்படுவதற்கு ஒரு மாதம் ஆகும் எனில் முருங்கை இலையை எடுத்துக் கொண்டால் 10 நாட்களிலேயே நல்ல வளர்ச்சி அடையலாம்.

அதிகமாக சாகுபடி செய்யப்பட்ட முருங்கை நேரடியாக விதையின் மூலமோ, நாற்றங்கால் ஏற்படுத்தி நெருக்க நடவு முறைகளில், வளமையான தோட்டக்கால் மணல்களில் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் சிறிய பரப்பளவில் அதிகமான இலைகள் கிடைக்க வழி வகுக்கின்றது.

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top