பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முருங்கையில் அறுவடைக்குப்பின்னர் தொழில்நுட்பங்கள்

முருங்கையில் அறுவடைக்குப்பின்னர் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறுவடை

முருங்கை மரம் கூட்டிலைகளைக் கொண்டது. ஒரு இலை எனப்படுவது பல சிற்றிலைகளைக் கொண்டது. கிளைகளிலிருந்து உருவாகும் தண்டுடன் இணைக்கப்பட்ட நடுக்காம்பு பல சிற்றிலைகளை உள்ளடக்கிய பகுதியே இலை எனப்படுகிறது.

முருங்கை இலைகள் மற்றும் தண்டுப்பகுதியை அரிவாள் அல்லது கூர்முனைக் கத்தியைக் கொண்டு அறுவடை செய்ய வேண்டும். கிளைகள் போதுமான உயரத்தில் (அதாவது 30 செ.மீ முதல் 10 மீட்டர் உயரம் வரை) வெட்டப்படவேண்டும். பெருமளவில் இலை உற்பத்தி செய்யும்பட்சத்தில் அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்தலாம்.

மரங்களிலிருந்து இலைகளை கைகளால் நேரடியாக பறித்தும் அறுவடை செய்யலாம். இலைக்காம்பின் அடியில் அவற்றை எளிதில் ஒடிக்க முடியும். இது, அறுவடைக்கு எளிதாக இருந்தாலும், கத்தி மூலம் செய்யப்படும் கவாத்தால் ஏற்படும் பலனை இழப்பதால், மீண்டும் கிளைகள் உருவாதல் குறைவாகவே இருக்கும்.

அறுவடையைச் சுத்தமான முறையில் கையாள வேணடும். இளம்காலைப் பொழுது அல்லது பின்மாலைப் பொழுது ஆகிய குளிர்ந்த நேரத்தில் அறுவடை செய்தல் அவசியம். முக்கியமாக போக்குவரத்தின்போது அழுகல் ஏற்படுவதைத் தடுக்க அறுவடைக்கு முன்பு பணி கொட்டவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்.

பசுங்காய்களை அறுவடை செய்தல்

முருங்கை மரம், சுமார் ஒரு வருடத்தில் காய்க்கத் தொடங்கும். முதல் இரண்டு வருடங்களில் பொதுவாக குறைந்த மகசூல் (80-90 காய்கள்) தான் கிடைக்கும். இது படிப்படியாக அதிகரித்து, நான்காம், ஐந்தாம் வருடத்தில் 500-600 காய்கள் என்ற அளவில் கிடைக்கும். காய்கள் முக்கியமாக மார்ச் முதல் ஜுன் மாதம் வரை அறுவடை செய்யப்படுகின்றன. இரண்டாம் அறுவடை பொதுவாக செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நிகழும்.

செடிமுருங்கை வகைகள் பொதுவாக பருவம் சார்ந்து காய்க்கக் கூடியவை. செப்டம்பர் மாதத்தில் விதைக்கப்பட்ட பயிர், ஆறு மாதங்களில் காய்க்கத் துவங்கும். போதுமான நீளம் மற்றும் திடமுடைய காய்கள் நார்கள் உருவாகும் முன்பே அறுவடை செய்யப்பட வேண்டும். இரண்டு முதல் மூன்று மாத காலம் வரை அறுவடை செய்யப்பட்டு, ஒவ்வொரு மரத்திலிருந்தும் 250-400 காய்கள் கிடைக்கின்றன.

காய்கள் இளமையாகவும், மென்மையாகவும் பசுமையாகவும் இருக்கும்பொழுது அறுவடை செய்யப்பட வேண்டும். முதிர்ந்த காய்கள் கணிவதற்கு முன்புவரை நார்களுடன் கூடிய கடினமான மேலுரைகளுடன் இருப்பினும் அவற்றின் சதையும் இளம் விதைகளும் உண்பதற்கு ஏற்றவையாகவே இருக்கும். இளம் விதைகளை பட்டாணியைப் போன்று சமைப்பதற்குப் பயன்படுத்தலாம். இளம் பூக்கள் அல்லது காய்ந்த பூக்களை தேநீர் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.

விதைகளை அறுவடை செய்தல்

விதைப் பண்ணைகளில் காய்கள் முதிர்ச்சியடைந்தவுடன் அதாவது பழுப்பு நிறமாக மாறி, காய்ந்தவுடன் அறுவடை செய்யப்படவேண்டும். காய்களை எளிதில் உடைக்க இயலும், விதைகளைப் பிரித்து, பைகளில் கட்டி உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். முருங்கை மரக் கிளைகள் எளிதில் உடையக் கூடியவையாதலால், மரத்தின் மீது ஏறி அறுவடை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ப்படுத்தும் முறைகள்

இலைகளை பெனிலேட் 500 பிபி.எம். மருந்துக் கரைசலில் கழுவி, பின்பு சேமிக்க வேண்டும். இதனை நீரால் குளிர்வித்து, குளிர்ப்பதன முறையில் சேமிக்க வேண்டும்.

அடுக்குதலும் சேமித்தலும்

போக்குவரத்திற்காக முருங்கைக் காய்களை அடுக்கும் முறை குறித்த ஒரு ஆய்வு(1999) மேற்கொள்ளப்பட்டது. காய்ந்த புற்களை இடைச்செருகல் பொருளாகக் கொண்ட மரப்பெட்டிகளில் அடுக்கப்பட்ட காய்களில், 12 நாட்களுக்குப் பின்பு 7794 சதம் எடைக் குறைவு ஏற்பட்டது. ஆனால் பாலித்தின் பைகளிலும், தென்னை நார்க்கழிவை இடைச்செருகியாக உபயோகித்த காகித அட்டைப் பெட்டிகளிலும் மிகக்குறைந்த எடைக்குறைவு (272 சதம்) ஏற்பட்டது. பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட காய்களில் மிக அதிகமான கரோட்டின் (182.02 மி.கி. / 100 கிராம்) மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (128.17 மி.கி.,100 கிராம்) ஆகியன கிடைத்தன.

பொருள்

அடைப்பான்

குளிர்விப்பான்

வாழ்நாள்

முருங்கை பி.கே.எம். 1

பாலியுரித்தின்

மேம்படுத்தப்பட்ட நீராவி குளிர்விப்பான்

15 நாட்கள்

ஜப்னா முருங்கை

பாலியுரித்தின்

மேம்படுத்தப்பட்ட நீராவி குளிர்விப்பான்

14 நாட்கள்

கொடிக்கால் முருங்கை

பாலியுரித்தின்

மேம்படுத்தப்பட்ட நீராவி குளிர்விப்பான்

11 நாட்கள்

 

முருங்கை விதை உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல்

பூத்தபின் 20 நாட்கள் கழித்து அறுவடை செய்யப்பட்ட பழுப்பு நிறக் காய்களில் நடுப்பகுதி மற்றும் அடிப்பகுதியில் பெறப்பட்ட விதைகள் நுனிப்பகுதி விதைகளை விட தரத்தில் சிறந்தவையாக விளங்குகின்றன. கருமை மற்றும் பழுப்பு நிற விதைகள், வெந்நிற விதைகளை விட குணங்கள் உடைய நாற்றுக்களைத் தருவனவாகவும் அதிக முளைப்புத்திறன் உள்ளவையாகவும் இருக்கின்றன. அறுவடை செய்யப்பட்ட காய்கள் போதுமான காற்றுவெளியில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு உலர்த்தப்படவேண்டும். காய்களை உடைத்து தரமான விதைகளை மட்டும் தெரிவு செய்து கொள்ள வேண்டும். விதைகளை எடைகளை முன்னிட்டு, தரம்பிரிக்க வேண்டும். 625 கிராம் விதைக்கு 100 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்வதால் அதிக எடை மற்றும் திடம் உடைய நாற்றுக்களைப் பெற இயலும், விதை சேமித்தலுக்கு உகந்த வெப்பநிலை 20 - 250 செல்சியஸ் ஆகும். விதை ஆய்வு செய்வதற்கு, மணலில் 1 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைக்கும் பொழுது 80 சதவீத ஈரத்தன்மையைத் தக்கவைத்துக் கொண்டால் அவை தரமான விதையாகக் கருதப்படும்.

செடிமுருங்கை விதைகளை 8 சதம் ஈரப்பதம் வரை காய வைத்து கேப்டான் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து 700 காஜ் பாலித்தின் பைகளில் அடைத்து வைத்தால், அவற்றை 12 மாதங்கள் வரை சேமிக்க இயலும். கருமையான மற்றும் பழுப்பு நிறமுடைய விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பண்டாசிம் பூஞ்சாணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்து 700 காஜ் பாலித்தின் பைகளில் சேமிக்கும்பொழுது, 12 மாதங்கள் வரை 84 சதவீதம் முளைப்புத்திறன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது

மதிப்பூட்டப்பட்டு பதப்படுத்துதல்

மதிப்பூட்டலின் பலன்கள்

 • அறுவடை செய்யப்பட்ட பொருட்கள் வீணாவதைத் தடுத்தல்
 • அறுவடை செய்யப்பட்ட பொருட்களின் வாழ்நாட்களை அதிகரித்தல்
 • சுயவேலை வாய்ப்பு
 • நுகர்வோருக்குத் தேவையான மற்றும் உபயோகத்திற்கு உகந்த வடிவில் பொருள் கிடைத்தல்
 • பொருள் ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலாவணியைக் கூட்டுதல்

முருங்கை உற்பத்தி அதிகரிக்கும்பொழுது, பல்வேறு மதிப்பூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்கலாம். அவையாவன : முருங்கை ஊறுகாய், உலர்த்தப்பட்ட முருங்கை, முருங்கை இலைப்பொடி மற்றும் முருங்கைக்காய் சதைப்பொடி ஆகியனவாகும். உகந்த சந்தை இருப்பின், முருங்கையிலை மற்றும் பூக்களின் துணை உணவுப் பொருள் தயாரிக்கவும் தேநீர் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். இறக்குமதி செய்யப்பட்ட ஆலிவ் எண்ணெய்க்கும், மாற்றாக முருங்கை எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். முருங்கை விதை எண்ணெயிலிருந்து கூடுதல் வாழ்நாள் மற்றும் ஆவியாகக் கூடிய வாசனைப் பொருட்களைத் தக்கவைத்தல் ஆகிய காரணங்களால் இது ஒரு சிறந்த வாசனைத் திரவியமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே மல்லிகை எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய் ஆகியவற்றுடன் முருங்கை எண்ணெய் கலந்து உபயோகிக்கப்படுகிறது.

இளம் முருங்கைக் காய் மற்றும் இலைகள் அறுவடை செய்யப்பட்ட அன்றே அல்லது ஒரிரு நாட்களுக்குள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இலைகள் எளிதில் வாடுவதாலும் உதிர்ந்து விடுவதாலும் இவற்றைத் தடுப்பதற்கு, குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள பகுதியில் சேமித்து வைக்க வேண்டும். இதனை பாலித்தின் பைகளில் அடைத்து 100 செல்சியஸ் வெப்பநிலையில் பதனப்படுத்த வேண்டும்.

இலைகள் மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி, காயவைத்து பொடி செய்து, உணவுப்பதார்த்தங்களுடன் சேர்த்து புரதச்சத்தை அதிகரிக்கப்பயன்படுத்தலாம். இவற்றைத் தேநீர் தயாரிக்கவும் உபயோகிக்கலாம். உழவர் சந்தைகள் மற்றும் நலமான உணவுக்கடைகளில் விற்பனை செய்ய ஏதுவாக பல மதிப்பூட்டப்பட்ட உள்ளுர்ப் பொருட்களைத் தயாரித்திடல் வேண்டும்.

இலைகளை அறுவடை செய்தல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல்

 1. சிற்றிலைகளை கிளைகளின்று நீக்குதல்
 2. சிற்றிலைகளை சந்தைக்கு அனுப்புதற்காக அடுக்குதல்

சந்தைக்கு அனுப்புதல்

நுகர்வோருக்கு தரமான முருங்கை கீரை வழங்கிட வேண்டுமெனில் அவற்றை அனுப்பும்போது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

இருவழிகள்

 1. இலைகளைக் கொய்யாமல் முழுக் கிளைகளாக வெட்டி, அவ்வாறே பதப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைத்தல்
 2. கிளைகளிலிருந்து இலைகளைக் கொய்து பதப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைத்தல்

கீரையை சிறு கொத்துக்களாக அடுக்கி, வெப்பம் உருவாவதைத் தடுக்கும் பொருட்டு பரப்பி வைக்க வேண்டும். அறுவடை செய்தபின் அவற்றை உடனடியாக பதப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். முருங்கைக் கீரையை அனுப்பும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அவற்றைத் திறந்த வாகனங்களில் அனுப்புதல் கூடாது. மேற்கூரை போர்த்திய வாகனங்களில் காலை, மாலை அல்லது இரவுப்பொழுது ஆகிய குளிர்ந்த நேரங்களில் அனுப்பவேண்டும். நீண்ட துாரம் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லவேண்டும். கீரையின் மேல் எந்த சுமையையும் வைத்தல் கூடாது.

கீரையைப் பதப்படுத்துதல்

கீரையை அறுவடை செய்து பதப்படுத்தும் நிலையத்திற்கு எடுத்து வந்தவுடன் பதப்படுத்துதல் செய்ய வேண்டும்.

சிற்றிலைகளைக் கொய்தல்

கிளைகளிலிருந்து சிற்றிலைகளைக் கொய்ய வேண்டும். இந்நிலையில் நோய்தாக்கப்பட்ட மற்றும் பாதிப்படைந்த கிளைகளை நீக்கிவிடவேண்டும்.

கழுவுதல்

முதலில் அசுத்தங்கள் நீக்குவதற்காக சுத்தமான குடிநீரால் கீரையைக் கழுவுதல் வேண்டும். பின்பு நுண்ணுயிரிகளை நீக்கும் வண்ணம் 3-5 நிமிடம் வரை 1 சத உப்புக்கரைசலில் கழுவ வேண்டும். மீண்டும் சுத்தமான நீரில் கழுவி கீரையைக் காயவைக்க வேண்டும்.

அதிகப்படியான கீரை வடித்தல்

உலர்விப்பானுக்கு எடுத்துச் செல்லும்முன் கீரைகளில் உள்ள அதிகப்படியான நீரை வலை கொண்ட கலன்களின்மேல் பரப்பி 15நிமிடம் வரை வடிக்க வேண்டும்.

உலர்த்துதல்

மூன்று முறைகளில் முருங்கைக்கீரை உலரவைக்கப்படுகிறது.

அவையாவன :

அறைகளில் உலர்வித்தல்

சுத்தமான, காற்றோட்டமுள்ள, பூச்சி மற்றும் எலித்தொல்லையிலிருந்து பாதுகாப்பான அறைகளில் முருங்கைக் கீரையை உலரவைக்கலாம். ஒரே சீராக உலரும் வண்ணம் அடிக்கடி சுத்தமான கையுரை உபயோகித்து கீரையை புறட்டுதல் வேண்டும். இவ்வாறு நான்கு நாட்கள் வரை உலரவைத்தல். ஒரு சதுர மீட்டர் பரப்பில் 1 கிலோ கீரைக்குமேல் பரப்புதல் கூடாது இருப்பினும் அறையில் உலர்த்தப்பட்ட ஈரப்பதம் 10 சதம் உள்ள கீரையில் பூஞ்சாணத் தொற்றுகள் இல்லை என்பதற்கான உத்திரவாதம் கொடுக்க இயலாது.

சூரிய ஒளியில் உலரவைத்தல்

சூரிய ஒளியில் உலர்த்துவதற்காக சில சிறப்பு அமைப்புகள் உள்ளன. அவற்றில் உள்ள பாலித்தின் உறையை புற ஊதாக் கதிர்களால் நேர்த்தி செய்யவேண்டும். பாலித்தின் உறைகள் ஊடுறுவக் கூடியவைகளாக இருக்க வேண்டும். கருநிறப்பாலித்தின் உறைகளெனில், 55° செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலையில் இலைகள் கருகி உடைந்துவிடும். இலைகளின் ஈரப்பதம் 10 சதம் வரை பராமரிக்கப்படுகிறது. இம்முறையில் ஆண்டு முழுவதும் அதிகப்படியான அளவில், அதாவது 1 சதுர மீட்டரில் 2.5 கிலோ வரை உலரவைக்கலாம். எனவே இது பெரிய அளவிலான வணிகத்திற்கு உகந்த முறையாகும்.

அரைத்தல்

காய்ந்த இலைகளை துருப்பிடிக்காத எஃகு கம்பம் கொண்டு அரைக்க வேண்டும். சிறிய அளவில் தயாரிப்புக்கு உலக்கை மற்றும் உரல் கொண்டு பொடியை அரைக்கலாம்.

வலையில் வடித்தல்

பொடியாக தேவைப்படின் வலையில் வடிக்க வேண்டும். பொடியாக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியிருந்தால் அதிலுள்ள வலையின் அளவைப் பொறுத்து, பொடியுடன் துகள் அளவும் மாறுபடும். துகள்கள் மிகவும் பெரிய அளவில் இருப்பின் மீண்டும் ஒரு முறை பொடியாக்க வேண்டும்.

துகள்களின் அளவு

பெரியவை (1.00 மி.மீ - 1.5 மி.மீ), சிறியவை (0.5 மி.மீ. - 10 மி.மீ), மிகச் சிறியவை (0.2 மி.மீ. - 0.5 மி.மீ)

கீரைப் பொடியை உலரச் செய்தல்

முருங்கைக் கீரைப் பொடி ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது. எனவே அதனை 500 செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிடங்கள் உலரவைத்து பொடியின் ஈரப்பதத்தை 75 சதமாகக் குறைக்க வேண்டும்.

பொட்டலமாக்குதல் மற்றும் சேமித்தல்

முருங்கைக்கீரைப்பொடி எளிதில் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை வாய்ந்ததால், பூஞ்சாணத் தொற்றும் எளிதில் உருவாகும். மேலும் மிகச் சிறிய அளவுள்ள துகள்களில் பாக்டீரியாக்கள் எளிதில் ஊடுறுவும்.

தனிநபர் துாய்மை

கீரைப்பொடியை பொட்டலமிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் துாய்மையைக் கடைபிடிக்க வேண்டும். தலைக்கவசம், முகம் மூடி மற்றும் கையுறை போன்ற பாதுகாப்புச் சாதனங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும்.

பெரிய பைகளில் சேமித்தல்

கீரைப்பொடி ஈரப்பதத்தை உறிஞ்சுவதனால், ஈரம் மற்றும் வெப்பநிலைகளைப் பராமரிக்க வேண்டும். ஊலரவைக்கப்பட்ட பொடியை குளிரச்செய்து துாய்மையான பாலித்தின் பைகளில் அடைத்துவிட வேண்டும். இரண்டாவது பாலித்தின் பையை, மூட்டையின்மேல் போர்த்தி அதனையும் அடைக்க வேண்டும். மூட்டைகளை மிதமான உலர்ந்த பகுதிகளில் சேமிக்க வேண்டும்.

கடைநிலை சேமித்தல்

ஈரம் புகாதவாறு பொட்டலங்களைப் பாதுகாக்க வேண்டும். கீரைப் பொடியை சுத்தமான உலர்ந்த பைகளில் அடைத்து மூடியிட வேண்டும்.

அடையாளமிடல்

முருங்கைக் கீரைப் பொடியடங்கிய பொட்டலங்களில் கீழ்க்காணும் விபரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

 • பொருளின் பெயர்
 • நிகர எடை
 • தயாரிப்பாளரின் பெயர் மற்றும் முகவரி
 • தாய்நாடு
 • பளு, வரிசை அடையாள எண் அல்லது குறியீடு
 • பயன்படுத்தும் முறை
 • உற்பத்திநாள்
 • சத்துக் குறிப்பு (கட்டாயமற்றது)

ஆதாரம் : தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

3.01587301587
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top