பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முருங்கையில் உயிர் தொழில் நுட்பம்

முருங்கையில் உயிர் தொழில் நுட்ப முறைகளைப் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பசுமை புரட்சி உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்ட ஒன்று. இப்புரட்சியின் ஒரு பகுதியாக உயிர் தொழில்நுட்பம் வாழ்வின் ஆதாரமாகக் கருத்தப்பட்டது. இதன் காரணமாக தாவர மரபியலில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அடிப்படை உயிரியல் முறைகளின் கோர்வையே இந்த புதிய உயிர்தொழில் நுட்ப முறையாகும். மெண்டலின் விதிப்படி பெற்றோரின் குணாதிசியங்களை சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஜீன்கள் வாழ்வின் ஆதாரமாகக் கருதப்படுகிறது. மெண்டலின் விதிகள் வெளியிடப்பட்ட பின்பும் உயிரியியல் மூலக்கூறான டி.என்.ஏ கண்டறியப்பட்ட பின்பும் இந்த துறையின் வளர்ச்சி மிக அதிகமாக இருந்தது. விவசாய உயிர் தொழில்நுட்பம் காரணமாக விவசாயப் பொருட்களின் தரம், வினைபொருட்களின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

முருங்கையின் முக்கியத்துவம்

இந்தியா, பெரும்பாலான காய்கறிப் பயிர்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. அவற்றுள் சில பின்வருமாறு, சாம்பல் பூசணி, பாகற்காய், கோவைக்காய், புடலை, கத்தரி, கத்தி அவரை, கட்டை அவரை. காய்கறிகளில் வைட்டமின் தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. முருங்கை வறட்சியைத் தாங்கி வேகமாக வளரக்கூடியது. எல்லா காலநிலைகளையும் ஏற்று வளரக்கூடியது. முருங்கையின் பயன்பாடுகள் அதிகம் என்பதாலும், பூக்கும் தன்மை, பயன்பாடுகள் அதிகம் என்பதாலும் இந்தியாவில் இதற்கு மதிப்பு அதிகம். இந்தியாவின் தென்பகுதிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா (ம) ஆந்திராவில் முருங்கை அதிகம் பயிரிடப்படுகிறது. சில இடர்பாடுகள் இருந்த போதிலும் செடி முருங்கையை விட மர முருங்கையே சிறந்ததாக கருதப்படுகிறது. இடர்பாடுகளில் சில, நீண்ட பருவகாலம், நடவு மூலதனம் கிடைக்காமை, அதிகமான மழை அளவு தேவைப்படுதல் இதனால் ஏற்படும் பூச்சி (ம) நோய்கள். இந்தியா உலகிலேயே முருங்கை அதிகம் விளைவிக்கப்படும் நாடு. 38,000 ஹெ பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதன் உற்பத்தி 1.1 முதல் 1.3 மில்லியன் டன்கள். இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் சாகுபடி பரப்பும் (15,665 ஹெக்டர்) உற்பத்தித் திறனும் அதிகம். அதைத் தொடர்ந்து இருப்பது கர்நாடகா (10, 250 ஹெ) மற்றும் தமிழ்நாடு (7,403 ஹெ) மற்ற மாநிலங்களில் 2,613 ஹெ பரப்பில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பல்வேறு இரக முருங்கைச் செடிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் சிலவற்றிற்கு மட்டுமே பெயர் உள்ளது.

1. ஜ 17 ஃபினா வகை

தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்படும். முருங்கைக்காய் 60 - 90 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது. சதைப்பற்று மிக்க ருசிகரமான காய்கள். இலங்கையிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

சவக்கச்சேரி முருங்கை

இலங்கையிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 90-120 செ.மீ உயரம் கொண்ட காய்கள்.

செம்முருங்கை

இதன் காய்களின் நுனியில் சிவப்பு நிறமாகக் காணப்படும். வருடம் முழுவதும் பூக்கும் திறன் கொண்டது.

காட்டு முருங்கை

இவை தரம் குறைந்த சிறிய காய்களை உருவாக்கும்.

பிற வகைகள்

பால் முருங்கை மற்றும் பூனை முருங்கையின் காய்கள் கசப்புத் தன்மை கொண்டது. கொடிக்கால் முருங்கை தமிழ்நாட்டில் வெற்றிலை சாகுபடி செய்யும் பகுதிகளில் வளர்க்கப்படும்.

முருங்கையில் உயிர் தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள்

திசு வளர்ப்பு

முருங்கையில் திசு வளர்ப்பு குறித்த தகவல்கள் மிகக் கணிசமானதே. முருங்கையில் நன்கு முதிர்ந்த செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட கணுக்கள் திசு வளர்ப்பு முறைக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்படும் முருங்கையின் பயன்பாடுகள் எல்லாத் துறைகளிலும் (உணவு, தோட்டக்கலை, தொழில்துறை மற்றும் மருத்துவத்துறை) அதிகம். இதுவரை முருங்கையில் 13 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் ஒரேயொரு சிற்றினம் மட்டுமே (மொரிங்கா ஒலிஃபெரா) பரவலாகப் பயிர் செய்யப்படுகிறது. இந்த திசு வளர்ப்பு முறையில் கூட இச்சிற்றினமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வளர் இனம் விதைகள் இவ்வாறு திசு வளர்ப்பு முறையில் திரவ வளர் ஊடகத்தில் வளர்க்கப்படும் போது அதன் வளர்ச்சி வீதம் அதிகம் (73%) ஆகும். ஆனால் அதன் பெருக்கு வீதம் 47 தண்டுகள், காலஸ் ஆகும். அதிகமான தண்டு உருவாக வணிக ரீதியாக ஐசோதையோசோலோன் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனைப் பயன்படுத்தும் போது வளர் ஊடகத்தில் பிற காரணிகள் வளர்வது தடுக்கப்பட்டு காலஸ் வளர்ச்சி நன்றாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சாவ்ஸ் மற்றும் பலர்.

மூலக்கூறு கட்டிகள்

மூலக்கூறு கட்டிகளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தாவர இனத்தின் பண்புகளை துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். இவ்வாறு அறியப்பட்ட பண்புகளைக் கொண்டு மரபியல் வல்லுநர்கள் தங்களுக்குத் தேவையான தாவர இனத்தை தேர்ந்தெடுக்க முடியும். மூலக்கூறு இணைப்பு வரைபடம் கொண்டு தாவர இனத்தின் உழவியல் பண்புகளை அறிய முடியும். இதனால் தேவையான பண்புகள் கொண்ட மூலக்கூறு வழங்கிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

மூலக்கூறு கட்டிகள் காலஸில் ஏற்படும் உடற்கூறு செல் மாற்றங்களைக் கண்டறியப்பயன்படும். இதனால் தேவையான மாற்றங்கள் கொண்ட காலஸ் பாகம் அறியப்பட்டு அவை மட்டும் திசு வளர்ப்பு முறையில் பெருக்கப்படுகிறது. மேலும் இவைகள் புதிதாக உருவாக்கப்பட்ட மரபியல் பண்புகள் மற்றும் கலப்பினத் தூய்மையை உறுதிப் படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மூலக்கூறு கட்டிகள் தனித்த தாவரத்தின் மரபியல் பண்புகளை மட்டும் அல்லாமல் தாவரக் கூட்டத்திற்கிடையேயான மரபியல் பண்புகளின் வேறுபாட்டைக் கண்டறியவும் பயன்படுகிறது.

அந்த குறிப்பிட்ட பண்புகளுக்கான குரோமோசோம்கள், ஜீன்களின் இருக்கும் இடத்தை நிர்ணயிக்கும் பணியையும் மூலக்கூறு கட்டிகள் செய்கின்றன. எனவே விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள இது ஏதுவாக இருக்கும். ஏஃப்.ஏல்.பி மார்க்கர்கள் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தாவரத்தின் மரபியல் பண்புகள் அறியப்பட்டன.

ஆய்வின் முடிவில் அதன் மரபியல் பண்புகள், வேறுபட்ட பண்புகள் அறியப்பட்டன. தாவர இனத்தின் கலப்பினச் சேர்க்கையை இரண்டு காரணிகள் நிர்ணயிக்கின்றன (1) மரபியல் காரணிகள் (2) சூழ்நிலை காரணிகள். தாவர இனத்தின் கலப்பின சேர்க்கையை அறிவதன் மூலம் நாம் அத்தாவர இனத்தின் மரபியல் நுட்பங்களை அறிய இயலும். மேலும் இதனை பாதுகாப்பது, தாவர தருணத்தின் எண்ணிக்கை, எவ்வகை மகரந்தச் சேர்க்கை, பூக்களின் நிறம், அளவு, மகரந்தம் (ம) சூல்மூடி அமைப்பு மற்றும் பிற பண்புகளை அறியவும் பயன்படுகிறது. மேலும் கலப்பின சேர்க்கையின் விகிதத்தை அறியவும் பயன்படுகிறது.

கலப்பின சேர்க்கை அளவினைக் கண்டறிய பூக்களின் புறஅமைப்பு ஒரு காரணி என்று கருதப்பட்டது. பசுமைக்குடில் ஆய்வின் மூலம் இதனைக் கூறலாம். மரங்களுக்கு கூறும் போது புற அமைப்பு கட்டிகள் கொண்டும் அதன் பண்புகள் நிர்ணயிக்கப்படும். முருங்கை ஒரு தன் மகரந்தச் சேர்க்கை (ம) பிற மகரந்தச் சேர்க்கைக் கொண்ட தாவர இனமாகும். இதில் மகரந்தச் சேர்க்கை தேனிக்கள் மூலம் நடைபெறும்.

முருங்கையில் இரண்டு முக்கியமான வளர்ச்சி தேவை. பயோஇன்பர்மேடிக்ஸ் (Bioinformatics) மூலம் இது சாத்தியமானது.

முருங்கையில் வருங்கால தேவைகள்

 • பிற சிற்றினங்களை கண்டறிந்து மரபியலில் பயன்படுத்துதல் மற்றும் அதன் பண்புகளை வகைப்படுத்துதல்.
 • மூலக்கூறு கட்டிகளை உருவாக்குதல் இவ்வாறு கண்டறியப்பட்ட பண்புகளைக் கொண்ட ஜீன்களை கிரையோ முறையில் திரவ நைட்ரஜனில் பாதுகாத்து வைத்தல்.
 • மறு உறுப்புகள் உருவாக்குவதற்கான தொகுப்பு முறைகள்.
 • உயிர் (ம) உயிரற்ற காரணிகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்தல்.

சூழ்நிலையை பாதிக்காத பூச்சி () நோய் கட்டுப்பாட்டு முறைகள்

சாவஸ் மற்றும் பலர் (2005) முருங்கை திசுவளர்ப்பில் பொட்டாசியம் அயனிகளின் பங்கு குறித்து ஆராய்ச்சி செய்தனர். மேலும் வேர், தண்டு (ம) அலைகளிலும் பொட்டாசியம் அளவு குறித்து சோதனை செய்யப்பட்டது. ஒரு தொட்டியில் ஆற்று மணல் நிரப்பப்பட்டு முருங்கை செடி நடப்பட்டு பசுமைக் குடிலில் வளர்க்கப்பட்டது. ஒரு நாளுக்கு இரண்டு முறை ஊட்டச்சத்து கலவை அளிக்கப்பட்டது.

சோதனை குறித்த விவரம் பின் வருமாறு

T1 - பொட்டாசியம் அற்ற கலவை

T2 - 2 பொட்டாசியம் உப்பு

T3 - 4 மில்லி மோலார் பொட்டாசியம் உப்பு

T 4 - 6 மில்லி மோலார் பொட்டாசியம் உப்பு

Τ5 - 8 மில்லி மோலார் பொட்டாசியம் உப்பு

T6 - 12 மில்லி மோலார் பொட்டாசியம் உப்பு

இவ்வாறு 30 நாட்கள் உரக்கலவை அளிக்கப்படவேண்டும். நடவு செய்த 80 நாட்கள் கழித்து வேர், தண்டு (ம) இலைகளில் பொட்டாசியம், கால்சியம் (ம) மெக்னிசியம் அயனிகள் கணக்கிடப்பட்டது.

இதைப்போல வளர்ச்சி விகிதத்தில் பொட்டாசியம் அயனிகளின் (முரூ) பங்கு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வின் வடிவில் 2 மில்லி மோலார்க்கு மேல் முரூ முருங்கையின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்று கணடறியப்பட்டது. மேலும் தணர்டுகளை விடவும் இலைகள் (ம) வேர்களில் பொட்டாசியம் அயனிகள் அதிகம் உள்ளன. இறுதியாக குறைந்த அடர்நிலையில் பொட்டாசியம் அயனிகள் (2 மிமி) போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது.

மைக்ரோ-குளோனிங் - முருங்கையில் அழிந்து வரும் சிற்றினங்களைக் காப்பதற்கான முயற்சி

மேற்கூறியது போலவே முருங்கையில் 13 சிற்றினங்கள் உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் முதன்மையானது மொரிங்கா ஒலிஃபெரா.

முருங்கையின் அழிந்து வரும் சில சிற்றினங்கள்

 • மொரிங்கா ஆர்போரியே (IUCN ஆல் 2006 ல் வகைப்படுத்தப்பட்டுள்ள)
 • மொரிங்கா போர்சியானா
 • மொரிங்கா லாங்கிடியூபா
 • மொரிங்கா ரிவே
 • மொரிங்கா ரஸ்போலியானா
 • மொரிங்கா ஸ்டீனேபெடாலா

பிற சிற்றினங்கள்

மொரிங்கா பெரிகிரினா - குறைந்த முளைப்புத்திறன், தாவர உண்ணிகளுக்கு உணவு மொரிங்கா ஹில்டெப்ராண்டி - காட்டுப்பகுதிகளில் காணப்படும்

இத்தகைய அழிந்து வரும் இனங்களை மீட்பதற்காகவே திசு வளர்ப்பு முறை தற்போது பெருமளவில் செய்யப்படுகிறது. முளைக்கும் விதைகளிலிருந்து திசுவளர்ப்பு செடிகள் வளர்க்கப்பட்டாலும் வணிக ரீதியாக அந்த செடிகளைப் பெருக்குவதற்கான உத்திகள் இன்னும் வகுக்கப்படவில்லை. இருப்பினும் சில ஆய்வுகள் தீவரமாக செய்யப்பட்டன. அதன் தொகுப்பு பின்வருமாறு

1. தண்டு மற்றும் இலை போன்ற தாவரப் பாகங்களிலிருந்து குளோன்கள் உருவாக்கப்படவேண்டும். இதனை பின்காலத்தில் செடிகளைப் பெருக்குவதற்கு பயன்படுத்தலாம்.

2. பல்வேறு அழிந்து வரும் சிற்றினங்களையும் ஒருங்கே இணைத்து பாதுகாக்க வேணடும்.

3. சில சமயம் இடைவெளி ஏற்படுவதால் விதைகளின் முளைப்புத்திறன், விதை உற்பத்தி , விதை கிடைத்தலில் இடர்பாடுகளை சந்திக்கலாம். இவை தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் தேவையான மூலதனத்திற்கு சில சமயங்களில் தட்டுப்பாடு ஏற்படலாம்.

திசுவளர்ப்பு முறைகளில் வளர்க்கப்படும்போது தாய்த்திசுக்கள் (explant) தேர்ந்தெடுத்தல், வளர் ஊடகத்தில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஊக்கிகள், அதன் அளவு போன்றவை குறித்த ஆய்வுகள் செய்யப்பட்ட வண்ணம் உள்ளது.


செடி முருங்கை சாகுபடி

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

3.0487804878
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top