பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முருங்கையில் பூ உயிரியல் மற்றும் வீரிய ஒட்டுத் தன்மை

முருங்கையில் பூ உயிரியல் மற்றும் வீரிய ஒட்டுத் தன்மை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பூ உயிரியல்

முருங்கை பூக்கள் வெள்ளை நிறத்தில் மணமுடையதாகவும் பூக்காம்புகள் நீளமாகவும் படர்ந்தும் காணப்படும். பூவிலைக் காம்புகள் ஐந்து இருக்கும். அவை மடங்கியும் கூர்மையுடையதாகவும் வெளிப்புறத்தில் குழல் போன்று வளைந்தும் காணப்படும். பூ மடல்கள் ஐந்து காணப்படும் அவை தனியே குறுகி மடல் போன்று காணப்படும்.

மகரந்தத்தாள் மஞ்சள் நிறத்தில் ஐந்து காணப்படும். மகரந்தக்காம்புகள் நீண்டு காணப்படும். கருவறைகள் மூன்று காணப்படும். காய்கள் 30 முதல் 120 செ.மீ நீளமுடையதாகும். முக்கோண வடிவில் நீண்டு 13 முதல் 22 விதைகள் உடையதாக காணப்படும்.

பூ மலருதல்

முருங்கையில் அதிகாலை 4.30 முதல் 6.30 வரை பூக்கள் மலரும். மிக முக்கியமாக 530 மணிக்கு அதிகப்படியான வளர்ச்சி இருக்கும். பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதில் பூ மலரும் நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 9.00 மணிவரை என்றும், 27.3° செ - 29.3°செ. மற்றும் காற்றின் ஈரப்பதம் 68 முதல் 78 சதவீதம் பூ மலர்ச்சிக்கு பெரிதும் துணை செய்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர். மகரந்தத் தாளில் மிகவும் நீளமான மகரந்தத்தாள் முதலில் மலர்கிறது. மகரந்தத்துாள் முதிர்ச்சியடைந்த நிலையில் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மலர்ந்த நிலையில் மகரந்தத்துாள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஒரு மகரந்தத்தாளில் சுமார் 7,400 மகரந்தத்துாள்கள் இருக்கும். பூ மலர்வதற்கு ஒருநாள் முன்பும், மலர்ந்த நாள் அன்றும் ஏற்புத்தன்மை உடையதாய் இருக்கும்.

அதனால் அயல்மகரந்தச்சேர்க்கை தேனி"க்கள் மற்றும் ஈக்களினால் நடைபெறுகிறது. சுமார் 72 சதவீதம் மகரந்தம் உயிருடன் இருக்கும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 28 ஆகும்.

மகரந்தச்சேர்க்கை

முருங்கையில் பெரும்பாலும் அயல்மகரந்தச்சேர்க்கையே நடைபெறுகிறது. ஈக்கள், பூச்சிகள், கொசு அயல்மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் துணைபுரிகின்றன. பூ மலர்வதற்கு முதல் நாள் பூவிலுள்ள மகரந்தத் தாளினை நீக்கம் செய்யவேண்டும். பின்னர் மறுநாள் காலையில் 11 மணிக்கு முன்னர் ஆண் மரத்திலிருந்து மகரந்தத்தை சேகரித்து, மகரந்தத்தாள் நீக்கிய பெண் தாவரத்தின் பூவில் மகரந்தச்சேர்க்கை செய்யவேண்டும். பின்னர் பை கொண்டு மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற மலரினை மூடிவிட வேண்டும். 4-5 நாட்கள் கழித்து பூவிலிருந்து பிஞ்சு வெளிவந்தவுடன் பையினை நீக்கி அட்டையினால் அடையாளம் இடவேண்டும். மேற்கூறிய முறையில் அதிக எண்ணிக்கையில் வீரிய ஒட்டு காய்களை உருவாக்கலாம்.

பொதுவாக முருங்கையில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்தில் பூக்கள் தோன்றும். அதிகப்படியான பூக்கள் பிப்ரவரி மாதத்தில் தோன்றும். பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். பூவிதழ்கள் ஒரே மாதிரியான உயரத்தில் இருக்கும். பூவிலிருந்து ஒரு வித வாசனை உண்டாகும். காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை பூக்கள் மலரும் அதன்பின்னர் மகரந்தத்தாள் வெடிக்கும் மற்றும் தேன் சுரப்பது ஆரம்பிக்கும். வெடித்த மகரந்தத்தாளிலிருந்து கொத்து கொத்தாக மகரந்தத்துாள்கள் வெளியேறும் இவை பூச்சிகளினால் கவரப்பட்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. பூச்சிகளில் சைலோகோப்பா என்கின்ற பூச்சியின் கால்களில் மகரந்தத் துாள் அதிகளவில் ஒட்டிக்கொண்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. இவை தவிர தட்டுப்பூச்சி ஒரு வித எறும்புகள் மற்றும் லெப்பிடாப்டிரா வகையை சார்ந்த பூச்சிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன. பூ மலரும் தருணத்தில் மகரந்தத்தாள் உயரத்திலேயே இருக்கும் ஆனால் பின்னர் சிறிது சிறிதாக வளர்ந்து மகரந்தத்தாளை விட அதிக உயரத்தில் காணப்படும். பூ விரிந்து ஒரு சில மணி நேரங்களிலேயே இவ்வளர்ச்சி காணப்படுவதால் மகரந்தச்சேர்க்கைக்கு அந்நிய காரணிகளில் தேவை முருங்கை மரத்திற்கு காணப்படுகிறது.

முருங்கையில் பூ உயிரியல் பற்றிய ஆராய்ச்சி

கால்டாஸ் (2000) என்ற அறிஞர் முருங்கையில் மகரந்தச்சேர்க்கைக்கும் அதன் மூலம் காய் உற்பத்திக்கும் வெளிப்புற காரணிகளான பூச்சிகள் மற்றும் காற்று போன்றவை மிக அவசியம் என்று கணடறிந்துள்ளார். விசாகப்பட்டினத்தில் முருங்கையில் இரண்டு பருவங்களில் பூ மலர்ச்சி உண்டாகிறது என்று ஜோதி மற்றும் குழுவினர் (1990) கண்டறிந்துள்ளனர். அவை முறையே பிப்ரவரி முதல் மே மாதம் முடிய மற்றும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய என்றும் கார்பெண்டர் ஈக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்கின்றன என்றும் கணிடறிந்துள்ளனர். பாபு மற்றும் ராஜன் என்பவர்கள் (1996) முருங்கை மரத்தில் பூக்கும் பருவம் மகரந்தத்தின் தன்மைகள் பற்றி ஆகஸ்ட் 1995 முதல் ஜனவரி 1996 வரை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி முருங்கை மரம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை முதலில் பூக்கிறது பின்னர் டிசம்பர் முதல் ஜனவரி வரை பூக்கிறது. பூக்களில் மகரந்தத்துாள்கள் முதலில் முதிர்ச்சியடைகின்றன பின்னர் பூ மலர்ச்சி நடைபெறுகிறது. பூக்கள் 14.30 முதல் 9.00 மணி முடிய மலர்கின்றன ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை பூக்கும் பூக்களில் மகரந்தத்தாள் அதிகம் வெடிப்பதில்லை ஏனெனில் குளிர் அதிகம் நிலவுவதால் மகரந்தத்தாளில் ஈரத்தன்மை காணப்படுகிறது. இதனால் மகரந்தச்சேர்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கருப்பு எறும்புகள் மற்றும் வணிடுகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவி செய்கின்றன.

முருங்கையில் பூவினர் தனிமைகள்

பூவின் தன்மைகள்

கணக்கெடுப்பு

பூக்கும் பருவம்

ஜனவரி முதல் ஏப்ரல் வரை

பூவின் வகை

ஒழுங்கற்றது

பூவின் நிறம்

வெள்ளை நிறத்தில் அடிப்பகுதி பச்சை நிறத்துடன் காணப்படும்

பூவின் மணம்

உண்டு

தேனி சுரப்பு

உண்டு

பூமலரும் நேரம்

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

மகரந்தத்தாள் வெடிக்கும் நேரம்

700 மணி முதல் 13.00 மணி வரை

ஒரு பூவிலுள்ள மகரந்ததத்தாளின்  எண்ணிக்கை

5

ஒரு மகரந்தத்தாளிலுள்ள

மகரந்தத்துகள்களின் எண்ணிக்கை

4705

ஒரு பூவிலுள்ள மகரந்தத்துகள்களின் எண்ணிக்கை

23525

 

ஒரு துகளிலுள்ள தூள்களின் எண்ணிக்கை

523

 

மகரந்தத்துாளின் வகை

மூன்று

மகரந்தத்துாளின் வடிவம்

வட்ட வடிவம்

மகரந்தத்துாளின் அளவு

- 47.25 x 41.28

துகளின் வகை

ஈரமுடையது

மலர்ந்த பூவில் இயற்கையில் காய் பிடிப்பு சதவீதம்

1028

 

வலையில் உள்ள மரங்களில் காய் பிடிப்பு சதவீதம்

1

 

பையினுள் காய் பிடிப்பு சதவீதம்

இல்லை

 

முருங்கையில் மகரந்தச் சேர்க்கை காரணிகள்

வந்து செல்லும் பூச்சியின் பெயர்

வருகை நேரம்

உணவின் தன்மை

தைசனாப்திரா

 

 

கேப்ளோதிரிப்ஸ் சைலோனிக்கஸ்

பகல் மற்றும் இரவு

 

மகரந்தம் மற்றும் தேன்

தைசனாப்திரா

 

 

மைக்ரோ செபாலோதிரிப்ஸ் அப்டோமினாலிஸ்

பகல் மற்றும் இரவு

 

மகரந்தம் மற்றும் தேன்

 

கைம்னோப்டிரா

 

 

சைலோகோப்பா

பகல்

மகரந்தம் மற்றும் தேன்

ஏப்பிஸ்

பகல்

மகரந்தம் மற்றும் தேன்

வெஸ்பா

பகல்

மகரந்தம் மற்றும் தேன்

லெப்பிடாப்டிரா  பாப்பிலினோடே

பகல்

தேன்

கோலியோப்டிரா

பகல்

தேன்

ஆதாரம் : தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

3.0303030303
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top