பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) பற்றிய குறிப்புகள்

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)

பாராளுமன்ற விதியின் கீழ் தலைமை நிறுவனமாக உருவாக்கப்பட்டு ஊக்குவிப்பு, நிதியளித்தல் மற்றும் மேம்பாடுகள் போன்றவைகள் சிறு அளவிலான தொழிற்சாலைகளுக்கும் மற்றும் இதர செயற்கூறுகள் புரியும் மற்ற நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பு போன்ற  செயல்களிலும் ஈடுபடுகின்றது. இதை இந்திய அரசு, ஏப்ரல் 2, 1990 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கியது. இது ஐ.டி.பி.ஐ வங்கியின் முழு மானியம் பெற்றது.

இவ்வங்கி ஐ.டி.பி.ஐ. யிடம் இருந்து மார்ச், 27, 2000 முதல் முழுவதுமாக விலக்கப்பட்டது. இவ்வங்கி சிறு தொழில்துறைகளுக்கு ஊக்குவிப்பு, நிதியளித்தல் மற்றும் மேம்பாடு போன்றவற்றையும் மற்றும் முதன்மை நிதி நிறுவனமாக செயல்படுகிறது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கீழ் இயங்குகிறது. இவ்வங்கி பல நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை 5 மண்டல அலுவலகங்கள் மற்றும் 33 கிளை அலுவலகங்கள் மூலம் இயங்கி வருகிறது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) நேரடி / மறைமுக நிதி உதவிகளை சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது மற்றும் அனைந்திந்திய அளவில் முழு சிறு மற்றும் குறு துறை தொழிற்சாலைகளுக்கு உதவுகிறது. நிதி அளிப்பு, விரிவாக்க உதவி மற்றும் ஊக்குவிப்பு போன்றவைகள் அனைத்தும் குறிப்பிட்ட திட்டத்தின் நேரடி மற்றும் மறைமுக உதவிகள் கீழ்க்கண்ட தேவைகளுக்கு வழங்கப்படுகின்றது.

புதுத் திட்டங்களை அமைத்தல்

 1. விரிவாக்கம், வேறு விதங்களில் ஈடுபடுதல், நவீனமயமாக்கல், தொழில்நுட்பங்களை தரம் உயர்த்துதல், தர மேம்பாடு, செயலகங்களை புறணமைத்தல்.
 2. சிறு தொழில் நிறுவனங்களை சந்தைப்படுத்தும் துறைகளில் வலிமைப்படுத்துதல்.
 3. சிறு தொழில் நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.
 4. ஏற்றுமதி ஊக்குவிப்பு

நேரடி உதவி பெறும் திட்டங்கள்

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) கீழ்க்கண்ட நிறுவனங்களுக்கு நேரடியாக உதவி செய்கிறது.

 1. நிதி திட்டம்
 2. இயந்திர நிதித் திட்டம்
 3. சந்தைத் திட்டம்
 4. வியாபார மேம்பாட்டுத் திட்டம்
 5. உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
 6. ஐ.எஸ்.ஓ 9000
 7. தொழில்நுட்ப மேம்பாடு மற்றும்  நவீனமயமாக்கலுக்கு நிதி
 8. முதலீட்டுத் திட்டம்
 9. NBFC, SFC, SIDC - களுக்கு வாடகை விடுவதற்கு உதவியளிக்கும் திட்டம்
 10. ஆதார உதவிகள் மேம்பாடு மற்றும் நிதி உதவிகள் பெறும் சிறு அளவிலான துறைகளுக்கு அளித்தல்.

இத்திட்டங்கள் குறிப்பாக சில பெரிய பிரச்சனைகள் கொண்ட சிறு தொழில் நிறுவனங்களில் உள்ள பகுதிகளான உயர் நுட்பத்திட்டம், சந்தைப்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, காலம் தாழ்த்தி கிடைக்கப்பெறும் கட்டணம், தரம் மேம்படுத்துதல், ஏற்றுமதி நிதியளித்தல், காலாவதியான திட்டங்கள் மற்றும் வருமானம் வரும் திட்டங்கள் ஆகியவற்றிற்கு உதவி அளித்தல்.

மறைமுக உதவி பெறும் திட்டங்கள்

மறைமுக திட்டங்கள் மூலம், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மறுநிதியளிப்பு கடன்களை சிறு தொழில் துறைகளுக்கு தொடக்க நிலை கடனளிக்கும நிறுவனங்களான (பி.எல்.ஐ), SFC, SIDC மற்றும் இதர வங்கிகள். தற்§பாது மறுநிதியளிப்பு உதவி 892 (பி.எல்.ஐ) ¦பாதுத் துறை நிறுவனங்களுக்கும் மற்றும் இதன் மூலம் நாட்டில் 65,000 மேற்பட்ட கிளைகள் மூலம் வலைதளம் கொண்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) - ல் உள்ள அனைத்து திட்டங்களும் நேரடி மற்றும் மறைமுக உதவிகள் அனைத்து மாநிலத்திலும் 39 SIDBI மண்டல / கிளை அலுவலகங்கள் மூலம் இயங்கி வருகிறது.

ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) சிறு மற்றும் குறு அளவிலான தொழில்களில் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு செயல்களில் தகுந்த தொழில்துறை முகவர்கள் மூலம் சுயதொழில் மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள், சிறுகடன் திட்டங்கள் மற்றும் மஹிலா விகாஸ் நிதி மூலம் உதவி போன்றவை பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புற ஏழைகளுக்கு பொருளாதார முன்னேற்றம், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் போன்றவற்றின் மூலம் உதவி செய்யப்படுகிறது

மறுநிதியளிப்பு, தவணைக் கடனுக்கு  எதிராக திட்டங்கள் /செயல்கள் இத்திட்டத்தின் மூலம் உதவி பெற தகுதியுள்ளவை

நிலையான சொத்துக்கு தவணை கடனுக்கான வட்டி மற்றும் முதலீட்டு முன் பணம் (வட்டி வரியை §சர்த்தாமல்) (சதவிகிதம் வருடத்திற்கு)

மறுநிதியளிப்பிற்கான
வட்டி(சதவீதம் வருடத்திற்கு)

(i)

ரூ. 25,000 வரை

12.0

9.0

(ii)

ரூ. 25,000 மேல் ரூ. 2 லட்சம் வரை

13.5 மேல் போகாமல்

10.5

மறுநிதியளிப்பு தவணைக் கடனுக்கு எதிராக திட்டத்தின் மூலம் / செயல்கள் TDMF மற்றும் ஐ.எஸ்.ஓ 9000 திட்டங்களின் உதவி பெறத் தகுதியுடையவை.

தவணைக் கடனுக்கான வட்டி (வட்டி வரியை சேர்க்காமல் (சதவிகிதம் வருடத்திற்கு)

மறு நிதியளிப்பிற்கான வட்டி (சதவீதம் வருடத்திற்கு)

(i)

ரூ. 25,000 வரை

12.0

9.0

(ii)

ரூ. 25,000 மேல் ரூ. 2 லட்சம் வரை

13.5 மேல் அதிகரிக்காமல்

10.5

(iii)

2 லட்சத்திற்கு மேல்

14.0* மேல் அதிகரிக்காமல்

12.0

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) உதவிகள்

சிறு தொழில் செயலகங்கள்

1996-97 ஆம் ஆண்டு மறுநிதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி பெறும் திட்டங்கள் 89.2 சதவிகிதம் மற்றும் இந்த சிறு திட்டங்கள் அனைத்தும் ரூ. 5 லட்சம் வரை பெற்றிருக்கும். இந்தத் திட்டங்களுக்கு 39.6 சதவிகிதம் மொத்தத் தொகையில் இருந்து 1996-97 ஆம் ஆண்டு வழங்க அனுமதியளிப்பட்டது மற்றும் இதே 36 சதவிகிதம் சென்ற ஆண்டு வழங்க அனுமதியளிக்கப்பட்டது.

பெண் சுயதொழில் செய்வோர்

பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ. 19.07 கோடிகள் 1067 பெண் சுயதொழில் செய்வோர்க்கு 1996-97 ஆம் ஆண்டு உதவிகள் வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட பகுதிகள்

1996-97 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் திட்டங்கள் அனைத்தும் ரூ. 775 கோடிகள் உதவி பெற்று மொத்த உதவி அளவில் 37 சதவிகிதம் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) மறுநிதியளிப்பு தொகையிலிருந்து வழங்கப்பட்டது.

விதிகள் / ஒழுங்குமுறைகளை எளிதாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்

 1. தற்போது நடைமுறையில் உள்ள கடன் வழங்கும் முறைகளில் சிறு தொழில் துறைகளுக்கு ஏற்படும் இடைவெளியைக் குறைக்க, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) எளிதாக்கி புதிய திட்டங்களை தாராளமயமாக்கி மற்றும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 2. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியிடம் (SIDBI) கடன் பெற முயற்சி செய்தால் அது எப்பொழுதும் கிடைக்கும் என்ற உறுதியான நிலைப்பாடு இருக்கும்.
 3. SIDBI வங்கி சிறு தொழில்கள் துறைகளுக்கு உதவி வழங்குவதை பாரத ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசு மேற்கொள்ளும் நடைமுறைகளையே பின்பற்றுகிறது

தாராளமயமாக்கல்

 1. கூட்டு கடன் திட்டத்தில் கடன் அளவுகள் வழங்குவதை ரூ. 50,000 -ல் இருந்து உயர்த்தி தற்போது ரூ. 2 லட்சம் வரை மற்றும் தவணைக் கடன்களுக்கு, தேவையான நேரத்திலும் முதலீட்டு பணத் தேவைகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் பெரு நகரப் பகுதிகளில் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து சிறு தொழில் துறைகளுக்கும் செயல்படுத்தப்படும்.
 2. தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கல், நிதித் திட்டம் மற்றும் மறுநிதியளிப்புத் திட்டம் ஆகியவற்றிற்கான வாய்ப்புக்கள் விரிவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யாத சிறு தொழில் நிறுவனங்கள் / அதைச் சார்ந்த செயலகங்கள் ஆகியவற்றிற்கும் இத்திட்டத்தின் கீழ் உதவி கிடைக்கப்பெற வழிவகை செய்யப்படும்.
 3. ஒருவழித் திட்டத்தைப் பெரிதாக்கி நவீனமயமாக்கல், தொழில்நுட்ப மேம்படுத்துதல் மற்றும் புதிய செயலகங்களும் இதில் அடங்கும். திட்ட வரைப்படத்தின் மதிப்பு ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 100 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறு எல்லைகளை முதலீட்டுப் பணத்திற்கும் மற்றும் தவணைக் கடன் உள்ளமைப்புகளையும் சேர்த்து  அடங்கும்.

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) முக்கியத் திட்டங்கள்

SIDBI யிடம் உள்ள திட்டங்களின் சுருக்கம். அதிகத் தகவல்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள் உள்ள துறையில் இடம் பெற்றிருக்கிறது.

தேசிய சமபங்கு நிதித் திட்டம்

சிறு சுயதொழில் முனைவோர்க்கு சிறிய அளவில் திட்டங்கள் அமைக்க உதவி செய்கிறது.

தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம்

இது ஏற்கெனவே இருக்கின்ற சிறு தொழில்கள் துறைகளுக்கு நவீனமயமாக்கல் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்குகிறது.

ஒருவழித் திட்டம் என்பது நிலையான சொத்துக்கள் மற்றும் முதலீட்டுப் பணத்திற்குத் தேவையான கடன் தொகையை ஒரே முகவர் மூலம் பெற உதவி செய்கிறது.

ஒருங்கிணைந்த கடன் திட்டம்

சிறு தொழில்துறைகளான கைவினைஞர்கள், கிராமப்புற குடிசைத் தொழில்கள் ஆகியவற்றிற்கு வேலை செய்யும் இடம் மற்றும் உபகரணம், முதலீட்டுப் பணம் ஆகியவைகள் இதன் மூலம் பெறலாம்.

மஹிலா உதயம் நிதித் திட்டம்

பெண் சுயதொழில் முனைவோர்க்கு சிறு அளவிலான தொழில் செய்வதற்கு உதவி செய்கிறது.

நிதி செயல்களுக்கான திட்டம்

சிறு தொழில்கள் மூலம் பெறப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பல்வேறு சந்தைப்படுத்துதல் ¦தாடர்பான செயல்களான விற்பனை பற்றிய ஆராய்ச்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொருட்களின் தரம் மேம்படுத்துதல், வர்த்தக பொருட்காட்சிகளில் பங்கு பெறுதல், வர்த்தகக் குறிகளுக்கு விளம்பரம் செய்தல், காட்சி மற்றும் பகிர்மான இணையங்கள், சில்லரை வர்த்தக நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் வசதி ஆகியவை.

இயந்திர நிதித் திட்டம்

இயந்திரங்கள் / உபகரணங்கள் வாங்குதல் மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் வாங்குவது ஆகியவை குறிப்பிட்ட எந்தத் திட்டத்திலும் இடம் பெறாதவை.

முதலீட்டுப் பணம் ஈட்டும் திட்டம்

இதன் மூலம் சிறு தொழில்கள் / உள் ஒப்பந்த செயலகங்கள் மூலம் முதலீட்டு உபகரணங்கள் மற்றும் ஏற்றுமதி தேவைகள் / இறக்குமதிக்கு சேர்த்தல் போன்றவற்றிற்கான தொழில்நுட்பம் மற்றும் அதன் மொத்த தர மேம்பாட்டுச் செலவுகள், அதை அடைவதற்கான ஐ.எஸ்.ஓ 9000 தரச் சான்றிதழ் மற்றும் அதன் கொள்கைகளை விரிவடையச் செய்தல்.

ஐ.எஸ்.ஓ 9000 திட்டம்

ஆலோசனை, பதிவு செய்தல், தணிக்கை, சான்றிதழ் கட்டணம், உபகரணம் மற்றும் அளவிடும் கருவிகள் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகள் மற்றும் ஐ.எஸ்.ஓ 9000 தரச் சான்றிதழ் பெறத் தேவையானவை.

சிறு கடன் திட்டம்

நன்றாக நிர்வகித்து வரும் தன்னார்வ நிறுவனங்கள் குறைந்தது 5 வருடங்களுக்கு இருப்பவை மற்றும் நல்ல பதிவுகள், நன்றாக இருக்கும் வலைதளம், சிறு சேமிப்பு மற்றும் கடன் திட்டங்கள், சுய உதவிக்குழு நபர்களுடன் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

புதிய திட்டங்கள்

 1. சிறு தொழில் செயலகங்களின் ஏற்றுமதித் திறனை மேம்படுத்துதல்.
 2. சந்தைப்படுத்துவதற்கு உதவியளிக்கும் திட்டம்
 3. உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
 4. ஐ.எஸ்.ஓ 9000 தரச் சான்றிதழ் பெறுவதற்கான திட்டம்
 5. சேவைகள் செய்தல்
 6. சிறுதொழில்கள் நிறுவனங்களுக்கு கட்டணம் திரும்பச் செலுத்தும் தள்ளுபடி திட்டத்திற்கு எதிராக உள்ளேயே கட்டணம் வழங்குதல்.

தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயக்கலுக்கு நிதி

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் நிதித் திட்டம் (TDMF) சிறு தொழில் நிறுவனங்களுக்கு நேரடி உதவிகள் மற்றும் இருக்கும், தொழில் செயலகங்களுக்கு ஊக்குவிப்பு, உற்பத்தியில் நவீனமயமாக்கல், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தி இதன் ஏற்றுமதி திறனை வலிமைப்படுத்துதல், உபகரணங்கள் அதன் ஏற்றுமதி திறனை வலிமைப்படுத்துதல் உகபரணங்கள் வாங்கி அதன் தொழில்நுட்பத்தை அறிந்து, அதன் செயல்முறை தொழில்நுட்பத்தை தரம் உயர்த்துதல், அதைப் பெட்டியில் அடைத்தல் மற்றும் TQM - ன் செலவு, ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெறுதல் ஆகிய அனைத்திற்கும் தேவையான செலவுகளுக்கு திட்டத்தில் இருந்து உதவி செய்தல்.

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ஜீலை 1996 ஆம் ஆண்டு SFC மற்றும் ஊக்குவிப்பு வங்கிகளுக்கு நவீனமயமாக்கல் திட்டத்திற்கு ரூ. 50 லட்சம் வரையிலான செலவுகளுக்கு அனுமதியளித்துள்ளது. TDNF திட்டம் 1.9.1997 - ல் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி செய்யாத செயலகங்கள் மற்றும் சிறு தொழில் துறைகளில் இருந்து பெறும் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியுள்ளவர்கள்.

தேசிய சமநிலை நிதி

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) கீழ் சமநிலைநிதி (NEF), சிறுதொழில் நிறுவனங்கள், குறு நிறுவனம் ஆகியவற்றிற்கு 1 சதவிகிதம் சேவைக் கட்டணம் மூலம் சமநிலை வகையிலான உதவிகளை வழங்கும். இதன் நோக்கம் 1995-96 ஆம் ஆண்டு பெரு நகரங்களைத் தவிர்த்து அனைத்துப் பதிகுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் கடன் அளவு ரூ. 1.25 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிய மற்றும் ஏற்கெனவே இருக்கும் செயலகங்களுக்கும் இது பொருந்தும்.

(அ) கீழ்க்கண்டவை திட்டத்திற்கான தகுதிகள்

 1. சிறு மற்றும் குறு அளவிலான புதிய திட்டங்களுக்கு உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் பதனிடுதல் (பெருநகரப் பகுதிகளைத் தவிர்த்து உள்ள பகுதிகளுக்கு மட்டும்).
 2. இருக்கின்ற சிறு மற்றும் குறு அளவிலான தொழில் செயலகங்கள் மற்றும் சேவைத் துறைகள் மேற்குறிப்பிட்டது போல் (NEF உதவி ஏற்கெனவே பெற்றிருப்போரும் உட்பட) விரிவடைவதை மேற்கொள்ளுதல், தொழில்நுட்பம் உயர்வு செய்தல் மற்றும் வேறு துறையைத் தேர்ந்தெடுத்தல். (பெருநகரப் பகுதிகளைத் தவிர்த்து).
 3. நலிவடைந்த சிறு மற்றும் குறு அளவிலான துறைகள் சேவைத் துறைகளும் சேர்த்து மேற்குறிப்பிட்டது போன்று மற்றும் இடத்தைத் தவிர்த்து தகுதியுள்ளது என்று பார்க்கப்பட்டவை (பெருநகரப் பகுதிகளைத் தவிர்த்து).
 4. அனைத்து தொழில்துறை செயல்கள் மற்றும் சேவைத்துறை செயல்கள் (சாலை போக்குவரத்து இயக்குநர்களைத் தவிர்த்து).

(ஆ) திட்டச்செலவு (முதலீட்டுப் பணத்தின் அளவுத் தொகையும் சேர்த்து) புதிய திட்டங்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக இருத்தல் கூடாது. ஏற்கெனவே இருக்கும் செயலகங்கள் மற்றும் சேவைத் துறைகள் ஆகியவற்றிற்கு அதன் திட்ட வரைவை விரிவு செய்தல் / நவீனமயமாக்கல் / தொழில்நுட்ப மேம்பாடு அல்லது வேறு துறையைத் தேர்ந்தெடுத்தல் அல்லது புரணமைப்பு ஆகியவற்றிற்கு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் ஒரு திட்டத்திற்கு செல்லுதல் கூடாது.

(இ) ஏற்கெனவே இருக்கும் ஊக்குவிப்பாளர்களுக்கு அவர்களின் பங்களிப்பு திட்டச் செலவில் 10 சதவிகிதம் இருந்தபோதும் மென் கடன் உதவி இத்திட்டத்தின் கீழ் தற்போதைய நிலையில் 15% இருந்து 25 % திட்டச் செலவில் அதிகரித்தும் மற்றும் அதிகபட்சமாக ஒரு திட்டத்திற்கு ரூ. 2.5 லட்சம் வரை கொடுக்கப்பட உள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 1. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் அல்லது ஊனமற்றோருக்கான சிறப்புத் திட்டங்கள்
  (SIDBI) வங்கி தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் அல்லது ஊனமுற்றோருக்கு மறு நிதியளிப்புக்களை வழங்குகிறது. இத்திட்டம் தொடக்கநிலை வழங்கும் நிறுவனங்களான மாநில நிதிக்கழகம் மற்றும் வணிக வங்கிகள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு நீங்கள் திட்டத்தைப் பற்றி அறிய அருகில் உள்ள SFC அல்லது உங்கள் பகுதியில் உள்ள வங்கியை அணுகவும்.
 2. ஐஎஸ்ஓ 9000 சான்றிதழ் நிதி உதவி திட்டம் பெற யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் ?
  ஐஎஸ்ஓ 9000 சான்றிதழ் பெற SIDBIயின் உதவி பெற தொடக்க நிலை நிறுவனங்களான மாநில நிதி கழகங்கள், வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் உதவிகள் பெறத் திட்டத்தின் விரிவானவற்றை வைத்துக் கொண்டு அணுகவும். நேரடியாக உதவிகள் பெற அருகில் உள்ள (SIDBI)யின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பெறலாம்.
 3. தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு SIDBI யின் திட்டங்கள் யாவை ?
  SIDBIயின் நிதி உதவி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வணிக வங்கிகள், மாநில நிதிக்கழகங்கள், மாநில முதலீட்டுக் கழகங்கள் ஆகியவற்றின் மூலம் பெறலாம். நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள வங்கியாளர். SFC, SIDC ஆகியோரை சந்தித்து உதவி திட்டம் குறித்து மேலும தகவல் பெறலாம்.
 4. SIDBIயின் பொது மறுநிதியளிப்பு திட்டத்தைப் பற்றி கூறவும்?
  வணிக வங்கிகள், மாநில நிதி கழகங்கள், மாநில தொழில் மேம்பாட்டுக் கழகங்கள் ஆகியவை தொடக்கநிலை, நிதி வழங்கும் நிறுவனத்தின் மூலம் SIDBI வங்கி மறு நிதியளிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. சிறு மற்றும் குறு அளவிலான துறைகளுக்கான உதவிகளைச் செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட விதிகளை தொடக்கநிலை நிதி வழங்கும் நிறுவனங்கள் பூர்த்தி செய்தல், SIDBI வங்கி இதற்குப் பதிலாக அந்நிறுவனங்களுக்கு மறு நிதியளிப்பு உதவிகளை வழங்குகின்றது.
 5. விரிவடையும் திட்டம் பற்றி கூறவும்?
  நல்ல லாபம் பெற்றுக் கொண்டிருக்கும் சிறு தொழில் துறைகள் விரிவாக்கம் செய்ய மேற்கொண்டிருப்போர், தொழில்நுட்ப தர உயர்வு, நவீனமயமாக்கல் ஆகியவை SIDBIயின் மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக உதவி பெறுபவை (மறுநிதியளிப்பு திட்டத்தின் கீழ்) நீங்கள் எங்களது உபகரண நிதித்திட்டம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் நிதித் திட்டம் ஆகியவற்றை நேரடி நிதித் திட்டம் மூலமும் மற்றும் அதே போன்ற திட்டங்கள் மறுநிதியளிப்பு திட்டங்கள் மூலமும் மேற்கண்ட விவரங்களுக்கு அணுகலாம்.
 6. நான் சிறு தொழில் மையம் ஒன்றை நடத்தி வருகிறேன். நான் மாதிரியான திட்டங்கள் நிதியளிப்பிற்குக் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்?
  SIDBI வங்கி சிறு தொழில் மையங்களுக்கு நிதி உதவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக தோடக்க நிலை நிதி வழங்கும் நிறுவனங்களான வங்கிகள், SFC ஆகியவை மூலம் வழங்கப்படுகிறது. நீங்கள் எங்களது இணையதள முகவரியில் பொருட்கள் மற்றும் சேவை பிரிவு உள்ள பகுதியில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
 7. SIDBI யிடம் இருந்து யாருக்கெல்லாம் உதவி பெற தகுதியுடையவர்?
  பொதுவாக அனைத்து வகையான அமைப்புகளும் அதாவது தனிநபர் உள்ள நிறுவனம், கூட்டு நிறுவனம், லிமிடெட் நிறுவனங்கள் ஆகியவை பல்வேறு விதமான உதவிகளே SIDBIயிடமட் இருந்து பெற்றுக் கொள்ளலாம். SIDBIயின் உதவிகள் ஏற்றுமதி, தொழிற்சாலை உற்பத்தி, போக்குவரத்து, உடல்நலம் பேணல், சுற்றுலாத்துறை மற்றும் தொழில்வல்லுநர்கள், சுயதொழில்முனைவோர் சிறு அளவிலான தொழில் வைத்திருப்போர் ஆகியோர் பெறத் தகுதியுடையவர்கள்.

ஆதாரம் : இந்தியா மார்ட்

3.1935483871
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top