கிராமப்புற பகுதிகளில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்ய நரசிம்மன் குழுவின் பரிந்துரையின் கீழ் மண்டல கிராம வங்கிகளை அரசு நிறுவியுள்ளது. இவ்வங்கிகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை விட சிறந்து விளங்கும் என்பதால் செயல்படுத்தப்பட்டது. இதன் பேரில் 1976 ஆம் ஆண்டு மண்டல வங்கிகள் சட்டம் அரசால் அமைக்கப்பட்டது. 19 மண்டல கிராம வங்கிகளை இந்த மண்டல கிராம வங்கிகள், சட்டம் 1976 - ன் கீழ், வங்கித் துறையில் ஒரு மிகப் பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேளாண்மை வர்த்தகம், வணிகம், தொழில்கள் மற்றும் இதர கிராமப்புற வளர்ச்சிகள், கடன் வசதிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய வேலையாட்கள், கைவினைப் பொருட்கள், சிறு சுயதொழில் முனைவோர் மற்றும் இதில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் இந்த மண்டல கிராம வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி மண்டல கிராம வங்கிகள் வைத்துள்ள பெரிய வணிக வங்கிகளில் ஒன்றாகும். இதன் கீழ் 30 மண்டல கிராம வங்கிகள் 13 மாநிலங்களில் இந்தியா முழுவதும் உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் உள்ள மண்டல கிராம வங்கிகளுக்கு 2000 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது.பாரத ஸ்டேட் வங்கி மட்டுமன்றி இதர வங்கிகளும் இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக செயல்படுகிறது.
இவ்வங்கியின் முக்கியப் பணி ஹரியானாவின் கிராமப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகள், கலைஞர்கள், பயிற்சி பெறாத விவசாயக் கூலிகள் மற்றும் கிராமப்புற சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவி அளித்தல். இதை (HARCOBANK) ஹர்கோ வங்கி என்றும் அழைப்பர். இவ்வங்கி ஹரியானா மாநிலத்தில் சிறப்புப் பொருளாதார இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வங்கி நிறைய வங்கி நிதி உதவிகளை தனிநபர்களுக்கு வழங்குகிறது. இது விவசாயக் கடன், விவசாயம் இல்லாத கடன், வைப்பு நிதி போன்றவற்றில் வங்கி செயல்பட்டு வருகிறது.
நபார்டு வங்கியின் முக்கிய நோக்கம் சிறு அளவிலான தொழிற்சாலைகள், வைவினைப் பொருட்கள், குடிசைத் தொழில்கள், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கடனுதவி அளித்தல். நபார்டு வங்கி கிராமப்புற பொருளாதார மேம்பாடு, தொடர்ச்சியான வளர்ச்சி போன்றவற்றிற்கு உறுதுணையாக இருக்கின்றது. நிறுவன மேம்பாடு, கிராமப்புற துறைகளுக்கு கடன் வழங்குபவர்க்கு நிதியளித்தல், ஆய்வு செய்தல், கண்காணிப்பு மற்றும் நிதித்துறை கழகத்தை மதிப்பீடு செய்தல் போன்றவற்றின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றது. நபார்டு வங்கி மேம்பாட்டிற்கு உறுதுணையாக முதல் வங்கியாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த வங்கியின் முதல் குறிக்கோள் கிராமப்புற மக்களுக்கு நிதியுதவி அளிப்பதாகும். இதை சுகோ (SUCO) வங்கி என்றே பொதுவாக அழைப்பர்.
இவ்வங்கியின் பங்கு மிகவும் முக்கியமானது. இது கிராமப்புற வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் அதன் நிறைய கிளைகளை உருவாக்கி நேரடியாக உதவும் வகையில் ஈடுபடச் செய்கிறது.
இதன் ஆரம்ப கட்ட வளர்ச்சி கிராமங்களில் மற்றும் இவ்வங்கி இந்தியாவின் வங்கித் துறை மேம்பாட்டிற்கும், கிராமப்புற வளர்ச்சிக்கும் சிண்டிகேட் வங்கி மிகப் பெரிய முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
இந்தியாவில் மண்டல கிராம வங்கிகள் கிராமப்புற வளர்ச்சிக்காக நிறைய அர்ப்பணித்துள்ளது. கிராமப்புற தொழில்துறைகள் மற்றும் கிராமப்புற தொழில்கள் மேம்பாட்டிற்கும் அதன் பொருளாதாரம் மற்றும் முதலீடு, நிதி உதவிகள் அனைத்தும் இந்தியாவின் மண்டல கிராம வங்கியின் மூலம் கிடைக்கபெற்றது.