பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன் / வங்கி மற்றும் கடன் / கட்டுபாட்டு நிறுவனங்கள் / தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD)

தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD) பற்றி அறிவோம்.

நபார்டு வங்கி

நபார்டு வங்கி தலைமை வங்கியாகத் தொடங்கப்பட்டு வேளாண்மை, சிறு தொழில்கள், கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கிராமப்புற வேலைகள் போன்றவற்றின் ஊக்குவிப்பு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான கடன் தேவைகளை வழங்குவதை முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு இதன் முக்கிய தலையங்கமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள இதர அனைத்துப் பொருளாதார வேலைகளுக்கு கடனுதவி, தொடர்ச்சியாக கிராமப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற பகுதிகள் செழுமையாக இருப்பதற்கான பாதுகாப்பு மற்றும் உறுதியையும் வழங்குகிறது. நபார்டு வங்கி கிராமப்புற செழுமைக்காக ஏற்படுத்திக் கொடுக்கும் நபராக செயல்படுவதால் அதன் மூலம்

 1. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கிராமப்புற பகுதிகளில் நிதியளித்தல்
 2. நிறுவனங்கள் மேம்பாட்டை ஊக்கிவித்தல்
 3. வாடிக்கை வங்கிகள் மதிப்பிடுதல், கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.

நபார்டு வங்கி பல முக்கிய பங்கு

 1. கிராம கடன் நிறுவனங்களில் உள்ள §வலைகளுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுதல்.
 2. கிராம மேம்பாட்டிற்காக அரசு, பாரத ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிறுவனங்களுக்கு உதவி அளித்தல்
 3. .தகுதியுள்ள வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு அவர்களின் இலக்குகளை அடைய உதவி செய்தல்.
 4. கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகளுக்கு அமைப்பாளராக செயல்படுகிறது.

அத்தியாயம் மற்றும் வரலாற்றுப் பிண்ணனி

வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டிற்காக கடன் வழங்கும் நிறுவனங்கள் திறனாய்வுக் குழு (CRAFICARD) ‚ பி.சிவராமன் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுநரிம் 1979 ஆம் ஆண்டு நவம்பர் 28 -ம் §ததி கொடுக்கப்பட்டதில், நபார்டு வங்கி ¦தாடங்க பரிந்துரைக்கப்பட்டது. இதை பாராளுமன்றத்தில் 61 / 81 விதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தக்குழு திறனாய்வு செய்த பின் புதிய ஏற்பாடுகள் தேவை என்பதையும் இதன் நோக்கங்களை அடைய தேசிய அளவில் ஒரு ¦தாலைநோக்குப் பார்வையும் அதன் கடன் தேவைகளை ஒருங்கிணைத்த மேம்பாட்டு திட்டம் மூலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. கிராம மேம்பாட்டிற்கும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அடையவும் பெரிய அளவிலான கடன் தேவைகளும், தனிப்பட்ட நிறுவன அமைப்பும் தேவைப்பட்டது. அது சமயம் பாரத ரிசர்வ் வங்கிக்கு நிறைய பொறுப்புகளும் அதன் அடிப்படை செயற்கூறுகளான மத்திய வங்கியின் பணம் மற்றும் கடன் விதிமுறைகள் மற்றும் அதே போல் அனைத்து புதிதான கடன் பிரச்சனைகளையும் பார்க்கும் அளவிற்கு இல்லாததால் நபார்டு வங்கி உதயமானது.

குறிப்பணிகள்

தொடர்ச்சியாக மற்றும் சமமான வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு ஊக்குவிப்பு, சரியான கடன் உதவி, சேவைகள், நிறுவன அமைப்பு மற்றும் இதர புதுமையான ¦தாடக்கங்கள் போன்றவை இதன் இலக்குகள்.

இதன் இலக்குகளை அடைய, நபார்டு வங்கி அதன் நோக்கங்களை கீழ்க்கண்ட துறைகளில் செலுத்தியது.

 1. கடன் செயற்கூறுகள்
 2. மேம்பாட்டு மற்றும் ஊக்குவிப்பு செயற்கூறுகள்
 3. கண்காணிப்பு செயற்கூறுகள்
 4. நிறுவனங்கள் மற்றும் கொள்திறன் கட்டமைப்பு.
 5. பயிற்சியில் அதன் பங்கு

கடன் செயற்கூறுகள்

கடன் செயற்கூறுகள், கடன் திட்டங்கள் ஒரு ஆண்டுக்கு நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான கடன் தேவைகளை கண்டறிதல், கீழ் மட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் கடன்கள் சென்றடைகிறதா என்பதை கண்காணித்தல், கிராம நிதி நிறுவனங்களுக்கு கொள்கைகள் மற்றும் செயலாற்றும் வழிமுறைகள், வெவ்வேறு திட்டங்கள் மூலம் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

நபார்டு வங்கியின் கடன் ¦சயற்கூறுகள் திட்டமிடல், ¦வளிக்¦காணறுதல் மற்றும் கடன்களை கண்காணித்தல்.

 1. கிராம நிதி நிறுவனங்களுக்கு கொள்கை மற்றும் வழிகாட்டுதல் முறைகளை அமைத்தல்.
 2. கடன் வழங்கும் குழுமங்களுக்கு கடன் வசதிகளை அளித்தல்.
 3. வருடத்திற்கு ஒரு முறை கடன் தேவைகளை அறிய அனைத்து மாவட்டத்திற்கும் அதன் கடன் தேவையைத் திட்டமிட்டு தயாரித்துக் கொள்ளுதல்.
 4. கீழ்மட்ட கிராம கடன் வளியற்ற அளவுகளை அறிந்து கண்காணித்தல்.

பண்ணைத் துறை திட்டங்கள்

 1. கிராம தத்தெடுத்தல் / கிராம மேம்பாட்டுத் திட்டமிடல்
 2. பிற்படுத்தப்பட்ட வட்டாரம்
 3. மூங்கில் பண்ணையம்
 4. எம்.ஏ.சி (MAC)
 5. உயிர் எரிபொருள்
 6. பயிர் காப்பீடு
 7. வேளாண்மை விளைபொருட்கள்
 8. எŠ.ஜி.எ.ஒய் (SGSY)
 9. பண்ணை இயந்திரமயமாக்கல்
 10. நிலம் வாங்குதல்
 11. விவசாய மருந்தகம் / வேளாண் வர்த்தக நிலைய திட்டம் (ACABC)
 12. எŠ.ஈ.எம்.எப்.ஈ.எக்ஸ் (SEMFEX)
 13. தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த தேவையான திறன் வளர்ப்பு (CAT)
 14. வேளாண் ஏற்றுமதி மண்டலம் (AEZ)
 15. கூட்டுப் பண்ணையம்
 16. உழவர் மன்றம்

கிராம பண்ணை சாரா துறை திட்டங்கள்

மறுநிதியளிப்புத் திட்டம்

மறுநிதியளிப்புத்திட்டம் (RNFS) நாட்டின் வேகமான பொருளாதார மேம்பாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ்கிறது. இது கிராமப்புற பகுதிகளில் அதிக வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க ஒரு தளமாக இருந்தது, அதனால் நபார்டு வங்கி மறுநிதியளிப்புத் திட்டத்தை (RMPS), நிதி மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு போன்றவற்றிற்கு ஒரு முக்கியப் பகுதியாக கண்டறிந்துள்ளது.

நபார்டு வங்கி மறுநிதியளிப்புத்திட்டம் மூலம் ஊக்குவிப்புத் திட்டங்களைப் பல வருடங்களாக செயல்படுத்தி, தாராளப்படுத்துதல், பரந்த மையம் மற்றும் திட்டங்களைத் தேவையான அளவிற்கு மாற்றியமைத்து செயல்படுத்துகின்றது. அதிகக் கடன் தேவையான துறைகளான சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், கைவினைத் தொழில்கள் மற்றும இதர கிராமப்புறத் தொழில்கள் மற்றும் சேவைத துறைகள், நபார்டு வங்கியின் மூலம் மறுநிதியளிப்பு வசதிகள் கிடைக்கப்பெறும் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டுக் கடன்

நபார்டு வங்கி மறுநிதியளிப்பை முதலீட்டுக் கடன்கள் மூலம் தகுதியுள்ள வங்கிகளுக்கு உற்பத்தி, செயலகம் மற்றும் சேவைத் துறை போன்ற செயல்களை கிராம பண்ணை சாரா துறையின் கீழ் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு மறுநிதியளிப்புத் திட்டங்கள் நபார்டு வங்கியின் கீழ் வருபவைகள், மொத்த உற்பத்தி செயலகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சேவை செயல்கள் சிறு தொழில்கள் துறைகளின் மூலம் கிராமம், குடிசை மற்றும் சிறு தொழில்கள், கிராம கைவினைஞர்கள் போன்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

பண்ணை சாரா துறையின் கீழ் வங்கிகளுக்கு மறுநிதித் திட்டம்

வங்கிகளுக்கு மறுநிதியளிப்புக் கடன்களை கீழ்க்கண்ட துறைகளின் மூலம் வழங்கப்படும்.

சுய மறுநிதி வசதி (ARP) ஒரு சில பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் வரை நபார்டு வங்கியிடம் திட்ட வடிவை முன்பாக சமர்ப்பிக்காமலேயே பெற்றுக் கொள்ளலாம்.

திட்டத்தை அனுமதிக்கும் முன், வங்கிகள் திட்டத்தை நபார்டு வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் கடன் வழங்குவதற்கு முன்பாக அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.

(i) சுய மறுநிதி வசதியின் கீழ் கீழ்க்கண்ட மூன்று திட்டங்கள் உள்ளது.

 1. தொழில் கடன் திட்டம் (ELS)
 2. சிறிய சாலை மற்றும் நீர் போக்குவரத்து இயக்குநர்கள் திட்டம் (SRWTO)
 3. விளிம்புப் பணத்திற்கு மென் கடன் உதவி திட்டம் (SLAMM)

தகுதியுள்ள நிறுவனங்கள்

 1. வணிக வங்கிகள் (CBS)
 2. மண்டல கிராம வங்கிகள் (RRB)
 3. மாநில கூட்டுறவு வங்கிகள் (SCB) / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCB)
 4. மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் (SCARDB) / தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (PCARDB)
 5. தொடக்க (நகர்ப்புற) கூட்டுறவு வங்கி (PUCB)

மேம்பாட்டு மற்றும் ஊக்குவிப்பு செயற்கூறுகள்

வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டிற்கு கடன் ஒரு முக்கியக் காரணியாக விளங்குகின்றது. ஏனெனில் முதலீட்டுப்பணி மற்றும் தொழில்நுட்ப தரத்தை உயர்த்துவதற்கு இது மிகவும் தேவைப்படுகிறது. கடன் வழங்கும் துறைகளான கிராம நிதி நிறுவனங்களை வலுப்படுத்துவது என்று நபார்டு வங்கியால் கண்டறியப்பட்டுள்ளது. போதுமான மற்றும் நேரத்திற்கு ஏற்றாற் போல் கடன் தேவைகள் இருப்போர்க்கு கூட்டுறவு கடன் கட்டமைப்பு மற்றும் மண்டல கிராம வங்கிகள் மூலம் நிறைய முயற்சிகளை எடுத்து வலுப்படுத்துகிறது.

மேம்பாட்டு செயற்கூறுகள்

 1. கண்ணோட்டம்
 2. மேம்பாட்டு முனைப்பு
 3. கடன் திட்டமிடல்
 4. நீர்ப்பிடிப்பு பகுதி மேம்பாட்டு நிதி
 5. சிறப்புத் திட்டங்கள்
 6. வடகிழக்குப்பகுதி
 7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
 8. பாலினம் மேம்பாடு
 9. வாடி சார்ந்த வாழ்வியல் மேம்பாடு

உதவி செயற்கூறுகள்

 1. சிறு கடன் புதுமைகள்
 2. கிசான் கடன் அட்டை
 3. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதி
 4. சுவரோஜ்கார் கடன் அட்டை
 5. உழவர் மன்ற விழா
 6. அரசு மானியத் திட்டங்கள்

கண்காணிப்பு செயற்கூறுகள்

கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.

கண்ணோட்டம்

வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றிற்கு கடனுதவிகள் வழங்குதல் மற்றும் நாட்டில் உள்ள பெரிய நிதி நிறுவனங்களுக்கு கடன் தேவைகளுக்கு மறுநிதி அளித்தல் போன்றவற்றிற்கு தலையங்க வங்கியாக செயல்படுகின்றது. நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் மண்டல கிராம வங்கிகளுக்கு (RRB) பாரத ரிசர்வ் வங்கியுடன் இணைந்து சில கண்காணிப்பு செயற்கூறுகளை பங்கிட்டுச் செய்கிறது.

 1. வங்கிகள் விதிமுறைச் சட்டம் 1949 - ன் கீழ், மண்டல கிராம வங்கிகள் (RRB) மற்றும் கூட்டுறவு வங்கிகள் (நகர்ப்புற / தொடக்க கூட்டுறவு வங்கிகளைத் தவிர) ஆகியவறை ஆய்வு செய்தல்.
 2. தானாக முன் வந்து மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் (SCARDB) மற்றும் தலையங்க கடனில்லா கூட்டுறவு சங்கங்களை ஆய்வு செய்தல்.
 3. துறைகள் ஆய்வு, முறைப்படியான ஆய்வு, கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள் இருப்பினும் செய்யப்படும்.
 4. மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகளின் புதிய கிளைகள் தொடங்குவதற்கு பாரத ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகள் செய்யும்.
 5. கடன் கண்காணிப்பு ஏற்பாடுகளை எஸ்.சி.பி (SCB) மற்றும் சி.சி.பி (CCB) ஆகியவற்றில் நிர்வகித்தல்.

நிறுவனங்கள் கட்டமைப்பு

 1. கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிக்கு வளர்ச்சித் திட்டங்களை தாங்களாகவே தயார் செய்து கொள்ள உதவியளித்தல்.
 2. மாநில அரசுகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றுடன் குறிப்பிட்ட செயல்திட்டத்துடன் வங்கி வேலைகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளுதல்.
 3. அமைப்பு மேம்பாட்டு குறுக்கீடுகள் (ODI), தரமான பயிற்சி நிறுவனங்களான வங்கியாளர்களின் கிராம மேம்பாட்டு நிறுவனம் (BIRD) லக்னோ, தேசிய வங்கி அலுவலர் கல்லூரி லக்னோ, வேளாண்மை வங்கிக் கல்லூரி, பூனே போன்றவை.
 4. கூட்டுறவு வங்கிகள் பயிற்சி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தல்.
 5. வணிக வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மூத்த மற்றும் இடைநிலையில் உள்ள நிர்வாகிகளுக்குப் பயிற்சி அளித்தல்.
 6. விகாஸ் தன்னார்வ வாகினி / விவசாயிகள் மன்றம் மூலம் கடன் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற கொள்கையை அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 7. நவீன மேம்பாட்டு தகவல் முறைகள், கணிணிமயமாக்கல், மனித வள மேம்பாடு போன்றவைகளை ஏற்படுத்த கூட்டுறவு வங்கிகளுக்கு நிதியுதவி அளித்தல்.

நபார்டு வங்கி மற்றும் பயிற்சி

 1. தேசிய வங்கி அலுவலர் கல்லூரி, லக்னோ.
 2. தேசிய வங்கி பயிற்சி நிலையம், லக்னோ.
 3. வட்டார பயிற்சி நிலையம், ஹைதராபாத்.
 4. மண்டல பயிற்சி நிலையம், போல்பூர்.
 5. கிராம மேம்பாட்டு வங்கியாளர் நிறுவனம் (BIRD), லக்னோ.

குறிக்கோள்

நபார்டு வங்கி ஒரு சில குறிப்பிட்ட விதிமுறைகள், முன்னுரை உள்ள விதிகளின் கீழ் தொடங்கப்பட்டது. இதில் வேளாண்மை ஊக்குவிப்பிற்குக் கடனளித்தல், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கிராமப்புற பகுதிகளில் உள்ள பொருளாதார வேலைகள் அனைத்திற்கும் ஐ.ஆர்.டி.பி (IRDP) திட்டத்தை மேம்படுத்தி மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு வளமான வாழ்வை ஏற்படுத்தி பாதுகாப்பு அளித்தல் ஆகியவை இதன் முக்கிய குறிக்கோள்.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் நபார்டு வங்கியின் முக்கிய குறிக்கோள்கள் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவை.

 1. கொள்கை அளவிலான அனைத்து முடிவுகள், வேளாண்மை, சிறு தொழில்கள், குடிசைத் தொழில் போன்றவற்றிற்குக் கடனளிக்க செயல் திட்டங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இதர பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு நபார்டு வங்கி முதன்மை மற்றும் தலையங்க அமைப்பாக செயல்படுகிறது.
 2. நிறுவன கடன்களான நீண்டகாலக் கடன் தவணை, குறுகிய காலக் கடன் தவணை கிராமப்புற பகுதி முன்னேறத்திற்கான திட்டங்களில் இவ்வங்கி மாற்று நிதி நிறுவனமாக செயல்படுகிறது.
 3. மத்திய அரசின் அங்கீகாரம் இருப்பின் இவ்வங்கி எந்த நிறுவனத்திற்கும் நேரடி கடன் வழங்கும்.
 4. இவ்வங்கி பாரத ரிசர்வ் வங்கியுடன் மிகவும் இணக்கமான உறவுகளை வைத்துள்ளது.

பெரும்பான்மையான செயல்கள்

 1. வேளாண்மை மற்றும் இதர செயல்கள் மேம்பாட்டிற்கு வங்கிக் கடன் மூலம் ஆற்றல் மிக்க ஒன்றைக் கண்டறிந்து திறமையுள்ள கடன் திட்டத்தை தயார் செய்தல்.
 2. கிராமப் பகுதிகளில் முதலீடு மற்றும் உற்பத்தித் தேவைகளுக்கு மறுநிதியை வங்கி மூலம் கடன் வழங்க நீட்டியளித்தல்.
 3. கிராம உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசு / அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்தல்.
 4. அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் இதர முறைப்படி இல்லாத நிறுவனங்களுக்கு கடன் புதுமைகளை பெற உதவி செய்தல்.
 5. வங்கி முறை சேவைகள் சென்றடையாத கிராம ஏழைகளுக்கு, கடன் உதவி திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து உதவி செய்தல்.
 6. நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்தி உற்பத்தித்திறன் மற்றும் லாபத்தை மானாவாரி விவசாயத்தில் தொடர்ச்சியாகப் பெறும் வகையில் ஊக்குவித்தல்.
 7. நேரில் சென்று கூட்டுறவு வங்கிகள், மண்டல கிராம வங்கிகளை ஆய்வு செய்தல் மற்றும் நேரில் செல்லாமலும் அதன் வளர்ச்சியை ஆய்வு செய்தல்.

பங்கு மற்றும் செயற்கூறுகள்

வேளாண்மை மற்றும் இதர பொருளாதார வேலைகளுக்கு கிராமப்புற பகுதிகளில் கடன் வழங்குதல் மற்றும் அதற்குத் தேவையான அனைத்து வேலைகளான கொள்கைகள், திட்டமிடல், போன்றவற்றிற்கு நபார்டு வங்கி தலையங்க நிறுவனமாகச் செயல்படுகிறது.

 1. கிராமப்புற பகுதிகளுக்குத் தேவையான மேம்பாட்டு வேலைகளுக்கு முதலீடு மற்றும் உற்பத்திக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மறுநிதி வழங்கும் தலையங்க அமைப்பாக நபார்டு வங்கி விளங்குகிறது.
 2. நிறுவன அமைப்புகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளான மறுவாழ்வுத் திட்டம், கடன் மாற்றி அமைத்தல், பயிற்சி அளித்தல், கடன் வழங்கும் முறைகளை மேம்படுத்துதல், கண்காணித்தல் போன்ற அனைத்தும் செய்து வருகிறது.
 3. அனைத்து நிறுவனங்களுக்கும் கிராம மற்றும் மேம்பாடு செயல்களில் ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய அரசு, மாநில அரசு, ரிசர்வ் வங்கி இதர தேசிய அளவில் கொள்கை அமைக்கும் நிறுவனங்களுடன் நல்ல உறவுகளை மேம்படுத்தி வைத்திருத்தல்.
 4. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்குத் தேவையான கிராமக்கடன் திட்டங்களை வருடத்திற்கு ஒரு முறை தயாரித்து கடன் தேவைகளை நிதி நிறுவனங்களுக்கு வழங்குதல்.
 5. நபார்டு வங்கி அளித்த மறுநிதி அனைத்திற்கும் கண்காணிப்பு மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்து கொடுத்தல்.
 6. கிராம வங்கி, வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவித்தல்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. வங்கி நிறுவனம் என்றால் என்ன?
பி.எம்.எல்.ஏ (PMLA) 2002 - ன் கீழ் வங்கி நிறுவனம் என்பது கூட்டுறவு வங்கி அல்லது வங்கி ஒழுங்குமுறை விதி 1949 - ன் கீழ்,  எந்த வங்கி / வங்கிகள் நிறுவனம் அந்த விதியின் கீழ், துறை 51 -ல் அடங்கும். வங்கிகள் நிறுவனத்தில் வருபவை.

 1. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் இந்திய வங்கிகள் மற்றும் தனியார் வெளிநாட்டு வங்கிகள்
 2. அனைத்து கூட்டுறவு வங்கிகளும் அதாவது தொடக்க கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள்.
 3. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் உதவி மற்றும் மானியம் பெறும் வங்கிகள்
 4. மண்டல கிராம வங்கிகள்.

2. நிதி நிறுவனம் என்றால் என்ன?
பி.எம்.எல்.ஏ (PMLA) 2002 - ன் கீழ் நிதி நிறுவனம் என்றால் விதி (C) - ன் துறை 45 - ஐ பாரத ரிசர்வ் வங்கி விதி, 1934 (2 -ன் 1934) மற்றும் சிட் நிதி நிறுவனம், கூட்டுறவு வங்கி வீட்டு நிதி நிறுவனம் மற்றும் வங்கியில்லா நிதி நிறுவனம் அடங்கும். நிதி நிறுவனத்தின் கீழ் வருபவை.

 1. நிதி நிறுவனம் என்பது வரையறுக்கப்பட்ட துறை 45-1ன் பாரத ரிசர்வ் வங்கி விதியின் கிழ் வருபவை. பாரத ரிசர்வ் வங்கி அதன் கீழ் வரும் 3 அனைத்திந்திய நிதி நிறுவனங்களான எக்சிம் (EXIM) வங்கி, நபார்டு, எஸ்.ஐ.டி.பி.ஐ (SIDBI), ஐ.டி.எப்.சி (IDFC) லிமிடெட், ஐ.ஐ.பி.ஐ (IIBI) லிமிடெட் மற்றும் டி.எப்.சி.ஐ (TFCI) லிமிடெட் ஆகியவற்றை கண்காணிக்கும்.
 2. காப்பீட்டு நிறுவனங்கள்
 3. வாடகைக்கு வாங்கும் நிறுவனங்கள்
 4. சிட் நிதி நிறுவனங்கள் சிட் நிதி விதியின் கீழ் வரையறுக்கப்பட்டது போல்
 5. கூட்டுறவு வங்கிகள்
 6. வீட்டு நிதி நிறுவனங்கள், தேசிய வீட்டு வங்கி விதியின் கீழ் வரையறுக்கப்பட்டவைகளான எச்.டி.எப்.சி (HDFC) வங்கிகள் போன்றவை.
 7. வங்கிகள் இல்லா நிதி நிறுவனங்களான துறை 45-1 பாரத ரிசர்வ் வங்கி விதியின் கீழ் வரையறுக்கப்பட்டவைகளான தனியார் நிதி நிறுவனங்கள் இயந்திரம், மற்றும் பொது /வாடகைக்கு வாங்கும் நிறுவனங்கள், வாடகைக்கு விடும் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை.

3. சிட் நிதி என்றால் என்ன?

சிட் நிதி நிறுவனம் என்பது நிறுவன மேலாண்மை, கண்காணிப்பு அல்லது நடத்துதல் போன்றவை. முகவர் அல்லது அதில் இருக்கும் ஏதேனும் ஒரு பதவி சிட்கள் துறை 2 சிட் நிதிகள் விதி, 1982 - ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவை.

4. கூட்டுறவு வங்கிகள் என்றால் என்ன?

கூட்டுறவு வங்கி என்பது துறை நிதி (பழைய) துறை 2 - ன் கீழ் வரும் வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் அத்தாட்சி கழக விதி, 1961.

5. வீட்டு நிதி நிறுவனம் என்றால் என்ன?

வீட்டு நிதி நிறுவனம் என்பது விதி (டி) துறை 2 - ன் கீழ் வரும் தேசிய வீட்டு வங்கித் துறை 1987.

6. வங்கியில்லா நிதி நிறுவனம் என்றால் என்ன?

வங்கியில்லா நிதி நிறுவனம் என்பது விதி (எப்) துறை 45 (ஐ) - ன் கீழ் பாரத ரிசர்வ் வங்கி விதி, 1934.

ஆதாரம் : http://www.nabard.org

3.16981132075
Mahendiran Jul 24, 2020 07:18 AM

மட்டு தீவனம் தயாரிக்கலாம் இருக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கள்

Kurunji-NGO Oct 14, 2019 11:42 AM

மிகவும் மக்களூக்கு பயனுள்ள திட்டங்கள்

கோபி.ப Jul 09, 2019 11:10 AM

நான் எங்கள் கிராமத்தில் இயற்க்கையை மீட்டெடுக்க் உதவி செய்யவாா்களா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top