பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கால்நடை காப்பீடு

கால்நடை துறை, பால்வள மற்றும் மீன்வளத்துறை, வேளாண் அமைச்சகம் ஆகியோர் வழங்கிய பல்வேறு கூறுகள் மற்றும் கால்நடை காப்பீட்டு திட்டத்திற்கு தகுதியுள்ள மாவட்டங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளன.

கால்நடை காப்பீட்டு திட்டம்

மத்திய அரசால் அளிக்கப்பட்ட, கால்நடை காப்பீட்டு திட்டமானது பத்தாவது ஐந்து ஆண்டு திட்டத்தில் 2005 -2006 மற்றும் 2006-07 லும், 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2007-08 லும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் மாதிரி அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்த திட்டமானது தற்போது 300 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நிறுவப்பட்டு வருகிறது.

இந்த காப்பீட்டு திட்டமானது  இரட்டை நோக்கத்துடன்  ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும்.  மற்றொன்று, கால்நடை காப்பீட்டின் முக்கியவத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து, திட்டத்தை பிரபலப்படுத்தி, கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதாகும்.

இந்த திட்டத்தின்கீழ், உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீட்டிற்கான பிரிமிய கட்டணத்தில் 50% வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த மானியச் சலுகை, ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகள் வீதம், அதிகபட்சமாக  3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும்  (கோவாவை தவிர்த்து) அந்தந்த மாநில கால்நடை மேம்பாட்டு கழகத்தின் மூலம் அமுல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வரும் கால்நடைகள் மற்றும் பயனாளிகளை தேர்தெடுக்கும் விதம்.

  • உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகிய கால்நடைகள் இந்த திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யப்படும். உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் மற்றும் எருமைகள் என்பது, ஏற்கனவே ஒரு கன்று ஈன்ற, தற்போது பால் கறந்துகொண்டிருக்கும், கறவை வற்றிய மற்றும் கர்ப்ப காலத்திலுள்ள அனைத்து கால்நடைகளையும் குறிக்கும்.  இப்படிப்பட்ட கால்நடைகளுக்கு, அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு  அளிக்கப்படுகிறது.
  • வேறு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் கால்நடைகள் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அளிக்க இயலாது.
  • மானியமானது ஒரு பயனாளிக்கு  இரண்டு விலங்குகளுக்கு மூன்று வருடத்திற்கு அளிக்கப்படும்.
  • வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்பட்சத்தில், குறைவான செலவில் அதிக காப்பீட்டு பலன் பெற, விவசாயிகள், மூன்று ஆண்டுகளுக்கான திட்டத்தில் சேருவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். எனினும், விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு காப்பீடு செய்துகொள்ள விரும்பினால், அதையும் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அதே கால்நடைக்கு மீண்டும் காப்பீடு செய்யும்போது திட்ட நடைமுறையில் உள்ளபடி, உரிய காப்பீட்டு மானியம்  தரப்பட வேண்டும்.

கால்நடைகளின் சந்தை விலையை நிர்ணயித்தல்

சந்தையின் அதிக பட்ச விலைக்கு, காப்பீடு அளிக்கப்படும். இதனை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய மூவரும் சேர்ந்து நிர்ணயம் செய்வர்.

காப்பீடு அளிக்கப்பட்ட கால்நடையை அடையாளம் காணுதல்

காப்பீட்டை கோரும் போது, கால்நடையை சரியாக அடையாளம் காண வேண்டும்.  இதனால் காது டேக் இடுவது, சரியாக இருக்க வேண்டும்.  வழக்கமான முறையில் காதில் டேக் இடுதல் அல்லது மைக்ரோசிப் இடுதல் ஆகியவற்றில் ஒன்றை காப்பீடு திட்டத்தை எடுக்கும் போது செய்ய வேண்டும்.   இதற்கான செலவை காப்பீட்டு  கழகங்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.   இவற்றை பராமரிப்பது பயனாளியின கடமையாகும்.  இதன் தரம் மற்றும் விதம் காப்பீட்டு கழகம் மற்றும் பயனாளி இருவராலும் ஒத்துக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.

காப்பீட்டு காலத்தில் சொந்தக்காரர் மாறுதல்

காப்பீட்டு காலத்தில் கால்நடைகளை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடம் கொடுத்தாலோ பயனாளியின் அங்கீகாரம் புதிய சொந்தகாரருக்கு மாற்றப்பட வேண்டும். எனவே, காப்பீட்டு கழகத்தில் காப்பீட்டுக்கு நுழையும்போதே இதற்கான விதிமுறைகளை தீர்வு செய்து கொள்ள வேண்டும்.

காப்பீட்டு காலத்தில் சொந்தக்காரர் மாறுதல்

இழப்பீடு தரும் சூழல் நேர்ந்தால், காப்பீடு செய்யப்பட்ட தொகையை, தேவையான ஆவணங்கள் அளித்த 15 நாட்களுக்குள் கட்டாயம் அளிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனத்துடனான முதல் தகவல் அறிக்கை, காப்பீட்டு பாலிசி ஆவணம், இழப்பீடு கோரும் படிவம் மற்றும் இறந்த கால்நடையின் பிரேதப் பரிசோதன அறிக்கை ஆகிய நான்கு ஆவணங்களின் அடிப்படையிலேயே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம். கால்நடைகளை காப்பீடு செய்யும் போதே காப்பீட்டு கழகம், காப்பீட்டை கோருவதற்கான சரியான வழிமுறைகளையும், என்னென்ன சான்றுகள் வேண்டும் என்றும், இவைகளை பயனாளிகளுக்கு பாலிசி எடுக்கும் போதே வழங்கவும், செய்ய வேண்டும்.

கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையிலுள்ள 300 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியல்

மூலம் : http://dahd.nic.in

Filed under:
2.97101449275
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top