பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பயிர் காப்பீடு

இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் மூலம் வழங்கப்படும் காப்பீட்டு தயாரிப்புகளின் இணைப்புகளை வழங்குகிறது.

வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் (WBCIS)

வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன ?

மழைவீழ்ச்சி, வெப்பநிலை, குளிர், ஈரப்பதம் போன்ற காலநிலை காரணிகளால் ஏற்படும் பாதகமான சூழ்நிலைகளால், விவசாயிக்கு பயிர் இழப்பு ஏற்படும் பொழுது, காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் பெருநஷ்டத்தை மட்டுபடுத்துவதே, வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டத்தின் நோக்கமாகும்.

பயிர் காப்பீட்டு திட்டத்திலிருந்து எவ்விதத்தில் இது மாறுபடுகிறது?

பயிர் காப்பீட்டு திட்டமானது, மகசூலில் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும். வானிலை அடிப்படையான காப்பீட்டு திட்டமானது, காலநிலை காரணிகளால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும். மகசூல் மற்றும் கால நிலை காரணிகளை தொடர்புபடுத்தி, கால நிலை காரணி மாறுநிலை குறிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாறுநிலை குறிகளுக்கு மேல், காரணிகளின் அளவு செல்லுமேயானால், பயிர்கள் பாதிக்க தொடங்குகிறது. ஆகவே இக்காரணிகளை கொண்டு பயிரிட்டவருக்கு, கருதப்படும் இழப்பினை அளிப்பதற்கு, இழப்பீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இன்னொரு வகையில் கூறவேண்டுமென்றால், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் மகசூலிற்கு பதிலாக, காலநிலை காரணிகளை கொண்டு பயிரிட்டவருக்கான இழப்பீட்டு தொகையை அளிக்கிறது.

வானிலை காப்பீட்டு திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள இடங்கள் எவை?

ஆந்திரபிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகம், மத்தியபிரதேசம், மஹராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வானிலை காப்பீட்டு திட்டம், கரீப் 2003லிருந்து முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டு திட்டத்திலிருந்து எவ்விதத்தில் இது மாறுபடுகிறது?

வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டமானது, விவசாயிகளுக்கு, பாதகமான காலநிலை காரணிகளால் ஏற்படும் சேதத்தை ஈடுகட்டும் விதத்தில் தனிசிறப்பு வாய்ந்தது. இத்திட்டம் கரீபில் ஏற்படும் பாதகமான மழை வீழ்ச்சிக்கும் (குறைவான மற்றும் அதிகமான) மற்றும் ரபியில் ஏற்படும் பாதகமான காலநிலை காரணிகளான குளிர், வெப்பம், ஈரப்பதம் மற்றும் பருவமற்ற மழைக்கும், காப்பீடு அளிக்கிறது. இது மகசூல் உத்திரவாத காப்பீடு திட்டமல்ல.
இரு திட்டங்களின் ஒப்புமை:


வரிசை
எண்

தேசியவேளாண்மை பயிர்
காப்பீட்டுதிட்டம்

வானிலை அடிப்படையிலான
பயிர் காப்பீட்டுதிட்டம்

1.

எல்லாவிதமான இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு (வறட்சி, வெள்ளம், பனிவீழ்ச்சி, பூச்சிதாக்குதல்) ஈடு செய்யும்

காலநிலை காரணிகளான மழைவீழ்ச்சி, குளிர், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு. பயிர் சேதத்தால் இவைகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

2.

பழைய 10வருட மூல குறிப்புகள் இருந்தால் எளிதாக வடிவமைக்கலாம் .

காலநிலை குறியீடுகள் மற்றும் காலநிலை குறியீடுகளை மகசூல் நஷ்டத்திற்கு தொடர்பு படுத்துதலில் உண்டான தொழில்நுட்ப சவால்கள்

3.

உயர் அடிப்படை இடர்பாடு வரவு (குறிப்பிட்ட இடத்திற்கான (வட்டம்) தெக்சில்) மகசூல் மற்றும் விவசாயின் மகசூலில் உள்ள வித்தியாசம்

காலநிலை சம்பந்தப்பட்ட இடர் வரவு மழைக்கு அதிகமாகவும் மற்ற குளிர், வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றிற்கு மிதமாகவும் இருக்கும்

4.

குறிக்கோள் மற்றும் தெளிவு தன்மையை, ஒப்பிடும்போது குறைவு

குறிக்கோள் மற்றும் தெளிவுதன்மையை ஒப்பிடும்போது அதிகம்

5.

தரத்தில் ஏற்படும் நஷ்டம் கருத்தில் கொள்ளபடமாட்டாது

காலநிலை குறியீடுகள் மூலம் இந்த நஷ்டம் கருத்தில் கொள்ளப்படுகிறது.

6.

நஷ்ட மதீப்பீடு தொகை அதிகம்

நஷ்ட மதிப்பீடு தொகை இல்லை

7.

கோரிக்கை தீர்வில் காலதாமதம் ஆகும்

வேகமான கோரிக்கை தீர்வு

8.

கோரிக்கையின் மாண்யத்திற்கு உதவி புரிவதால், அரசாங்க நிதி உத்திரவாதம் திறந்த நிலையில் உள்ளது.

தவணை கட்டணத்திற்கு உதவி செய்வதால், முன்பாகவே அரசாங்க பொருளாதார உத்திரவாதம் கணிக்கப்படுகிறது.

இந்த காப்பீட்டு திட்டம் இயங்கும் முறை என்ன?

இந்த திட்டமானது, பரப்பு முறை (Area Approach) எனும் கோட்பாட்டினை கொண்டுள்ளது. எல்லாவற்றிலும் ஒத்துப்போவதாக கருதப்படும் ஒரு பரப்பினை, மேற்கோள் பரப்பாக Reference unit area) கருதி, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த பரப்பானது, அரசாங்கத்தால் பயிர் காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு பயிர் காப்பீட்டாளருக்கும் இப்பரப்பிற்கு ஒத்துப்போகும் வகையில் கோரிக்கைகள் மதிப்பிடப்படும். ஒவ்வொரு மேற்கோள் பரப்பும், மேற்கோள் வானிலை மையத்துடன் (Reference Weather Station) இணைக்கப்பட்டு, அந்த நிலையத்தின் காலநிலை குறிப்புகளை பெற்று, கோரிக்கைகளுடன் உட்படுத்தப்படும். நடப்பு பருவத்தில் ஏதேனும் பாதகமான காலநிலை ஏற்பட்டு இருந்தால், இத்திட்டத்தின் நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுக்கு உட்பட்டு, இழப்பீட்டு அமைப்பிற்கு ஏற்றவாறு, காப்பீட்டு தொகை அளிக்கப்படும். பரப்புமுறை அணுகுமுறை தனிப்பட்ட அணுகுமுறையிலிருந்து மாறுபட்டது. தனிப்பட்ட அணுகுமுறையில் இழப்பீடானது தனிப்பட்ட காப்பீட்டு விவசாயிகளின், நஷ்டத்தை மதிப்பீடு செய்யும். மேற்கோள் வானிலை நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் நிலவும் வானிலையானது, அதனுடன் இணைக்கப்பட்ட பண்ணைகளில் நிலவும் வானிலைப்போலவே இருக்கும். ஒரே நாளில் வானிலையானது (குறிப்பாக மழைவீழ்ச்சி) சிறிய அளவிலேயே வேறுபட வாய்ப்பு உண்டு. ஆனால் பதினைந்து நாட்களுக்கோ, மாதத்திற்கோ அல்லது ஒரு பருவத்திற்கோ கணக்கிடப்படும்போது இந்த வேற்றுமை மறைந்துவிடும். எனவே ஒரு வட்டத்தில் உள்ள மேற்கோள் வானிலை மையத்தின் வானிலை, மேற்கோள் பரப்பிலுள்ள அனைத்து பண்ணைகளின் வானிலையை குறிப்பதாக அமையும்.

இந்த திட்டத்தை வாங்குவதற்கு தகுதியானவர்கள் யார்?

அனைத்து விவசாயிகளும் (வார சாகுபடியாளர் மற்றும் குத்தகை சாகுபடியாளர் உட்பட) இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். கடன் நிறுவனங்களிடமிருந்து, பயிருக்கான கடனை பெற்றவர்களுக்கு இத்திட்டம் அவசியமாகும். மற்றவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப.

காப்பீட்டு பாதுகாப்பு தொகை (உறுதிதொகை) கணக்கிடுமுறை

காப்பீட்டாளர் பயிரை விளைவிக்க தேவையான உட்பொருட்களுக்கு ஆகும் செலவே, உறுதி தொகை ஆகும். மாநில அரசாங்கத்தின் வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னர், AIC ஆனது, பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே, பயிரை விளைவிப்பதற்கான உறுதி தொகையை அறிவித்து விடும். இது பயிர்கள் மற்றும் RUA பொறுத்து மாறுபடும். மேலும் உறுதி தொகையானது, காலநிலையின் காரணிகளின் முக்கியதுவத்தை பொறுத்து, பிரித்து வழங்கப்படும்.

காப்பீட்டுத் தொகை

எதிர்பார்க்கப்பட்ட நஷ்டத்தை பொறுத்து, காப்பீட்டுத் தொகை அமைகிறது. எதிர்பார்க்கப்பட்ட நஷ்டமானது, 25லிருந்து 100வருடங்களுக்கு உட்பட்ட காலநிலை காரணிகளை, கொண்டு பெறப்படுகிறது. காப்பீட்டு தொகையானது, பயிர் மற்றும் RUA-வை பொறுத்து மாறுபடும். விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையில், உச்சவரம்பிட்டு அதற்குமேல் செல்லும் காப்பீட்டு தொகையை, மத்திய அரசும் மாநில அரசும் 50:50 விகிதத்தில் பிரிமீயம் தொகையினை பகிர்ந்து கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளால் செலுத்தப்படும்,பயிர் வகைகளுக்கான பிரிமீயம் தொகை.
உணவு பயிர்வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள்

வ.எண்

பயிர்கள்

காப்பீட்டுவிவசாயிகள் கட்டவேண்டிய பிரிமீயம் தொகை

1.

கோதுமை

1.5% அல்லது தொகைக்கான வட்டி, இவை இரண்டில் குறைவானது.

2.

மற்ற பயிர்கள் (மற்ற தானியங்கள், சிறு தானியங்கள் பயிறு வகைகள் எண்ணெய் பயிர்கள்)

2.0% அல்லது தொகைக்கான வட்டி, இவை இரண்டில் குறைவானது.

ஒராண்டு வணிக தோட்டக்கலை பயிர்கள்

வ.எண்

பிரிமீயம்

மானியம் பிரிமீயம்

1.

2% வரை

மானியம் இல்லை

2.

>2 - 5%

25%, 2% நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.

3.

>5 - 8%

40% , 3.75% நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.

4.

>8%

50%, 4.8% , 6%, நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.

நிகர பிரிமீயமானது, காப்பீட்டாளர் கடன் வாங்கி இருப்பின், கடன் கொடுத்த நிறுவனத்தால் கட்டப்பட வேண்டியதாகும்.

கார்கால பயிருக்கான வானிலை அடிப்படையிலான காப்பீடு

இத்திட்டத்தின் தனிச்சிறப்புகள்

 • டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை, குளிர், வெப்பநிலை, ஈரப்பதம், மழைவீழ்ச்சி, போன்ற காலநிலை காரணிகளால் ஏற்படும் பாதகமான நிலையிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
 • கோதுமை, உருளைக்கிழங்கு, பார்லி, கடலை போன்ற இனத்துக்குரிய காப்பீட்டு திட்டம்
 • அதிகபட்ச கடன் தொகையானது, உற்பத்தி செலவை பொறுத்தும், பயிரை பொறுத்தும் மாறுபடும்.
 • வேகமான இழப்பீட்டிற்கான தீர்வு குறிப்பாக 4 - 6 வாரங்களுக்குள்.

உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், கோதுமை, கடுகு, கடலை, உருளை, பார்லி, மசூர், கொத்தமல்லி ஆகிய பயிர்கள் ரபிகால பயிர்களாக பயிரிடப்படுகிறது. இப்பயிர்களானது அதிக மழை, குளிர் மாறுபட்ட வெப்பநிலை ஆகியவற்றால் எளிதில் தாக்கப்படும். இத்திட்டமானது, தனிபட்ட மற்றும் நிறுவனங்கள், பாதகமான காலநிலைகளால் பாதிக்கப்படும்போது, மிகச்சிறந்த இடர் மேலாண்மையை அளிக்கிறது. இந்த காலநிலை குறியீட்டு காப்பீட்டு திட்டத்தின் நன்மைகள்;
1. பாதகமான குறியீட்டு காலநிலைகளை தனித்தனியாக உறுதிபடுத்தவும், அளவிடவும் உதவுகிறது.
2. இழப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்குள், இழப்பீட்டு தொகை, காப்பீட்டாளருக்கு அளிக்கப்படும்.
3. சாகுபடியாளர்கள், யாராக இருப்பினும், குறு / சிறு விவசாயி, நில சொந்தக்காரர்கள், குத்தகைகாரர்கள், வார சாகுபடியாளர்கள் யாராக இருப்பினும் இத்திட்டத்தை பெறலாம்.

காப்பீட்டு உறுதி

இந்தியாவின் வேளாண்மை காப்பீட்டு குழுமமானது, பின்வரும் காரணங்களால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பிற்கு, இழப்பீட்டு தொகையை வழங்கும். குறியீட்டு வெப்ப அளவிற்கு மேலான கீழான வெப்பம், 4 ° C கீழான குளிர் மற்றும் குறியீட்டு அளவிற்கு அதிகமான மழை வீழ்ச்சி மற்றும் ஒளிமிக்க சூரிய நேரங்களுக்கான குறியீட்டு அளவிற்கு மேல்.

காப்பீட்டு காலம்

இந்த திட்டத்தின் காலமானது டிசம்பர் முதல் ஏப்ரல் வரை. எனினும் பயிர் மற்றும் கால நிலையை பொறுத்து காலம் மாறுபடும்.

இழப்பீடு கோரும் விதம்

ஒரு பரப்பின், அதிகபட்ச வெப்பநிலை, குறைந்தபட்ச வெப்பநிலை, மழைவீழ்ச்சி மற்றும் ஒளிமிக்க சூரிய மணிநேரங்களை தகுந்த நிறுவனங்களிடமிருந்து பெற்றபின், இழப்பீடானது பயிர்களுக்கு தகுந்தவாறு தன்னிச்சையாக வழங்கப்படும். இழப்பீடு கொடுக்கும் நிலையில், அந்த பரப்பில் உள்ள விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், ஒரேமாதிரியான தொகை வழங்கப்படும்.

உருளைக்கிழங்கு காப்பீட்டு திட்டம்

 • தனிசிறப்பு வாய்ந்த, காரணி அடிப்படையிலான காப்பீட்டுதிட்டம்
 • உருளை பயிரிடும் ஏரியாவில், ஒப்பந்த விவசாயிகள் இத்திட்டத்தை பெறலாம்.
 • ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக, 25,000 கடன் உதவி வழங்கப்படும்.
 • பயிரிடுவோர் – உற்பத்தியாளர்- கடன் கொடுப்பவர் - காப்பீட்டாளர் எனும் கூட்டுதாரரின் மாதிரி அடிப்படையிலானது.

நாட்டிலுள்ள அனைத்து உருளைகிழங்கு பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்

காப்பீடு

இது நட்டு 7 நாளிலிருந்து அறுவடை வரையிலான, இடுபொருளுக்கு தேவையான தொகையை பொறுத்தது. இத்திட்டமானது, செடியின் எண்ணிக்கை, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்ததால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும். வெள்ளம், புயல், குளிர், பூச்சி மற்றும் நோய் தாக்கங்களால் (இலை கருகல் நோய் தவிர்த்து) ஏற்படும் செடி அழிவுகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வரும். சாதாரண அழிவுகளுக்கு தர இயலாது.

இழப்பீடு கோரும் முறை

செடி அழிவு\ நஷ்டம் ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள், காப்பீட்டாளர் நேரடியாகவோ அல்லது நிதி வழங்கிய வங்கி மூலமோ அல்லது சேர்ந்து செயல்படும் நிறுவனம் மூலமோ காப்பீட்டு கழகத்திற்கு தெரியப்படுத்தவேண்டும். பின்னர், இழப்பீடு கோரிக்கையை, 15 நாட்களுக்குள் அனுப்பவேண்டும். மேலும் காப்பீட்டாளர், AIC-யிடம் இருந்து, கோரிக்கைக்கான அனைத்து ஆதாரங்களையும் பெற்று, கோரிக்கையுடன் அனுப்ப வேண்டும். சாகுபடி செய்வதற்கு தேவைப்படும் உட்பொருளுக்கான செலவு, இத்திட்டத்தின் காப்பீட்டு தொகையாக கருதப்பட்டு, பயிர் எந்த சாகுபடி நிலையில் உள்ளதோ அதற்கான விகிதத்தை கணக்கு செய்து, இழப்பீடு வழங்கப்படும்.
காப்பீட்டாளர் காப்பீட்டுக்கான சான்று மற்றும் AIC-யிடம் இருந்து பெற்ற ஆதாரங்களுடன் இழப்பீட்டை கோர வேண்டும்.

தாவர எரிபொருள் (மரம்/செடிக்கான) காப்பீட்டு திட்டம்

உலக ஆற்றல் தேவையில் 80 சதவீதம் படிம எரிபொருள் வாயிலாக கிடைக்கிறது. ஆற்றல் தேவை அதிகமாவதுடன், படிம எரி பொருளானது, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மாற்று எரிபொருள் தேடும் நிலையில், தாவர எரிபொருள், முக்கியதுவம் பெற்று வருகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் உயிர் எரிபொருள் மரத்தை வளர்ப்பதற்காக அரசாங்கம் பலவிதமான சலுகைகள் மற்றும் மானியத்தை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

 • காட்டாமணக்கு (ஜெட்ரோபா) உள்பட, 6 விதமான மரம்\ செடிகள் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அளிக்கப்படும்.
 • வறட்சி இடர்பாடுகளுக்கான காப்பீட்டையும் தேவையென்றால் பெறலாம்.
 • அதிகபட்ச கடன் தொகையானது உற்பத்தி செலவு மற்றும் மரத்தின் வயதை பொருத்தது.

தகுதியான மரவகைகள்

இத்திட்டத்தின் கீழ், ஜெட்ரோபாகுர்கஸ் (ஜெட்ரோபா) பொங்கமியா பின்னாடா (புங்கம்), அசாடிராட்சா இண்டிகா (வேம்பு) பாசியா லடிபோலியா (மகுவா), கல்லோபிலம் இனோபிலம் (போலங்கா) மற்றும் சிமருபா கிளாகா (பாரடைஸ் மரம்) போன்ற மரங்கள் தகுதி பெறும்.

காப்பீடு

வெள்ளம், புயல், குளிர், பூச்சி மற்றும் நோய், தனியாகவோ அல்லது அத்தடுத்தோ மரங்களை தாக்கி, அதனால் மரத்திற்கு சேதமோ அல்லது முழு சேதமோ ஏற்பட்டால் இம்மரங்களை வளர்ப்பதற்கான இடுபொருள் செலவை, இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் (முழு சேதம் என்பது தனிப்பட்ட எரிபொருள் மரத்திற்கோ அல்லது மொத்த மரத்திற்கோ ஏற்பட்டு, இதனால் மரம் இறப்பது அல்லது பொருளாதார முறையில் உபயோகமற்று போவது ஆகும்).

காப்பீட்டு உறுதி தொகை

காப்பீட்டு உறுதிதொகையானது, மரத்தை பொருத்தும் மற்றும் மரத்தின் வயதை பொருத்தும், ஒரு குறிப்பிட்ட பரப்பிற்கு ஆகும் சாகுபடி செலவாகும். பொதுவாக, காப்பீட்டு தொகையானது இடுபொருள் செலவிற்கு சமமாகவோ அல்லது 125% / 150% அதிகமாகவோ இருக்கும்.

பிரிமீயம் தொகை

பின்வரும் காரணங்களின் அடிப்படையில் பிரிமீயம் தொகை நிர்ணயிக்கப்படும் அ) மரத்தின் இடர்பாடுகள் பொறுத்து ஆ) இடர்பாடுகளின் வகையை பொறுத்து இ) வளரும் இடத்தை பொறுத்து ஈ)பிற காப்பீட்டாளர்கள் அளிக்கும் தொகையை பொறுத்து உ) தள்ளுபடிகளை பொறுத்து மற்றும் ஊ) காப்பீட்டாளர் எதிர் கொள்ளும் ஏனைய செலவுகளை பொறுத்து.

காப்பீட்டு காலம்

காப்பீட்டு காலமானது ஓராண்டாகும். விரும்பினால் 3 அல்லது5 ஆண்டு வரை தொடரலாம்.

காப்பீட்டை கோரும் முறை

காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் மரங்களுக்கு, சேதம் ஏற்பட்ட உடன் காப்பீட்டாளர், இந்தியாவின் வேளாண்மை காப்பீட்டு குழுமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். கிமிசி ஆனது உரிமம் பெற்ற சுற்றாய்வாளரை, வேளாண் வள்ளுனருடன், இழப்பை மதிப்பீடுவதற்கு, இழப்பு ஏற்பட்ட இடத்திற்கு, அனுப்பி வைக்கும். இறந்த, முழுமையாக சேதமடைந்து பொருளாதார ரீதியாக தேவையற்ற மரங்கள், இழப்பின் கீழ் மதிக்கப்படும். வளர்ச்சி குன்றிய மற்றும் வளராத மரங்கள் இத்திட்டத்தின் கீழ் வராது.

மரக்கூழ் (பல்ப் வுட்) மரத்திற்கான காப்பீட்டு திட்டம்

தகுதியான மரங்கள்

இத்திட்டமானது காகிதம் தயாரிக்க பயன்படும் மர வகைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட பொருளாதார சேதம் ஏற்படும் போது இழப்பீட்டினை வழங்கும். போதுமான வசதிகளை கொண்ட குறிப்பிட்ட பகுதியில், பல்ப் மர வகைகளை வளர்க்கும் விவசாயிகள் இத்திட்டத்தினை பெறலாம். இத்திட்டத்தின் கீழ் வரும் மர வகைகள்:
1. யூக்கலிப்டஸ் 2. பாப்புலர் 3. சுபாபுள் 4. சவுக்கு

காப்பீடு

தீ, வெள்ளம், புயல், குளிர், பூச்சி மற்றும் நோய் தனியாகவோ அல்லது அடுத்தடுத்தோ மரங்களை தாக்கி, அதனால் மரத்திற்கு சேதமோ அல்லது முழு சேதமோ ஏற்பட்டால் இம்மரங்களை வளர்ப்பதற்கான இடுபொருள் செலவை, இத்திட்டத்தின் கீழ் இழப்பீடாக பெறலாம். முழு சேதம் என்பது தனிபட்ட மரத்திற்கோ அல்லது மொத்த மரத்திற்கோ ஏற்பட்டு இதனால் மரம் இறப்பது அல்லது பொருளாதார முறையில் உபயோகமற்று போவது ஆகும்.

காப்பீட்டு உறுதி தொகை

காப்பீட்டு உறுதிதொகையானது மரத்தை பொருத்தும் மற்றும் மரத்தின் வயதை பொருத்தும், ஒரு குறிபிட்ட பரப்பிற்கு ஆகும் சாகுபடி செலவாகும். பொதுவாக காப்பீட்டு தொகையானது இடுபொருள் செலவிற்கு சமமாகவோ அல்லது 125% / 150% அதிகமாகவோ இருக்கும்.

பிரிமீயம் தொகை

பின்வரும் காரணங்களின் அடிப்படையில் பிரிமீயம் தொகை நிர்ணயிக்கப்படும் அ) மரத்தின் இடர்பாடுகள் பொறுத்து ஆ) இடர்பாடுகளின் வகையை பொறுத்து இ) வளரும் இடத்தை பொறுத்து ஈ) பிற காப்பீட்டாளர்கள் அளிக்கும் தொகையை பொறுத்து உ) தள்ளுபடிகளை பொறுத்து மற்றும் ஊ) காப்பீட்டாளர் எதிர் கொள்ளும் ஏனைய செலவுகளை பொறுத்து.

காப்பீட்டு காலம்

காப்பீட்டு காலமானது ஓராண்டாகும். விரும்பினால் 5 ஆண்டு வரை தொடரலாம்.

காப்பீட்டை கோரும் முறை

AIC-யுடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து இக்காப்பீட்டு திட்டத்தை பெறலாம். காப்பீட்டுக்கான தகவலை, நிதி நிறுவனங்கள், இடுபொருள் அளிப்பவர்கள், விவசாய சங்கங்கள், காப்பீட்டு தரகர்கள் மூலமும் பெறலாம் - தனிப்பட்ட விவசாயிகள் நேரடியாக AIC- யிடமிருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவரிடமிருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்தோ பெறலாம்.

தென்னை மரம் மற்றும் மகசூலுக்கான காப்பீட்டு திட்டம்

இந்தியாவின் முன்னிலை வசிக்கும், ஒரு தோட்டப்பயிர் தென்னையாகும். இது பெரும்பாலும், கடல் ஓரங்களில் பயிரிடப்படுகிறது. தென்னையின் இளநீர், தேங்காய் எண்ணெய், புண்ணாக்கு, கொப்பரை, கள்ளு, ஓடு, இலை அனைத்தும் உபயோகிக்கப்படுகிறது. தென்னை 2 மில்லியன் ஹெக்டெரில் பயிரிடப்படுகிறது. ஒரு வருடத்திற்கு, 2 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி ஆகிறது. புயல், காற்று முதலிய காலநிலை காரணிகளால் மற்றும் பூச்சி ஆகிய உயிர் காரணிகளாலும் தென்னை மிகவும் பாதிப்பு அடையகூடியதாகும். தென்னை மரம் மற்றும் மகசூலுக்கான காப்பீடு திட்டமானது, தவிர்க்கமுடியாத இழப்பினால் ஏற்படும் இடர்பாட்டில் இருந்து தக்க பாதுகாப்பு அளிக்கிறது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

 • தென்னை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்த ஒரு காப்பீட்டு திட்டம்.
 • தென்னைக்கு ஏற்படும் பொருளாதார சேதத்துக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
 • அதிகபட்ச கடன்தொகையானது மரத்தின் வயதைப் பொருத்தது.

காப்பீடு

தடுக்க முடியாத, பாதகமான இயற்கை காரணிகளால் ஏற்படும் மரத்திற்கான இழப்பு அல்லது (மற்றும்) காய்க்கு ஏற்படும் சேதத்திற்கான இழப்பை இத்திட்டத்தின் கீழ் பெறலாம்.

தேங்காய் மகசூலுக்கான காப்பீடு

இயற்கை சீற்றங்களான, இயற்கையான தீ விபத்து, மின்னல் தாக்குதல், புயல், பனித்தூறல், சூறாவளி, மணல்சுழற்சி, வெள்ளம், நீர்த்தேக்கம், நிலச்சரிவு மற்றும் பூச்சி/நோய் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் காய் இழப்பிற்கு, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

மரத்திற்கான காப்பீடு

4 - வருடத்திலிருந்து, 60வருடம் வரை, காப்பீடு செய்யப்பட்ட மரத்திற்கு சேதம் ஏற்பட்டால், திட்டத்தின் கீழ் இழப்பீடு அளிக்கப்படும் முதல் வருடத்தில், நட்டு மூன்று மாதங்கள், காப்பீட்டு திட்டத்தின் கீழ் வராது. இழப்பீடானது, தனிமர ரீதியில் அளிக்கப்படும். இயற்கை சீற்றங்களான இயற்கையான தீவிபத்து, மின்னல் தாக்குதல், புயல், பனித்தூறல், சூறாவளி, மணல்சுழற்ச்சி, வெள்ளம், நீர்த்தேக்கம், நிலச்சரிவு மற்றும் பூச்சி/நோய் அனைத்திற்கும் காப்பீடு அளிக்கபடும்.

உறுதித்தொகை

மகசூல் காப்பீட்டிற்கு - வட்டத்திற்கு வட்டம் மாறுபடும். கடந்த வருட காயின் விலையுடன், உத்திரவாதமான மகசூலை பெறுக்கி, உறுதித்தொகை நிர்ணயிக்கப்படும். மர காப்பீட்டிற்கு - தோட்டத்தின் வயதைப்பொறுது, இடுபொருள்களுக்கு ஆகும் செலவை, உறுதித்தொகையாக நிர்ணயிக்கப்படும்.

பீரிமியம்

ஒவ்வொரு வட்டத்திற்கான முற்குறிப்பிலிருந்து, நிர்ணயிக்கப்படும்

இரப்பர் தோட்ட காப்பீட்டு திட்டம்

கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயிரிடப்படும் ஒரு முக்கியமான, பணப்பயிர் இரப்பர் ஆகும். இரப்பர் தோட்டங்கள், தீ விபத்து, வெள்ளம், புயல், நீர்த்தேக்கம், நிலச்சரிவு, நிலநடுக்கம், வறட்சி ஆகிய இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. இந்த இரப்பர் தோட்டங்களில், ஒரு பகுதியில் மரங்கள் பாதிக்கப்பட்டால் அவைகளை அகற்றி மீண்டும் மரக்கன்றுகளை நடவேண்டும்.

காப்பீட்டு திட்டம்

முதிர்வடைந்த மற்றும் அடையாத அனைத்து தோட்டங்களுக்கும் இத்திட்டமானது பொருந்தும். திட்டமானது, முதிர்வடையாத தோட்டங்களுக்கு, கன்றுகள் நட்ட மாதத்தின் கடைசி நாளிலிருந்து, 7 வருடங்களுக்கு வழங்கப்படும். இழப்பீடு இரண்டாவது வருடத்தில் இருந்து வழங்கப்படும். இழப்பீடானது, மரத்தை மீண்டும் நடுவதற்கான செலவு மற்றும் இழந்த மரத்தால் பின்னால் வரக்கூடிய வருமானம் ஆகியவற்றை கணக்கிட்டு நிர்ணயிக்கப்படும். முதிர்வடைந்த தோட்டங்களுக்கு, எட்டாம் வருடத்திலிருந்து 3/2/1 வருடகணக்கில் வழங்கப்படும். இழப்பீடானது, முதிர்வடையாத தோட்டங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட விதமே, நிர்ணயிக்கப்படும். அதிகபட்ச இழப்பீடானது;
8 - 13 வருட தோட்டங்களுக்கு - ரூ.5,00,000/ ஹெக்டர்
14 - 19 வருட தோட்டங்களுக்கு - ரூ.5,00,000/ ஹெக்டர்
20 - 22 வருட தோட்டங்களுக்கு - ரூ.3,00,000/ ஹெக்டர்
23 - 25 வருட தோட்டங்களுக்கு - ரூ.2,00,00/ ஹெக்டர்

திட்டத்தின்கீழ் வரும் இடர்பாடுகள்

தீ விபத்து, வெள்ளம், புயல், நீர்த்தேக்கம், நிலச்சரிவு, நிலநடுக்கம், வறட்சி (என்று மாநில அரசால் அறிவிக்கப்பட்ட) இடர்பாடுகளால் வரும் இழப்பிற்கு, இழப்பீடு வழங்கப்படும், மேலும் காட்டு விலங்குகள், தரை மற்றும் இரயில் ஊர்திகளால் ஏற்படும் இழப்பு இத்திட்டத்தின் கீழ் வரும்.

காப்பீட்டு காலம்

 • முதிர்வடையாத தோட்டங்களுக்கு - கன்று நட்ட மாதத்தின் கடைசி நாளிலிருந்து ஏழுவருடங்களுக்கு
 • முதிர்ந்த தோட்டங்களுக்கு - 8வது வருடத்திலிருந்து 25வருடம் வரை

முழுசேதம்: ஒரு ஹெக்டரில், 75% மரங்கள் சேதமடைந்தால், அதை முழு சேதமாக கருதி, இழப்பீடு வழங்கப்படும் (அட்டவணையை பொறுத்து). மற்ற மரங்களுக்கான இழப்பீடு, இரப்பர் வாரியத்திலிருந்து, மீதமுள்ள மரங்கள் வெட்டியதற்கான, சான்றிதழை சமர்ப்பித்தவுடன் வழங்கப்படும்.
பகுதி சேதம்: மொத்த சேதத்தில் வராத பிற சேதங்கள், பகுதி சேதங்களாகும். பருவகால மூன்று மாதங்களில் (ஜீன் - ஆகஸ்) ஏற்படும் பொருளாதார சேதங்கள் அனைத்தும், ஒரு சேதமாக கருதப்படும்.

குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ளது இந்த திட்டத்தின் சுறுக்கமாகும். வெறும் தகவலுக்காக மட்டுமே. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கப்பட்டதல்ல.

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம்

3.15
Anonymous Sep 22, 2020 06:48 PM

ஒரு குத்தகை நிலத்தின் பயர் காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகை யாருக்கு உரியது. நில உரிமையாளர்களுக்கா அல்லது நிலத்தில் வேளாண் செய்த விவசாயிகா? பதில் தாருங்கள் அய்யா..

அன்பழகன் Nov 16, 2019 10:17 PM

ஒரு நிலத்தின் பயிர் காப்பீட்டுத் தொகை
அந்த நிலத்தின் உரிமையாளருக்கா அல்லது நிலத்தில் முதலிடுசெய்து
சாகுபடி செய்பவருக்கா?

Anu Jun 25, 2019 01:04 PM

பயிர் காப்பீடு தொகை வழங்கி யாராவது சிலருக்கு வரவில்லை என்றால் என்ன செய்வது எங்களுக்கு 2017 ஆண்டு காப்பீடு வரவில்லை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top