பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கடற்பாசி வளர்ப்பு

கடற்பாசி வளர்ப்பு முறைகளை குறித்து இங்கே காணலாம்.

முன்னுரை

கடற்பாசி வளர்ப்பு முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் 1960-இல் ஆரம்பமானது. இன்று அந்த நாடு கடற்பாசி வளர்ப்பில் முதலிடத்தில் உள்ளது. இதை வளர்பதற்கு எளிய வழிமுறைகள் பின்பற்றபடுவதாலும்குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாலும் இந்தியாவில் கடற்பாசி வளர்ப்பது வேகமாக பரவி வருகிறது.

வளர்ப்பு முறைகள்

இடத்தை தேர்வு செய்தல்

வளர்ப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது மிக அவசியம். கடற்பாசிகள் பொதுவாக வெப்பமண்டல கடல் பகுதிகளில் வளர்பவை. எனவே அவை வளரும் சூழலுக்கேற்ற இடத்தை தேர்வு செய்து வளர்க்கும் போது மிகுந்த பயனை அடையலாம். ஆறு மற்றும் கடல் சேரும் இடம் மற்றும் மிக அதிகமாக அலைகள் மோதும் இடத்தை தேர்வு செய்ய கூடாது. தண்ணீரின் இயக்கம் சீராக உள்ள பகுதியை தேர்வு செய்ய வேண்டும். தண்ணீர் சுத்தமானதாகவும் மாசுத் தண்ணீர் கலவாத இடமாகவும் இருக்க வேண்டும். ஒரு இடத்தை தேர்வு செய்து விட்டால் அப்பகுதியிலுள்ள வட்டார அல்லது மாவட்ட அரசிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு கடற்பாசி வளர்க்கும் முயற்சியில் ஈடுபடலாம்.

தேவையான உபகரணங்கள்

வளர்ப்பதற்கான உபகரணங்களையும் உபயோகிக்கும் பொருள்களையும் தயார் செய்வது மிகவும் அவசியம். தேவைப்படும் பொருள்களாவன மூங்கில் கட்டைகள், வலை, கயிறு, மிதவை காரணிகள், கடற்பாசி போன்றவை.

மிதவை தெப்ப முறை

3*3 m சதுர வடிவிலான மரக்கட்டை முகப்பு மூங்கில் கட்டைகளால் தயாரிக்கப்படுகிறது. 3mm  பிளாஸ்டிக் கயிறுகள் ஒன்றுக்கொன்று இணையாக ஒரே வாக்கில் கட்டப்படுகிறது. ஒவ்வொரு கயிறுக்கும் இடையில் 10-15 cm இடைவெளி விட வேண்டும். சிறிய கடற்பாசி துண்டுகளை அந்த கயிறுகளில் கட்டி விட வேண்டும். பின்பு அந்த தெப்பத்தை கடலுக்குள் சரியான இடத்தில் நகர்த்தி அதன் நிலைத்தன்மைக்காக கட்டி வைக்கப்படுகிறது.

நிலையான வரிசை முறை

சரியான இடத்தை தேர்வு செய்த பின் மூங்கில் கட்டைகள் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீருக்கு அடியில் நாட்ட வேண்டும். இவற்றில் பிளாஸ்டிக் கயிறுகளை தண்ணீருக்கு அடியில் இருந்து 1m உயரத்தில் கட்ட வேண்டும். சின்ன கடற்பாசி துண்டுகளை இந்த கயிறுகளில் தொடர்ச்சியாக கட்ட வேண்டும்.

கவனிப்பு முறைகள்

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் போய் பதிப்புகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும். உடைந்து காணப்படும் கடற்பாசி துண்டுகளையும் அதன் அருகில் வளரும் எல்லா களைகளையும் அகற்ற வேண்டும்.

வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்

திடீரென ஏற்படும் காலநிலை மாற்றம், தண்ணீரில் உப்புத்தன்மைஅதிகரித்தல், கடற்பாசி நோய் தாக்குதலுக்கு உள்ளாதல் போன்ற காரணிகளால் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

அறுவடை செய்தல்

கடற்பாசிகள் மிக வேகமாக வளரக்கூடியவை. 45 முதல் 60நாட்களில் அவற்றை அறுவடை செய்யலாம். நிலையான வரிசை முறையில்கயிறுகளை முழுவதுமாக எடுக்க வேண்டும் . மிதவை முறையில் முழு மிதவையும் எடுத்து அதிலிருந்து வளர்ச்சியடைந்த கடற்பாசிகளை அறுவடை செய்யலாம். பின்பு அவற்றை காய வைக்க வேண்டும். காய வைக்கும் போது கடற்பாசியுடன் காணப்படும்தேவையற்ற களைகள், கல்கள், சிப்பிகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். மழை பெய்யும் நேரங்களில் அவற்றை பிளாஸ்டிக் விரிப்புகளை கொண்டு மூட வேண்டும். காய வைக்கும் இடங்களில் விலங்குகள் பறவைகளை அனுமதிக்க கூடாது.

சந்தைப்படுத்துதல்

கடற்பாசி நன்றாக உலர்ந்த உடன் அவற்றை சாக்குகளில் மூட்டையாக கட்டி உலர்ந்த, சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். இவற்றை உடனடியாக விற்பனை செய்யலாம். விற்பனை செய்யும் போது சந்தை மதிப்புகளை விசாரித்து பின் சரியான விலைக்கு விற்க வேண்டும். இதன் மூலம் நிறைவான பலனை குறைந்த நாட்களுக்குள் அடையலாம்.

வணிக நோக்கங்கள்

கடற்பாசியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கராஜீனன் என்ற பொருள் உணவு மற்றும் பல்வேறு விதமான தொழில் துறைகளில் பயன்படுகிறது. இதன் பயன்களாவன

  • ஜெல்லி தயாரிக்கப் பயன்படுகிறது.
  • ஐஸ்கிரீம் மற்றும் பற்பசையின்நிலைத்தன்மைக்குப் பயன்படுகிறது.
  • சாஸ் மற்றும் கெட்சப்பில் அடர்த்தி கொடுக்கும் பொருளாகப் பயன்படுகிறது.
  • இறைச்சி மற்றும் பலவிதமான உணவு பொருள்களை தயார் செய்யப் பயன்படுகிறது.

 

ஆதாரம்: தமிழ்நாடு கடல்வள துறை

2.93296089385
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top