பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்

ராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய் பற்றிய குறிப்புகள்

வெள்ளைக்கழிச்சல் நோய்

முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல்  தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும். இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன.

ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது. இத்தடுப்பூசி இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்.

அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. முக்தேஸ்வர் என்ற தடுப்பு மருந்து அதிகம் கொடுத்தல் கூடாது. அம்மருந்து உறுப்புக்களைப் பாதித்து சில சமயங்களில் பறவைகளில் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.

அட்டவணை

வயது

நோய்

தடுப்பு மருந்து

செலுத்தும் வழி

முதல் நாள்

மாரெக்ஸ்

ஹச்.வீ.டி மருந்து

தோலின் கீழ்

5-7 நாட்கள்

ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப்

லசோட்டா எப்

கண்ணில் (சொட்டு மருந்து)

10-14 நாட்கள்

ஐபிடி

உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி

குடிதண்ணீர் மூலம்

24-28 நாட்கள்

ஐபிடி

உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசி

குடிதண்ணீர் மூலம்

8வது வாரம்

இராணிக்கெட் நோய்

இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசி

இறக்கையில் தோலின் கீழ்

15-18 நாட்களில்

இராணிக்கெட் நோய்

உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசி

ஆதாரம் : இந்திய கோழிப் பண்ணை நிறுவன ஆண்டு மலர்
3.03333333333
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Anonymous Aug 10, 2016 09:11 AM

நல்ல தகவல் நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top