பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முட்டைக் கோழிப் பண்ணை

முட்டைக் கோழிப் பண்ணை பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முட்டைக் கோழிப் பண்ணை

கோழி முட்டை மற்றும் இறைச்சியில் உயர் தரமான புரோட்டீன், தாதுப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் சாதாரண உணவு வகையில் இருப்பதற்கு சமமாக உள்ளது. சிறப்பாக வளர்க்கப்படும் முட்டைக் கோழி வகைகளும் (துரித வளர்ச்சி மற்றும் அதிகளவு உணவாக மாற்றும் திறன் உள்ளவையும்) உள்ளன. பண்ணையின் அளவைப் பொறுத்து, முட்டைக் கோழி வளர்ப்பினால் ஒரு குடும்பத்திற்கான வருமானம் அல்லது உபரி வருமானமும், உழவர்களுக்கு வருடம் முழுவதும் வேலை கிடைக்கவும் முக்கியமான காரணமாக விளங்குகிறது. கோழியின் உரம் அதிக அளவு மற்றும் தன்மை தரக்கூடியது. இதைப் பயன்படுத்துவதால் அனைத்து பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கலாம்.

மத்திய மாநில அரசின் உறுதுணையால் புதிதாக தொழில்முனைவோர்கள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க எளிதாகிறது. முட்டைக்கோழி வளர்ப்பும் தேசிய கொள்கையில் சரிசமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

முட்டைக் கோழிப் பண்ணையாளர்களுக்கான பொதுவான மேலாண்மை முறைகளின் தொகுப்பு

நவீன மற்றும் நல்ல அறிவியல் தொழில்நுட்ப முறைகளை கோழிப் பண்ணையில் பயன்படுத்தினால் பெருமளவு லாபம் ஈட்டமுடியும். பரிந்துரைக்கப்பட்ட  முறைகள் சிலவற்றை பின்வருமாறு காணலாம்.

கோழிப் பண்ணை கூடாரம்

 1. கோழிப் பண்ணைக்கான கூடாரத்திற்கு சற்று உயரமாக உள்ள நிலப்பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடினப்பாறை அல்லது முற்றம் உள்ள நிலப்பகுதி மிகவும் ஏற்றது. நீர் தேங்கும் பகுதியோ, நீர் வழிந்தோடும் பகுதியோ கூடாரத்திற்கு அருகில் இருக்கக் கூடாது. கோழி வளர்ப்பு மற்றும் முட்டை வளா்ப்பிற்கு தனித்தனியாக கூடாரம் இருக்கவேண்டும்.
 2. நீர் வசதி, மின்சாரம், சாலைவசதி, கோழிக் குஞ்சுகளுக்கு, வழங்கும் தீவனம், மருத்துவ உதவி, கோழிகள் மற்றும் முட்டைகள் விற்பதற்கு அருகிலேயே சந்தை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 3. முட்டைக் கோழிப் பண்ணை அமைப்பதற்கு முன் அதில் பயிற்சி /அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பண்ணையில் தங்கி, தொடர்ந்து நேரடி மேற்பார்வையிடும் அளவிற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
 4. ஒவ்வொரு கோழிக்குஞ்சுக்கும் போதுமான அளவு இடம் தேவை. BIS அளவீடுகளைப் பயன்படுத்தி கோழிப் பண்ணை கூடாரங்கள் அமைக்க வேண்டும்.
 5. கூடாரத்தின் முடியக்கூடிய சுவரானது கிழக்கு – மேற்கு திசையிலும், பக்கச் சுவரானது வடக்கு – தெற்கு திசையிலும் இருக்க வேண்டும். இதனால் மழைநீர்  கூடாரத்தின் உள்ளே வராமல் தடுக்கலாம்.
 6. திடமான, மேற்கூரையும், திடமான தள வசதியும் இருக்க வேண்டும். தரைமட்டத்திற்கு ஒரு அடி தூரம் மேலே கூடாரம் உயர்த்தி இருக்க வேண்டும்.
 7. கூடாரத்தினுள் தண்ணீர் புகாமல் இருக்க, மேற்கூரையை 3-4 அடி உயரத்தில் அமைக்க வேண்டும்.
 8. ஒரே பிரிவில் உள்ள இரண்டு கூடாரங்களுக்கு இடையே 50 அடி அளவு இடைவெளியும், கோழி வளர்ப்பு மற்றும் முட்டையிடும் பிரிவுகளுக்கு இடையே 150 அடி இடைவெளியும் விட வேண்டும்
 9. போதுமான அளவு வெளிச்சமும், காற்றோட்டமும் அனைத்து பருவகாலங்களிலும் இருக்குமாறு அமைக்க வேண்டும். (வெயில் காலங்களில் குளுமையாகவும், குளிர் காலங்களில் வெதுவெதுப்பாகவும் வைக்க வேண்டும்).
 10. கூடாரத்திற்குள் எந்தவிதமான பிராணிகள் (பூனை /நாய்/ பாம்புகள்) நுழையாதவாறு கூடாரத்தை அமைக்க வேண்டும். எலிகள் நுழையாமல் இருக்க எலி தடுப்பு  சட்டங்கள் அமைக்க வேண்டும்.
 11. கூடாரத்தை ஈக்கள்/ கொசுக்கள் மொய்க்காமல், கூடாரத்தை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 12. ஒவ்வொரு பகுதி வளர்ந்த கோழிகளை அகற்றும் போதும், அதனுடைய மாசுபடிந்த கழிவுகள் மற்றும் உரத்தை அகற்ற வேண்டும். சுவர்கள் மற்றும் தரையை சுத்தப்படுத்த வேண்டும். சுவரை சுண்ணாம்பு கரைசலுடன் 0.5% மாலத்தியான் அல்லது டி.டி.டி திரவம் கலந்து வெள்ளையடிக்க வேண்டும்.
 13. நன்கு ஆழமான கோழிக்குப்பை அமைப்பு ஏற்படுத்தியிருந்தால், எப்பொழுதும் அதை உலர்வான அல்லது காய்ந்த மற்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்காக மரத்தூள், நெல் உமி போன்றவற்றை கோழிக் குப்பை படுக்கைக்கு பயன்படுத்தலாம். தரையின் மீது 4” அளவுக்கு படுக்கை அமைத்து, அதில் சுத்தமான / நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட கோழிக்குஞ்சு பொறிப்பான்கள், தீவனம் மற்றும் தண்ணீர் வைக்கும் கலன்கள் வைத்து அதில் கோழிக்குஞ்சுகளை விடவேண்டும்.
 14. கோழிக் குப்பைபடுக்கைக்கான பொருட்கள்  எப்பொழுதும் இறுக்கமாக அடைத்து வைக்காமல், உலர்ந்து இருக்க வேண்டும். படுக்கையை வாரத்திற்கு 2 முறை திருப்பி விட வேண்டும். ஏதாவது கோழிக் குப்பை அல்லது எச்சங்கள் படுக்கையில் இருந்தல் உடனடியாக அகற்றி, படுக்கையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 15. கூண்டு அமைப்பு வைப்பதாக இருந்தால், கோழியின் எச்சங்களை பரப்பி, அதனுடன் சுண்ணாம்புத் தூள் அல்லது 10% மாலத்தியான் தெளிப்பு மாதத்திற்கு 2 முறை தெளித்து ஈக்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம். கூண்டிற்கு அடியில் உள்ள எச்சங்களை 6 மாதங்களுக்குப் பிறகு அகற்றிவிட வேண்டும்.

கோழிப் பண்ணைக் கருவிகள்

நன்கு வடிவமைக்கப்பட்ட கூண்டுகள் மற்றும் குஞ்சுப் பொரிக்கும் கலன், தீவனம் மற்றும் தண்ணீர் வைக்கும் கலன்கள் அதற்கென BIS அளவீடுகளுடன் உள்ளவற்றை பயன்படுத்த வேண்டும். நல்ல வடிவமைப்பு கொண்ட கூண்டை உள்ளூர் தயாரிப்பாக இருந்தால், அதற்கான செலவு சற்று குறையும்.

கோழிக் குஞ்சுகள்

 • நல்லதரமான முட்டையிடும் கூட்டிலிருந்து ஒரு நாளுடைய ஆரோக்கியமான முட்டையிடும் குஞ்சுகளை வாங்க வேண்டும். 2.5% கூடுதலான கோழிக் குஞ்சுகள் கூட்டில் விட வேண்டும்.
 • கோழிகளின் வீட்டிற்கான கூண்டுகளை பயன்படுத்துவதாக இருந்தால், சரியான அளவு இடம் ஒதுக்க வேண்டும். அதாவது நன்கு ஆழமான கோழிக் குப்பை படுக்கையின் மீது பரிந்துரைக்கப்பட்ட தரை தளத்தில் பகுதிக்கு மேல் இருக்க வேண்டும்.
 • அனைத்து கருவிகளையும் 0.5% மாலத்தியான் கொண்டு ஒவ்வொரு பகுதி பறவைகள் வெறியேற்றும் போதும், சுத்தமாக கழுவி, நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.

பதப்படுத்துதல்/ சந்தைபடுத்துதல்

 1. உயிருடன் உள்ள பறவைகளை பதப்படுத்துவதாக இருந்தால், பதப்படுத்தும் அறை மற்றும் பதப்படுத்தும் கருவிகளை சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.
 2. பதப்படுத்திய பறவைகளை குளிர் நீரில் 3-4 மணி நேரம் வைத்து, அதகிப்படியான நீரை அகற்றிவிட வேண்டும். அதற்கு பிறகு, பறவைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, பையின் வாய்ப் பகுதி சீல் வைக்க வேண்டும்.
 3. பதப்படுத்திய பறவைகளை முடிந்த வரை விரைவில் சந்தைப்படுத்தி விட வேண்டும்.  பதப்படுத்தி குளிர்படுத்தப்பட்ட வேன்களை நீண்ட தூர போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம்.

அதிக முட்டை உற்பத்திக்கு வேண்டியவை

தரமான பறவைகள்

சிறந்த தரமான கோழிக்குஞ்சு இரகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அவை சுற்றுசூழல் நிலைமைக்கு ஏற்றவாறு நன்கு வாழும் தன்மை உடையவையாக இருக்க வேண்டும். நல்ல தரமான கோழிக்குஞ்சுகள் சற்று விலை கூடுதலாக இருக்கும். ஆனால் அவை நன்கு செயல்பாட்டுடன் இருக்கும்.

கூடாரம்

கூடாரமானது நிறைய காற்றோட்ட வசதியுடன், குப்பைக் கூளங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். காற்றானது அனைத்து பகுதிகளிலும் சுற்றி வர வேண்டும். தேவையற்ற வாயுக்கள் அதிகளவில் இருந்தால் வளர்ச்சியைக் குறைத்து விடும் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை அதிகப்படுத்தும். கோழிக் குப்பைகள் உலர்வான நிலையில் இருக்க வேண்டும். நல்ல முறையில் வைக்கப்பட்ட குப்பை படுக்கையினால் பறவைகள் இறகுகளை வைத்துக் கொள்ளவும், தீவன மாற்றை மேம்படுத்தவும் உதவுகிறது. அது மட்டுமில்லாமல். காக்ஸியாப்டிஸ் பிரச்சனையை குறைக்கும்.

கூட்டமாக இருத்தல்

அதிக கூட்டமாக இருந்தால், இறப்பு அதிகமாகும். உற்பத்திக்கான செலவும் அதிகமாகும்.

ஊட்டமளித்தல்

எப்பொழுதும் புத்தம் புதிய, போதுமான அளவு உணவை தர வேண்டும். 6 மணி நேரத்திற்கு உணவளிக்காமல் இருந்தால் உற்பத்தி குறையும். 12 மணி பட்டினி இருக்கச் செய்தால் இறகுகள் உதிரும். பறவைக்கு உணவு உண்ண போதுமான அளவு இடமளிக்க வேண்டும். தீவன இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். தினசரி உணவு எடுத்துக் கொள்ளும் அளவை பதிவேட்டில் பதிவு செய்து, பராமரிக்க வேண்டும். இதை வைத்துத் தான் பறவைகள் எவ்வளவு உணவு உட்கொள்கின்றன, எவ்வளவு செயல்படுகின்றன என்பதைக் கணக்கிட முடியும்.

தண்ணீர் தருதல்

அதிகளவு, நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான நீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை  இருந்தால் இறகுகளை உதிர்ந்து விடும். தண்ணீர் வைக்கும் கலன்கள் பறவைகள் எளிதாக சென்று குடிக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

வெளிச்சம் கொடுத்தல்

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வெளிச்சம் தரவேண்டும். அதுவே 17 மணி நேரத்திற்கு அதிகமாக கூடாது. இந்த வரம்பைத் தாண்டினால் எந்த வித பயனும் இல்லை. ஒவ்வொரு கோழிக்குஞ்சுக் கூட்டத்திற்கும் முந்தைய நாள் கொடுத்த வெளிச்சத்தை விட குறையாமல் இருக்க வேண்டும். ஒரு நாளில் வெளிச்சத்தின் அளவு குறைந்தால் உற்பத்திக் குறையும். 40 வாட் மின்சார பல்பு 200 சதுர அடி அறைக்கு போதுமானது.

தடுப்பு ஊசி போடுதல்

மாரேக் நோய் மற்றும் இராணிகட் நோய்க்கு எதிராக தடுப்பு ஊசி போட வேண்டும். தடுப்பு ஊசி போடாத பறவைகள் நோய்க்கு ஆளாகும்.

அலகு வெட்டுதல்

தகுந்த காலத்தில் பறவைகளின் அலகை வெட்ட வேண்டும். அலகை வெட்டாமல் விட்டால் முட்டை உற்பத்தி குறையும்.

கழித்தல் அல்லது அகற்றுதல்

தகுதியற்ற, பொருளாதார ரீதியாக பயன்படாத பறவைகளை தகுந்த சமயத்தில் அகற்றிவிட வேண்டும்.

உடல் நலம்

பெரிய அளவில் எந்த நோயும் தாக்காதவாறு, நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். நோயின் சில அறிகுறிகளாவன: முட்டை உற்பத்தி குறையும். தீவனம் உட்கொள்ளுவது குறையும். இறப்பு விகிதம் அதகிமாகும். பறவைகள் செயல் இழந்து, திறன் குறையும். இறகுகள் தொங்கி நோய்வாய்ப்பட்ட தோற்றத்துடன், மூச்சுவிட திணறிக் கொண்டிருக்கும். முட்டையின் தரத்தில் திடீரென மாற்றம் ஏற்படும்.

சுகாதாரம்

கோழிப்பண்ணை வளா்ப்பில் சுகாதாரம் என்பது மிக முக்கியமானது. உருண்டைப்புழு, நாடாப்புழு, குடல்புழுக்கள் தாக்காமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கவனிக்கத் தவறி விட்டால், வெளியிலிருக்கும் ஒட்டுண்ணிகள் பெரியத் தொல்லையாகி உற்பத்தியைக் குறைத்து விடும். சீரான இடைவெளயில் வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

முட்டையின் தரம்

முட்டை ஓட்டின் தரத்தின் மேம்பாட்டிற்காக சுவாசம் மற்றும் குடல் நோய்களை கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். சல்பர் மருந்து அதிகளவில் பயன்படுத்தினாலும் முட்டை ஓட்டின் தரம் பாதிக்கும். டெட்ராசைக்ளின் மருந்துகள் மூலமும் இதை கட்டுப்படுத்தலாம்.

பதிவேடுகள்

தீவனம் எடுத்துக் கொள்ளும் அளவு, முட்டை உற்பத்தி, இறப்பு, வரவு மற்றும் செலவு பற்றிய  விபரங்களை தினமும் பதிவேட்டில் குறிப்பிட்டு வைத்தால், பண்ணையின் திறனை மேம்படத்தலாம்.

அடிக்கடி ஆய்வு செய்தல்

எவையெல்லாம் தினம் கவனிக்கப்பட வேண்டியவை முக்கியமான பிரச்னைகள், வாரம் அல்லது ஒரு பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்று பட்டியல் இட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றையும் கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டும். இதனால் எப்பொழுது பிரச்னை ஏற்படுகிறது என்று எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. தினமும் ஆய்வு செய்ய வேண்டியவை; தண்ணீர் மற்றும் தீவனம் உள்ள கலன்களை சுத்தம் செய்து நீர் நிரப்பி வைத்தல். கோழக் குப்பைப் படுக்கையை கிளறிவிட வேண்டும். தூசிகளை அடித்து சுத்தம் செய்ய வேண்டும். தேவையற்ற பறவைகளை கழித்து விட வேண்டும். முட்டைகளை சேகரிக்க வேண்டும் மற்றும் பல சிறிய குஞ்சுகளை அதிக அக்கறையுடன் கவனித்தல்


முட்டை கோழி வளர்ப்பு

ஆதாரம் : இந்திய கோழிப் பண்ணை நிறுவனம்

3.0
Girija May 11, 2018 02:52 PM

நன்றாக உள்ளது.

வை.முருகேசன்.செந்துறை Aug 07, 2017 09:04 PM

நன்றாக உள்ளது
,

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top