பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கோழி இனங்களும் நிறுவனங்களும்

பல்வேறு வகையான கோழிகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஐ.சி.ஏ.ஆர். கோழி ஆராய்ச்சித் திட்ட மையத்தின் இனங்கள்

வனராஜா


 • கிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், வீட்டுப் பண்ணைகளில் வளர்ப்பதற்கு ஏற்றது.  ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம், இதனை வெளியிட்டுள்ளது.
 • பல வண்ணங்களில், கவர்ச்சியான இறகுகளைக் கொண்ட இது ஒரு பயனுள்ள பறவையாகும்.
 • அனைத்து வகையான நோய்களுக்கும் எதிர்ப்பு திறன் கொண்டதாகும்.  வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.
 • வனராஜா ஆண் இனங்கள், முறையாக தீவன முறைதில் 8 வாரத்தில் நல்ல எடையை அடைகின்றன.
 • ஒரு பருவ சுழற்சியில், ஒரு கோழி 160-180 முட்டைகள் இடுகின்றது.
 • குறைவான எடையும், நீண்ட கால்களும் பெற்றிருப்பதால், இவை மற்ற இரைக் கொல்லிகளிடம் இருந்து தப்பி ஓடிவிடும். வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவையாக உள்ளன.

கிரிஷிப்ரோ


 • ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம் இதனை உருவாக்கியுள்ளது.
 • பல வகை நிறங்கொண்ட கறிக் கோழியாகும்
 • 6 வாரத்தில் உடல் எடையை அடைகிறது.  இதன் தீவன மாற்று விகிதம் 2.2 ஆகும்
 • 97% கோழிகள் 6 வாரம் வரை உயிருடன் இருக்கின்றன
 • பறவைகள் கவர்ச்சியான இறகுகளுடன் உள்ளன.  வெப்ப மண்டல பகுதிகளுக்கு ஏற்றதாகும்
 • வணிக ரீதியாக வளர்க்கப்படும் கிரிஷிப்ரோ ரகம் ராணிக்கெட் மற்றும் பிற தோற்று  நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும்
 • நன்மைகள்    : கடினமான, சூழலுக்கு ஏற்று வாழக்கூடிய, அதிக உயிர்வாழ் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகம், வெளியிட்டுள்ள இரகங்கள்.

கிரிராஜா


பெங்களுரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழி ஆராய்ச்சித்துறை இதனை வெளியிட்டுள்ளது.


சுவர்ணதாரா
இவ்வினம் கிரிராஜா வகையைவிட ஆண்டுக்கு 15-20 முட்டைகள் அதிகமாக இடுகின்றன.  இதனை கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் 2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.  சுவர்ணதாரா கோழிகள் அதிக முட்டை உற்பத்தி செய்வதுடன், உள்ளுர் ரகங்களைவிட நன்றாக வளர்கிறது.  இது கலப்பு பண்ணையத்திற்கும், வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றதாகும்.

 • கிரிராஜா இனத்தைவிட சிறிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால், காட்டுப் பூனைகள், நரிகளிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றன.
 • முட்டை, இறைச்சி ஆகிய இரண்டிற்காகவும் வளர்க்கலாம்.
 • பொரித்த 22-23 வாரத்தில் பருவமடைகிறது.
 • கோழி 3 கிலோ எடையையும், சேவல் 4 கிலோ எடையையும் அடைகின்றன.
 • கோழிகள், ஒரு வருடத்திற்கு 180-190 முட்டைகள் ஈடுகின்றன.

பிற உள்நாட்டு இனங்கள்

இனம்

இடம்

அங்களேஷ்வர்

குஜராத்

அசீல்

ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்

பர்சா

குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா

சிட்டாகாங்

மேகாலயா மற்றும் திரிபுரா

டங்கி

ஆந்திரபிரதேசம்

தவோதிகிர்

அசாம்

காகஸ்

ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா

ஹர்ரிங்காடா கருப்பு

மேற்கு வங்காளம்

கதக்நாத்

மத்தியபிரதேசம்

காலஸ்தி

ஆந்திரபிரதேசம்

காஷ்மீர் பவிரோலா

ஜம்மு மற்றும் காஷ்மீர்

மிரி

அசாம்

நிக்கோபாரி

அந்தமான் மற்றும் நிக்கோபார்

பஞ்சாப் பிரெளன்

பஞ்சாப் மற்றும் அரியானா

தெள்ளிச்சேரி

கேரளா

3.06172839506
J தர்மராஜ் Oct 21, 2017 11:19 AM

ஐயா எனக்கு இந்த வகை கோழி கிடைக்குமா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

மதி என்.செல்வன் Dec 18, 2016 01:13 PM

ஆலோசனை: பதிலை எதிர்பார்க்கிறேன்:--
கோழிக்குஞ்சுகளுக்குப் பெயர் உள்ளதா? இரண்டு மாத காலத்துக்கு உட்பட்ட கோழிக்குஞ்சுகளை எப்படி அழைப்பார்கள்? விபரம் தர இயலுமா? அல்லது நான் எங்கே தேடி, அதன் பெயர்களை அறிய முடியும்? உதவுங்களேன்..
மதி என்.செல்வன்...18 -12 -2016 .

CHANDRA SEKAR Dec 10, 2016 06:50 PM

ஐயா வணக்கம் .
தங்களுடைய கட்டுரையை படித்தேன் மிக அருமை நன்றி.நான் திருச்சியை சேர்ந்த இளங்கலை பட்டதாரி நீண்ட நாட்களாக கோழி வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளது ஆடு ,கோழி மாடு போன்றவைகள் வளர்த்த அனுபவம் உள்ளது நட்டு கோழி வளர்ப்பதை ஒரு முழு நேர தொழிலாக செய்ய விருப்பம் உள்ளது.ஆனால் அது பற்றிய போதுமான அறிவும் வழிகாட்டுதலும் இல்லை.தங்கள் எனது ஆர்வத்தை புரிந்துகொண்ட எனக்கு சரியான வழிகாட்டுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி .

TASNA May 27, 2015 11:47 AM

கருத்துக்கு நன்றி. கோழிகளைப் பெற கட்டுரையில் போடப்பட்டுள்ள முகவரியை அணுகவும். மேலும் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் அதனை இங்கே பதிவு செய்யுங்கள்.

L.Ramadoss Dec 31, 2014 01:49 AM

அய்யா எங்களுக்கு இந்த கோழிகள் கிடைக்க என்னசெய்யவேண்டும் . எங்கிருந்து இந்த கோழிகளை நாங்கள் பெறமுடியும் சென்னை மாதவரம் பண்ணையில் கிடைக்குமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top