பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சாவ்கி வளர்ப்பு

பட்டுப் பூச்சி வளர்ப்பின் முதல் இரண்டு நிலையாகிய சாவ்கி வளர்ப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சாவ்கி வளர்ப்பு என்றால் என்ன?

சாவ்கி என்றால் பட்டுப் பூச்சி வளர்ப்பின் முதல் இரண்டு நிலைகளாகும். சாவ்கி புழுக்கள் முறையாக வளர்க்கப்படாவிட்டால், கடைசி நிலைகளில் உயிரிழப்பு ஏற்படும். ஆகவே, பட்டுபுழுக்கள் வளர்ப்பில் சாவ்கிதான் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த சமயத்தில்தான் அதிக அளவிலான வெப்பம், ஈரப்பதம், சுத்தமான சுற்றுப்புறம், தரமுள்ள துளிர் இலைகள், வளர்ப்பிற்குத் தோதான வசதிகள், எல்லாவற்றிற்கும் மேலாக தொழில்நுட்பத் திறன் வேண்டும்.

வியாபார ரீதியிலான சாவ்கி வளர்ப்பு மையங்கள்

மைசூரிலுள்ள மத்திய பட்டுவளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் (சி.எஸ்.ஆர்.டி.ஐ.) வியாபார ரீதியிலான “சாக்கி வளர்ப்பு மாதிரி மையம்” ஏற்படுத்தப்பட்டது. இது வருடத்திற்கு 1,60,000 நோயற்ற முட்டைகள் (dfls), அதாவது ஒரு சுழற்சிக்கு, 5000 வீதம், வருடத்திற்கு 32 சுழற்சிகளில் முட்டைகள் பொரிக்கும் வசதியை கொண்டிருக்கிறது.  இந்த “மாதிரி மையத்தை” 2 வருடங்கள் வெற்றிகரமாக சோதனை முறையில் நடத்திய பிறகு, இதே மாதிரியான மையத்தை நாட்டில் பிற பட்டு வளர்க்கும் பகுதிகளில் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வியாபார ரீதியிலான சாவ்கி வளர்ப்பு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்

வியாபார ரீதியிலான சாக்கி வளர்ப்பு மையத்தில், மல்பெரித் தோட்டம், சாக்கி வளர்ப்புக்குடில், வளர்ப்புக்கு உதவும் முக்கியமான உபகரணங்கள் ஆகியன தனித்தனியாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்சியளிக்கப்பட்ட அல்லது தொழில் திறனுள்ள பணியாட்கள்,     பட்டுவளர்ப்பில் அதுவும் விஞ்ஞான முறையிலான பட்டு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் தேவை.

  • பட்டுப்புழுவின் முட்டைகள் தாவரத்திலிருந்து சேகரிக்கப்படவேண்டும்.
  • சாவ்கிவளர்ப்பு மையத்தைச் சுற்றிலும் குறைந்தபட்சம் 80 முதல் 100பட்டு உற்பத்தியாளர்களும், குறைந்தது 120 லிருந்து 150 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்ட மல்பெரி தோட்டங்களும்  இருக்க வேண்டும்.

வியாபார முறையிலான சாவ்கி வளர்ப்பு மையத்தின் சாதக அம்சங்கள்

வலுவும் ஆரோக்கியமும் உள்ள இளம் புழுக்கள் வளர்க்கப்பட்டால்தான் பட்டுப்பூச்சிகள் நிலைத்திருப்பதற்கும், அதிக அளவில் கூடுகள் அமைவதையும் உறுதி செய்ய முடியும். வியாபார முறையிலான சாவ்கி வளர்ப்பு மையத்தின் முக்கிய நோக்கம்,

  • ஒரே மாதிரியானவையாகவும், ஆரோக்கியமாகவும் உள்ள பட்டுப்புழுக்களின் கூடுகளை உற்பத்தி செய்தல், இலை மாசுபடுவதையும், நோய்கள் பரபுவதற்கான வாய்ப்புகளையும் குறைத்தல்
  • முட்டைகளை சரியான விதத்தில் அடைகாக்க ஏற்பாடுகள் செய்து அதிக எண்ணிக்கையில் புழுக்களை பொரிக்க உதவுதல்
  • பட்டுப் புழுக்களை வளர்க்கும் போதே, சிறுபுழுக்கள் தொலைந்து உதிர்வதைத் தடுத்து உற்பத்தியை அதிகமாக்குதல்

சாவ்கி வளர்ப்பு பற்றி மேலும் விவரங்களுக்கும், இதில் அடங்கியுள்ள பிற நடைமுறை விஷயங்களைத் தெரிந்து கொள்ளவதற்கும், வர்த்தக முறையிலான மையத்திற்கு பதிவு செய்வதற்கும் கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதவும்.

உதவி இயக்குநர்,
மத்திய பட்டுப்புழு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்,
ஸ்ரீராம்புரா, மைசூர்- 570008. தொலைபேசி - 0821-2362406, 2362440

2.9928057554
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top