অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இளம் கெண்டை மீன் உற்பத்தி

இளம் கெண்டை மீன் உற்பத்தி

வியாபார ரீதியில் கெண்டை மீன் மற்றும் மீன்குஞ்சுகள் உற்பத்தி

தேவையான அளவு மீன் குஞ்சுகள் அதிலும் தேவையான இனங்கள், குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பது என்பது, மீன் வளர்ப்புத் தொழில் வெற்றிகரமாக செயல்பட முக்கிய காரணியாகும். கடந்த சில ஆண்டுகளில் கெண்டை மீன் வளர்ப்பில் பல மைல்களைக் கடந்து வெற்றிபெற்றிருந்தாலும், மீன் குஞ்சு கிடைப்பதில் இன்றளவும் சில பிரச்சனைகள் இருந்து வருகின்றன. விதை மீன் குஞ்சுகள் உற்பத்தியானது, 3-4 நாட்கள் இளம் குஞ்சுகளை அவை சாப்பிடத் துவங்கி 15-20 நாட்கள் வரைத் தொடர்ந்து வளர்ப்பதாகும். இந்த காலகட்டத்தில் குஞ்சுகளின் அளவு 25-30 மி.மீட்டர் வரை இருக்கும். இந்தக் குஞ்சுகள் 2-3 மாதங்களுக்கு மற்றொரு குளத்தில் வளர்க்கப்படுகின்றன. அதாவது 100 மி.மீட்டர் அளவு பெருகும் வரை!

மீன் குஞ்சு வளர்ப்பு குள பராமரிப்பு

சிறிய குளங்கள் 0.02-0.10 ஹெக்டேர் பரப்பில், 1-1.5 மீட்டர் ஆழமுள்ள சிறிய குளங்கள் மீன் குஞ்சு உற்பத்திக்கு சரியாக இருக்கும். 0.5† ஹெக்டேர் பரப்புள்ள குளங்கள் வியாபார ரீதி உற்பத்திக்கு ஏற்றவை. வடிகால் வசதி உள்ள மற்றும் இல்லாத சாதாரண குளங்களிளும், சிமெண்ட் குளங்களும் மீன் குஞ்சுகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. மீன் குஞ்சு உற்பத்தியிலுள்ள பல்வேறு நுட்பங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மீன் குஞ்சுகளை இருப்பு வைப்பதற்கு முன் குளத்தயாரிப்பு

தண்ணீர் தாவரங்களை வெளியேற்றுதல் - அபரிமிதமான தாவர வளர்ச்சி, மீன் குளத்திலுள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளுமாதலால், குளத்தின் உற்பத்திப் பெருக்கம் குறையும். இது தவிர, மற்ற உயிரினங்கள், தேவையற்ற மீன்கள், பூச்சிகளின் பெருக்கத்திற்கு இத்தாவரங்கள் உதவி செய்கின்றன. எனவே, தண்ணீரிலுள்ள தாவரங்களை முதலில் அகற்ற வேண்டும். பொதுவாக, மீன் குஞ்சு குளங்களை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் பயன்படுத்தப்படுகின்றனர். காரணம், இந்தக் குளங்கள் சிறியதாகவும், ஆழம் இல்லாமல் இருப்பதே. பெரிய குளங்களில் இயந்திரங்கள் மற்றும் இரசாயன உயிரின முறைகளைப் பயன்படுத்தி, குளங்களில் உள்ள தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.


சிமெண்ட் தொட்டி நர்சரிகள்

தேவையற்ற மீனினங்கள், ஊன் உண்ணிகளை அழித்தல் : பல்வேறு மீன் உண்ணிகள், தேவை இல்லாத மீன் இனங்கள், தவிர ஊன்உண்ணிகளான பாம்பு, ஆமை, தவளை, பறவைகள் போன்றவை குளத்திலுள்ள மீன் குஞ்சுகளுக்கு தொந்தரவு கொடுப்பதோடு, இடம், பிராணவாயு ஆகியவற்றிற்கும் போட்டியிடுகின்றன. குளத்திலுள்ள தண்ணீரை இறைத்து, காயவைத்து, சமயங்களில் சில ரசாயனங்களை பயன்படுத்தி தேவையற்ற மீனினங்களையும், ஊன் உண்ணிகளையும் அழிக்கலாம். இலுப்பை புண்ணாக்கு, ஒரு ஹெக்டேர்-மீ-க்கு 2500 கிலோ என்றளவில், மீன் குஞ்சுகளை குளத்தில் விடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் குளத்தில் இடலாம். இந்தப் புண்ணாக்கு ஒரு கிருமி நாசினியாக செயல்படுவதோடு, மக்கிய பின், இயற்கை எருவாகவும், பயன்படுகிறது. ப்ளீச்சிங் பவுடர்-(30 சதம் குளோரினை உள்ளடக்கியது) ஒரு ஹெக்டேர்-மீ-க்கு 350 கிலோ என்றளவிலும் பயன்படுத்தலாம். யூரியா ஒரு ஹெக்டேர்-மீ-க்கு 100 கிலோ போடும்போது ப்ளீச்சிங் பவுடர் அளவை பாதியாகக் குறைத்துக் கொள்ளலாம். ப்ளீச்சிங் பவுடர் போடுவதற்கு 18- 24 மணி முன்னால் யூரியாவை போட்டு விட வேண்டும்.
குளத்திற்கு உரமிடுதல்: ஒரு சில நீர்த்தாவரங்களே /பாசிகளே மீனிற்கு இயற்கை உணவாகும். இந்த நீர்த்தாவரங்கள்/ பாசிகள் உற்பத்திக்கு, உரங்களை குளத்தில் இடவேண்டும். குளத்தின் கார அமிலத் தன்மைக்கு ஏற்ற படி சுண்ணாம்பு போட வேண்டும். சுண்ணாம்பு இட்ட பிறகு குளத்தில் இயற்கை உரங்களான, சாணம், கோழி எரு, அல்லது கனிம உரங்கள் அல்லது இரண்டும் சேர்ந்து ஒவ்வொன்றாக இடவேண்டும். கடலை புண்ணாக்கு 750 கிலோ, சாணம் 200 கிலோ, ஒற்றை சூப்பர் பாஸ்பேட் 50 கிலோவை ஒரு ஹெக்டேரில் போடும்போது, நீர்த்தாவரங்கள்/பாசிகள் உற்பத்தி நன்றாக இருக்கும். இந்த அளவில் பாதியை எடுத்து தண்ணீர் சேர்த்து கொழ, கொழவெனத் தயார் செய்து மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு 2-3 நாட்களுக்கு முன்னால் குளத்தில் ஊற்ற வேண்டும். மீதியுள்ள பாதியை பாசிகள் உற்பத்தியை பொறுத்து 2,3 முறையாக குளத்தில் இடலாம்.


கெண்டை மீன் குஞ்சு

தண்ணீர்/ நீர்வாழ் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் : நீர்வாழ்பூச்சிகள் அதன் புழுக்கள், குளத்திலுள்ள சிறிய மீன் குஞ்சுகளோடு உணவிற்காக போட்டியிடுபவை. மேலும் சிறிய மீன் குஞ்சுகளை இவை அழிக்கவல்லவை. சோப்பு எண்ணைக் கரைசல் (விலை குறைந்த தாவர எண்ணெய் 56 கிலோ ஒரு ஹெக்டேருக்கு, இத்துடன் விலை குறைந்த சோப், தாவர எண்ணெய் எடையில் மூன்றில் ஒரு பங்கு எடை சேர்க்கவும்) பயன்படுத்துவது செலவு குறைந்த நுட்பமாகும். மேலும் நீர் மேற்பரப்பில் மூச்சுவிட்டு வாழும் பூச்சிகளையும் இது அழித்துவிடும். மண்ணெண்ணெய் 100-200 லிட்டர் அல்லது டீசல் 75 லிட்டருடன் சோப் திரவம் 560 மில்லி அல்லது துணி துவைக்கும் தூள் ஒரு ஹெக்டேர் தண்ணீர் அளவுக்கு 2-3 கிலோ ஆகியவற்றை சோப்பு எண்ணைக் கரைசலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

இருப்பு செய்தல்

பொறித்த மூன்று நாட்களுக்கு பிறகு, அவை மீன் குஞ்சு உற்பத்திக் குளங்களுக்கு மாற்றப்படுகின்றன. மாற்றுவதென்பது காலை நேரத்தில் செய்யப்படுகிறது. சாதாரண குளங்களில் ஒரு ஹெக்டேருக்கு 3-5 மில்லியன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்படுகின்றன. சிமெண்ட் தொட்டிகளில் 10-20 மில்லியன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்படுகின்றன. குஞ்சு உற்பத்திக் குளங்களில் ஒரே வகையான மீன் இனங்களே விடப்படுகின்றன.

மீன் குஞ்சுகள் இருப்பு செய்த பின் குளப்பராமரிப்பு

குளத்திற்கு அளிக்கப்படும் உரங்கள், 15 நாட்களில், 2-3 முறையாக பிரித்து அளிக்கப்படவேண்டும். நன்கு பொடிசெய்யப்பட்ட கடலை புண்ணாக்கு, அரிசி தவிடு இரண்டும் சம அளவில் (எடையின் அடிப்படையில்) எடுத்து ஒரு மில்லியன் குஞ்சுகளுக்கு 6 கிலோ என்றளவில் முதல் 5 நாட்களுக்கும், அடுத்தடுத்த நாட்களில் குஞ்சுகள் கொஞ்சம் வளர்ந்தபின் ஒரு மில்லியன் எண்ணிக்கைக்கு தினம் 12 கிலோ என்றளவிலும் இரண்டு தவணைகளில் பிரித்து இடவேண்டும். விஞ்ஞான தொழில் நுட்ப முறையினை கடைபிடிக்கும்போது நாம் விட்ட மீன் குஞ்சுகள் 15 நாட்களில் 20-25 மி.மீட்டர் அளவு வளர்ந்து விடும். குளத்தில் விட்ட மீன் குஞ்சுகளில் 40-50 சதவிகிதம் பிழைப்பு இருக்கும். நாற்றங்கால் குளம் என்பது 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதால், அதே குளம் மீண்டும் மீன் வளர்ப்புக்கு குறிப்பாக மீன் குஞ்சுகள் உற்பத்திக்கு சாதாரண குளமாக இருந்தால் 2-3 முறையும் சிமெண்ட் குளமாக இருந்தால் 4-5 முறையும் பயன்படுத்தலாம்.

மீன் குஞ்சு இருப்பு செய்யும் குளப் பராமரிப்பு

இந்த குளங்களின் அளவு, நாற்றங்கால் குளங்களை விட சற்று பெரிது. பொதுவாக 0.2 ஹெக்டேர் இருத்தல் நலம். மீன் குஞ்சு வளர்ப்பதிலுள்ள நுட்பங்களைப் பார்ப்போம்.

குளத்தில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன்

குளப் பராமரிப்பு: மீன் குஞ்சுகளை குளத்தில் இருப்பு செய்வதற்கு முன் குளத்தை தயாரிப்பது என்பது தண்ணீரிலுள்ள தாவரங்களை சுத்தம் செய்தல், ஊன் உண்ணிகள், தேவை இல்லாத மீன் குஞ்சுகளை அகற்றுதல் முக்கியமான பணியாகும். ஆனால் தண்ணீர்வாழ் பூச்சிகளை குளத்தில் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. குளத்தில் கனிம உரங்களையும், இயற்கை எருக்களையும் பரிந்துரை செய்யும் அளவில் இட வேண்டும். இலுப்பை பிண்ணாக்கு பயன்படுத்தப்பட்டால், சாணி இடும் அளவை ஒரு ஹக்டேருக்கு 5 டன்னாக குறைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக சாணம் இடும் அளவு 10 டன். மூன்றில் ஒரு பங்கு அடி உரமாக 15 நாட்களுக்கு முன் இட்டால், (அதாவது மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்) மீதியுள்ள இரண்டு பங்கு 15 நாட்களுக்கு ஒரு முறையாக பின்னர் இடப்படவேண்டும். யூரியா- 200 கிலோ, ஒற்றை சூப்பர் பாஸ்பேட் 300 கிலோ ஒரு ஹெக்டருக்கு, ஒரு வருடத்திற்கு 15 நாட்கள் இடைவெளியில் பிரித்து இந்த உரங்களை குளத்தில் இடவேண்டும்.


கெண்டை மீன் குஞ்சுகள்

குளத்தில் குஞ்சுகளை இருப்பு செய்தல்

ஒரு குளத்தில் எவ்வளவு குஞ்சுகளை இருப்பு செய்கிறோம் என்பது குளத்தின் உற்பத்தி திறனையும், அதனை எவ்வளவு பராமரிக்கிறோம் என்பதை பொறுத்து அமைகிறது. பொதுவாக ஒரு ஹெக்டேருக்கு 0.1-0.3 மில்லியன் என்றளவில் இருப்பு செய்யலாம். நாற்றங்கால் என்பது ஒரே வகையான மீன் குஞ்சுகள் வளர்க்கபடுகின்றன, ஆனால், வளர்ச்சி பருவத்தில், பல்வேறு வகை மீன் குஞ்சுகளை வளர்க்களாம்.

குளத்தில் குஞ்சுகளை இருப்பு செய்தபின் பராமரிப்பது எப்படி?

மீன் குஞ்சுகளுக்கு தீவனமாக அதன் எடையில் 5-10 சதவிகிதம் அளவில் இடவேண்டும். இத்துடன் இணை உணவாக கடலை புண்ணாக்கு, அரிசித் தவிடு இரண்டும் சம அளவில் (எடைக் கணக்கில்) கலந்து கொடுக்க வேண்டும். கிராமங்களில் கிடைக்கும் உணவுகளையும் பயன்படுத்தலாம். புல் கெண்டை மீனை வளர்க்கும்போது சில களைகளையும் உணவாக பயன்படுத்தலாம். குளத்தில் 1.5 மீட்டர் ஆழம் நீர் நிறுத்த வேண்டும். அவ்வப்போது, பரிந்துரைப்படி உரமிட்டு, முறையான பராமரிப்புகளை கையாளவேண்டும். இதன் மூலம் மீன் குஞ்சுகள் 80-100 மி.மீட்டர் அளவுக்கும் 8-10 கிராம் எடையும் அடையும். அத்துடன் 70-90 சதவிகிதம் குஞ்சுகள் பிழைப்புத்திறனும் கிடைக்கும்.

கெண்டை மீன் வளர்ப்பு பொருளாதாரம்

வ.எண்.

பணிகள்/ செலவுகள்

தொகை (ரூபாயில்)

I.

செலவுகள்

 

அ.

நடைமுறைச் செலவு

 

1.

குளத்திற்கான குத்தகை தொகை

5000

2.

பிளீச்சிங் பவுடர் (10 பீபீஎம் குளோரைடு) /மற்ற ரசாயனங்கள்

2500

3.

எருக்கள் மற்றும் உரங்கள்

8000

4

கெண்டை மீன் குஞ்சுகள்(5 மில்லியன், ஒரு மில்லியன் 5000 ரூபாய் விலையில்)

25000

5.

இணை உணவு (750 கிலோ- ஒரு கிலோ பத்து ரூபாய் விலையில்)

7500

6.

வேலையாட்கள் பராமரிப்பு மற்றும் மீன் அறுவடை (100 மனித நாட்கள் - ஒரு மனித நாளுக்கு 50 ரூபாய் வீதம்)

5000

7.

இதர செலவுகள்

5000

 

மொத்தம்

58000

 

மொத்த செலவு

 

1.

நடைமுறைச் செலவுகள்

58000

2.

நடைமுறைச்செலவுக்கு வட்டி (15 சதவிகிதம் வருடத்திற்கு ஒரு மாதத்திற்கு)

0.725

 

ஆக மொத்தம்

58725
= 59000

II

மொத்த வருமானம்

 

 

மீன் விற்பனை மூலம் (15 லட்சம் மீன்கள்- ஒரு லட்சம் மீன்களுக்கு 7000 ரூபாய் வீதம்)

1,05000

III

நிகர வருமான (மொத்த வருமானம் - மொத்த செலவு)

46000

குறைந்தது இரண்டு முறை ஒரு பருவகாலத்தில் மீன்களை வளர்க்க முடியும். இரண்டு முறை என்றால் ஒரு ஹெக்டேரிலிருந்து 92000 ரூபாய் நிகர வருமான எடுக்க முடியும்.

மீன் குஞ்சு வளர்ப்பு பொருளாதாரம்

வ.எண்

பணிகள்/ செலவுகள்

தொகை (ரூபாயில்)

I.

செலவுகள்

 

அ.

நடைமுறைச் செலவு

 

1.

குளத்திற்கான குத்தகை தொகை

10,000

2.

ப்ளீச்சிங் பவுடர் (10 பிபிஎம் குளோரைடு) / மற்ற ரசாயனங்கள்

2,500

3.

எருக்கள் மற்றும் உரங்கள்

3,500

4.

மீன் குஞ்சுகள் (மூன்று லட்சம்- ஒரு லட்சம் 7000 ரூபாய் விலையில்)

21,000

5.

இணை உணவு (5 டன் - ஒரு டன் 7000 ரூபாய் விலையில்)

35,000

6.

கூலி (100 மனித நாட்கள் - ஒரு மனித நாளுக்கு 50ரூபாய் வீதம் பராமரிப்பு மற்றும் மீன் அறுவடைக்காக)

5,000

7

இதர செலவுகள்

3000

 

மொத்தம்

80000

 

மொத்த செலவு

 

 

நடைமுறைச் செலவு

80000

 

நடைமுறைச் செலவுக்கு வட்டி (15 சதவிதம் ஒரு வருடத்திற்கு)மூன்று மாதத்திற்கு

3000

 

ஆக மொத்தம்

83000

II

மொத்த வருமானம்

 

2.1லட்சம் மீன்கள் விற்பனையின் மூலம் (ஒரு1000மீன்களுக்கு 500 ரூபாய்வீதம்)

1,05,000

III

நிகர வருமானம்

22,000

மூலம் :


© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate