பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / இந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு

இந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை பெறுகின்றனர். என்பதுடன், அது மொத்த தொழிலாளர்களில் 52 சதவிகிதம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பினை அளிக்கிறது. வேளாண்மை, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 14 சதவிகித பங்களிப்பை மட்டுமே அளிக்கிறது. நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளண்மையின் பங்களிப்பு குறைந்து வருகின்ற போதிலும் இந்தத் துறை நமது நாட்டில் உள்ள 100 கோடிக்கும் அதிகமான மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதாலும், வேளாண் சார்ந்த தொழில்களுக்குத் தேவையான மூலப் பெருட்களை அளிப்பதாலும் இது ஒரு முக்கியமான துறையாகத் திகழ்ந்து வருகிறது. நமது நாட்டின் கிராமப்புற ஏழ்மையைக் குறைப்பதில் வேளாண் வளர்ச்சிக்கு நேரடியான மற்றும் உறுதியான தாக்கம் உள்ளது.

விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை உருவாக்குபவர்களின் கூட்டு முயற்சிகள் இந்தியாவின் வேளாண்மையை பெருமிதமடையச் செய்துள்ளது. கடந்த அறுபதுகளில் புதிய வேளாண் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் (1965-2015) வேளாண் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. வேளான் உற்பத்தியில் இந்த மகத்தான வளர்ச்சிக்கு தேசிய வேளாண்மை ஆராய்ச்சி முறையின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்திய வேளாண்மை புதிய சவால்களை சந்திக்கிறது அல்லது உற்பத்தியை அதிகரித்தல், லாபத்தை அதிகரித்தல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றுடன் தன்னிறைவை அடையும் வகையில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய நீடித்திருக்கும் அம்சங்கள் ஆகியவற்றை எதிர் கொண்டு வருகிறது.

மொத்த உற்பத்தியில் நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பங்கள் உரிய முறையில் செல்வது பராமரிக்கப்படுவதற்கான முயற்சிகள் வேண்டும். அழுகும் பொருட்களில் ஏற்படும் உற்பத்தி இழப்பு, அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் ஆகியவை பூமி மற்றும்; தண்ணிர் போன்ற ஆதாரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டி அதன் மூலம் உணவுப் பாதுகாப்பு இலக்குகள் எட்டப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் பிரச்சனைகள் மற்றும் அதிகரித்து வரும் சவால்களை எதிர் கொள்வது மற்றும் நம்பகமான தீர்வுகளை அளிப்பது என்பது ஒரு தொழில்நுட்ப மற்றும் கொள்கைச் சவால் ஆகும். பொருளாதார மற்றும் சமூக நலத்தின் அடிப்படையில்  வேளாண் தொழில்நுட்பப் பயன்கள் நீடித்திருக்கவும் இது அவசியமாகும்.

அகில இந்திய ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சித் திட்டம்

இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சி அமைப்பு மூன்று அடுக்கு அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அவை

  1. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) உயர் மட்டத்திலும்,
  2. மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மாநில அளவிலும்
  3. தனியார் துறை, துறை மற்றும் பண்டக மட்டத்திலும் இதனை நிர்வகித்து வருகின்றன. இவை தவிர மத்திய வேளாண் துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சிக் கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவற்றில் சில அமைப்புகள் உள்ளன.

ஐசிஏஆர் எனப்படும் வேளாண் ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சிலின் கீழ் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. எஸ் ஏ யுக்களின் அணிக்கை தற்போது எழுபதுக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது.

அகில இந்திய ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சித் திட்டம் என்பது ஐசிஏஆர் மற்றும் எஸ் எ யுக்களுக்கு இடையே ஏற்பட்ட இணைப்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு பெரும் இணைப்பாகும். இந்த ஒருங்கிணைந்த திட்டங்கள் நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்புக்கான கொள்கையில் செயல்படுகிறது. சோளத்திற்கான முதலாவது அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம் 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐசிஏஆர் 79 ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டங்களை 2015-16இல் மணல், தண்ணீர், பயிர்கள், தோட்டக்கலை, கால்நடைகள், மீன்வளம், வேளாண்மை பொறியியல், வீட்டு அறிவியல், கல்வி உள்ளிட்ட பல்வேறு பண்டகங்கள் மற்றும் துறைகளின் கீழ் கொண்டுள்ளது. பயிர்கள் மீதான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டங்கள் சுற்றுச்சூழல் நிலைகள் அடிப்படையில் செயல் பகுதிகளை விளக்கியுள்ளன. இந்த அமைப்பு அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டங்கள் சிறந்த முறையில் இயற்கை ஆதாரங்களையும் மனிதன் மற்றும் பொருட்களையும் பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு பல்வேறு கட்டங்களில் ஒருங்கிணைந்த முறையில் முன் உறுதி செய்யப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் யுக்திகளைக் கையாள்வதை சாத்தியமாக்குகிறது.

ஆராய்ச்சி முதலீடு

இந்தியாவில் வேளாண்மை அமைப்பு பொதுக்களத்தில் பிரதானமாக இருப்பதுடன் அரசு வேளாண்மை ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்றியுள்ளது. வேளாண்மை உள்ளிட்ட அனைத்து அறிவியல் துறைகளிலும் ஆராய்ச்சிகளுக்காக தொடர்ந்து நிதியை இந்த அரசு அளித்து வருகிறது. வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு அரசு செய்த மொத்த செலவு கடந்த 1975-76ல் இருந்த 19 பில்லியன் ரூபாயில் இருந்து 2014-15ல் 13.8 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. நாற்பது ஆண்டுகளில் இந்த உயர்வு 10 மடங்கு ஆகும். வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு மத்திய மாநில அரசுகள் இரண்டும் தங்கள் செலவை அதிகரித்து வருகின்றன. மொத்த ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான செலவில் மாநிலங்களின் பங்களிப்பு கடந்த 1988-89; 58 சதவிகிதமாக இருந்தது என்றும் 2006-07ல் இது 43 சதவிகிதமாக குறைந்து, 2014-15ல் 50 சதவிகிதமாக இருந்தது என்று மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் மத்திய நிதிகளின் பெரும் விகிதம் எஸ் ஏ யுக்களுக்கு வளர்ச்சி மானியங்களாகவும் முன்னணி விரிவாக்கம் மூலஆராய்ச்சி மையமாகவும் மாற்றப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்புகள் பெரிய அளவில் உருவெடுத்து இந்தியாவில் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கத் தவறிவிட்டன. மத்திய துறை கூடுதல் வளங்களை பெற தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. ஆனால் மாநில அமைப்புகள் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை அல்லது கூடுதல் நிதிக்கு தங்களுக்காக வாதாடும் திறன் அற்றவையாக உள்ளன. குறைவான நிதி பெறும் விவகாரத்தில் கொள்கை உருவாக்குவோரின் உடனடி கவனம் தேவைப்படுகிறது.

உள்ளூர் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் பொது செலவிடுதலின் மட்டத்தைக் கவனிக்க இன்னொரு வழி, ஆராய்ச்சி முதலீட்டு தீவிரத்தை கணக்கிடுவது. இது வேளாண் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆராய்ச்சி முதலீடு ஒரு விகிதமாக இருக்கும். இந்த விகிதம் 1990களில் 0.40 ஆகவும் 2008-09ல் 0.57 ஆகவும் இருந்தது. இந்த மட்டத்திலான ஆராய்ச்சி முதலீடு தீவிரம் 0.6 என்ற சதவிகிதமாக உலகத்திற்கான ஒட்டுமொத்த சராசரியுடன் ஒப்பிடத்தக்கது எனினும் வளரும் நாடுகளுக்கு வேளாண் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான முதலீட்டு தீவிரம் பொதுவாக 1.0 சதவிகிதமாக பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான முதலீடு குறைவாகவே உள்ளது. எனினும் வேளாண் ஆராய்ச்சி முறை மற்றும் அதிகரித்து வரும் குழப்பமான சவால்களுடன் உண்மை செலவு மற்றும் வாய்ப்புகளுடன் பொது செலவினம் நியாயமாக அதிகரிக்கும்.

வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் பங்களிப்பு வேளாண்மைத்துறையின் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு அளிக்கும் சாத்தியம் ஆராய்ச்சி மற்றும் அபி உள்ளது. வேளாண்மையில் வேளாண்மை விருத்திக்கு அறிவியல் முன்னேற்றம் கூடுதல் வாய்ப்புகள் மற்றும் வெளியீட்டு அலகு ஒன்றுக்கான குறைந்த செலவில் அதே பயன்கள் அல்லது கூடுதல் பயன்களை அளிக்கும் வாய்ப்புகள் கொண்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க உதவி செய்துள்ளது. இந்தியாவில் இந்த பங்களிப்புகள் அதிக அளவு ஈர்க்கக்கூடியதாகவும் பொது முதலீட்டுக்கான வரலாற்று சிறப்புமிக்க பயன்கள் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளன. பெரும்பாலான பயன்கள் பயிர்கள் மற்றும் கால்நடைகள் உற்பத்தியில் முன்னேற்றம் மூலம் கிடைத்துள்ளது. அறுவடைக்கு முன் மற்றும் பிந்தைய நிர்வாக தொழில்நுட்பங்களில் வளர்ச்சி இழப்புகளைக் குறைப்பதிலும் இருப்பை அதிகரிப்பதிலும் மற்றும் மதிப்பு கூடுதலிலும் உதவியுள்ளது. உற்பத்தி இழப்புகளை குறைப்பது மற்றும் பொருட்கள் மீதான மதிப்பைக் கூட்டுவது ஆகியவை மொத்த இருப்பு, உற்பத்தி செலவைக் குறைப்பது, மற்றும் தேசப்பொருளாதாரத்திற்கு பங்களிப்பு ஆகியவற்றுக்கு நேரடிப் பங்களிப்பைத் தரும். வேளாண்மையில் உள்ள பிரச்சனைகளை நிர்வகிக்க தொழில்நுட்பம் மற்றும் முழுமையான தீர்வை அளிக்காது என்ற போதிலும், அது சிறந்த நம்பகமான தீர்வுகளை அளிக்கும் திறன் கொண்டதாகும். எனவே வேளாண்மைத் துறையில் குறிப்பாக இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை நிர்வகிக்க வேளாண் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் பங்களிப்பு முக்கியமாகும்.

வேளாண் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் பங்களிப்புகளை விவரிக்கும் வகையில் அரிசி தொடர்பான பல்வேறு வளர்ச்சிகள் குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது. அரிசி இந்தியர்களால் அதிகம் பயிரிடப்படும் பயிராக இருப்பதாலும், இந்த பயிர் வகைகளைச் சுற்றியே பல தொழில் நுட்ப வளர்ச்சிகளும் ஏற்பட்டிருப்பதால் அது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பயிர் வகைகள் என்பது பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களில் ஒன்றாக இருப்பதாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் பங்களிப்புகளை மதிப்பீடு செய்வதற்கு சிறந்த குறியீடாக உள்ளது. அரிசி அதிகமான பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ஒரு பெரிய பயிர் என்பதாலும், இது பல்வேறு தடைகளையும் மீறி ஆராய்ச்சி அமைப்பின் அதிக கவனத்தைப் பெறுவதாலும் அது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 1970களில் 127 வகைகள் வெளியிடப்பட்டது. அது 1980களில் 223 ஆக அதிகரித்தது. 1990களில் வெளியிடப்பட்ட வகைகளின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்ததுடன் 2001-2012 கால கட்டத்தில் இது 301 ஆக அதிகரித்தது.

இனப்பெருக்கம் செய்யப்பட்ட அரிசி வகைகளின் எண்ணிக்கை உயர்ந்ததுடன், அரிசி வகைகள் இனப்பெருக்க திட்டங்கள் காலப்போக்கில் சில தரமான மாற்றங்களையும் கண்டது. நுண் தரத்துடன் வகைகளின் விதை 1970களில் இருந்த 29 சதவிகிதம் என்ற அளவில் இருந்து 1990களில் 36 சதவிகிதமாக அதிகரித்து அந்த பகிர்வு 2001-2012 காலகட்டத்தில் 28 சதவிகிதமாகக் குறைந்து போதிலும் பூசா 121 மற்றும் பூசா 1509 பாசுமதி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. குறு உற்பத்தி சுற்றுச்சூழல்களுக்கான வகைகள் மற்றும் யிரியல் அழுத்தங்களை தாக்கக்கூடிய வகைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு இருந்தது. இந்த வகை வகையான உருவாக்கங்கள் கிழக்கிந்திய பகுதிகளில் மழையை எதிர்பார்க்கும் பகுதிகளில் இருந்த மாறுபாட்டையும் குறைத்தது. கலப்பின அரிசி வகைகளும் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 15 20 சதவிகிதம் பயன் கிடைத்தது. நுண் தானிய தரத்துடன் உயர் மற்றும் நிலையான மகசூல் பராமரிப்பது என்பது அரிசி இனப்பெருக்கத் திட்டங்களின் ஒரு பெரும் அன்பளிப்பாகும். குறுகிய கால மற்றும் நடுத்தர கால வகைகளை இனப்பெருக்கம் செய்வதில் கண்ணோட்டம் செலுத்தப்பட்டுள்ளது. இது கடந்த 1980கள் மற்றும் 1990களில் வெளியிடப்பட்ட மொத்த வகைகளில் பாதி அளவுக்கு இருந்ததுடன் 2001-2012ல் வெளியிடப்பட்ட வகைகளில் 80 சதவிகிதமாக இருந்தது.

நீர்ப் பாசனத்திற்கான அதிக செலவு மற்றும் நிலத்தில் இருந்து கூடுதல் லாபம் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஆகியவையே இதற்குக் காரணம்.

இதே போன்ற இனப்பெருக்க வளர்ச்சிகள் இதர பயிர்களான சோளம் மற்றும் கோதுமை போன்றவற்றிலும் பரிசோதிக்கப்பட்டது. சோளத்தைப் பொறுத்த வரையில் மகசூலை அதிகரிப்பதுடன், அதிக புரதம் கொண்ட சோள கலப்பினங்களை உருவாக்கி அதிகரித்து வரும் தீவன தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கோதுமையைப் பொறுத்த வரையில் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் 381 வகைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 136 வகைகள் வீணாகாத அம்சங்கள் கொண்டவையாகும். இது தவிர 215 வகைகள் தானிய ஊட்டச்சத்து மற்றும் தரம் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. சமீப ஆண்டுகளில் உயர் கோதுமை வகைகள் குறு ஊட்டச்சத்து நிறைந்த வகைகள் வெளியிடப்பட்டு இதன் மூலம் ஏழை மக்கள் ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றனர்.

இதுதவிர தோட்டக்கலைப் பயிர்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு நோய்களற்ற நடவுப் பொருட்களை திசு வளர்ப்பு முறையில் கிடைக்கச் செய்வது, இதர நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு அதன் மூலம் உயர் பயிர் மகசூல் மற்றும் வகைகளை விரைவாக பின்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆதாரங்கள் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அரிசி கோதுமை பயிர் முறைகளில் 5 முதல் 30 சதவிகிதம் தண்ணிர் பயன்பாட்டைக் குறைக்கிறது. கால்நடைத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் பால் மற்றும் இறைச்சி மகசூலை அதிகரித்து பிராணிகளின் இறப்பு விகிதத்தை குறைத்துள்ளது.

பொருளாதாரப் பயன்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளின் நிலங்களில் கடைப்பிடிப்பது அதிக பயிர் மகசூலைப் பெறவும் அதன் மூலம் அதிக உற்பத்தியையும் பெற முடியும். 4.23 லட்சம் டன் நெல் மற்றும் 5.90 லட்சம் டன் கோதுமை கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டிருப்பது 1975-2005 வரையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை மட்டும் பின்பற்றியதால் சாத்தியமானது என்று மதிப்பீட்டாளர்கள் கூறுகின்றனர். மதிப்புகளின் அடிப்படையில் பார்க்கும் போது இது முறையே 241 கோடி மற்றும் 636 கோடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வெளிப்பாடு என்பது மொத்த பயிர் உற்பத்தியை அதிகரித்திருப்பது மட்டுமின்றி இந்தியாவின் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ததுடன் அரிசி, சோளம் மற்றும் கோதுமை போன்ற பயிர்களை தன்னிறைவை எட்டுவதற்கும் உதவியுள்ளது. எனினும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைபது எட்டப்படாமல் இருப்பதால் அதற்கு உடனடி கவனம் செலுத்தி கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

வேளாண் ஆராய்ச்சிகள்

பொருளாதாரத்தில் மொத்த உற்பத்தித் திறன் காரணி என்ற கருத்து ஆராய்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக பயன்படுத்தப்படுகிறது. மொத்த உற்பத்தித்திறன் காரணிகளின் மதிப்பீடுகள் தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றல் அடிப்படையில் அதிக வெளிப்பாடுகளை குறிப்பதுடன், உற்பத்தி நடைமுறையில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளையும் குறிக்கிறது. இதன் மூலம் கோதுமைப் பயிர் அதிக பயன் அடைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பருத்தி, பருப்பு மற்றும் செல் உள்ளன. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சியில் தானியங்கள், பருப்பு, பருத்தி மற்றும் கடுகு ஆகியவற்றில் உற்பத்தி செலவு 1.0 2.3 சதவிகிதம் முதல் குறைந்திருப்பதாக தெரிகிறது. உற்பத்தி செலவை குறைப்பதன் மூலம் நுகர்வோருக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதுடன் உற்பத்தியாளர்களுக்கும் பயன் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் செலவுகளில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார பயன்கள் கிடைப்பதால் ஆராய்ச்சிக்கு அரசு மேற்கொள்ளும் செலவு நியாயப்படுத்தப்படுகிறது.

வேளாண் ஆராய்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி முதலீடுகள் மொத்த உற்பத்தித் திறன் காரணிக்கான ஒரு பெரிய பங்களிப்பு என்பதால் அது ஒரு முழு வெற்றியாகும். இது கிராமப்புற ஏழ்மையை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. ஆராய்ச்சிக்காக கூடுதலாக செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் 1975 முதல் 2005 வரையிலான காலக்கட்டத்தில் நிலக்கடலை மற்றும் கடலை தவிர சராசரியாக அனைத்துப் பயிர்களிலும் ஒரு ரூபாய்க்கும் அதிகமாக லாபத்தை அளிக்கிறது என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. துவரைக்காக ஆராய்ச்சி முதலீடு கொண்ட பலன்களை மேற்கொள்ளப்பட்ட மதிப்பு அளித்தது. இதற்காக செய்யப்பட்ட கூடுதல் ஒரு ரூபாயின் மூலம் ரூ. 12.87 மதிப்பிலான பலன் கிட்டியது. மற்ற இதர பயிர்களில் கூடுதல் பலன்கள் முதலீட்டுக்கு செய்யப்பட்ட கூடுதல் ஒரு ரூபாயில் இருந்து இரண்டு முதல் நான்கு ரூபாயாக இருந்தது. முதலீடுகளின் சாத்தியக்கூறுகளைப் பார்ப்பதற்கான இன்னொரு வழி லாபத்தின் சாத்தியம் மற்றும் முதலீட்டின் விரைவான மீட்பு ஆகியவற்றை அளிக்கும் பயன்களின் உள்விகிதம் ஆகும். 1975 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் வேளாண்மையில் பொது முதலீட்டுக்கான பலன்களின் உள் விகிதம் அரிசிக்கு 29 சதவிகிதமாகவும், கோதுமைக்கு 38 சதவிகிதமாகவும், சோளத்திற்கு 28 சதவிகிதமாகவும், துவரைக்கு 57 சதவிகிதமாகவும், பருத்திக்கு 39 சதவிகிதமாகவும் இருந்தது தெரியவருகிறது. பசுமைப்புரட்சிக்கு பிந்தைய குறுகிய காலத்திற்கான இதர ஆய்வுகளிலும் உயர் இந்தப் பலன்கள் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளன. வேளாண்மையில் ஆராய்ச்சிக்காக மேலும் செய்யப்படும் முதலீடு குறிப்பிடத்தக்க பலன்களை அளிப்பதுடன் நமது நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும் இந்த முடிவுகள் என்பதையும் காட்டுகின்றன.

ஆராய்ச்சிப் பயன்களைத் தக்க வைப்பது இந்திய வேளாண்மைத் துறை போட்டிக்கான குறிக்கோள் மற்றும் திட்டங்களுக்கான வளங்களின் மீதான கட்டுப்பாடுகளை எதிர் கொண்ட போதிலும் சோதனைக் காலங்களிலும் நின்று வந்துள்ளது. இது தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் பரவல் காரணமாக சாத்தியமாகியுள்ளது. கடந்த காலத்தில் பெறப்பட்ட பொருளாதாரப் பயன்கள் கிரமப்புற ஏழ்மை குறைப்பு மற்றும் நீடித்த சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கது. இந்த அமைப்பு கூடுதல் பொறுப்புடன் இருக்கவும் குறிப்பிடப்பட்ட இலக்குகள் மற்றும் நோக்கங்களை இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எதிர்கொள்ளத்தக்கதாகவும் சிறந்த மகசூலைப் பெறுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் / செயல்பாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட வளங்களை தொடர்ந்து ஆய்வு செய்து அவற்றை ஒதுக்கீடு செய்வதையும் இது இன்றியமையாதாக ஆக்குகிறது. வேளாண் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்வதையும் குறையும் போதும் வலிமையான நம்பகத் தன்மை தேவைப்படும் போதும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் / முறைகள் குறித்து ஆய்வு செய்ய முன்னுரிமை அளித்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு பயனுள்ளதாக இருக்கும். ஆராய்ச்சியை இலக்காகக் கொண்டும் ஆராய்ச்சி ஆதாரங்களை பகுத்து ஒதுக்கீடு செய்யவும் இந்தப் புதிய நிர்வாக கருவி அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரிய அமைப்பு மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களில் குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளில் இது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

ஆராய்ச்சி குழப்பங்களை சிறப்பான முறையில் புரிந்து கொள்ளவும் வேளாண்மைத் தொழில்நுட்பம், கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் ஆகியவற்றிடையே இணைப்பை ஏற்படுத்தவும் முன்னுரிமை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு முறை தற்போது ஆராய்ச்சி அமைப்பில் ஒரு வழக்கமான அம்சமாக உள்ளது. தற்போதுள்ள நிலைகளுக்குள் அதிக பொறுப்புள்ள அமைப்பை உருவாக்க உயிரியற்பியல் மற்றும் சமூக விஞ்ஞானிகளும் விவசாயிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். முகமைகளுடன் எப்போதும் செயல்படும் ஆராய்ச்சி கூட்டணி அமைக்கவும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  இந்தியாவில் வேளாண் அறிவியல் பயன்களை வர்த்தகமாக்கி கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக பங்களிப்புகளை அளித்ததுடன், எதிர்காலத்திலும் இந்தப் பயன்களை நிலைத்திருக்கச் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆராய்ச்சிக்குக் கூடுதல் ஆதாரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, இந்தத் தொழில்நுட்பப் பரவல் விரைப்படுத்தப்பட வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top