பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / திருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

திருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்

திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கான ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நெல் சாகுபடியில் ஏக்கருக்கு சராசரியாக 4,000 முதல் 4,800 கிலோ வரை மகசூல் கிடைக்கும் திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கு ஆலோசனைகள்:

 • 14 நாள்களில் நாற்றுக்களை பெற திருத்தியமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்த வேண்டும். இதற்கு நல்ல வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் நாற்றங்காலை அமைக்க வேண்டும்.
 • ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 3 கிலோ விதையை 40 சதுர மீட்டர் பரப்பில் நாற்றங்கால் விதைக்க வேண்டும்.
 • முன்னதாக 1 மீட்டர் அகலம், 40 மீட்டர் வரை நீளம், 5 செ.மீ உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.
 • பாத்தியின் மேல் 300 கேஜ் கனமுள்ள வெள்ளை அல்லது கருப்பு பாலித்தீன் விரிப்பு அல்லது பாலித்தீன் உரச் சாக்குகளை விரிக்க வேண்டும்.
 • நீளம் மற்றும் அகலவாக்கில் 4 கட்டங்களாக தடுக்கப்பட்டு 1 மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம், 4 செ.மீ உயரம் கொண்ட மரத்திலான விதைப்புச் சட்டம் தயார் செய்து அதனை பாலித்தீன் விரிப்புக்கு மேல் சரியாக சமன் படவைக்க வேண்டும்.
 • ஒரு கிலோ வளமான வயல் மண்ணுடன் நன்கு பொடியாக்கிய டிஏபி உரத்தை சேர்த்து விதைப்பு சட்டத்துக்குள் முக்கால் அளவுக்கு நிரப்ப வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 3 கிலோ முளை கட்டிய விதையை 0.5 சதுர மீட்டர் சட்டத்துக்குள் 45 கிராம் என்ற அளவில் விதைத்து பின் மண்ணால் நன்கு மூடி விட வேண்டும்.
 • பின்னர் பூவாளியால் அடி வரை (பாலித்தீன் விரிப்பு வரை) நனையும் அளவுக்கு தண்ணீர் தெளித்து சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும். தென்னை ஓலை அல்லது வைக்கோலைக் கொண்டு விதைத்த பாத்திகளை மூடி 8 நாள் கழித்து எடுக்க வேண்டும்.
 • தொடர்ந்து, 5 நாள்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்த பின் பாத்திகள் நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்ட வேண்டும்
 • விதைத்த 9ஆம் நாளில் 0.5 சதம் யூரியா கரைசல் (150 கிராம் யூரியாவுக்கு 30 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில்) பூவாளி மூலம் மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
 • சரியாக 14ஆவது நாளில் சிறிய சதுர சட்டத்துக்குள் உள்ள 12 முதல் 16 செ.மீ உயரமுடைய 2 இலை கொண்ட இளம் நாற்றுக்களை மெதுவாக அசைத்து பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு சென்று அங்கு நாற்றுக்களின் வேர் அறுபடாமல் எடுத்து குத்துக்கு ஒரு நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 22.5 செ.மீ இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
3.08333333333
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top