பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறகு அவரையின் சிறப்பியல்புகள்

வீட்டுத்தோட்டங்களுக்கேற்ற சிறகு அவரையின் சிறப்பியல்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் "சிறகு அவரை" என்றும், மலையாளத்தில் 'சதுர வரை' என்றும் வடமாநிலங்களில் "கோவாபீன்" என்றும் அழைக்கப்படுகிறது. அறிவியல் பெயர் : "சொபோகார்பஸ் டெட்ராகோனலோபஸ்" (Psophocarpustetragonolobus)

இதன் தாயகம் நியூகினி என்றாலும் காற்றில் ஈரப்பதம் அதிமாக இருக்கும் வெப்ப மண்டலங்களான தென்கிழக்கு ஆசியநாடுகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

சிறப்பு

அவரை, பயறு குடும்பத்தைச் சார்ந்ததாகையால் தனக்குத் தேவையான சத்துக்களை வேரில் வாழும் பாக்டீரியாவின் துணையுடன் தயாரித்துக்கொள்ளும். பூச்சி, நோய் எதிர்ப்புசக்தி அதிகம். ஒருமுறை விதை ஊன்றினால் போதும், மறு ஆண்டு ஊன்றத் தேவையில்லை. விதைத்த 90ஆம் நாளில் ஊதா நிறப் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற இரண்டாம் வாரத்தில் நல்ல, 15 லிருந்து 22 செ.மீ. நீளமுடைய, மிருதுவான காய்கள் கிடைக்கும். ஒரு கொடியிலிருந்து நான்கு முதல் ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும்.

இவற்றின் இலைகள், வேர்க் கிழங்குகளைக் கூட சோயாபீன்ஸ் போன்று பூக்கள், உணவாகப் பயன்படுத்தலாம். அதிக அளவு அதாவது 35 லிருந்து 40 சதவீதம் புரோட்டீனும், சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, போலிக் அமிலங்களும் உள்ளன. இச்சிறகு அவரை நமது தஞ்சைப் பகுதிக்கு நன்கு விளையுமா? அதன் சுவையினை இல்லத்தரசிகள் விரும்புவார்களா? அதனை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கின்றனர்? விளைச்சல் விவரம் என்ன? என்பது குறித்து பட்டுக்கோட்டை, கரம்பயம், ஆம்பலாப்பட்டு, தம்பிக்கோட்டை, பரக்கலக்கோட்டை பகுதிகளுக்கு விதைகள் கடந்த 2014 - 2015, 2015 - 2016 ஆடிப்பட்டத்தில் கொடுத்து வளர்க்கப்பட்டது. அவர்களுக்கு எல்லோரிடமிருந்தும் மிகுந்த வரவேற்பிருந்ததால் இதனை பரவலாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதர பயன்கள்

பலபயன் மிக்க தாவர வகைகளில் ஒன்றான சிறகு அவரையை தென்னை மரங்களில் ஏற்றி வளர்ப்பதால் சிறந்த பசுமை மூடாக்காகவும், மூடுபயிராகவும் உள்ளது. இதனால் தென்னையில் தோன்றும் வாடல், சாறுவடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். தழையை உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம். புரோட்டீன் பற்றாக்குறையுள்ள ஏழை, எளிய மக்களுக்கு இதன் பயன்பாடு மிகுந்த பலன் தரும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

ஆக்கம் : வே. வீரப்பன் B.Sc.Agri, வேளாண்மை அலுவலர் (ஓய்வு)

2.97674418605
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top