பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / பயனுள்ள தகவல்கள் / தமிழ்நாட்டில் நிலையான விவசாயத்தை வலுப்படுத்துதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாட்டில் நிலையான விவசாயத்தை வலுப்படுத்துதல்

தமிழ்நாட்டில் நிலையான விவசாயத்தை வலுப்படுத்துதல் பற்றிய கட்டுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை

தமிழ்நாட்டின் விவசாயத்தைப் பற்றியும், நிலையான விவசாயத்தை எப்படி வலுப்படுத்துவது என்பதைப் பற்றியும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்

விவசாய வரலாற்றின் மகிமை

விவசாயம் - சொல் மற்றும் அனுபவ அறிவு

தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் விவசாயத்தை முறையாக பாதுகாத்து வந்தனர். பருவகால முறையறிந்து பயிர்களை விளைவித்தனர். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக) சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும். கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது. கம்பு போட்ட வயலில் கடலையும், கடலை போட்ட வயலில் கம்பும், பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

யூரியாவுக்கு பதிலா மாட்டு கோமியம் டிஏபிக்கு பதிலா ஜீவாமிர்தம், அமுதகரைசல் பொட்டாஷ்க்கு பதிலா அடுப்பு சாம்பல் ஆல் 19 க்கு பதிலா பஞ்சகவ்யா பூச்சிகொல்லிக்கு பதிலா சிட்டுக்கு குருவி, கரிச்சாங்குருவி, காகம், தேன்சிட்டு, பல்லி, பூரான், தேள், மயில், பாம்பு, பூச்சி விரட்டிக்கு பதிலா வேப்ப எண்ணை, புங்க எண்ணை, மகரந்த சேர்க்கைக்கு தேன்பூச்சி, பார்த்தீனியா விஷசெடியை அழிக்க நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் கல் உப்பு, களைக்கொல்லிக்கு பதிலா மாட்டு கோமியம், ஏழு அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் சத்துக்களை மேலே எடுத்து கொண்டுவர மண்புழு, பூமியில் காற்றோட்டத்தை உருவாக்க கரையான், எலி என இயற்கையில் பல்வேறு வளங்கள் உள்ளன.

விவசாய மகிமைகள்

  • நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி : மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.
  • மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணில்களோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்களை விரட்ட ஒரு யோசனை : ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைத்து, அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிக்க வேண்டும். பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
  • தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம். கொழிஞ்சியை பிடுங்கி காய்காத தென்னை மரத்தில் பாளைகளுக்கு இடையில் வைத்தால் காய் நன்றாக பிடிக்கும்
  • அவரையில் இருக்கும் பெரிய பிரச்னையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • நெல்லுக்குள் நண்டு ஓட பயிர் இடைவெளி இருக்க வேண்டும். வாழைகுள் வண்டி ஓட பயிர் இடைவெளி இருக்க வேண்டும். தென்னைக்கு தேரோட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • மாட்டு உரம் மறுதாம்புக்கு, ஆட்டு உரம் அன்னைக்கே பயன்படும்
  • பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.
  • தாமரை இலையை கரையான் அரிப்பதில்லை.
  • தொழுஉரத்தை நீர் பாய்ச்சும்முன் போட்டு பிறகு பக்குவமான ஈரத்தில் உழவு செய்தால் கட்டிகள் குறையும். இவையனைத்தும் நம் முன்னோர்கள் கூறிய விவசாய மகிமைகளாகும்

விவசாயத்தை ஏன் மக்கள் உணரவில்லை

தற்போதய மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை விரும்புவதில்லை. கல்வியின் முக்கியதுவத்தை உணர்ந்த மக்கள் விவசாயத்தை ஏன் உணரவில்லை. விவசாயக்கல்வியின் முக்கியதுவத்தை அறியாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். சொந்த நிலம் வைத்திருப்பவர்களே பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் நிலத்தை, இடம் அல்லது மனை விற்பனை செய்துவிடுகின்றனர். விவசாயம் செய்தால் கடன் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகின்றனர்.சிலர் விவசாயத்தில் ஏற்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயத்தை கைவிட்டுவிடுகின்றனர்.

மாணவர்களுக்கு செய்முறையாக விவசாயத்தை கற்பித்தல்

தமிழ், ஆங்கிலம் போலவே விவசாயத்தையும் மொழிப்பாடமாகவோ அல்லது செய்முறை பாடமாகவவோ மாணக்கர்களுக்கு கற்பிக்க வேண்டும். பள்ளிகூடங்களிளும், கல்லூரிகளிலும் விவசாயத்தை கற்பிக்க வேண்டும். விவசாயம் செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளையும், பாதிப்புகளையும் கூற வேண்டும் மாணவர்களுக்கு செய்முறை விவசாயப் பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் விவசாயத் தேர்வுகள் வைக்க வேண்டும்.

என் மனதில் தோன்றிய கவிதை

சில்லென்று காற்று வீச
மரங்கள் புன்னகையோடு அசைய
பூக்கள் சந்தோசத்தில் பூத்துக்குலுங்க
சிட்டுக்குருவிகள் மரக்கிளையில் அமர்ந்து
காலை சாயும் மாலை வேளையில் தன்
குழந்தைக் குருவிகளுடன் உரையாட
கதிரவன் மறைந்து சந்திரன் தோன்றும் அம்மாலைப் பொழுதை
நேசிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளத்தில் எழும் காயங்களுக்கு
வேறு எந்த மருந்தும் தேவை இல்லை
முதலில் உன்னை நேசி
உன்னை வாழ வைக்கும் இயற்கையை நேசி
நம்மை வாழ வைக்கும் விவசாயத்தை மறவாமல்
இயற்கையோடு ஒண்றினைந்து வாழ்வோம்
வாழ்க்கையை வெற்றிப் பாதையாக மாற்றுவோம்.

விவசாயத்தை பயில்பவர்களுக்கு சிறப்பு வெகுமதி அழித்தல்

விவசாயத்தை பயில்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.மேலும் விவசாயம் செய்பவர்களுக்கு சிறப்பு வெகுமதி அளிக்க வேண்டும். பயிர் கடன்,மானியங்கள் வழங்க வேண்டும்.மேலும் விவசாயம் செய்ய முன் வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.விவசாயம் செய்ய தோட்டம் இல்லாதவர்களுக்கு தோட்டம் அமைத்து தர வேண்டும்.

தமிழ்நாட்டில்  நிலையான விவசாயத்தை வலுப்படுத்துதல்

தமிழ்நாட்டில் நிலையான விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். நன்றாக விளையும் பயிர் நிலத்தை பண ஆசைக்காகவும், சொத்து ஆசைக்காவும் விற்பதை தவிர்க்க வேண்டும் இளைய தலைமுறையினர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். விவசாயம் தான் தமிழர்களின் அடையாளம் என்பதை உணர வேண்டும். உழவன் சேற்றில் கை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும், எனவே விவசாயம் செய்பவன்தான் நாளைய சமுதாயத்தின் அரசன் ஆவான்.

முடிவுரை

எனவே தமிழ்நாட்டில் நிலையான விவசாயம் நடைபெற நம்மால் முயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பது போல் அனைத்து வளங்களையும் வளமுறச்செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் நிலையான விவசாயத்தை வலுப்படுத்த நம்மால் முயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : S.BANUPRIYA, MCOM 1ST YEAR, L.R.G.ARTS COLLEGE FOR WOMEN, TIRUPUR

3.02564102564
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top