অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மண்வளம்

மண்வளம்

இயற்கை வளங்கள் – மண்வளம்

மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300-1000 வருட காலம் தேவைப்படுகிறது. ஒரு செடி செழுமையுடன் வளர்ந்து அதிக மகசூல் தர வேண்டுமானால் அதற்கு ஏழு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவை 1.சூரிய ஒளி 2.கரியமில வாயு 3.ஆக்ஸிஜன் 4.தண்ணீர் 5.தாது உப்புகள் 6.மண் பிடிமானம் மற்றும் 7.மண்வெப்பம் இதில் முதல் மூன்றும் சூரிய ஒளி மூலமும், காற்று மூலமும் பயிருக்கு கிடைத்துவிடுகிறது. மற்றைய ஐந்து தேவைகளும் மண்ணிலிருந்து தான் பெற்றாக வேண்டும். அதிகபடியான மழை, காற்று மற்றும் வெப்பம் ஆகிய தாக்குதல்களால் மண்ணிலுள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு மண் குறைவு ஏற்படுகிறது. எனவே மண் வள மேலாண்மை அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

தமிழ்நாட்டின் மண் பிரிவுகள்

 1. செம்மண் (65 சதவீதம்)
 2. கரிசல் மண் (12 சதவீதம்)
 3. செம்பொறை மண் (3 சதவீதம்)
 4. கடற்கரை மண் (7 சதவீதம்)

செம்மண் வகைகள்

 1. இரு பொறை செம்மண் (30 சதவீதம்)
 2. வளம் குறைந்த செம்மண் (6 சதவீதம்)
 3. மணற்பாங்கான செம்மண் (6 சதவீதம்)
 4. ஆழம் குறைந்த செம்மண் (2 சதவீதம்)
 5. ஆழமான இருபொறை செம்மண் (8 சதவீதம்)

தமிழ்நாட்டின் வேளாண் தட்ப வெப்ப மண்டலத்தின் மண் வகைகள்

மண்டலம்

வடகிழக்கு மண்டலம்

 • காஞ்சிபுரம்
 • திருவள்ளூர்,
 • கடலூர்,
 • வேலூர்,
 • விழுப்புரம்
 • திருவண்ணாமலை

மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண்

வடமேற்கு மண்டலம்

 1. தர்மபுரி
 2. கிருஷ்ணகிரி,
 3. சேலம்
 4. நாமக்கல்

சுண்ணாம்புத்தன்மையுள்ள செம்மண், சுண்ணாம்புத்தன்மையுள்ள கரிசல்மண்

மேற்கு மண்டலம்

 1. ஈரோடு,
 2. கோயம்புத்தூர்,
 3. திருப்பூர்,
 4. தேனி,
 5. கரூர் (பகுதி),
 6. நாமக்கல் (பகுதி),
 7. திண்டுக்கல்,
 8. பெரம்பலூர்,
 9. அரியலூர் (பகுதி)

இருபொறை செம்மண், கரிசல் மண், காவேரி படுகை மண்

 1. தஞ்சாவூர்
 2. நாகப்பட்டினம்,
 3. திருவாரூர்,
 4. திருச்சி
 5. கரூர்
 6. அரியலூர்
 7. புதுக்கோட்டை
 8. கடலூர்

இருபொறை செம்மண், வண்டல் மண்

தெற்கு மண்டலம்

 1. மதுரை,
 2. சிவகங்கை,
 3. ராமநாதபுரம்,
 4. விருதுநகர்,
 5. திருநெல்வேலி,
 6. தூத்துக்குடி

கடலோர வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண்

அருக மழை மண்டலம்

 • கன்னியாகுமரி

கடலோர உவர்தன்மையுள்ள வண்டல்மண், ஆழமான இருபொறை மண்

மலைத்தொடர் மண்டலம்

 • நீலகிரி
 • கொடைக்கானல் (திண்டுக்கல்)

செம்பொறை மண்

வளமான மண்ணின் தன்மைகள்

 • செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் செடிக்கு கிடைக்கும் நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்”
 • வளமான மண், போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிஸியம், மாலிப்பிடினம், கந்தகம் மற்றும் துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்ககூடிய நிலையில் அமைந்திருக்கும்
 • வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன், ஈர பதத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.
 • மண்ணின் கார அமில தன்மை 6.0 முதல் 6.8 வரை இருப்பின் அவை வளமான மண்ணாகும்
 • சரியான மண் அமைப்புடன் நன்கு வடியக் கூடிய நிலையில் அமைந்துள்ள மண் “வளமான மண்”
 • வளமான மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு நன்மை செய்யும் பல்வேறு நுண்ணுயயிர்கள் காணப்படும்
 • வளமான மண் ஆழமான மண் அமைப்புடன் இருக்கும்

மண் பரிசோதணை

மாற்றுமுறை மண் பரிசோதனைத் தொழில்நுட்பம்

கோட்பாடு: இம்முறையில் வடிதாளின் உதவியுடன் மண்சத்துகளை ஒளிவினை சேர்மத்துடன் வினைபுரிய செய்து பல வண்ண படம்/ உருவம் பெறப்படுகிறது. இப்படத்தின் பண்புகளைக் கொண்டு மண்ணின் சத்துக்கள் கண்டறியப்படுகிறது.

 • ஆய்வு முறை (0.5 மி.லி.) சில்வர் நைட்ரேட் கரைசல்
 • வட்டவடிவ வடிதாளில் உறிஞ்சு குழலை நுழைத்தல்
 • 3 செ.மீ. அளவிற்கு சில்வர் நைட்ரேட்டை வடிதாளில் பரவச்செய்தல்
 • உறிஞ்சுகுழலை வடிதாளிலிருந்து வெளியெடுத்தல்
 • 2 மணி நேரம் நிழலில் உலர வைத்தல்
 • புதிய உறிஞ்சுகுழலை உலர வைத்த வடிதாளில் நுழைத்தல்
 • சோதனை கரைசல் தயாரிப்பு (3 கிராம் மண்ணை சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசலில் கரைத்தல்)
 • 3 மி.லி. சோதனை கரைசலை வடிதாளில் 7 செ.மீ. அளவுக்கு பரவச்செய்தல்
 • உறிஞ்சு குழலை அகற்றியபின் 2 மணி நேரம் நிழலில் உலர்த்துதல்
 • தெளிவான உருவத்தைப்பெற 800 லக்ஸ் ஒளியின் கீழ் வைத்தல்
 • படத்தின்/ உருவத்தின் பண்புகளை அறிதல்

பரிசோதனை அறிக்கை பெறுதல்

துள்ளியத்தன்மை

இந்தப்புதிய தொழில்நுட்பமானது வழக்கமான ஆய்வு(வேதியியல் முறை) முறைகளுடன் ஒப்பிடும் பொழுது தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம், இரும்பு, மேங்கனீஸ் மற்றும் தாமிரம் ஆகிய சத்துக்களின் நிலை 90% ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது.

தொழில் நுட்பத்திற்கான தொகை:

 • ஆய்வக உள் கட்டமைப்பு: ரூ.2,50,000
 • தொழில்நுட்ப கட்டணங்கள்: (மாறுதலுக்குட்பட்டது)
 • மொத்த தொகை: (மாறுதலுக்குட்பட்டது)
 • ஆய்விற்கான கட்டணம்/மண் மாதிரி:ரூ.150

மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்

 • இரசாயன உரங்கள், தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும் மண் பரிசோதனை அவசியமாகும்
 • பயிர் அறுவடைக்கு பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியமாகும்.
 • மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணத்தினால் மண்வளம் குன்றிவிடும். எனவே மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை அறிந்துக்கொள்வது அவசியமாகும்.
 • மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம்
 • மண்ணின் வளத்தை பேணிக்காப்பதற்கு தேவையான அளவு அங்கக உரங்கள் மற்றும் கனிசமான இரசாயன உரங்கள் இடவேண்டும்
 • பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத் திறன் முதலியவற்றை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் அமைந்திட வேண்டும்
 • தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம்

மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை

மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்

 • மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
 • அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு மாதிரியும், குறைந்த பட்சம் கால் எக்டேருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்க வேண்டும்

மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்

 • நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்
 • உரமிட்டவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாத இடைவெளி தேவை
 • பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது

மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை

 • மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
 • மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில எழுத்து “V” போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ. பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.
 • இவ்வாறாக குறைந்த பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும்.
 • நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குறுப்பி மூலம் தான் மண் மாதிரிகள் எடுத்து, பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.
 • பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 12 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.
 • வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும். இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 12 கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.
 • சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக் கூடாது.

த.நா.வே.ப.க மண் பரிசோதனை சேவை

மண் பரிசோதனை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம் (சோடேக்)

மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையிலும், மண் மற்றும் பயிர் மேலாண்மைக் கல்வி மையத்திலும் மண் பரிசோதனையைப் பற்றிய செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,

மண் பரிசோதனை

 • மண்ணின் தன்மையைக் கண்டறிதல். உதாரணம் : உவர்த்தன்மை, களர்த்தன்மை மற்றும் அமிலத் தன்மை,
 • நீர்ப்பாசன தண்ணீரின் தரத்தை மதிப்பீடு செய்தல்
 • மண் மற்றும் பயிர் மேலாண்மைக்கு தொழில்நட்ப அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றது

பலன்கள்

 • பயிர்களுக்கு சரிவிகித உரமிடுதலை உறுதிபடுத்தல்
 • மண்வளத்தை பராமரித்தல்
 • உரங்களை அதன் பயன்பாடு தெரியாமல் உபயோகிப்பதை தவிர்த்தல் மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்தல்
 • ஒரு ரூபாய் முதலீடுக்கும் அதிக வருமானம்

மண்வள அட்டை

மண்வள அட்டை என்றால் என்ன?

மண்ணின் தன்மை, பாசன நீர், பயிர் மற்றும் பிற உயிரியல் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் வளத்தையும் தரத்தையும் இந்த மண்வள அட்டை நிர்ணயிக்கிறது. விவசாயிகள் சொந்த அனுபவத்தையும், அறிவுத்திறனையும் கொண்டு மண்வளத்தைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்த அட்டை ஒரு கருவியாகப் பயன்படுகிறது. காலப்போக்கில் மண்வளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான மேம்பாட்டு முறைகளையும் இந்த அட்டையில் பதிவு செய்து கொள்ளலாம். ஒரே நபர் இந்த அட்டையை தொடர்ந்து பூர்த்தி செய்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அட்டையின் மூலம் நிர்ணயிக்கும் மண்வளத்தின் தரம் பெரும்பாலும் விவசாயிகளின் அனுபவத்தைப் பொருத்ததேயன்றி எந்த ஆய்வகப் பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு இடத்திலுள்ள மண்ணின் தரத்தினை மற்றொரு இடத்திலுள்ள மண்ணின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இந்த அட்டையின் நோக்கமல்ல. ஆனால், ஒரு மண் எந்த அளவுக்கு பயிர் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இந்த அட்டையைக் கொண்டு அறிய முடியும்

மண்வள அட்டையை உபயோகிப்பது எப்படி?

மண்வகைகள், வயலின் சரிவு, பயிர் சுழற்சி, உர மேம்பாடு ஆகியவற்றை பொறுத்து ஒரு பண்ணையில் உள்ள நிலங்களை தனித்தனியே பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு அட்டையைப் பயன்படுத்தவும்

ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அல்லது மூன்று பொருத்தமான இடங்களை தேர்வு செய்து மண்ணின் பண்புகளை ஆய்வு செய்யவும்

பின் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் மண்ணின் தரத்தினை வளமானது, சுமாரான வளம், வளம் குன்றியது என்று தரம் பிரித்து அதற்கான கட்டத்தில் குறியிட்டு நிரப்பவும்

மண்ணில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவைகளை குறிப்புப் பகுதியில் விபரமாக எழுதவும்

மண் சார்ந்த இடர்பாடுகளும் அதன் மேலாண்மையும்

தமிழ்நாட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத நிலங்களின் பரவல்

உணவு உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பிரச்னைகள் ஏதும் இல்லாத மண் வேண்டும். தமிழ்நாட்டில் பயிர் சாகுபடியைப் பாதிக்கும் முக்கியமான மண் பிரச்னைகளாவன:

அ. வேதிப்பெருட்களால் ஏற்படும் பிரச்னைகள் : உவர்தன்மை, களர் தன்மை, அமிலத் தன்மை மற்றும் சத்துகள் அதிகமாதல்

ஆ. இயல்நிலை மாற்றங்களினால் ஏற்படும் பிரச்னைகள் :

அதிக (அ) குறைந்த அளவு நீர் மண்ணில் புகும் தன்மை, கடினத்தன்மை, மேற்பரப்பு கடினமாதல், சொத சொதப்பாக உள்ள நெல் மண்கள், மணல் கலந்த மண் மற்றும் பல.

உவர், உவர் – களர் மற்றும் களர்தன்மையுடைய மண்ணின் பண்புகள்

மண் அமிலகாரத்தன்மை

மின்கடத்தும் திறன் (dsm-1)

சோடியத்தின் சதவீதம்

உவர் மண்

< 8.5 > 4

< 15

உவர் – களர் மண்

< 8.5 > 4

> 15

களர் மண்

> 8.5 > 4

> 15

உவர் தன்மையுடைய மண்

இந்த மண்ணில் அதிகளவு நீரில் கரையும் உப்புக்கள் இருப்பதால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்டும்.

இந்த மண்ணில் மின்கடத்தும் திறன் 4 dsm-1, இதற்காக முக்கிய மற்றும் பக்கவாட்டு கால்வாய்களை 60 செ.மீ ஆழமாகவும், 45 செ.மீ அகலமாகவும் உள்ளவாறு அமைத்து, மண்ணில் உப்புக்களை வழிந்தோடச் செய்ய வேண்டும்.

தொழுவுரம் 5 டன் /எக்டர் என்ற அளவில் நெற்பயிரை நடவு செய்யும் 10-15 நாட்கள் முன்னரும், தோட்டப்பயிர்களில் விதைப்பதற்கு முன்பும் மண்ணில் இடவேண்டும்

களர் மண்

களர் மண்ணில் அதிகளவு சோடியம் உப்புகளுடன், சோடியத்தின் சதவீதம் 15-க்கும் அதிகமாகவும், அமிலகாரத்தன்மை 8.5 ஆகவும் இருக்கும்

நிவர்த்தி

 • தகுந்த ஈரம் மண்ணில் இருக்கும் போது உழ வேண்டும்.
 • ஜிப்சம் தேவையைப் பொறுத்து, ஜிப்சம் மண்ணில் இட வேண்டும்.
 • நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • வடிகால் வசதி ஏற்படுத்துவதால் கரையும் உப்புக்கள் வழிந்தோடிவிடும்.
 • பசுந்தாள் உரம் 15 டன் /எக்டர் என்ற அளவில் மண்ணில் கலந்து உழுது விட வேண்டும்

அமில மண்கள்

அமில மண்ணில் அமிலக் காரத் தன்மை 6 க்கு குறைவாக இருக்கும், ஹைட்ரஜன், அலுமினியம் அதிகளவில் இருப்பதால் மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மக்னீசியம், மாலிப்டினம் மற்றும் போரான் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது

இந்த வகை மண் பின்வரும் இடங்களில் காணப்படுகிறது.

அ. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மலைப் பகுதிகள்

ஆ.புதுக்கோட்டை, கன்னியாகுமரி

சரளைமண் (கன்னியாகுமரி)

சுண்ணாம்பை நிலத்தில் இட்டு, உழுதுவிடவேண்டும். மாற்று பொருட்கள் – டோலமைட், மரத்தாள், மரக்கூழ் அரவைமில்லிலிருந்து வரும் சுண்ணாம்பு, சுண்ணாம்புக் கல் போன்றவை பயன்படுத்தலாம்.

தேவைப்படும் அளவு சுண்ணாம்பை பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.

அங்கக எருவை மண்ணில் இடலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்ணிற்கு, தேவைப்படும் சுண்ணாம்பை, தழை, மணிசாம்பல் சத்துடன் கலந்து இடலாம் + துத்தநாக சல்பேட் 0.5% +1 % டி.ஏ.பி + 1% மூரேட் ஆப் பொட்டாஷ் கலந்து தூர்விடும் பருவம், கதிர்விடும் பருவத்தின் போது இலைமீது தெளிக்கலாம்.

அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகும் : ADT 36

மிதமான தாக்குதலுக்கு உள்ளாகும் : ADT 42, IR 50 coRH1,

குறைவான தாக்குதலுக்கு உள்ளாகும் : TPS1, ASD16, 18, IR64,JJ92, Tkala, co37 & co41

இறுக்கம் அடையாத சேற்று மண்

 • இந்த மண்ணில் உழுதால், மாடுகள் மற்றும் வேலையாட்கள் உள்ளே மூழ்கி விடுவார்கள். நெல் நாற்றுகளுக்கு மிக மோசமான பிடிமானம் ஏற்படும்.
 • இந்த மண்ணை நிவர்த்தி செய்ய, 400 கிலோ எடையுள்ள கல் உருளை (அ) எண்ணெய் தொட்டி கொண்டு மணலை 8 மடங்கு நிலத்தில் நிரப்பி, உருட்ட வேண்டும். இதனுடன் 2 டன் சுண்ணாம்பு /எக்டர் என்ற அளவில் வருடத்திற்கு மூன்று முறை இட்டு உழ வேண்டும்.

மணல் சார்ந்த மண்

 • இதில் அதிகளவில் மணல் இருப்பதால் நீர் அதிகளவில் வழிந்தோடும். ஊட்டசத்துகளும் மண்ணில் நிற்காமல் வழிந்தோடி விடும். 400 கிலோ எடையுள்ள கல் உருளை (அ) எண்ணெய் தொட்டியில் 8 மடங்கு கற்கள் நிரப்பி, மூன்று வருடத்திற்கு ஒரு முறை, தகுந்த ஈரப்பதம் இருக்கும் நிலையில் உருட்ட வேண்டும்.
 • ஏரி வண்டலை கடற்கரையோர மணல் கலந்த மண்ணில் இடுவதால் அதன் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தலாம்.

கடினமான மேற்பரப்புள்ள மண்

கடினமான மேற்பரப்பு செம்மண்களில் 15 செ.மீ ஆழத்திற்கு கீழே வரை இருக்கும் களிமண் மற்றும் இரும்பு ஆக்ஸைடுகள் மேல் தட்டில் படிந்து விடுவதால், வேர்கள் உள்நோக்கி வளர முடியாது.

நிவர்த்தி

 • உளிக்கலப்பை கொண்டு 0.5 மீ. இடைவெளிவிட்டு ஒரு பக்கமும், பின் அதற்கு நேர்மாறாகவும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை உழ வேண்டும்.
 • தொழுஉரம் (அ) மட்கிய தென்னை நார்க் கழிவு ஒரு எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் மண்ணில் இட்டு உழவேண்டும்.

மேற்பரப்பு கடினமாக உள்ள மண்

 • மோசமான மண் அமைப்பு கொண்ட மண்ணின் மேற்பரப்பில் மழைத்துளிபடும்போது இறுகி, மேற்பரப்பு கடினமாகிவிடும். களிமண் கொண்ட மேற்பரப்பினால் நாற்றுக்கள் வெளிவர முடிவதில்லை.
 • மண்ணின் மேற்பரப்பில் உருவாகும் கடினத்தன்மையை கொத்துக் கலப்பை (அ) சிறுகலப்பை (அ) பலுகு கொண்டு மண்ணைக் கிளறிவிட வேண்டும்.
 • சுண்ணாம்பு (அ) ஜிப்சம் 2 டன் /எக்டர் மற்றும் தொழுஉரம் 12.5 டன் / எக்டர் என்ற அளவில் இட வேண்டும்.
 • அறுவடை செய்த பின் உள்ள பயிர்க்குப்பைகளை அப்படியே மண்ணில் மட்க விட வேண்டும்

கடினத் தன்மையுள்ள களிமண்கள்

 • களிமண்ணில் அதிகளவு களிமண் துகள்கள் இருப்பதால் மண்ணில் நீர் உள்ளே புகாமல், அளிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அங்கேயே தங்கிவிடுகிறது.
 • ஆற்று மணல் ஒரு எக்டருக்கு 100 டன் என்ற அளவில் இட வேண்டும்.
 • இறக்கை கலப்பை (அ) வட்டக் கலப்பை கொண்டு கோடைக் காலங்களில் ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

குறைவாக நீர் உட்புகும் கருப்பு மண்கள்

 • செம்மண் கலந்த இரும்பொறை மண் 100 வண்டி இட வேண்டும்.
 • இறக்கை கலப்பை (அ) வட்டக் கலப்பைக் கொண்டு கோடைக் காலங்களில் ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
 • தொழஉரம், மட்கிய தென்னை நார்க் கழிவு (அ) ஆலைக் கழிவு ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் இடுவதால் மண்ணின் இயல் தன்மையும், நீர் உள்ளே வடியும் தன்மையும் மேம்படுத்துகிறது.

அதிகளவு நீர் உட்புகும் செம்மண்கள்

 • ஏரி வண்டல் (அ) கருப்பு மண் ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவிலும், தொழு உரம், மட்கிய தென்னை நார்க் கழிவு (அ) ஆலைக்கழிவு 25 டன் / எக்டர் என்ற அளவிலும் கலந்து இட வேண்டும்.
 • இறக்கைக் கலப்பை (அ) வட்டக் கலப்பை கொண்டு கோடைக் காலங்களில் ஆழ உழவு செய்ய வேண்டும்.

உளிக் கலப்பைக்கான செயல் முறைகள்

 • மண்ணிற்கு சற்று கீழே வரை கடினமாதல் பெரும்பாலான மண்களில் காணப்படுகிறது. இதனால் பயிர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்காமலும் விளைச்சல் குறையும்.
 • இந்த மண்ணால் நீர் மண்ணின் உள்ளே செல்லுவது தடைபடும். காற்று மற்றும் ஊட்டச் சத்துக்கள் பயிர்களுக்கு கிடைப்பதும் தடைபடும். இந்த மாதிரி மண்கள் தமிழ்நாட்டில் கோயமுத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருச்சி, மதுரை மற்றும் சேலம் மாவட்டங்களில் மானாவாரி சாகுபடியில் உ்ளள 3.8 எக்டர் நிலப்பரப்பில் காணப்படுகிறது.

தொழில்நுட்பம்

நிலத்தை உளிக்கலப்பை கொண்ட 50 செ.மீ இடைவெளி விட்டு இரண்டு திசைகளிலும் குறுக்கு வாட்டில் மற்றும் நீளவாக்கிலும் உழவேண்டும். உளிக்கலப்பையானது கடினமான இரும்பு கலப்பை கொண்டது. இது 45 செ.மீ ஆழம் வரை மண்ணில் சென்று, மண்ணின் கடினத்தட்டை உடைக்கும். இது பொதுவாக டிராக்டர் மூலம் இயக்கப்படும்.

 • 12.5 டன் /எக்டர் தொழுஉரம் /ஆலைக்கழிவு/ மட்கிய தென்னை நார்க் கழிவு மண்ணின் மேற்பரப்பில் சரிசமமாக பரப்ப வேண்டும்.
 • நாட்டுக் கலப்பை கொண்டு 2 முறை உழுது, உரங்களை மண்ணில் கலக்க வேண்டும்.
 • மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க செடிகளைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தல்.
 • வறண்ட நிலங்களில் உள்ள கருப்பு மண்களில், மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க, வெட்டிவேர் (அ) எலுமிச்சைப் புல்லை சரிவிற்கு குறுக்கே மற்றும் மேட்டுப்பகுதியை ஒட்டி 0.5மீ நீளவாக்கில் இடைவெளி விட்டு வளர்க்க வேண்டும்.
 • மானாவாரி பருத்தியில் ஆழ உழவு செய்தல் (உளிக் கலப்பை கொண்டு)
 • களிமண் கலந்த இரும்பொறை மானாவாரி மண்களில் கடினத் தட்டு உருவாகும், இதனால் நீர் உட்புகும் திறன், நீர்பிடிப்புதிறன், வேர் வளர்ச்சி, ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளுதல் தடைப்பட்டு, விளைச்சல் மோசமாக பாதிக்கப்படும். 40-50 செ.மீ ஆழத்தில், 50 செ.மீ இடைவெளிவிட்டு மூன்று வருடத்திற்கு ஒரு முறை உளிக் கலப்பை கொண்டு மானாவாரி மண்ணை உழுவதால், வேர் வளர்ச்சி, மண் ஈரப்பதம் (24-30%) அதிகமாகும். இதனால் பருத்தியில் விளைச்சல் 25% அளவு உயரும்.

ஆலைக்கழிவுகள் மூலம் நில சீர் திருத்தம்

 • நில சீரமைப்பு மற்றும் பயிர் உற்பத்திக்காக தொழிற்சாலைக் கழிவுகளின் பயன்பாடு
 • களர் நிலத்ததை சீரமைக்க வாலை வடிமனை கழிவுநீரை பயன்படுத்துதல்

களர் நிலத்தை சீரமைக்க பொதுவாக, ஜிப்சம், பாஸ்போஜிப்சம், இரும்பு பைரைட்டுகள் மற்றும் கந்தகத்தைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கனிமத் தன்மையுடையவை. சில அங்ககப் பொருட்களான ஆலைக் கழிவு, தொழுவுரம், தென்னை நார்த் தூள், பசுந்தாள் உரம் போன்றவையும் களர் நிலத்தை சீரமைக்க பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது எந்த வித வேதிமுறை செயற்பாடு செய்யாத வாலை வடிமனை கழிவுநீரைப் பயன்படுத்தி களர்நிலத்தை சீரமைக்கலாம். வேதிமுறை செயற்பாடு செய்யாத வாலை வடிமனை நீரானது அமிலத் தன்மையுடன் (அமிலக் காரத் தன்மை 3.8 – 4.2) பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் சிறிதளவு நுண்ணூட்டச் சத்துக்களும் கொண்டது. அங்ககப் பொருட்கள், குறிப்பாக அங்கக அமிலம் சம்பந்தமான மெலோனிடின்கள் மண்ணின் உயிர் வேதி செயற்பாட்டை மேம்படுத்துகிறது.

ஆகவே, ஒரு எக்கடருக்கு, 3.75 – 5.00 லட்சம் லிட்டர் என்ற அளவில் வேதி முறை செயற்பாடில்லாத வாலை வடிமனை கழிவு நீரை கோடைகாலங்களில் ஒரே ஒரு முறை அளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் 2 முறை உலர் உழவு 6 வாரங்களுக்கு செய்வதால் மண்ணில் இயற்கையாகவே ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்யலாம். பின், 45 முதல் 60 நாட்கள் கழித்து, மண்ணை புத்தம் புதிய நீரை கொண்டு பாசனம் செய்து, வடித்து விட வேண்டும். இந்த செயற்பாட்டினால் மண்ணின் அமில காரத்தன்மை, சோடியத்தின் சதவீதம் இயல்பு நிலைக்குத் திரும்பி, களர் மண்ணின் உற்பத்தி திறனை அதிகரிக்கும். இந்த சீரமைப்புக்குப் பிறகு, பாரம்பரிய சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நெற்பயிரை கழிவு நீர் கொண்டு சீரமைத்த நிலத்தில் சாகுபடி செய்யலாம். வருடா வருடமும் அல்லது பருவத்திலும் அடுத்த பயிருக்கு இந்த நீரைப் பயனபடுத்தி சாகுபடி செய்யலாம்.

பயிர்களுக்கு நேர்த்தி செய்த வாலை வடிமனை கழிவுநீரைப் பயன்படுத்துதல்

நேர்த்தி செய்யப்பட்ட கழிவுநீரில் நைட்ரஜன் 1200 மி கிராம், பாஸ்பேட் 500மி கிராம், பொட்டாஷ் 12000 மிகிராம், கால்சியம் 1800 மி.கி, இரும்புச் சத்து 300 மி.கிராம் இருக்கின்றன. கழிவுநீரில் அதிகளவு கரைந்த உப்புகள் இருந்தாலும், 50 முறை செறிவு குறைந்த கழிவுநீரை கரும்பு, வாழை, சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயாபின் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு எக்டருக்கு 20000 முதல் 40000 லிட்டர் என்ற அளவில் தரிசு நிலத்தில் ஒரு முறை அளிக்கலாம். இதை 30 -40 நாட்கள் வரை சுத்தமாக காயும் வரை விட்டு வைத்திருக்க வேண்டும். கழிவுநீர் அளிக்கப்பட்ட நிலத்தை 2 முறை சுத்தமாக உழவு செய்வதால், இயற்கையாக ஆக்ஸிஜனேற்றம் அடையும் மற்றும் அங்ககப் பொருட்கள் சிதைந்து மண்ணிற்கு எளிதாகக் கிடைக்கும். பின், நேர்த்தி செய்த நிலத்தில் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்யலாம். இந்த நீரை வருடாவருடம் அல்லது அடுத்த பருவத்திற்கு அல்லது அடுத்த பயிருக்கும் பயன்படுத்தலாம்.

பேப்பர் கூழ் மற்றும் பேப்பர் ஆலைக் கழிவுநீர் பயன்படுத்தி பாசனம் செய்தல்

பேப்பர் கூழ் மற்றும் பேப்பர் ஆலைக் கழிவு நீரில் கரையும் திடப் பொருள்களும், அங்ககப் பொருள்களும் அதிகளவில் உள்ளன. தகுந்த நேர்த்தி செய்த, மின்கடத்தும் திறன் 1.2 dsm-1 க்கு குறைவாக உள்ள கழிவு நீரை, தகுந்த சீர்திருத்தங்களான ஆலைகழிவு 5டன் / எக்டர் / செறிவூட்டப்பட்ட ஆலைக் கழிவு 2.5 டன் /எக்டர் (அ) சணப்பை 6.25 டன் /எக்டர் என்று கலந்து இட வேண்டும்.

பேப்பர் ஆலைக் கழிவு நீர் பாசனம் செய்த நிலங்களுக்கான நேர்த்தி

1995 – ம் ஆண்டிலிருந்து கரூர் மாவட்டத்தில் (மூலிமங்கலம்) பாண்டிப்பாளையம், பழமாபுரம், தடம்பாளையம், பொன்னைய கவுண்டன் புதூர்) நேர்த்தி செய்த பேப்பர் ஆலைக் கழிவு நீரை பாசனம் செய்யும் நிலங்களில் ஜிப்சம் ஒரு எக்டருக்கு 7.25 டன் என்ற அளவில் பயன்படுத்தி சீரமைக்கலாம்.

கரும்பு ஆலைக் கழிவு ( 6டன் / எக்டர்) + நீலப்பச்சைப் பாசி (15 கிலோ / எக்டர்) + ஜிப்சம் (50%) பயன்படுத்தி களர், உவர் நிலத்தை சீரமைக்கலாம். இதனுடன் தொடர்ந்து பேப்பர் ஆலைக் கழிவு நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி, குதிரை மசால் தீவனப் பயிர் மகசூலை அதிகப்படுத்தலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைத்துள்ள நஞ்சை நிலத் தொழில்நுட்பம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அமைத்துள்ள நஞ்சை நிலத் தொழில்நுட்பமானது பேப்பர் ஆலைக் கழிவு நீர் பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யும் நிலங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பயிரின் அடர்த்தி (அ) செறிவை 2.5 லட்சம் தண்டுப்பகுதி / எக்டர் அளவுடன் உள்ள பயிர்களுக்கு பயன்படுத்தலாம். ஒரு எக்டர் நஞ்சை நிலப்பகுதிக்கு 1000மீ3 அளவு கழிவு நீர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. இது 2-3 நாட்கள் வரை தாங்கும்.

நஞ்சை நிலத்தின் மேல் பகுதியில் PVC (அ) பாலி எத்திலீன் கொண்டு பரப்ப வேண்டும். நஞ்சை நிலத்தின் கீழ்ப்பகுதியில் ½ -1 இஞ்ச் அளவுள்ள கூழாங்கல்லை 6 செ.மீ ஆழத்திற்கும், அதைத் தொடர்ந்து பட்டாணி அளவுள்ள கற்கள் ( 6 செ.மீ), பரு மணல், நுண் மணல் (ஒவ்வொன்றும் 7 செ.மீ) மற்றும் மேல்பகுதியில் 9 செ.மீ அளவு மண் கொண்டு நிரப்ப வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate