பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விவசாயிகளுக்காக புதிய கிசான் ஆப்

பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் ஆடுமாடுகளை புகைப்படம் எடுத்து அனுப்பி தீர்வு பெரும் வசதி உள்ள புதிய கிசான் ஆப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

விவசாய பயிர்கள் மற்றும் ஆடுமாடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதை விவரித்து சொல்ல முடியாத விவசாயிகளுக்காக இப்கோ கிஸான் மொபைல் அப்ளிகேஷன் என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை இப்கோ கிஸான் நிறுவனம் செய்துள்ளது.

இந்த அப்ளிகேஷனில் உள்ள நிபுணர் பகுதியின் மூலம், விவசாயிகள் தங்கள் பயிர்களில் ஏதேனும் நோய் அல்லது பூச்சிகளின் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலோ அல்லது கால்நடைகளில் ஏதேனும் நோய் தாக்கம் ஏற்ப்பட்டு இருந்தாலோ அதை தமிழ் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத்து வடிவில் டைப் செய்து, அனுப்ப முடியும். எழுத்து வடிவில் தெரிவிக்க முடியாதவர்கள், அந்த பாதிப்புகளை புகைப்படம் எடுத்து வல்லுனர்களுக்கு அனுப்பலாம். அதற்கான தீர்வை, அதே அப்ளிககேசன் மூலம் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

பயன்பாடுகள்

இந்த நிபுணர் பகுதி மட்டும் இல்லாது இன்னும் பல பயன்பாடுகள் இந்த அப்ளிகேசனில் உள்ளது. குறிப்பாக வானிலை முன்னறிவிப்பு பகுதி, மண்டி நிலவரம், ஆலோசனை பகுதி, கியான் பந்தர், சந்தை பகுதி (marketing), வேலை வாய்ப்பு, விவசாய வாய்வழி தகவல்கள் மற்றும் விவசாய செய்தி பகுதிகளும் உள்ளது.

  • வானிலை முன்னறிவிப்பு பகுதியில் ஒரு மாவட்டத்திற்கான 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை தாலுகா வாரியாக அறிந்து கொள்ள முடியும்.
  • மண்டி நிலவரம் பகுதியில் விவசாய விளை பொருட்களின், விலை நிலவரத்தை இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். மேலும் அதிலுள்ள வாங்குபவர் விற்பவர் பகுதியில் விவசாய விளைப்பொருட்களை விற்கலாம், மற்றவர்களிடமிருந்து விவசாய விளைப்பொருட்களை வாங்கலாம். இதன் மூலம் இடைதரகர் ஈடுபாடு மற்றும் செலவு குறையும்
  • விவசாய நூலகம் (Agri Libraries) பகுதியில், முதல் பகுதியில் ஒரு பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள அனைத்து தகவல்களையும் அனைத்து பயிர்களுக்கும் தெரிந்து கொள்ளலாம், இரண்டாம் பகுதியில் அதாவது புதிய ஆலோசனைப் பகுதியில் இப்கோ கிஸான் வழங்கும் விவசாயம், கால்நடை, உடல்நலம், அரசு திட்டங்கள், மானியங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் படித்து தெரிந்து கொள்வதோடு, ஆடியோ வசதியிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
  • செய்தி பிரிவில் விவசாயம் தொடர்பான அரசு திட்டங்கள், மானியங்கள், பயிற்சிகள், புதிய நோய் தாக்கம் மற்றும் பல செய்திகளை படித்து தெரிந்து கொள்ளலாம்.
  • மேற்குறிப்பிட்ட அனைத்து தகவல்களையும் தமிழ் உட்பட 11 மொழிகளில் படிக்க முடியும்.

இவ்வளவு பயன்பாடுகள் உள்ள அப்ளிகேஷனை ஆன்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோட் செய்ய, Google Play store-ல் “IFFCO KISAN” என்று டைப் செய்து டவுன்லோட் செய்து பிறகு தங்களுக்கு விருப்பமான மொழியைதேர்வு செய்து, மொபைல் எண், மாவட்டம் மற்றும் தாலுகாவை குறிப்பிட்டு, my referral code இடத்தில் 2201 என்று டைப் செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதை பற்றிய விவரங்களுக்கு 534351 அல்லது 9791735144 என்ற எண்ணை அணுகலாம்.

ஆதாரம் : இப்கோ கிஸான் மையம்

Filed under:
3.09090909091
Karthick Raja Jun 28, 2020 04:25 PM

Nice

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top