অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தானியங்கள்

தானியங்கள்

கோதுமை

கோதுமை மனிதன் உட்கொள்ளும் தானிய வகைகளில் முக்கியமான இடம் வகிக்கின்றது. கோதுமை மாவு சப்பாத்தி,ரொட்டி மற்றும் அடுமனைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கோதுமை டிரிட்டிகம் இனத்தைச் சேர்ந்தது 30,000க்கும் மேற்பட்ட இன வகைகளைக் கொண்டது. கோதுமை வகைகளில் ரொட்டிக்கு டி.சட்டைவம், மாக்ரோனி (பிழியப்படும் பதார்த்தத்தில்) டி.டியூரம் வகையும் பயன்படுத்தப்படுகிறது.

கோதுமை வகைகள்

கோதுமையானது அதன் தன்மை கொண்டு கடின கோதுமை அல்லது பலவீனமான கோதுமை என்று பிரிக்கப்படுகிறது. பலமான கோதுமை அதிக அளவு கொள்ளளவு பெரிய உள் கட்டமைப்புக் கொண்டதாகவும், அத்துடன் நல்ல தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது. இத்தகைய நல்ல தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது. இத்தகைய கோதுமை அதிக புரதச் சத்து மிகுந்ததாகவும் உள்ளது. கடின கோதுமை பெரும்பாலும் மாவு வகைகளுக்கும் ரொட்டி தயாரிக்கவும பயன்படுகிறது. இது குறைந்த அளவு புரதச்சத்து மற்றும் குறைந்த உள் கட்டமைப்புக் கொண்டதாகும். பலவீனமான கோதுமை பிஸ்கட், கேக் செய்ய ஏற்றதாகும். இது ரொட்டி தயாரிக்க ஏற்புடையதல்ல.

ஊட்டச்சத்துக்கள்
கார்போஹைட்ரேட் (அ) மாவுச்சத்து

கோதுமையில் உள்ள மாவுச்சத்தானது (ஸ்டார்ச்) என்டோஸ்பெர்ம் பகுதியில் உள்ளது. கரையக்கூடிய சர்க்கரை சத்தானது. germ co பகுதியில் அமைந்துள்ளது.

தவிடுகளில் பெரும்பாரும் செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ் வகை கார்போஹைட்ரேட் அமைந்துள்ளது.

தாது உப்புக்கள்

கோதுமை அதிக அளவு தாது உப்புக்களை உள்ளடக்கிய தானியம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில் இரும்பு பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் துத்தநாகம் உள்ளது. முழு கோதுமைய போதிய அளவு தயாமின் மற்றும் நிக்கோடினிக் அமிலத்தை கொண்டுள்ளது. ஆனால் ரிபோப்ளோலின் குறைந்த அளவைக் கொண்டது.

புரதச்சத்து

கோதுமையில் அடங்கியுள்ள புரதச்சத்தை இரண்டு வகை குருட்டன் அல்லாத புரதம் அல்புமின் மற்றும் குளோபுளின் குருட்டன் புரதம்(முக்கியமாக கிளையாபுன், குருப்டெனின் இவை கரையாத புரதம் ஆகும்). கோதுமையில் உள்ள புரதமானது, அதிக குருட்டாமிக் அமிலம் நிறைந்ததாகவும், டிரிப்டோமன் குறைவானது ஆகும். குருட்டாமிக் அமிலம் மற்றும் அஸ்பார்புக் அமிலமும் குருட்டாமை மற்றும் அஸ்பாரணங்களாக பொறுத்த குருட்டன் தரம் இருக்கும். தவிடு மற்றும் முளையில் அதிக அளவு புரதம் மற்றும் முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன.

பருவம் மற்றும் இரகங்கள்
சாகுபடிக்குகேற்ற மாவட்டங்கள்

மலைச்சார்ந்த மற்றும் அதன் அருகில் உள்ள சமவெளிப்பகுதிகள் தேனி, திண்டுக்கல், கரூர், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள மலைப்பகுதிகள்.

பருவம்

அக்டோபர் 15 முதல் நவம்பர் முதல் வாரம் வரை விதைப்பிற்கு ஏற்ற பருவுமாகும். நவம்பர் 15க்குள் விதைப்பினை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்.

இரகங்கள்

கோ. வெ.(கோ) 1, த.வே.ப.க சம்பா கோதுமை கோ.வெ.2

கோ. வெ.(கோ) 1

த.வே.ப.க சம்பா கோதுமை கோ.வெ.2

பயிர் மேலாண்மை

1.நிலம் தயாரித்தல்

இரும்பு கலப்பை கொண்டு இருமுறையும், கொக்கி கலப்பைக் கொண்டு இரண்டு முதல் மூன்று முறை நன்றாக உழுதல் வேண்டும்.

2. எரு இடுதல்

மக்கிய தொழு உரம் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

3. பூஞ்சாணக் கொல்லியால் விதைநேர்த்தி

விதைப்பிற்கு 25 மணிநேரம் முன்னர், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது திரம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்யவேண்டும்.

4. பாத்திகள் அமைத்தல்

பாத்திகளை 10 அல்லது 20 சதுரமீட்டர் என்ற அளவில் அமைக்கவேண்டும். போதுமான பாசன வாய்க்கால்களை அமைத்திடல் வேண்டும்.

5. உரம் இடுதல்

மண் பரிசோதனை பரிந்துரைக்கேற்ப உரமிடுதல் வேண்டும் அல்லது பொது பரிந்துரையான எக்டருக்கு 80, 40, 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். தழைச்சத்தில் பாதியளவும், மணி மற்றும் சாம்பல் சத்துக்களில் முழுப்பகுதியும் அடியுரமாக இடவேண்டும்.

  • விதையளவு : 100 கிலோ/எக்டர்
6. விதைப்பு

பாத்திகளில் அடியுரம் இட்ட பின்னர் 20 செ.மீ இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை 5 செ.மீ ஆழத்தில் தொடர்ந்து விதைக்கவேண்டும். ஆழமாக விதைப்பதை தவிர்ப்பது நல்லது.

7. களைக் கட்டுப்பாடு

விதைத்த 3 நாட்களுக்கு பின்னர் எக்டருக்கு 800 கிராம் என்ற அளவில் ஐசோபுரோட்டுரான் என்ற களைக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும். விதைத்த 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்கவேண்டும். களைக்கொல்லியை தெளிக்கவில்லையெனில் விதைத்த 20வது மற்றும் 35வது நாட்களில் இரண்டு கைக்களை எடுக்கவேண்டும்.

8. நீர் நிர்வாகம்

நிலத்தின் தன்மை மற்றும் மழையைப் பொறுத்து நான்கு முதல் ஆறு முறை நீர் கட்டவேண்டும். கோதுமை பயிருக்கு கீழ்க்கண்ட 5 நிலைகளில் நீர்ப்பாசனம் தருவது அவசியம்.

9. மேலுரம் இடுதல்

வேர் பிடிக்கும் நிலையில் (15-20 நாட்கள்) மீதியுள்ள பாதியளவு தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.

10. அறுவடை

தானியங்கள் முற்றிய பிறகு மற்றும் தட்டை காய்ந்த பின்னர் அறுவடை செய்யவேண்டும். தானியங்களை பிரித்து தூற்றவேண்டும். செலவினை குறைக்க கதிர் அருப்பானை தானியங்களை பிரிக்க மற்றம் சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.

11. பயிர் பாதுகாப்பு

விதை நேர்த்தி :

பின்வரும் பூஞ்சானக் கொல்லியில் ஏதேனும் ஒன்றை கொண்டு விதை நேர்த்தி செய்யவும்

  • கார்பன்டாசிம் @ 2 கிராம் / கிலோ
  • திரம் @ 2 கிராம் / கிலோ
  • கார்பாக்ஸின் @ 2 கிராம் / கிலோ
12. கோதுமையில் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்

கோதுமை மனிதன் உட்கொள்ளும் தானிய வகைகளில் முக்கியமான இடம் வகிக்கின்றது. கோதுமை மாவு சப்பாத்தி,ரொட்டி மற்றும் அடுமனைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கோதுமை டிரிட்டிகம் இனத்தைச் சேர்ந்தது 30,000க்கும் மேற்பட்ட இன வகைகளைக் கொண்டது. கோதுமை வகைகளில் ரொட்டிக்கு டி.சட்டைவம், மாக்ரோனி (பிழியப்படும் பதார்த்தத்தில்) டி.டியூரம் வகையும் பயன்படுத்தப்படுகிறது.

நெல்

திருந்திய நெல் சாகுபடி

எஸ்.ஆர்.ஐ(SRI) என்ற திருந்திய நெல் சாகுபடி முறை சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஹென்றி டி லலானே என்ற கிறிஸ்துவப் பாதிரியாரின் முயற்சியால் மடகாஸ்கர் நாட்டில் நடைமுறை ஆராய்ச்சிகளுக்கு அப்பால் உருவான சாகுபடி முறையாகும்.மடகாஸ்கரில் உள்ள ஏழை நெல் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்றால் குறைந்த இடுபொருள் செலவில் நெல் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு தொண்டாற்றிய பாதிரியார் சுமார் முப்பது ஆண்டுகள் நுணுக்கமாக கவனித்து, உழைத்து உருவாக்கியதுதான் எஸ்.ஆர்.ஐ.நெல் சாகுபடி முறையாகும்.

நடைமுறை நெல் சாகுபடி முறைகளிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் கடைபிடிக்கப்படுகின்றன. நாற்று தயாரித்தல், நடுதல், களைக்கட்டுப்பாடு, நீர்ப் பாசனம் போன்ற பொதுவான வழிமுறைகள் இதில் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்த மாறுபட்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதால் நெல் செடி வளரும் சூழ்நிலை சாதகமாக மாறுகிறது. வேர்கள் நன்றாக வளர்வதால் மொத்த பயிர் வளர்ச்சி மேம்படுகிறது. மகசூலும் அதிகரிக்கிறது.

1999-ஆம் ஆண்டு வரை முயற்சியால் மடகாஸ்கர் நாட்டில் உள்ள விவசாயிகளால் மட்டும் கடைபிடிக்கப்பட்டு வந்த எஸ்.ஆர்.ஐ. சாகுபடி முறை உலகெங்கும் தெரிய பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நார்மன் அப்ஹாஃப்ஆட்சியாளர்களையும், அரசு அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் விவசாயிகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சந்தித்து இவர் மேற்கொண்ட தொடர் முயற்சியினால் இன்று 25 நாடுகளிலும் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, திரிபுரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் உள்ள நெல் விவசாயிகளுக்கு எஸ்.ஆர்.ஐ.நெல்சாகுபடி முறை பயன் தந்து கொண்டிருக்கிறது.

திருந்திய நெல் சாகுபடி குறித்த கோட்பாடுகள் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தொழில்நுட்பங்கள் தமிழக விவசாயிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி குறித்த கோட்பாடுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்கள் இப்புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டள்ளது.

திருந்திய நெல்சாகுபடி (எஸ்.ஆர்.ஐ) செயல்முறைகள்
நாற்றங்கால்

திருந்திய நெல்சாகுபடியில் தேவைப்படும் நாற்றுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் அவை சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் மேடை அமைத்து உருவாக்கும் முறை வழிவகுக்கப்பட்டுள்ளது.

  • ஏக்கருக்கு 3 கிலோ விதை
  • ஒரு ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட்(40 சதுர மீட்டர்) நாற்று மேடை
  • நடவு வயலின் ஓரத்தில் 1 x 5 மீ. அளவுள்ள 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும்.
  • நன்கு மக்கிய தொழு உரத்தை வழக்கமான அளவு போடலாம்.
  • நாற்று மேடை மண் வளமானதாக இருந்தால் மேலுரம் இடத் தேவையில்லை. இல்லையெனில் நாற்று மேடை ஒன்றுக்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்குத் தேவையான 760 கிராம் டி.ஏ.பி. உரத்தை நன்கு பொடி செய்து மண்ணுடன் கலந்து நாற்று மேடைகளில் நிரப்பி விட வேண்டும்.
  • நிலப் பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின் மேடை மேல் பாலிதீன் தாளையோ (அ) பிரித்த உரச் சாக்குகளையோ பரப்பி விட வேண்டும்.
  • மீண்டும் 4 செ.மீ. உயரத்திற்கு மண்ணை நிரப்பி விட வேண்டும்.
  • விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் 3 கிலோ விதைக்கு ஒரு பாக்கெட் (200 கி) என்ற அளவிலும் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றைத் தேவையான அளவு அரிசிக் கஞ்சி (அ) தண்ணீரில் கரைத்து பின் அவற்றை விதைகளுடன் நன்றாகக் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். நிழலில் உலர்த்திய விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பின் (24 மணி நேரம்) முளைகட்ட வேண்டும்.
  • ஒவ்வொரு 5 ச.மீ மேடையிலும் 375 கிராம் (முளை கட்டும் முன் எடை) விதையை முளைக் கட்டிய பின் (இரண்டாம் கொம்பு) பரவலாக விதைக்க வேண்டும்.
  • பூவாளி கொண்டு நீர் தெளிக்கலாம் (அ) சுற்றியிருக்கும் பள்ளங்களில் நீர் நிரப்பலாம்.

நெல்லில் தண்டுதுளைப்பான் மேலாண்மை

நெல் தண்டு துளைப்பான், தூர் எண்ணிக்கை மற்றும் உற்பத்தியினை குறைக்கிறது. முக்கியமாக, ஆறு வகை தண்டு துளைப்பான்கள் நெற்பயிர் சாகுபடியில் குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. காவேரி டெல்டா பகுதிகளில் நான்கு விதமான தண்டு துளைப்பான்களான ஸிர்ப்போஃபேகா இன்சர்டுலஸ் (மஞ்சள் தண்டு துளைப்பான்), கைலோ சப்பிரசாலிஸ் (கோடிட்ட தண்டு துளைப்பான்), கைலோ ஆரிசிலிஸ் (தங்க நிற விளும்புடைய தண்டு துளைப்பான்), செஸேமியா இன்பெரன்ஸ் (இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்) போன்றவை பயிரின் பல்வேறு வளரும் பருவங்களில் பல்வேறு விகிதங்களில் பாதிப்பு ஏற்படுத்துவதை, ஆடுதுறையிலுள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தண்டுதுளைப்பானின் புழுக்கள் நெற்பயிரின் தண்டின் உட்பகுதியினை உண்பதால், அப்பயிரிலுள்ள நீர்கடத்தும் திறன் பாதிக்கப்பட்டு, பூக்கும் பருவத்திற்கு முன்பு செத்த கதிர்களும், பயிர்பூத்த பின்பு வெள்ளை கதிர்களும் தோன்றுகிறது

சாதகமான காரணிகள்

பல்வேறு காலசூழ்நிலைகளில் பூச்சிகள் வாழ்வதற்கு சாதகமாய் தோன்றிய காரணிகள் – அதிக அளவு தழைச்சத்து பயன்பாடு, மண்ணில் சிலிகா சத்துக்குறைபாடு, அதிக ஈரப்பதமும் குறைந்த வெப்பநிலையும் கொண்ட குளிர்ந்த வறண்ட வானிலை மற்றும் முந்தைய பருவத்து பயிரின் தாழ்கள் வயலில் இருத்தல் போன்றவை ஆகும்.

மேலாண்மை முறைகள்

ஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுப்படுத்தும் முறைகளான உயிரியல், கலாச்சார மற்றும் பழக்கம் சார்ந்த மேலாண்மை முறைகள் பின்வருமாறு

  • குறிப்பிட்ட காலநிலைகளுக்கேற்ப, விரைவில் முதிர்ச்சியடையும் அதிக தூர்கட்டும் நெல் இரகங்களை தேர்ந்தெடுத்தல்
  • மண்ணின் அமிலகாரத்தன்மை (பிஎச்) அளவு 7க்கு அதிகமாக இருக்கும்போது, 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரோசென்ஸ் அல்லது பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும் ரைஜோபாக்டீரியா+ 25கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 250 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் ஆகியவை சேர்ந்த கலவையை கடைசி உழவுக்கு பின்பு, ஒரு ஹெக்டேர் நிலத்தில் இடவும். மண்ணின் அமிலகாரத்தன்மை (பிஎச்) அளவு 7க்கு குறைவாக இருப்பின், டிரைக்கோடெர்மா விரிடியினை வயலில் இடவும்.
  • விதை நேர்த்தி - ஒரு கிலோ விதைக்கு, சூடோமோனாஸ் புளுரோசென்ஸ் அல்லது பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும் ரைஜோபாக்டீரியா 10 கிராம் என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்தல். அல்லது, ஒரு ஹெக்டேருக்கான நாற்றுக்களை 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரோசென்ஸ் கரைசலில் நணைத்து நடுதல்
  • நாற்றுக்களிலுள்ள தண்டு துளைப்பானின் முட்டைகளை நடவுக்கு முன் நீக்கவும்
  • தண்டு துளைப்பான் அதிகம் தாக்கக்கூடிய பருவத்திலுள்ள பயிர்களை, நன்கு கண்காணிக்கவும்
  • முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிராமா ஜப்பானிகம், நட்ட 28 நாட்களுக்கு பின்பு, ஒரு வார இடைவெளியில் மூன்று முறை வெளியிடுதல். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிராமா கிலோனிஸ், நட்ட 37, 44, 51 நாட்களில் வெளியிடுதல்.


© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate